விக்கிலீக்ஸும் விழித்துக்கொண்ட VIPகளும்

விக்கிலீக்ஸ் வெளியிட்டு வரும் செய்திகள் உண்மைதானா?
விக்கிலீக்ஸ் செய்திகள் ஆதாரமற்றவை’,
விக்கிலீக்ஸ் எந்த ஆதாரமுமில்லாத செய்திகளை வெளியிட்டுவருகிறது
என்று பலவாறு எதிர்ப்புக்களும் கேள்விகளும் சந்தேகங்களும் வெளிவரும் இந்நிலையில், அதே விக்கிலீக்ஸ் வெளியிட்டு வரும் செய்திகளை நம்பி செயற்படுகின்ற, மாறி மாறி வார்த்தை ஏவுகனைகளை வீசித் தாக்கிக் கொள்கின்ற நிகழ்வுகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

விக்கிலீக்ஸ் செய்தியாளர் உலகிற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று எந்த எதிர்ப்பு வந்தாலும் தாங்கிக் கொண்டு எனது நடையைத் தொடர்வேன் என்று தனியாகத் தான் செயற்பட்டு வருகின்றாரா? அல்லது அவருக்குப் பின்னால் பாரிய பலம் வாய்ந்த ஒரு ஏகாதிபத்திய குழு உதவியாக நின்று, இந்த நாடகம் நடந்தேறுகின்றதா? என்ற சந்தேகமும் பலராலும் பரவலாக பேசப்படுகின்றது.

காரணம், பல நாடுகளில் ஆளும் அரசியல் தலைகளை குறிவைத்து, அவர்களின் கடந்தகால அரசியல் நகர்வுகளில் இடம்பெற்ற இரகசிய காய்நகர்த்தல்களையும் ஆட்சி அமைப்பதற்காக செய்த அநியாய கைங்கரியங்களையும் ஒரு தனி மனிதனால் அல்லது ஒரு பொது மக்கள் குழுவால் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது என்பது சாத்தியமற்றதாகும்.
உலகில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியலில் முன்னிற்கும் அரசியல் ஆதிக்கம் பிடித்தவர்களை அவர்களில் ஆனாதிக்க ஆட்டங்களை அம்பலப்படுத்துவது என்பது தைரியமாக முன்னெடுக்கமுடியாத காரியமே.
பல இலட்சம் பிரதிகள் உள்ளடக்கிய செய்திகளை தினம் தினம் வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு எதிராக இதுவரை அதிகாரவர்க்கங்களால்  எடுக்கப்பட்ட நடவடிக்கை அவரை கைது செய்து பிணையில் விட்டது மட்டுமே என்றால் இன்னும் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டுகிறது.

சென்ற மாதம் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு பல்கழைக்கலக மாணவி வெடிப்பொருள் கொண்ட ஒரு சிறிய பொதியை அமெரிக்காவுக்கு அனுப்ப முயற்சித்தால் என்ற குற்றத்திற்காக பகிரங்காமகக் கைது செய்யப்பட்டால்.
ஆனால் உலகையே வெடிக்கச் செய்தது, செய்வது போன்ற ஒரு அனுகுண்டையே போட்டு ஆங்காங்கே புகை வீசச் செய்துகொண்டிருக்கும் ஒரு நபருக்கு வழங்கிய தண்டனை குறித்த சந்தேகம் தான் அது.
அது அப்படி இருக்க......

சில செய்திகளை படிக்கின்ற போது இப்படியும் நடந்திருக்குமா? இது சாத்தியமா? என்று ஒரு நிமிடம் தனித்து நின்று சிந்திக்கின்ற அளவுக்கு சில செய்திகள் வாசகர்களை திகைக்கச் செய்கிறது.

சர்வதேச மட்டத்தில் பல இரகசியங்களை கசிய வைத்து அரசியல் வாதிகளை தன் மானம் காக்கத் துடிக்கச் செய்து வருகிறது.
சுவர்களுக்கும் காது உண்டுஎன்று பலராலும் பலபோதும் சொல்லும் கூற்று உண்மைதான் என்று உறுதிப்படுத்தும் அளவுக்கு அண்மைக் காலமாக உலகில் ஆங்காங்கே நான்கு சுவர்களுக்கிடையில் நடந்தேரிய பல செய்திகள், சதித் திட்டங்கள் அம்பலப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது, அது தீவிரமான பனிப் போரையும் அண்மையில் எதிர்பார்க்கின்ற ஆயுதப் போரையும் வெடிக்கச் செய்யுமோ என்ற கேள்விக்குரியுடன் தொடர்கிறது.

