தொடர் -பதினொன்று
என்று காரணம் கேட்டவாறே பேசலானார்.
சிறுவர்கள் எப்போதும் புதிது புதிதாக எதையும் எதிர்பார்க்கிறார்கள்.
உணவு, உடை என்று ஆரம்பித்து.....
பெற்றாரிடத்தில் இருந்து எதிர்பார்க்கும் அன்பின் வெளிப்பாடு, விடயங்களை கையாளும் செயன்முறை, நாற்களை கடத்தும் தன்மை என்று அனைத்திலும் வித்தியாசமான மாற்றங்களை வரவேற்கிறார்கள்.
பாடசாலை வாயலை அடைந்ததும், தனது ஆசிரியர் அணிந்திருக்கும் உடை முதல் பாடசாலை முற்றத்தில் பூத்திருக்கும் பூக்களில் இன்றைக்கு பூத்தது எது? என்பது வரை கவனமாக பார்க்கிறார்கள்.
இடைவேளை நேரம் வந்ததும் தனது நண்பன் கொண்டு வந்திருக்கும் உணவு என்ன? ஏதாவது புதிதாக இருக்கா? என்று கூட நோட்டமிடுகிறார்கள்.
இங்கே தான் சிறுவர் மனம் வெறுப்புக்குள்ளாகிறது......
என்றபடியே ஆவேசப்பட்டு எழுந்து நின்று பேச ஆரம்பித்தார்.
சிறுவர்கள் எப்படி வெறுக்கிறார்கள் என்று வினவ வாய் எடுக்கும் போதே, பாதையோறத்தில் மீன் மீன் என்று மீன்காரனின் கூவல், கதையை திசை திருப்பச் செய்தது.
மகனே! நிறையச் சொல்ல இருக்கு, நான் தொடர்ந்து சொல்லுவேன் என்று மீன் காரனை பின் தொடர்ந்து பகல் உணவுக்குத் தேவையான மீனை வாங்கச் சென்றார்.
எதையோ தொலைத்தவன் போல், இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு சிந்திக்கத் தொடங்கினேன்,
பாடசாலைக்குள் இப்படியும் நடப்பதை எப்படி இவர் படம்பிடித்தால் போல் வர்ணிக்கிறார்? என்று எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டு திகைத்து நின்றேன்.
மீனை எடுத்து தாயின் கையில் கொடுத்து விட்டு, என்னை பாடசாலைக்குப் போய் வா மீண்டும் பேசுவோம் என்று சொல்லியவாறு வீட்டுத்தோட்ட பூ மரங்களை நோட்ட மிட்டார். சாய்ந்திருந்த மரங்களுக்கு மண் அனைத்துக் கொடுத்துவிட்டு, உக்கிப் போன இலைகளையும் குப்பைகளையும் அகற்றிவிட்டு அவைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தார்.
அவரின் நடத்தைகளை ரசித்தவாறு பாடசாலைக்கு கிழம்பினேன்.
தந்தை காலையில் சொன்ன சில செய்திகள் என் மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தது, சக மாணவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கவனமாக கவனிக்க ஆரம்பித்தேன்.
நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களது ஆட்ட ஓட்டங்களை கவனித்துப் பார்த்தேன்.
தந்தை வர்ணித்தது போல சில விடயங்கள் கண் கொண்டு பார்த்து திகைத்துப் போனேன்.
சிறுவர்கள் சுதந்திரமாக சிந்திக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை படிப் படியாக உணர ஆரம்பித்தேன்.
’....ஒரு வெள்ளைத் துணி நாளுக்கு நாள் அதன் தூய நிறத்தை இழந்து போகிறது, அது சரியாக பாவிக்கப் படாததால், சரியாக சுத்தமாக்கப்படாததால் உரிய இடத்தில் உரிய முறையில் வைத்துப் பாதுகாக்காததால்’
சிறுவர்களாகிய எங்கள் சிந்தனையும் வெள்ளைத்துணிக்கு நடந்த கெதிதான்! என்று நினைக்கத் தோன்றியது.
பாடசாலையில் இருக்கும் நேரத்தில் ஒரு சந்தோஷம் இல்லாத போது அல்லது கிடைக்காத அந்த நிலையை சிந்திக்கின்ற அல்லது நினைத்துப் பார்க்கின்ற ஒரு சிறுவனுக்கு அவனது மூளை பாரமாகிப் போகிறது, அதனால் புதிதாக எதையும் நினைத்துப்பார்க்க முடிவதில்லை..
இதைத்தான் தந்தையும் சொல்லுவாரோ என்று நினைத்துக் கொண்டு அவரது அடுத்த சந்திப்புக்காக காத்திருந்தேன்.
என்னுடன் சேர்ந்து எனது தாயும் ஆர்வப்பட்டவளாக..........
இப்போது தான் தற்செயலாக ஒரு கடிதம் என் கையில் கிடைத்தது.
அந்த கடிதம் என் தந்தையால் ஒரு பாடசாலை அதிபருக்கு எழுதப்பட்டிருந்தது, அதன் ஒரு பிரதி வீட்டில் இருந்தது, அதில் இருந்த பல செய்திகள் என் கவனத்தை ஈர்த்தது...
“அன்பின் அதிபர்,
என் சகோதரர் அறிய, என் நலத்திற்கும் உங்கள் மற்றும் உங்கள் கவனத்தில் வளர்ந்து வரும் மாணவர்கள் நலத்திற்கும் அல்லாஹ்வை பிரார்த்தித்தவனாக...
அதிபராக இருந்து மாணவர் நடத்தைகளைக் கவனிக்கும் உங்களுக்கு பெற்றோர்களிடத்திலிருந்து பல தருணங்களில் சில முறைப்பாடுகள், வேண்டுகோள்கள் வருவது இயல்பு, அதில் ஒரு கடிதமாக இதை பார்க்காமல் இந்த பாடசாலையின் முன்னேற்றத்திற்கான ஒரு மடலாக இதை எடுத்துக்கொண்டு, என் முதல் பந்தியை பதியவைத்துக்கொள்ளுங்கள்......
பாடசாலைக்கு வந்து போகும் மாணவச் சிறுசுகள் சூரிய காந்திப் பூக்கள் சூரியனை பார்த்து உதிப்பது போல் உளச் சந்தோஷத்திற்குரியவைகளை தேடிப் பார்த்து நிற்பவர்கள்.
அந்த சிறுசுகள் எப்போதும் சந்தோஷமாக இருந்து புதியவைகளை புதுமையாக கற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் பாடசாலை வாழ்வை கடத்த நினைக்கிறவர்கள்.
ஒரு ஆசிரியர் கடந்த மூன்று நாட்களாக ஒரே சட்டையை அணிந்து வருவது முதல் இடைவேளை நேரங்களில் சிற்றுண்டிச் சாலையில் மறைந்திருந்து புகைப்பது வரை கவனமாக பார்த்து சோகம் அடைகிறார்கள் இந்த சிறுசுகள். பயிற்சிக் கொப்பியில் ஒரு பிழை வாங்கியதற்காக ’உன் தந்தை போல் நீயும் மாடு மேய்க்கத்தான் லாய்க்கு’, உன் பரம்பரையெல்லாம் மீன் விற்கும் போது நீ ஏன் இங்கு வந்து எங்களை கஷ்டப்படுத்துகிறாய் என்று கேட்கும் சூழலில் வாழ்கிறார்கள் எமது பிள்ளைகள். மேற்கு உலக நாடுகளில் குழந்தை பிறந்து மூன்று நாளைக்குப் பிறகும் மூன்று வருடத்திற்குப் பிறகும் அவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் சொல்லும் வார்த்தைகள் தான் அவர்கள் பெரும் கண்டுபிடிப்பாளர்களாக மாறக் காரணமோ என என்னை சிந்திக்கத் தூண்டுகிறது.
பாடசாலைக்கு வரும் மாணவர்கள் இன்று போய் நாளை வரும் போதும் நல்ல எதிர்பார்ப்போடும் தூய சிந்தையோடும் வருவதற்குறிய சூழலை அமைத்துக்கொடுப்பது பாடசாலையின் ஆசிரியர் மற்றும் நிருவாகத்தின் கடமையாகும்.
மாணவர்கள் இருந்து படிக்கின்ற வகுப்புக்கள் அதன் அமைப்புக்கள் சில சந்தர்ப்பங்களில் மாறுதலுக்குள்ளாக வேண்டும்.
ஒரு மாணவருக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு மாணவரின் நடத்தைகளை கவனத்தில் கொண்டு இடமாற்றங்கள் இடம்பெற வேண்டும்.
மாணவர்கள் பாடசாலைக்குள் நுழையும் முன் அவர்களின் புத்தக பைகள் பரிசோதிக்கப் பட வேண்டும்.
ஆசிரியர்கள் பல் வேறுபட்ட கற்கை முறைகளை அறிந்திருக்க வேண்டும், சில ஆசிரியர்கள் வகுப்புள் வரும் போதே மாணவர்கள் தங்கள் முகங்களை சுருட்டிக் கொள்வார்கள், காரணம் கற்பித்தல் முறையில் உள்ள திரமையின்மை, அல்லது ஒரே முறையை எல்லா நாட்களும் தொடரல்.
பாடசாலைச் சூழல் இயற்கை வளங்களைக் கொண்டு அலங்கரிக்ப் படல் வேண்டும்.
காலை வகுப்புக்களை தொடங்கும் போது பின்பற்றப்படுகின்ற கூட்டங்கள், ஒன்று கூடல்களின் போது அல் குர்ஆனிய மற்றும் நபி வழி உபதேசங்கள் பின்பற்றப்பட வேண்டும்.
கல்வியை வேண்டி அல்லாஹ்விடத்தில் தினந்தினம் பிரார்த்திக்க கற்பிக்கப் பட வேண்டும்.
பல பாடசாலைகளில் இவைகளில் சில கடைபிடிக்கப்பட்டு வேறு முக்கிய சில கணக்கில் கொள்ளப்படாது கைவிடப்படுகிறது.
அதனால் ஒரு ஞாபகமூட்டலாக இருக்கும் என இதனை எழுதுகிறேன்.
இந்த சில ஆலோசனைகளை நடைமுறை ரீதியாக பரிசோதித்துப் பாருங்கள். மாணவ சிறுசுகளிடத்தில் மாற்றங்களை கவனிக்கலாம்.
என்றும் அன்புடன்
பெற்றோர் சார்பாக..”
இந்த கடிதத்தை வாசித்துவிட்டு அடுத்த நாளே எனது நண்பனை இணைத்துக் கொண்டு எனது வகுப்பு அமைப்பை மாற்றிப் பார்த்தேன்,
கிழக்கை நோக்கி போடப்பட்டிருந்த கதிரை-நாட்காலி மேசைகளை வடக்கை நோக்கி மாற்றி ஒழுங்குபடுத்தி இருந்தோம்.
இதை கண்ட வகுப்பு ஆசிரியர், ’இப்போது தான் சூரிய வெளிச்சம் சரியாக உங்கள் மூளைகளில் படுகிறது’ என்று எங்களைப் பார்த்து புன்னகைத்தார்.
சிறுசுகள் விஞ்ஞானிகள் போல் சிந்திக்கிறார்கள் என்பதை எமது நாடுகளில் நடைமுறையில் பார்க்க முடியாததிற்கு ’பாடசாலை கற்பித்தல் முறை’ ஒரு காரணம் என்று சொல்லுவது நியாயமானது என்பது ஓரளவு தெரிந்திருக்கும்.
என் தந்தை என்னிடம் திடீரென்று கேட்டார், நீ இப்போது வலது கண்ணால் பார்க்கிறாயா? அல்லது இடது கண்ணால் பார்க்கிறாயா? இரண்டு கண்ணாலும் என்றேன், வலது மூக்கு மூலமாக அல்லது இடது மூக்கு மூலமாகவா சுவாசிக்கிறாய்? என்று! இன்னுமொரு கேள்வியை கேட்டார், நான் வலதை மூடிக்கொண்டு இடதால் சுவாசித்துப்பார்த்தேன்,
இடதை மூடிக்கொண்டு வலதால் சுவாசித்துப் பார்த்தேன்.
பின்பு தான் தெரிந்து கொண்டேன், புத்தங்களின் வரிகளை கடந்து சென்று தேடலின் முயற்சியிலும் பல மேலதிக அறிவு இருக்கிறது என்பதை.
படரும்.....
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
1 comment:
<>
i like it
keep it up
thanks
Post a Comment