சதாம், கடாபி, அடுத்து யார்………?
சர்வதிகாரிகள், அராஜக ஆட்சியாளர்கள் தண்டிக்கப்படுவது பொதுவில் நியாயம் தான்.
ஆனால் அதை யார் செய்வது? எப்படிச் செய்வது? என்ற கேள்வி அதனுடன் சேர்ந்து பிறக்கின்றது.
இந்த ஆண்டின் பிறப்பு முதல் இன்றைய திகதி வரை உலக வரைபடத்தில் அதிக நாடுகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பல்வேறுபட்ட காரணங்களுக்காக நடந்தேறி இருக்கின்றது, அரங்கேறிவருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டங்களும் (Occupy) பணி பகிக்ஷ்கரிப்புக்களும் (Strike), வளர்ந்த மற்றும் வளர்ந்து வருகின்ற நாடுகள் என்ற பாகுபற்று பாதையேறி இருக்கின்றது.
தூனிசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மக்கள் ஆர்ப்பாட்டம் சூடுபிடித்த போது மேற்கத்தைய நாடுகளின் அரச தலைவர்களின் உள்ளத்தில் ஏற்பட்ட சந்தோக்ஷங்களும் அதனை தனிக்க உதவுவாதாக பேசிக்கொண்டு தூண்டிவிட எடுத்த பிரயத்தனங்களும் எல்லையற்றது.
ஆனால் சில மாதங்கள் கடந்து தங்களது சொந்த தேசங்களில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்ட போது அந்த அவலத்தை மூடிமறைக்க முயற்சித்ததும், வாய் மூடி இருந்ததும் எவ்வளது கேவலமானது என்பதை சிந்திக்க மறந்துவிட்டார்கள் இந்த மேற்கத்தைய தலைவர்கள்.
ஒரு நாட்டில், ஆட்சி மாற்றம் தேவை என்பதை பெரும்பான்மை மக்கள் உறுதிசெய்துவிட்ட பின், அந்த ஆட்சித்தலைவர் மக்கள் கருத்துக்கும் வேண்டுகோள்களுக்கும் இடம்கொடுப்பது புத்திசாலித்தனம் தான்.
அதே நேரம் ஆட்சித்தலைவரை மாற்ற வேண்டும் என்பதற்காக நாட்டை முழுமையாக அழித்து மீண்டும் ஒரு நாட்டை கட்டியெழுப்புவது என்பது அறிவீனமானது, நடை முறை சாத்தியமற்றது.
ஈராக்கின் முன்னால் ஜனாதிபதி சதாம் ஹுஸைனை மாற்றுவதற்கு அந்த நாட்டை முழுமையாக தரைமட்டமாக்கிய சம்பவத்தை மனசாட்சியுடன் பொதுநிலையாக நின்று சிந்திக்கின்ற எந்த அறிவாளியும் சரிகாணமுடியாது.
அதே தொடரில் லிபிய முன்னால் தலைவர் முஅம்மர் கடாபியை பதிவிலிருந்து இல்லாமலாக்க அந்த நாட்டை பாலைவனமாக்கியதையும் எந்த நேர்மையான புத்திஜீவியும் ஏற்கப்போவதில்லை.
சதாமையும் கடாபியையும் இடமாற்றியதில் வெற்றி கண்டதாக சந்தோசம் கொண்டாடும் ஒவ்வொரு தனிநபர்களையும் மாற்றங்கள் தேவை வேருவிதத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது.
ஈராக் மற்றும் லிபியா நாடுகளின் இரு தலைவர்களும் கொல்லப்பட்டார்கள்,
இது பயங்கரவாதத்திற்கு எதிராக பேசும் அனைவருக்கும் கிடைத்த வெற்றி, ஜனநாயக ஆட்சியை விரும்பும் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றால்
எத்தனை பொது மற்றும் தனியார் நிருவனங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன?
குறிப்பாக கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் நூலகங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன?
எத்தனை வீடுகள் முழுமையாக தேசமாக்கப்பட்டிருக்கின்றன?
நிலையான வருமானம் தரக்கூடிய எத்தனை சொத்துக்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கின்றன?
இவைகளை USA NATO UNO தரும் பண உதவி மூலம் கட்டியெழுப்பலாம்.
அங்கு எத்தனை உயிர்கள் பழியாகி இருக்கின்றன? இதற்கு யார் பொறுப்பு?
இந்த கொல்லப்பட்ட உயிர்களுக்காக யாரைத் தண்டிப்பது?
அல்லது எப்படி மீளப் பெறுவது?
ஆனால் இங்கு அழிக்கப்பட்டிருக்கின்ற அனைத்து வீடுகளும் பட்டியலெடுக்கப்பட்டு உரிய நேரத்தில் இந்த சர்வதேச நிருவனங்களால் கட்டிக்கொடுக்கமுடியுமா?
முடியாது என்பது நிச்சயம்.
காரணம் இலங்கை தேசத்தில் வடமாகாணத்தில் விடுதலைப் புலியினருக்கும் அரசுக்கும் நடந்த மோதலில் அகதியானவர்களின் இன்றைய நிலையை நான் ஞாபகமூட்டிப்பார்க்கின்றேன்.
நான் 1990ம் ஆண்டு அகதியாக்கப்பட்டேன், எனது வீட்டையும் சொத்துக்களையும் இழந்தேன், இந்த வரலாற்றுக்கு இன்று இருவது வயது, ஆனால் இதுவரைக்கும் உள் நாட்டு அல்லது சர்வதேச அரசுகளால் எனக்கு வீடு வழங்கப்படவில்லை.
