எல்லாமே நான்தான்...........!
குடும்பங்கள் தொட்டு சர்வதேச நிருவனங்கள் வரை (from family to international firms) நிர்வகிக்கும் சில தலைவர்களின் நிர்வாக நடத்தை, போக்கை ஆய்வுசெய்கின்ற போது எல்லாமே நான்தான் என்ற போக்கில் இயங்குவதை பார்க்க முடியும்.

குறித்த அமைப்பின் எல்லா இயக்கங்களையும் நிருவகிக்கின்ற தகுதி தனக்கு மட்டும்தான் இருக்கின்றது, தான் மட்டுமே அதற்கு தகுதி, தனக்கு மட்டுமே அந்தஸ்து இருக்கின்றது என்று செயற்படும் போக்கு பலராலும் விமர்சிக்கப்படுவது அறிந்ததே.

இந்த போக்கும் சிந்தனையும் மூன்று விதமான வகையில் உருவாகின்றது,
1. தான் என்ற மமதை,
2. எதுவாக இருந்தாலும் தன் கைபட்டால் தான் நன்றாக இருக்கும் என்று தன் மீதுள்ள அதிக நம்பிக்கையும் பிறர் மீதுள்ள திருப்திகரமற்ற மனநிலையும்.
3. தனது பதவியை நீண்ட நாள் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முன்னேற்பாடு.

இந்த மூன்று வகையானவர்கள் தொடர்பாக அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

அனைத்தையும் தனியாக செய்யும் தனிமனிதர்களின் நிலை இப்படித்தான் இருக்கின்றது;
 தான் என்ற மமதை

 பிறருக்கு சில அதிகாரங்களை வழங்கினால் தனது பதவியும் சேர்ந்து போகும் என்ற பயம்,

 தனக்கு மேலே உள்ள பதவியில் இருக்கும் உயர் அதிகாரியின் பொடுபோக்கும் அறிவின்மையும்.

 இவருடன் இணைந்து பணிபுரியும் அதிகாரிகள் தங்களது சொந்த காரியங்களையும் அபிலாக்ஷைகளையும் செய்துகொள்ள வேண்டும் என்ற சுயலாபம் தேடும் போக்கு,

 தனது குறைகளை மறைக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் உடனுக்குடன் செய்துகொள்ளும் திறமை.

 எதையும் விலைகொடுத்து தனதாக்கிக்கொள்ளும் தனித்தன்மை.

இப்படி பல காரணங்களால் எல்லாமே நான்தான் என்ற மமதையுடன் ஒரு சிலர் நமது சமூகத்தில் பலரின் எதிர்காலத்தை விலை பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு உதாரணம் அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட ஃபிர்அவ்னே போதுமானதாகும்.

“உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் ஆட்களை நாம் மூழ்கடித்ததை எண்ணிப் பாருங்கள்!” (அல் குர்ஆன் 2 : 50)

சமூக நிருவனங்களில் இப்படியான ஒரு சிலர் தங்களது தேவையற்ற ஆளுமையை காண்பிக்கும் போது பல பாரிய திட்டங்கள் தூரநோக்கு சிந்தனை இல்லாது எல்லைப்படுத்தப்படுகிறது.
உதவி செய்யப்படக்கூடியவர்கள் முகவரியற்றுப்போவார்கள்,
உதவிகள் தன்சார் நபர்களுடன் நின்றுவிடும்,

இந்த வகையான அதிகாரிகள் ஒரு பொருப்புக்குத் தகுதியானவர்களாக இருந்தாலும் எல்லப் பொருப்புக்களையும் செய்வதனூடாக வேலைப்பளு அதிகரிக்கும் போது சுதந்திரமாக சிந்திக்க முடியா நிலை தோன்றி அபிவிருத்தி, முன்னேற்றம் தடைப்படுகின்றது.

இந்த குறித்த காரணங்களால் இவர்கள் சமூகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகுவார்கள்.

சமூக நோக்கை கவனத்தில் கொண்டு அதிகாரங்களை, பொருப்புக்களை பகிர்ந்துகொடுத்து (separation of duties and responsibilities) காரியத்தை சாதிக்கும் நிலைக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

"அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே!
நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய்.
நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய்.
நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய்.
நாடியோரை இழிவு படுத்துகிறாய்.
நன்மைகள் உன் கைவசமே உள்ளன.
நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!” (அல் குர்ஆன் 3 : 26)

இந்த மாற்றங்களை செய்யும் அதிகாரிகளை மாற்றங்கள் தேவை வரவேற்கின்றது, எதிர்பார்க்கின்றது.

எழுத்து, சிந்தனை & ஆக்கம்: 
இஸ்ஸதீன் றிழ்வான்
08/10/2011
https://www.facebook.com/Issadeen-Rilwan-Page-132393194088297

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: