பார் சிறக்க படித்த பெண்கள் வேண்டும் .........?!


படித்த பெண்கள் சிந்திக்க ஒரு புதுக் கட்டுரை,
பாமர பெண்கள் சிந்திக்கவைக்கப்பட ஒரு சிறப்புக் கட்டுரை.

பெண் சாகாசம் வேண்டாம், நாங்கள் துறவிகள் என்று சொல்லும் பேர்வளிகள் காம சூத்திரங்கள் எழுதிவருவதும்,

தம் மனைவியை சரியாக சந்தோஷப்படுத்தத் தெரியாதவர் கூட்டம் இஸ்லாமிய பெண்ணின் கோட்பாட்டுக்கெதிராக பெண்ணிய சிந்தனை பேசுவதும்,

நாங்கள் பெண்களை மதிக்ககூடியவர்கள், எங்களிடத்தில் தான் பெண்களுக்கான தனிச் சுதந்திரமே இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டு உடன் கட்டை ஏறும் கலாச்சாரத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்துவருபவர்கள் என்ற பலர் இன்று பெண்ணியம் பேச தலைப்பட்டிருப்பது உலகையே அழிவின், அனாச்சாரத்தின் பக்கம் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

பெண் சுந்தந்திரம் என்பது:
அவள் கற்பு பாதுகாக்கப்படுவதற்கு ஆண்கள் தங்களது நடத்தை ரீதியாக கொடுக்கும் உத்தரவாதம்

பாதையில் நடந்துசென்றாலும் அவள் வீடு திரும்பும் போது சென்ற மனநிலையுடனும் கற்புடனும் திரும்பி வர வேண்டும்.

இது இல்லை என்றால் அங்கு பெண் சுந்தந்திரம் இல்லை என்பது நிஜம்.
நாங்கள் சுந்திரமான பெண்கள் என்று லேபல் ஒட்டிக்கொண்டு முஸ்லிம் பெண்களின் ஆடைகளை சீ சொல்லும் மேற்கத்திய பாடசாலைக்குச் செல்லும் அல்லது தொழில்புரியும் பெண்களின் இரகசிய வரலாறுகளை மனம்விட்டு பேசச் சொல்லிப் பாருங்கள்.

எத்தனை ஆண்களுடன் தங்களது கற்பை பகிர்துகொடுத்திருப்பார்கள்? எத்தனை ஆண் நண்பர்களுடன் கேளிக் கூடங்களில் தனியாக, இரவுகளை கடத்தி இருப்பார்கள்?

கடற்கறைகளில் திறந்தமேனியுடன் சாகாச வித்தையில் சங்கமித்திருப்பார்கள்? அதனால் தான் அமெரிக்க பூமியில் இப்படியான புத்தகங்கள் அதிக விற்பனை பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றது.
1.     Fatherless America
2.     Fathering fatherless America
3.     From my sister’s lips

பெண்களை தொட்டாலே அசுத்தம் என்று சொல்லும் பைபிளுக்கும் பெண்கள் என்றாலே ஆண்களின் ஆண்மையை குறைக்கப் பிறந்தவர்கள் என்று கீதங்களும் சாஸ்திரங்கள் சொல்லும் போது தான் பெண்கள் (An Nisha – Woman) என்ற தலைப்பை தனியாக கொண்ட அல் குர்ஆனிய அத்தியாயம் உலகிற்கு தோற்றமாகியது.

இதை ஒரு ஞாபகமூட்டலாக வைத்துவிட்டு……

இந்த கட்டுரையின் நோக்கம் நமது சமூகத்தில் உள்ள படித்த பெண்களின் கடமை என்ன? என்ன செய்ய வேண்டும்? என்ன செய்கிறார்கள்? என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே.

மேட்டு நிலத்தை வெட்டி தாழ்வு பகுதியை நிறப்புவது போல் பணக்காரர்கள் தங்களது சொத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுத்து அவர்களை வாழ வைப்பது போல் படித்தவர்கள் படிக்காத, பாமரர்களை வழிகாட்ட வேண்டும்.

