ஏன் என்னால் மாறமுடியவில்லை.......?


ஏன் என்னால் மாறமுடியவில்லை.......?
                                                   - இப்படிக்கு -
சிந்திக்கின்ற இளைஞன்

ல்ல குளிர், அதை ஒரு சூடான தேநீராவது குடித்துப் போக்கலாம் என்ற நினைப்பில் கடையை நோக்கி நகரும் போது
ஒரு நண்பர், நேற்று என்ன சனக்கூட்டம் என்று வார்த்தைகளை வீரியமாக வீச ஆரம்பித்தார்.

சிந்திக்கின்றவர்கள் அதிகம் சிந்திக்கின்ற ஒரு கேள்வி,
சிந்திக்காமல் வாழ்கின்றவர்கள் கூட ஒரு ஆபத்தை சந்திக்கும் போது சிந்திக்கின்ற ஒரு கேள்வி ஏன் என்னால் மாறமுடியவில்லை.......? என்பது

கோயில்களில் பணிபுரியும் பூக்ஷாரிகள்,
ஆலயங்களில் பணிபுரியும் ஆசாரிகள்
பெளத்தரின் உருவத்திற்கு முன்னால் நின்று சாமானிகள் கூட ஒரு நிமிடம் ஏன் நான் இந்த தகாத வணக்க வழிபாட்டை மாற்றிக்கொள்ள கூடாது என்று சிந்திக்கின்றார்கள்.

நிறைய உபதேசங்கள், மார்க்க, சமூக அறிஞர்களின் போதனைகள், தீமைகளை தடுத்து நன்மைகளை ஏவும் நிகழ்வுகள் தேவையை விட அதிகம் அரங்கேரிக்கொண்டே இருக்கின்றது.
ஆனால் காற்று வீசுகின்ற திசையை நோக்கி சருகுகள் அடித்துச் செல்லப்படுவது போல நாளுக்கு நாள் அறிமுகமாகும் நவீன கலாச்சாரங்களை நோக்கி நமது இளைஞர், யுவதிகள் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.

அறிமுகமாகும் நவீன கலாச்சாரம் அதன் தேவை என்ன? தனிமனித வாழ்வுக்கு அல்லது சமூகத்திற்கு அதனால் உள்ள பயன் என்ன? அந்த நடத்தையை தன்னுடைய வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஏற்படும் பின்விழைவு என்ன? என்ற பல அறிவுபூர்வமான கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றது.

ஒரு தனிமனித வாழ்வில் மாற்றங்கள் தேவை எப்போது?
உண்மையில் மாற்றங்கள் தேவை தானா?
எப்படி அதனை இனங்கண்டுகொள்வது?
போன்ற கேள்விகள் அவனது வாழ்வில் எப்போது தோன்றுகின்றது என்றால் ஒரு தனிமனிதன் தான் யார்?
நேற்று எப்படி இருந்தேன்?
இப்போது எப்படி இருக்கின்றேன்?
என்ன செய்துகொண்டிருக்கின்றேன்?
என்னுடன் இருக்கும் நண்பர்கள் யார்?
என்னைச் சூழ என்ன நடந்து கொண்டிருக்கின்றது?
எனது முயற்சிகள் எத்திசை நோக்கி ஈர்க்கப்படுகிறது?
எனது தொழிலில் நான் எந்த நிலையில் இருக்கின்றேன்?
எனது மொழியாற்றல் எப்படி இருக்கின்றது?
எனது ஆன்மீக வாழ்வு எவ்வாறு அமைந்திருக்கின்றது?
அரசியல் சமூக, பொருளாதார அறிவு நடத்தை ஈடுபாடு எப்படி இருக்கின்றது?
எனது நண்பர்களுக்கும் எனக்கும் இடையில் உள்ள வேருபாடு என்ன? போன்ற விடயங்களை பற்றிய அறிவும் இது தொடர்பாக நாளுக்கு நாள் உள்ள மாற்றங்களை உடனுக்குடன் புரிந்துகொள்கின்ற தேற்றமும் இருக்க வேண்டும்.


மாற்றங்கள் குறித்து சிந்திக்கின்ற நிலையில் நாம் இல்லை, அல்லது அதற்கான நேரம் எங்களுக்கு இல்லாமல் போயுள்ளது.
காரணம் வேலை, வேலை (Busy) என்று மனிதன் ஓடிக் கொண்டிருக்கின்றான்.

காலையானதும் உழைப்பு, மாலையானதும் குடும்பம் அல்லது வீட்டில் facebook, skypeக்கு முன்னால் முழு நேரமும் கடந்துசெல்கின்றது.
இதற்கிடையில் தனது முன்னேற்றம் பற்றி, சமூக எழுச்சி, மாற்றம் பற்றி சிந்திக்க சந்தர்ப்பம், நேரம் எங்கே கிடைக்கும்?
தூரத்தில் இருக்கும் நண்பர்களுடன் பேசிக்கொள்ள, தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள facebook க்கு வருகின்றோம்,

முதல் நாள் தெரிந்த நண்பர்கள் யாராவது இருப்பார்களா? என்று தேடுகின்றோம்
அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் புதிய சில முகங்களை காண்கின்றோம்.
பெண் முகங்களுடன் உலாவும் ஆண்களுடன் ஏமந்து அவர்கள் காண்பிக்கும் அழகிய பெண் முகங்களை கண்டு அவர்களுடன் தொடர்பை ஆரம்பிக்கின்றோம்.

படிப்படியாக ச்சாடிங்கில் ஆரம்பித்து, எதிர்முனையில் இருப்பது யார்? அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? அவர் ச்சாட் பன்னுவதன் நோக்கம் என்ன? அவரின் வயது என்ன? அவர் எங்கிருக்கின்றார்? என்ன செய்கின்றார் போன்ற உண்மையான தகவல்கள் தெரியாமல், மறைக்கப்பட்ட நிலையிலேயே வார கணக்கில் ச்சாடிங் தொடர்கின்றன, இன்று ஒருவர் என்று ஆரம்பிக்கிற அறிமுகம், மாதங்கள் கடக்கும் போது உலகில் அடையாளம் தெரியாத நாடுகளிலிருந்தெல்லாம் நண்பர்கள் அறிமுகமாகின்றார்கள்.


இந்த மாற்றம் வாழ்வில் எல்லா விடயங்களுக்கும் தடையாக அமைகின்றன.
காரியாலயங்களில் சரியாக வேலை முடியாது, சுதந்திரமாக சிந்திக்க நேரமில்லை, என்ன செய்கிறோம்? எங்கே போகின்றோம்? யாருடன் பேசுகின்றோம்? எப்படி நேரங்கள் கடந்துசெல்கின்றன? என்று தெரியாமலே செல்கின்றோம்.

’விடிகின்ற ஒவ்வொரு நாளும் புதியது’                                                                    என்பதை நடத்தையில் உணர வேண்டும்.

மனிதன் எப்படி மாறுகின்றான் என்பதை தெரிந்துகொண்டால் மனிதனால் அதே வடிவில்
அவன் விரும்பியவாறு மீண்டும் மாற முடியும்.

ஒருவர் புதிதாக, முதலாவதாக குப்பை மேட்டுக்கு செல்கிறார்,
அங்கிருந்து வெளியாகும் நாற்றத்தை 1ம் நாள் 100 வீதம் உணர்கிறார்,
அங்கிருந்து வெளியாகும் நாற்றத்தை 2ம் நாள் 95 வீதம் உணர்கிறார்
அங்கிருந்து வெளியாகும் நாற்றத்தை 3ம் நாள் 80 வீதம் உணர்கிறார்
அங்கிருந்து வெளியாகும் நாற்றத்தை 4ம் நாள் 50 வீதம் உணர்கிறார்
அங்கிருந்து வெளியாகும் நாற்றத்தை 5ம் நாள் 20 வீதம் உணர்கிறார்
அங்கிருந்து வெளியாகும் நாற்றத்தை 6ம் நாள் 05 வீதம் உணர்கிறார்

இப்போது இங்குள்ள வித்தியாசத்தையும் அந்த நாற்றத்துடன் அவன் எவ்வளவு நெருக்கமாக உள்வாங்கப்படுகின்றான் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்த சாதாரண நடைமுறை உதாரணம் எல்லாவகையான செயற்பாடுகளுக்கும் உதவியாக அமையும்.

நண்பர்களுடன் சேர்ந்து புகைத்தல் பலக்கத்தை ஆரம்பிப்பது, சினிமா பார்க்கும் போக்கை துவக்குவது, facebookக்கில் தன்னை முழுமையாக உள்வாங்கச் செய்வது முதல் ஆரம்பிக்கின்றது.

மாற்றங்கள் தேவை என்பதை அல் குர்ஆன்
"தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான்". (அல் குர்ஆன்13 :11)
முஹம்மத் நபி அவர்களின் தூதுத்துவச் செய்தியின் ஆரம்பத்தில் மதுபான பாவணையின் அளவு எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

மதுபானம் என்பது பிரிக்கமுடியா நண்பனாக இருந்தது, ஆனால் அது எவ்வாறு சேர்க்கமுடியா எதிரியாக மாற்றப்பட்டது? அதற்கு இஸ்லாம் எந்த வகையான நடவடிக்கைகளை எடுத்தது என்பதை அல் குர்ஆனிய வசனங்களை படிக்கின்ற போது தெரிந்துகொள்ள முடிகின்றது.

மாற்றத்திற்கான அடிப்படையை இந்தச் செய்தி மிக அழகாகச் சொல்லுகிறது.

இந்த முன்னுதாரணம் எல்லா வகையான கெட்டசெய்ற்பாடுகளுக்கும் அடிப்படையாகும்.

ஆனால் எங்களுடைய மனம் தான் நாம் மாறுவதற்கும் மாற்றப்படுவதற்கும் எம்மை மாற்றுவதற்கும் அடிப்படைக் காரணமாக அமைகின்றது.

மனித மனங்கள் மாற வேண்டும், மனிதன் தனது மனதை கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.

மனம் சொல்லுவதற்கு பின்னால் முழுமையாகச் செல்கின்ற மனிதன் தோற்றுப்போகின்றான், மனம் சொல்லுவதில் சரி பிழையை பிரித்துப்பார்த்து பயணிக்கின்ற மனிதன் வரலாறுகளில் பெயர்பெருகின்றான்.

காதலில் விழுகின்றவனை அதிலிருந்து வெளிவருவதற்கு தீர்மானித்துவிட்டு மீண்டும் மீண்டும் அதே சிந்தனையில் இருக்கின்றான் என்பதன் அடிப்படை அவனை அவனது மனம் விடுதலையளிக்க மறுக்கின்றது, மனம், எண்ணம் அவனை முழுமையாக நிருவகிக்கின்றது.

மனம், எண்ணம் அவனது இறையான்மையை பரித்துவிட்டது.

மாற வேண்டுமா? மாற்றம் வேண்டுமா? இப்போது என்ன செய்கின்றீர்கள்? தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது? தனது மனம் போன போக்கில் தான் போகின்றேனா? அல்லது எல்லாம் திட்டமிட்டபடிதான் நடக்கின்றதா? என்பதை சரிபார்க்க தயாராகுவோம்.

உங்களது தனிப்பட்ட, குடும்ப, சமூக பிரச்சினைகள் மற்றும் நடத்தைகளில் மாற்றங்கள் தேவை உளவியல் சார், அறிவியல் சார், ஆன்மீக சார் ஆலோசனைகளை வழங்க காத்திருக்கின்றது.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

Thozhirkalam Channel said...

தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..

வாழ்த்துக்களுடன்

Anonymous said...

//ஒருவர் புதிதாக, முதலாவதாக குப்பை மேட்டுக்கு செல்கிறார்,
அங்கிருந்து வெளியாகும் நாற்றத்தை 1ம் நாள் 100 வீதம் உணர்கிறார்,
அங்கிருந்து வெளியாகும் நாற்றத்தை 2ம் நாள் 95 வீதம் உணர்கிறார்
அங்கிருந்து வெளியாகும் நாற்றத்தை 3ம் நாள் 80 வீதம் உணர்கிறார்
அங்கிருந்து வெளியாகும் நாற்றத்தை 4ம் நாள் 50 வீதம் உணர்கிறார்
அங்கிருந்து வெளியாகும் நாற்றத்தை 5ம் நாள் 20 வீதம் உணர்கிறார்
அங்கிருந்து வெளியாகும் நாற்றத்தை 6ம் நாள் 05 வீதம் உணர்கிறார்//

இது தான் யாதார்த்தம். பாவங்களுக்கு நாங்கள் இசைவாக்கமடையும் போது பாவமாக அது தெரிவதில்லை..:(