வசூலில் ஓடும் மத்ரஸாக்கள்

லங்கையில் அரபுக் கலாசாலை (மத்ரஸாக்)களின் தேவையும் அதன் பயன்பாடுகளும் குறித்து எந்தளவு தூரம் கவனம் செலுத்தப்படுகிறது என்பது ஆய்வுகுற்படுத்தப்பட வேண்டிய ஒரு சமூகக் கடமையாகும்.


இலங்கையில் இயங்கி வரும் அரபுக் கலாசாலைகளின் எண்ணிக்கை குறித்து இலங்கை முஸ்லிம் கலாச்சார நிலையத்தினால் வெளீயிடப்பட்ட பட்டியலை பார்த்து ஒரு கனம் நான் அதிர்ந்து போயிருந்தேன். ஆனால் அந்த பட்டியல் இன்றைய திகதிவரை புதுப்பிக்கப்படுமாக இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் இனங்காணப்படாத, கலாச்சார நிலையினத்தின் பட்டியலில் இதுவரை பதியப்படாத இன்னும் பல கல்லூரிகள் கிராமிய மட்டத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டில் இயங்கிவரும் இந்த கல்லூரிகள்;

ந்த பாடத்திட்டங்களை போதனைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது


ந்த கல்லூரிகளை வழிநடத்துகின்|றவர்கள் தகுதியானவர்களா?


ங்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் அல் குர்ஆன் அல் ஹதீஸ் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டனவா?


ங்கு கற்கைநெறிகளை முடித்துக்கொண்டு வெளியேருகின்றவர்கள் கற்றதை கொண்டு வாழ்கின்றார்களா? வழிநடத்துகின்றார்களா?


வர்களுடைய தொழித்துறை எவ்வாறு அமைந்திருக்கிறது?


திர்கால தொழில் வசதிற்கு இந்த அறபு கலாசாலைகள் துணை நிற்கின்றனவா?


ந்த கல்லூரிகளை இயக்குவதற்கு தேவையான பணம் எங்கிருந்து பெறப்படுகிறது?


ன்றுவரை இயங்கிவரும் அனைத்து மத்ரஸாக்களும் நம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு எந்தளவு தூரம் துணை போகின்றன?


யங்குகின்ற அனைத்து மத்ரஸாக்களும் சமூக மேன்பாட்டையும் தேவையையும் பிரதிபலிக்கும் இலட்சியங்களை கொண்டவைகள் தானா?
என்ற பல கேள்விகள் சரியான விடையை எதிர்பார்த்து நிற்கின்றன.

திடீர் திடீரென ஆரம்பமாகும் கல்லூரிகளும் திடீரென இல்லாது போகும் கல்லூரிகளும் இந்த வரிசையில் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
ஆங்காங்கே உதயமாகும் கல்லூரிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையானாவை அங்கு கல்விகற்கும் மாணவர்களின் வசூல் பணத்தின் மூலம் ஓடும் கல்லூரிகளாக இன்று வரை நிருவகிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

வகுப்புக்களை நிருத்திவைத்துவிட்டு மத்ரஸாக்களின் செலவுக்காக பணம் வசூலிப்பதற்கென பல நாட்களை செலவழித்து ஊர் ஊராக பயணம் சென்று பணம் திரட்டுவது மாணவர்களுக்குரிய ஒரு கடமையாக மாற்றப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களை ஜமாஅத்தில் (3 நாள், 40 நாள் ஜமாஅத்) போவதாக  கடத்துகின்றார்கள்.

இப்படியான மத்ரஸாக்கள் எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு எந்தளவு தூரம் பயன் தருகின்றன என்பது குறித்து இதன் நிருவாகிகள் சிந்திக்க வேண்டும்.

மாணவர்களின் வசூல் பணத்தின் மூலம் மத்ரஸாக்கள் நடத்துகின்ற அளவு இலங்கையில் மத்ரஸாக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றதா?

மாணவர்களின் வசூல் பணத்தின் மூலம் மத்ரஸாக்கள் நடத்துகின்றளவு இலங்கையில் மத்ரஸாக்களுக்கு எந்த தேவையும் இல்லை
அதிக எண்ணிக்கையைக் கொண்ட மத்ரஸாக்கள் நிருவகிக்கப்பட்டு, ஆண்டு தோறும் பல மார்க்க அறிஞர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நம் சமூகத்தில் ஈனாமிய வறுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த சமூகப் பிரச்சினைக்கு இத்தனை மத்ரஸாக்களும் எந்த வகையான சேவையை வழங்கிவருகின்றன?