உலகில் அதிக ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் ஏதோ ஒரு பெண் இருப்பது வரலாறுகள் நிஜமாக்கும் உண்மையாகும்.

நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் பிரச்சாரத்திற்கு பின் அவர்களின் மனைவி துணையாக இருந்தமை,

நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களது மனைவிமார்கள் இருந்தது நமக்குக் கிடைத்த மிக பெரிய முன்னுதாரமாகும்.

வஹியின் ஆரம்பத்தில் நமது தாய்மார்களில் ஒருவரான ஹதீஜா அவர்களின் ஒத்தாசை,

நபியின் மரணத்திற்கு பின் அண்ணை ஆயிஷா அவர்களின் சமூக ஆலோசனைகளும் ஹதீஸ் அறிவிப்புக்களும் உலக மாற்றத்திற்கு மிக வழுவாக துணைபோய் இருக்கின்றன.

படித்த பெண்கள் படிக்கும் வரை கஷ்டப்படுகிறார்கள், தங்களது துறைசார் சமூக விடயங்களை கவனத்தில்கொண்டு சேவை செய்ய முன்வருகின்றார்கள், ஆனால் திருமணமாகி, ஒருவருக்கு மனைவியாய், பல பிள்ளைகளுக்கு தாயாய் மகுடம் சூட்டிவிட்டால் அந்த குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்கு இடையில் அந்த பெண்ணின் சேவையும் அறிவும் அனுபவமும் வரையறுக்கப்பட்டுவிடுகின்றது.
(இதில் விதிவிலக்காக சிலர் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது)

நமது சமூகத்தில் படித்த பெண்களின் சேவைப் பகிர்வு ஒரு குறிப்பிட்ட 20 வீதம் கூட இருக்குமா? என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்து வருகின்றது.
நாம் வாழும் சூழலில் எங்கோ ஒரு பெண் வைத்தியர் சேவையில் இருப்பார், பாடசாலைகளில் சில பெண் ஆசிரியைகள், அது போக சில ஆலிமாக்கள்.

ஏனைய துறைகளில் விரல்விட்டு எண்ணும் சில இலக்கங்கள் அல்லது எண்ணிக்கைகள்.

இதற்கிடையில் நாம் வாழும் சூழல் அதிக கலவன் பாடசாலைகள், அந்நிய பாடசாலைகளின் விரிவாக்கம், கன்னிப் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இன்மை என்ற சில முக்கிய காரணங்களால் எமது பெற்றார் பெண்பிள்ளைகளின் உயர்படிப்பை இடைநிறுத்தி வருவது குடும்ப, சமூக முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான பாதிப்பைச் செலுத்துவதற்கு இது துணைபோகின்றது.

நமது சமூக முன்னேற்றத்திற்கு தேவையான எல்லாத்துறைகளிலும் பரவலாக நமது பெண்கள் கால் பதிக்கப்பட வேண்டும் என்ற தூர நோக்குச் சிந்தனை இன்று இல்லாமலாகிவிட்டது.

அதனால் நமது தாய்மார்களின் நோய் நிவாரணங்களுக்காக அந்நிய வைத்தியர்களை நாடவேண்டிய துர்பாக்கியம்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் பெண்கள் பிரிவுக்கு குறித்த சில முக்கியமாக, பாடப் போதனைகளுக்கு பிற மத பெண்கள் அல்லது அந்நிய ஆண்களின் விஜயம் நிர்பந்தமாகி வருகின்றது.

நிர்பந்தத்திற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றது என்ற காரணமும், அதில் நாம் தொக்கி நிற்பதும், நமது சமூகத்தின் எழுச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றது.

படித்த பெண்கள் வர்க்கத்தின் சத்தம் உலகில் எல்லா திசைகளிலும் ஓங்கி ஒழிக்க வேண்டும்.

அது சமூகத்தின் முதுகெலும்பாக குறிப்பாக சமூகத்தில் உள்ள ஏனைய பெண்களை வழிகாட்டும் ஆயுதமாக மாற வேண்டும்.

இன்று உலக மட்டத்தில் பாலர் பாடசாலை (Pre - school teachers to atom related scientists) ஆசிரியை முதல் அனுஆயுத தயாரிப்பு அறிவுவாய்ந்த விஞ்ஞானிகள் வரை நமது சமூகத்தில் தகுதியாக பெண்கள் இருந்துவருகின்றார்கள்.

ஆனால் அவர்கள் தங்களது அறிவையும் திறமையையும் பயன்படுத்தி சாதிக்கின்றார்களா? என்ற கேள்விதான் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

படித்த பெண்களில் படிப்பு, அனுபவம் நம் சமூகத்தில் தாக்கம் செலுத்தப்பட வேண்டும்.

அதற்கு சில ஆலோசனைகளை மாற்றங்கள் தேவை இங்கு பகிர்ந்துகொள்கிறது.

இது தொடர்பான சாதக பாதகங்களையும் உங்கள் வாத பிரதிவாதங்களையும் இங்கு பதிய தவர வேண்டாம்.

1.   சமூகத்திற்காக நமது நேரங்களை செலவிடுவது ஒரு வணக்கம் என்பதை பெண்கள் மனதில் பதிக்க வேண்டும்.
2.   தங்களது துறை சார் சக பெண்களை இணைத்துக் கொண்டு கூட்டாக செயற்பட வேண்டும்.

உதாரணமாக:
ஆசிரியைகளாக பணி புரியும் பெண்கள் ஒரு சேவை அமைப்பாக ஒருங்கிணைய வேண்டும்.

பாடசாலையுடன் மட்டும் தன்களது சேவையை நிருத்திக்கொள்ளாமல் ஏனைய நேரங்களில் சக நண்பிகளுடன் சேர்ந்து எந்த மாதிரியாக சமூக பணிகளை செய்யலாம் என்பதை திட்டமிட வேண்டும்.

இன்று கல்வி வியாபாரமாக மாறி பணக்கார பிள்ளைகள் மட்டும் அதை நுகரும் பொருளாக விற்கப்பட்டுவருகிறது.

இதிலிருந்து ஏழை மாணவர்களை பாதுகாக்க இலவச பிரத்தியோக வகுப்புக்கள் அதிகம் தேவைப்படுகின்றன.

குறிப்பாக, பாடசாலையில் குறை நிலை கல்வி அறிவுடைய மாணவ மாணவிகளை இனங்கண்டு அவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்புக்களை ஒழுங்குசெய்து நடாத்தலாம்.

வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட பெண்கள் ஒரு குழுவாக கைகோர்க்கலாம்.
·        ஓய்வு நாற்களில் தொட்டுநோய்கள் (டெங்கு, ஹினி, மலேரியா) தொடர்பான விழிப்புணர்வு கருத்தறங்குகளை ஏற்பாடுசெய்யலாம்.
·        கிராமப் புரங்களில் வாழ்கின்ற அதிக பெண்களுக்கு குடும்பவியலுடன் தொடர்புடைய சந்தேகங்களை தீர்க்கும் வகையிலான வகுப்புக்களை ஏற்பாடுசெய்து அவர்களுக்கு கல்வியூட்டலாம்.

மார்க்க கல்விக்கூடங்களில் தேறிய ஆர்வமுள்ள பெண்கள் தங்கள் துறைசார் சக தோழிகளுடன் ஒரு சங்கமாக, தஃவா அமைப்பாக பரிணமிக்கலாம்.

·        ஓய்வு நேரங்களை பயன்படுத்தி மார்க்க வகுப்புக்களை ஏற்பாடுசெய்யலாம்.
·        தாம்பத்தியம், குடும்பவாழ்வு தொடர்பாக பெண்களின் உள்ளங்களில் ஊசலாடும் சந்தேகங்களை தீர்த்துவைக்கும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்து சிறப்பாக நடாத்தலாம்.
·        கனவனை எப்படி மகிழ்விப்பது? பிள்ளைகளை எப்படி வளர்ப்பது? வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களை எப்படி பிரயோசனமாக கடத்தலாம்? போன்ற தலைப்பிலான ஆலோசனைகளை திட்டமிட்டு முன்னெடுக்கலாம்.