இதே நிலைதான் ஈராக், லிபிய அல்லது அது போன்ற நாடுகளில் வாழும் அகதிகளின் கதையாகும்.
நான் மேலே சிந்திக்கத்தூண்டிய விடயங்களை வேறு விதத்திலும் சிந்திக்கலாம்
எப்படி………..?
இப்போது சிந்தியுங்கள்!!
ஆட்சி மாற்றத்தின் போது எதை கவனிக்க வேண்டும்?
இதே நேரம் லிபிய தலைவர் கடாபியை திட்டமிட்டு கொலைசெய்துவிட்டு எப்படி கொலைசெய்யப்பட்டார் என்பதை விசாரிக்க வேண்டும் என்று கேள்வியை அதே USA NATO UNO க்கள் எழுப்பி இருக்கின்றன.
இதனை வேறு விதத்தில் சிந்திக்கத்தூண்டுகின்றன.
வளர்ந்த நாடுகள் முதல் வளர்ந்துவருகின்ற நாடுகள் வரை நடைமுறையில், மாற்றப்பட வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றது.
போதையுடன் வாகனம் ஓட்டுபவரை தண்டிக்க சட்டம் இருக்கின்றது,
போதையுடன் மனைவியை அடித்தால் தண்டிக்கச் சட்டம் இருக்கின்றது,
போதையுடன் பிறருடன் சண்டையிட்டால் தண்டிக்கச் சட்டம் இருக்கின்றது,
ஆனால் போதை தரும் மதுபானங்கள் உற்பத்திசெய்யும் நிருவனங்களை தடுக்க அரசுகளில் சட்டம் இல்லை.
இது போன்றுதான் இன்றைய ஆயுத தாக்க்குதல்களும் அதனை உற்பத்திசெய்து சந்தைப்படுத்துபவர்களின் நிலையும்.
அறபு எழுத்தில் அல்லது முஸ்லிம் பெயரில் ஒருவர் ஆட்சி செய்தால் அந்த நாட்டை அல்லது அவரை குறிவைக்கும் நிலை மாற வேண்டும்.
அதற்கு அறபு நாடுகளும் முஸ்லிம் தேசங்களும் விழித்தெழ வேண்டும்.
இதே பிரச்சினை
நேற்று நடந்தது,
இன்றுவரை நடந்து கொண்டிருப்பது
இனி நடக்கப்போவது நடக்க இருப்பது.
சிந்தித்துச் செயற்படுவது ஒவ்வொரு தனிமனிதர்களதும் கடமையாகும்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//பிரமாதம் எல்லோரும் பேசி முடித்த பின் .. சங்கதியையே தலை கீழாக மாற்றி யோசித்து இருக்கின்றீர்களே... உண்மையில் பலரும் பேசமறந்த விடயம் தான் இது//
hima
ஸலாம். கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறீர்கள் இன்னும் அதிகமான தகவல்களை சேர்த்திருக்களாம். மாஷா அல்லாஹ்.
masa allah
open our heart & mind
ask duwa our muslim ummah
http://khanbaqavi.blogspot.com/2011/11/blog-post.html
ஜனநாயகத்தின் எதிரி
மூச்சுக்கு மூச்சு மக்கள் ஜனநாயகம் பற்றி வாய்கிழிய கதாஃபி பேசினாரே தவிர, செயலில் ஜனநாயகத்தின் விரோதியாகவே விளங்கினார்.
கதாஃபி தமது ஆட்சியில் புரிந்த குற்றங்களின் பட்டியல் நீளமானது. 1978ஆம் ஆண்டு இமாம் மூசா ஸத்ர் அவர்களைக் கொலை செய்தார். சாட் நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டார். 1984ல் லண்டனில் லிபியா தூதரகத்தில் பணியாற்றிய பிரிட்டன் பெண்மணியைக் கொன்றார்.
1992ல் லிபிய விமானத்தில் குண்டுவைத்து 150 லிபியர்களைக் கொன்றார். 1996ல் தலைநகர் திரிபோலியில் உள்ள பூசலீம் சிறையில் 1170 கைதிகளைக் கொன்றார். 2003ல் சஊதி அரபியா மன்னர் அப்துல்லாஹ்வைக் கொல்ல முயன்றார்.
இக்வானுல் முஸ்லிமீன் நண்பர்கள் மதம் மாறியவர்கள் என்று தீர்ப்பளித்தார். இக்வான்களைச் சிறையிலடைத்துக் கொடுமைகள் புரிந்தார்... இப்படி நீள்கிறது கதாஃபியின் ஜனநாயகப் படுகொலைகள் பட்டியல்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,
தொடராக வருகை தரும், கருத்துக்களை வழங்கும் அனைத்து வாசகர்களுக்கும் எமது நன்றிகள்.
இந்த கட்டுரையின் நோக்கம் சதாம், கடாபி அல்லது அது போன்றவர்களுக்கு வகாலத் வாங்குவதல்ல.
கட்டுரையை முழுமையாக வாசிக்கும் போதே இதனை உங்களால் தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் கருத்துக்களை தொடருங்கள்.
எப்போதும் நீதிக்காக நமது எழுத்துக்களை பகிர்ந்துகொடுப்போம்.
Post a Comment