மொட்டுக்கள் மலர…….. தொடர் 08Ø   னன சக்தியை உயர்த்துவதற்கான சில நுட்பங்கள் (The tricks to Improve the memory power)

மனன சக்தி என்பது எல்லோருடைய 

மாணவப்பருவத்திலும் கல்விக் காலத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.
எப்போது ஒரு மாணவன் தனக்கு போதிய மனன சக்தி இல்லை அல்லது போதாது என்று நினைக்கின்றானோ அந்த விநாடியிலிருந்து படிப்பை விட்டு தூரமாக முயற்சிக்கின்றான்.
ஆனால் எல்லோருக்குமே போதிய மனன சக்தி இருக்கின்றது என்பதை கீழ்வரும் நுட்பங்களை படித்து முடிக்கும் போது தெரிந்து முடியும்.

முதலாம் நுட்பம்:- 
சிறு இடைவேளைகளை எடு:
படித்துக்கொண்டிருக்கும் போது இடையிடையே சிறு இடைவேளைகளை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும் போது 30 -40 நிமிடங்களின் பின் 5 தொடக்கம் 10 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். இந்த இடைவேளையின் போது எதையும் வாசிக்கவோ கவனம் செலுத்தவோ கூடாது. இந்த நேரத்தில் ஒரு இடத்தில் ஓய்வெடுக்க அல்லது அங்கும் இங்கும் நடக்க வேண்டும்.

மீண்டும் தொடருங்கள்,
இந்த இடைவேளை உங்களது மூளைக்கு கொடுக்கும் ஓய்வாகும். இந்த ஓய்வு நீங்கள் படித்த, படிக்கும் பாடங்களை நிலையாக பதிய உதவுகின்றது. இதன் மூலம் படிக்கின்ற ஒவ்வோரு பாடங்களையும் இலேசாக ஞாபகம் வைத்துக்கொள்ள உதவும்.

இரண்டம் நுட்பம்:- 
நீ உனக்கு ஆசிரியராக இரு:
நீ வாசிக்கும், படிக்கும் பாடங்களை ஒவ்வொன்றாக தனக்குள் விளக்கப்படுத்த வேண்டும். மாணவனாக இருந்து படிக்கும் போது ஆசிரியராக இருந்து அந்த பாடங்களை தனக்குள் விளக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த வழிமுறை தானாகவே மனதில் பதிந்து கொள்வதற்கும் உரிய விளக்கத்தை பெற்றுக் கொள்ளுவதற்கும் உதவும்.

மூன்றாம் நுட்பம்:- 
படித்ததை கலந்துரையாட வேண்டும்.              
படிக்கின்ற முக்கியமான பாடங்களை வகுப்பிலுள்ள விரும்புகிற சில மாணவர்களுடன் கலந்துரையாடலாம். இந்த வழிமுறை முக்கியமான பாடங்களை மனதில் ஆழமாக பதித்துகொள்ள உதவும்.

நான்காம் நுட்பம்:- 
நன்றாக தூங்க வேண்டும்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி ஒரு மனிதன் சரியாக தூங்காவிட்டால் அது அவனது மூளையின் வளர்ச்சீக்கும் ஞாபக சக்திக்கும் பாதிப்பாக அமைகின்றது.

எப்போதும் நாம் பகலில் காண்கின்ற, கேட்கின்ற படிக்கின்ற, விடயங்கள் இரவில் நாம் உறங்கும் போது தான் எமது மூளையில் பதியப்படுகின்றன. அதனால் நாம் ஒவ்வொரு நாளும் 8 மணித்தியாலம் என்ற கணக்கில் தூக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பரீட்சை காலத்தில் குறைந்தது 6 மணித்தியாலமாவது தூங்க தவறிவிடக்கூடாது. பொதுவாக பரீட்சைகாலத்தில் அதிகமாக படிக்க வேண்டும் என்ற நினைப்பில் சரியாக தூங்குவதையும் சாப்பிடுவதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இது முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும். நாம் படிக்கின்ற பாடங்கள் எமது மனதில் வெகுவாக பதியப்பட வேண்டும் என்றால் ஓய்வு, தூக்கம் மிக முக்கியமானதாகும்.

ஜந்தாவது நுட்பம்:- 
நன்றாக சாப்பிட வேண்டும்.
மூளையை சரியான முறையில் பாதுகாத்துக்கொள்ள சரியான உணவுகளை உண்ணுவதும், சரியான நேரத்தில் உண்ணுவதும் மிக முக்கியமானதாகும்.