3.   சமூக சேவையில் கலமிறங்கியுள்ள பெண்கள் சமூக சார் நவீன பிரச்சினைகளை ஆய்வுக்குற்படுத்தி அதற்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் இறங்க வேண்டும்.
·        அது அரசியல் சார் பிரச்சினைகளாக இருக்கலாம்
·        அல்லது பொருளாதாரம், ஒழுக்கவியல், குடும்பவியல் அம்சங்களாக கூட இருக்கலாம்.
·        நமது சில கிராமப் புரங்களில் சில அந்நிய அமைப்புக்கள் கடனுதவி வழங்குவதாக நமது சமூக பெண்களை ஒருன்கிணைக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
நாம் பாவிக்கும் போனுக்கு ரீலோட் பண்ணும் போது அதன் மூலம் சிலர் நமது குமரிப்பெண்களின் நம்பர்களை எடுத்துக்கொண்டு அவர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து அவர்களின் காம ஆசைகளை நிறைவேற்ற முற்படுவது,
இணையத்தள சட் ரூம்களில் எமது பெண்களை ஆசைவார்த்தை கூறி காவு கொள்வது போன்ற பிரச்சினைகளின் போது நமது பெண்கள் அமைப்பு விரல் நுழைக்க வேண்டும்.

4.   சமூக முன்னேற்றத்திற்கு பெண்கள் எந்த வகையில் பணியாற்ற வேண்டும் என்பதை படித்த பெண்கள் தேடிப்பார்த்து அவைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இங்கு பகிர்ந்துகொண்ட விடயங்கள் சில பெண்களால் அல்லது சில பிரதேசங்களில் நடைமுறையில் இருக்கலாம், அப்படியானால் அந்த சேவை மேலும் நன்றாய் சிறப்பிக்க எமது பிரார்த்தனைகள்.

படித்த பெண்கள் இப்பாரில் தங்கள் குடும்பம் தாண்டி சமூக மட்டத்தில் பணியை நீட்டிக்கொள்ள மேலதிக ஆலோசனைகளுக்கு மாற்றங்கள் தேவையையும் நாடலாம்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

5 comments:

Anonymous said...

//நாங்கள் பெண்களை மதிக்ககூடியவர்கள், எங்களிடத்தில் தான் பெண்களுக்கான தனிச் சுதந்திரமே இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டு உடன் கட்டை ஏறும் கலாச்சாரத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்துவருபவர்கள் என்ற பலர் இன்று பெண்ணியம் பேச தலைப்பட்டிருப்பது உலகையே அழிவின், அனாச்சாரத்தின் பக்கம் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.//

i like this

thanks
Imran - Sri lanka

Anonymous said...

THEN WHY ARE YOUR PEOPLES ARE CHOOSING TERRARITIOM MUSLIMS ARE DONT TALK ABOUT YOUR CULTURE GO AND SEE GULF COUNTRIES YOUR LADIES WHAT THEY ARE DOING NOW EUROPIAN LADIES ARE FOLLOWING GOOD CULTURE BUT YOUR GIRLS ARE FOLLOWING MORE THEN EUROPE CULTURE

Issadeen Rilwan said...

Dear Mr/Mrs. Anonymous,

thank you for your visit and comment.

kindly explain your comment.

regards
Issadeen Rilwan

Anonymous said...

Dear Mr/Mrs. Anonymous,

kindly explain what your going to say brother we not going to terraristiom they making us terrerist like you you dont have enough knowledge regading that please dont right like comment you do not decide muslim are terrarist as per madia because never say true i think you relise that I am Riyas - qatar

Anonymous said...

good good go ahed you victor will bey in mahsar,
we are praying for good helth & u want write more article about our islamic brothers thank you