என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 16


தொடர்   - பதினாறு:


ண்டுகளுக்கிடையில் பூக்கள் உழாவருவது, மன்னிக்கவும்பூக்களுக்கிடையில் வண்டுகள் எந்த பூவில் உட்கார்வது என்று தேடித்திரிவது போல என் சிந்தனையில் சில செய்திகள் உழா வந்த நிலையில்.
தந்தையைப் பார்த்து, எதை மிக அவசரமாகவும் அவசியமாகவும் ஆரம்பிக்க வேண்டும் என்று வாய் திறக்கையில், புன்னகைத்தவராக தாயை அழைத்தார்.
கேள்விக்கும் தாய்க்கும் என்ன சம்பந்தம் என்று ஒரு தடவை எனக்குள் கேட்டுப்பார்த்தேன்.
தந்தையின் குரல் கேட்ட தாய், என்ன? என்ன? என்று வேகமாய் இடம் அடைந்தார்கள்.
இல்லை, அதாவது உணவு உண்ணும் போது முதலில் சோற்றை உண்ணுவதா அல்லது தொடு கரியை உண்ணுவதா என்று எவராவது கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள்?
சிரித்துவிட்டு என்ன கேள்வி இது? படிக்கும் போது ஏன் இந்த கேள்வி என்றார் தாய்.
தந்தை: மகன் கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் தான் கேட்டேன்.
புரிந்து போய் விட்டது எது முக்கியம் என்று.
தந்தை சொன்னது போல் அல் குர்ஆனை தினம் படிக்கலாம் அத்துடன் கிடைக்கும் போது ஏனைய புத்தகங்களை வாசிக்கலாம் என்று மன உறுதி எடுத்துக்கொண்டேன்.
உதயமாகும் பொழுதுகளில் கடந்து செல்லும் ஒவ்வொரு 24 மணித்தியாளங்களையும் திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும் என்று எனக்குள் முடிவானது.
ஆனால் ஏன் பலர் தோல்வியடைந்து போனார்கள் என்பதை சில நாற்கள் கடக்கும் போது தான் தெரிந்துகொண்டேன்.
காரணம் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கலாம் என்று பேராசை கொண்டு முதலாம் பக்கம், இரண்டாம் பக்கம் என்று புறட்டுகின்ற போது எங்கோ எதிர்பார்க்கா திசைகளிலிருந்து தூக்கம் கண்களை நிறப்பத்தொடங்கியது.
அய்யோ என்ன இது? சாதரண தினங்களில் நடுநிசியிலும் தூக்கமில்லாமல் இருக்கலாம், புத்தகத்தை கையிலெடுத்து ஆரம்பித்ததும் தூக்கம் கிழோக்கணக்கில் ……..?
பார்க்கலாம்,
’தியாகங்கள் செய், அது சாதனைக்கு வித்திடும்’ என்று தந்தை அடிக்கடி சொல்லுவது இந்த நேரத்தில் ஞாபகத்திற்கு வந்தது.
ஆனால் தூக்கத்துடன் போரிட்டு பார்க்கலாம் என்ற மன தைரியமும் என்னை முன் செல்ல தூண்டியது.
தந்தையின் ஆலோசனையை அமுலுக்குக் கொண்டு வந்து ஒரு சில வாரங்களும் கடந்து செல்கின்றன, கையில் எடுத்த புத்தகத்தின் பக்கங்களும் மெதுவாக பிறட்டப்படுகின்றன.
காத்திருந்தேன், எதிர்பார்த்திருந்தேன், முன்னேற்றங்கள் எந்த பக்கமாக, எந்த வழியாக வரும் என்று…………
சில வாரங்கள் கடந்து செல்லும் போது மெதுவாக (slowly and studiedly) சில விடயங்களை என்னால் உணர முடிந்தது,
நான் நுகர்ந்த சில,
1.      நேரங்கள் பிரயோசனமாக கடந்து செல்கின்றன,
2.    நிமிடங்கள் வடிகட்டி பயன்படுத்துவது போன்ற ஒரு அனுபவம்,
3.    வாசிப்பு, கிரகிப்பு வேகமடைய ஆரம்பித்தது,
4.    மனதில் ஒரு வித பக்குவம் வர ஆரம்பித்தது,
5.    நிறைய அறியா காரியங்கள் கற்க வேண்டி இருக்கிறது என்ற யதார்த்தம் தெரிய வந்தது,
6.    கற்றவற்றை பிரருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு புதுவித ஆர்வத்தைத் தூண்டியது,
7.    வாசிக்க வேண்டும் என்று கையில் எடுத்த புத்தகத்தை அதன் கடைசி பக்கம் காணாது இறக்கி வைக்க மனமில்லாது போகிற பாக்கியம்,
8.    சந்தேகங்கள், கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கிறது என்பது புரிதலானது,
கேள்வி அதிகம் பிறக்க ஆரம்பித்தது,
9.    ’கற்ற கற்க இனிக்கும், கற்ற பின்பும் இனிக்கும்’ என்ற எனது தந்தையின் தனித்துவ தத்துவம் ஊர்ஜிதமாக ஆரம்பித்தது.
10.  புத்தக ஆசிரியரின் வார்த்தை வீச்சுக்களும் சிந்தனையோட்டங்களும் வாசிப்பவர்களுக்கு புதிய சிந்தனையைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது என்பதை முதன் முதலாக உணர முடிந்தது.
நிறைய இருக்கு, ஆனால் தூங்கும் நேரமாகிறது அதனால் பிறகு சொல்லலாம்.
”மழை பேய்ந்தால் மண் வாசம் என்பார்கள், ஆனால் வாசித்தால் அறிவு வாசம்” என்பதும் இப்போது புரிகிறது இலேசாக.
படரும்............


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: