எனக்கு மரிச்சிக்கட்டி என்று பெயர்.......!


Marichchukkatty


Marichchukatty or Marichchikkatty was a peaceful village in the Northern province of Sri Lanka. The LTTE evicted the muslim villagers of the this peaceful village, 20 years ago. The war ended more than a year ago, and peace has arrived to the country.

As a former villager of Marichchukatty, I, Issadeen Riyas, had been working very much for the welfare of the displaced people of Marichchukatty, 20 years ago. Many people, too, are willing to help those displaced. Therefore, I have created this website Marichchukatty so that all people could interact with us to develop this village.

நான் இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டம், முசலிப் பிரதேசத்தில் புத்தாளம், மன்னார் வீதியின் மையப் பகுதியில் அமைந்துள்ளேன்.   

எனக்கு மரிச்சிக்கட்டி என்று பெயர் வைத்ததற்கு பழைமை வாய்ந்த பல வரலாற்றுக் காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன.

பல நூறு முஸ்லிம்களைச் சுமந்து வாழ்ந்த நான் அவர்களை இழந்து பல வருடங்கள் தனிமைப்படுத்தப்பட்டேன்.

நான் எனது எல்லைக்குள் பயணிகள் விமானங்களை விட ஆயும் தாங்கிய விமானங்களையே அதிகம் பார்த்திருக்கின்றேன்,

பட்டாசுச் சத்தங்களை விட குண்டுச் சத்தங்களையே நிறைய 
செவியுற்றிருக்கின்றேன்.

அன்று இழந்த மக்களை இன்று வாருங்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்துங்கள் என்று அன்பாய் அழைக்கின்றேன்.
என்னை செப்பனிட்டு, சீர் செய்து எனது நண்பர்களை வாழச் செய்ய ஒரு சில பிரதிநிதிகளை தேர்வு செய்ய முடிவெடுத்திருக்கின்றேன்.

அதில் ஒருவராக, முதலாவதாக இந்த வலைப்பகுதியின் ஆசிரியர் இஸ்ஸதீன் றியாஸ் செயற்படப் போவதாக சம்மதித்திருக்கிறார்.

ஒன்றாய் கைகோர்த்து என்னை கட்டியெழுப்ப முழு மனதுடன் உங்களுக்கும் அழைப்புவிடுத்திருக்கிறார், சேர்ந்து வாருங்கள், சாதிக்க…!

Contact Us:
இங்கு Contact Us என்று ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது, அதில் உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை வழங்குங்கள்.

Donate:
Donate என்ற பகுதியில் இந்த ஊரை கட்டியெழுப்ப உங்கள் உதவிகலை வழங்கலாம்.

இந்த ஊரைக் கட்டியெழுப்ப யார் முன்நின்று செயற்படுகிறார்களோ அவரை தேர்வு செய்து உங்கள் உதவிகளை செய்யுங்கள், அதற்கு எங்கள் வழிகாட்டுதல்கள் எப்போதும் கிடைக்கும்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

munawwar said...

well done riyas try to build a university in mannar district arrif mou