விக்கிலீக்ஸ் மூலம் வெளியிடப்பட்டு வரும் செய்திகளை வேறு பல சந்தர்ப்பங்களில் வேறு பல சமூகங்களால் அங்கீகரிக்கப்படுவதுடன் வித்தியாசமான பல செய்திகளால் நிராகரிக்கப்பட்டும் வருகிறது.
ஈராக்கில் நடந்தேறிய, நடந்தேறும் கொடூரங்களுக்கும் அதன் முன்னால் அதிபர் சதாம் ஹுசைனின் உயிர் தூக்கில் பிரிந்ததற்கும் அமெரிக்க முன்னால் அதிபர் ஜோர்ஜ் டப்ளியு புஸ் தான் என்ற செய்தி வெளிவந்த போது, ஈராக் சார்பு நாடுகளும் மக்களும் ஜோர்ஜ் டப்ளியு புஸ்ஸுக்கு எதிராக ஏதாவது சரியான தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்த்தார்கள்.
இலங்கை வாழ் தமிழ் மக்களின் போராட்ட தலைவர் பிரபாகரனின் மரைவுக்கும் பல போரளிகளின் சாவுக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ தான் காரணம் என்று செய்தி வந்த போது அந்த செய்தி மஹிந்த ராஜபஷவுக்கு சர்வதேச மன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுக்க உதவும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

இந்தியாவில் இந்து முஸ்லிம் சண்டைகளும் மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் விக்கிலீக்ஸின் புதிய செய்தி அங்குள்ள மக்களையும் சில அரசியல்வாதிகளையும் திகைக்ச் செய்துள்ளது..

எந்த கலவரம் நடந்தாலும் யார் மூலமாக நடந்தேறினாலும் அது இஸ்லாமிய பயங்காரவாதிகள் செய்தார்கள் என்று கண்மூடிக் கொண்டு செய்தி வெளியிடும் இந்நிலையில் இந்தியாவில் முஸ்லிம்களைவிட இந்துக்கள் தான் அதிகம் மோசமானவர்கள் என்ற வாதம் ஒரு இந்திய அரசியலில் உயர் மட்ட பதவியில் இருக்கும் ஒருவரான ராகுல் காந்தி கொடுத்த வாக்கு மூலம் அங்குள்ள முஸ்லிம் சமூகத்திற்கான எதிர்காலத்தை கொஞ்சம் நம்பிக்கையுடன் சிந்திக்கும் நிலைக்கு கொண்டுவந்ததுடன் கெடுபிடிகளில் காலம் கடத்தும் சில தீய சக்திகளை சிந்திக்கச் செய்திருக்கிறது.

இப்படி நாளுக்கு நாள் வெளியாகும் விக்கிலீக்ஸ் செய்திகளை ஆதரிப்பதா? 
எதிர்ப்பதா? விமர்சிப்பதா? என்று தெரியாமலே பொதுமக்கள்.........
எந்த செய்திகளானாலும் அது ஆதாரப் பூர்வமானதாகவும் அநீதங்களை வெலுக்கச் செய்வதாகவும் இருந்தால் நீதியை எதிர்பார்க்கின்ற, அதற்காக காத்திருக்கின்ற மக்கள் நம்புவார்கள் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லத் தோன்றுகிறது.எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

4 comments:

Anonymous said...

விக்கிலீக்ஸும் விழித்துக்கொண்ட VIPகளும்
http://webcache.googleusercontent.com/search?q=cache:kKSJchHXU4kJ:kadayanallur.org/+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+VIP%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&cd=9&hl=ar&ct=clnk&gl=sa

Anonymous said...

http://bumisempanaplant.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+

Anonymous said...

http://jbookonline.com/index.php?option=com_content&view=article&id=97:-vip&catid=36:inspiration&Itemid=54

Issadeen Rilwan said...

விக்கிலீக்ஸும் விழித்துக்கொண்ட VIPகளும் - இந்த தலைப்பு மேலே உள்ள இணையத்தளங்களிலும் வெளீயிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.