சில மத்ரஸா மாணவர்கள் தங்கள் மத்ரஸாக்களுக்காக கடை கடையாக வசூலில் செல்லுவதை காணும் போதே இந்த விடயம் தொடர்பாக எழுத வேண்டி ஏற்பட்டது.

சமூக நலன் கருதி மாற்றங்கள் தேவை இது தொடர்பாக சில ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகின்றது.

மாணவர்களை பயன்படுத்தி அவர்களின் வசூலில் ஓடும் மத்ரஸாக்கள் தங்களுடைய நடத்தைகளை மாற்றிகொள்ள வேண்டும்.


ந்த மத்ரஸாக்கள் தங்கள் பிரதேசங்களில் உள்ள வளம் படைத்த மத்ரஸாக்களுடன் இணைந்து தங்கள் சேவையை முன்னெடுக்க முன்வர வேண்டும்.


சிறுபான்மையாக வாழும் நாம் கல்வியில் உயர்ந்த சமூகமாக மாறுவதன் மூலம் பாரிய சமூக முன்னேற்றத்தை காணமுடியும்.


ல்மத மக்கள் சேர்ந்து வாழும் நம் நாட்டில் பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்கு வசதியாக ஒப்பீட்டாய்வு கல்வி முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும்.
இதனை கவனத்தில் கொண்டு மத்ரஸா நிருவாகங்கள் தங்கள் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க முன்வர வேண்டும்.


போதிக்கப்படும் பாத்திட்டங்கள் நம் நடத்தைகளுக்கு பயன் தருகின்றனவா? என்பதை ஒரு தடவை குறுக்கு பரிசோதனைக்குள் உட்படுத்த வேண்டும்.


புத்தகப் பூச்சுகளாக இருந்து சிறந்த பெருபேருகளை பெரும் கல்விக் கொள்கையை மாற்றி திறந்த கற்றல், கற்பித்தல் முறைமையை அறிமுகம் செய்ய வேண்டும்.


ல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்ற மாணவர்கள் எதிர்கால தொழிவாய்ப்பை கெளரவமான முறையில் அமைத்துக்கொள்ள முடியுமான வகையில் பாடப் போதனைகளை ஒழுங்கமைக்க வேண்டும்.


ன்றைய திகதியில் இஸ்லாம் நவீன ஊடகங்கள் மூலம் எதிர்பாரா பல சவால்களை நம் சமூகம் சந்தித்து வருகின்றது.
இதனை சரியாக முகங்கொடுப்பதற்கும் உடனுக்குடன் தகுதியான பதிலை வழங்குவதற்கும் எமது மாணவர்களை வழிகாட்ட, ஊக்குவிக்க வேண்டும்.


ல்லூரிகளில் இருந்து கடந்துசெல்கின்ற மாணவர்கள் தங்களுடைய எதிர்கால நடத்தைகளை மிக மோசமான முறையில் மாற்றிக்கொள்வதை அன்றாடம் காண முடியும்.


வர்களை கண்காணிக்கும் வகையில் சில ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,

உதாரணமாக,
பழைய மாணவர் சங்கங்களை மீள் கட்டமைப்புச் செய்யலாம்.

பழைய மாணவர் சங்கம் இல்லாத மத்ரஸாக்களில் புதிதாக அமைக்கலாம்.

பழைய மாணவர்களை வருடத்தில் ஒருநாள் அல்லது மூன்று வருடங்களில் ஒருநாள் ஒன்று சேர்க்கும் திட்டத்தை பிரகடனப்படுத்தலாம்.
அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அனுபவம் வாய்ந்த ஆலோசகர்களை நியமிக்கலாம்.

நடப்பு கால சூல்நிலை குறித்து திட்டமிட்ட கருத்தரங்குகளை மேடையேற்றலாம்.

இந்த ஆலோசனைகள் நம் சமூகத்தின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் என நம்புகிறேன்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

3 comments:

NASRI MJM said...

masha Allah very good try. keep it up and Allah will help you.
pls visit my blog also: wahifirst.blogspot.com there is an article on தர்ஹா நகர் பெரிய பள்ளி மையவாடியில் நடந்தது என்ன?

nasri jiffri (salafi)

NASRI MJM said...

wahifirst.blogspot.com

Unknown said...

இலங்கை தென்கிழக்கு பலரகலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் வெளியீடான இஸ்லாஹ் சஞ்சிகைக்கு இலங்கையில் மதரஸாக் கல்வி நேற்று-இன்று-நாளை என்ற தலைப்பில் ஓர் ஆக்கம் எழுதியுள்ளேன். இங்கு எடுத்தாளப்பட்ட சில சிந்தனைகள் கருத்துக்களை விரிவாக நின்று ஆரய்ந்துள்ளேன்.