ஊட்டச்சத்துள்ள, சக்தி வாய்ந்த உணவுகள் மிக அவசியமானதாகும். பால், பழங்கள், மறக்கறி, இரைச்சி மற்றும் மீன் வகைகள் தொடராக சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும்.
இதைவிட நிறைய நுட்பங்கள் இருக்கின்றன, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏனைய தொடர்களில் படிக்கலாம்


Ø      பிள்ளைகளை தவறுகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும் தவிர்த்து வளர்ச்சி, வெற்றியின் பக்கம் திசை திருப்புதல் (Remove cause of failure from children’s life and help them achieve maximum success).

அதிகமான பிள்ளைகள் ஒருசில விடயங்களில் நல்ல திறமையை காட்டும் அதே நேரம் வாழ்க்கைக்கு தேவையான சில முக்கியமான பகுதிகளில் தோல்வியடைந்துவிடுகின்றனர்.

உதாரணமாக,
·         அம்மார் என்ற மாணவன்  திறமையான ஒரு சுட்டிப் பையன், படிக்கின்ற காலங்களில் பாடசாலையில், கல்லூரியில் நல்ல தேர்ச்சிகளை பெற்று சித்தியடைந்தான், ஆனால் இப்போது சாதாரண தரத்திலுள்ள ஒரு தொழிலில் அமர்த்தப்பட்டிருக்கின்றான், காரணம் மக்களுடன் கலந்து பழகுதல், சமூக சகதுறையில் இருக்கின்ற பழகீனமேயாகும்.

நேர்முக பரீட்சைகளின் போது நன்றாக முகங்கொடுக்க முடியாததனால் அவனால் நல்ல பல சந்தர்ப்பங்களை அடைய முடியாது போய்விட்டது.

·         ஆசிக் என்பவர் நல்ல சம்பளத்திற்கு நல்ல பதவியில் இருக்கின்றார், ஆனால் அதைகொண்டு அவரால் சந்தோஷப்படமுடியவில்லை, காரணம் அவரது உறவினர்கள், குடும்பத்தார் வீட்டில் நல்ல உறவை பேண தெரியாமை.
·         ஆமிர், நல்ல தொழில் வாய்ப்பு, நல்ல பண வசதியுடன் நாட்களை கடத்துகின்றார், ஆனால் அவரால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை, காரணம் அவருக்கு நல்ல ஆரோக்கியம் இல்லை. அவரது ஆரோக்கியத்தை கவனிப்பதில் தவறிவிட்டார்.

·         ஆபித், அமைதியானவன், அதிகமான கட்டங்களில் பல சாதனைகளை படைத்தவன், ஆனால் அவன் ஒரு ஏழை மாணவன்.
ஏன் எமது பிள்ளைகள் ஒன்றில் சந்தோஷத்தையும் இன்னுமொன்றில் கவலையையும் தழுவுகின்றார்கள்?
தேவையான பயிற்சியில் ஏற்பட்ட பற்றாக்குறையும் போதுமான வழிகாட்டலுமின்மையே காரணமாகும்.

இதுதான் எமது பிள்ளைகளின் பிரச்சினைகளுக்கு ஆணிவேராகும்.
பொதுவாக எல்லா பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களது பிள்ளைகளின் படிப்பிலும் தொழிலிலும் மட்டும் தான் அதிக அக்கறை காட்டுகின்றனர், ஆனால் வாழ்க்கையில் மொத்த முன்னேற்றத்திற்கும் தேவையான பிற விடயங்களில் முக்கியத்தும் கொடுக்க தவறிவிடுகின்றனர்.

இது எமது பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஏற்றத்தாழ்வை காட்டுகின்றது. பாரிய பின்னடைவுகளுக்கு வழிகோல்கிறது.
வாழ்க்கை என்பது பல கட்டங்களை, பல துறைகளை ஒன்றாக, ஒன்றுடன் ஒன்றாக இணைந்த ஒன்றாகும். அதனால் எமது பிள்ளைகள் அவர்களது வாழ்வில் பல கட்டங்களை அடைய வேண்டியுள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கை பாத்திரம் மாணவனாக, கணவனாக, மனைவியாக, பெற்றோராக, வழிகாட்டியாக, தொழிலாளியாக, முதலாளியாக, சிறந்த குடிமகனாக, இப்படி நீண்டு கொண்டே போகும்

இப்படி எல்லாவிதமான கட்டங்களையும் சந்திக்க இருப்பதனால் நல்ல வழிகாட்டி கிடைக்கும் போதே தவிர அவர்களால் சந்தோஷமாக முடியாது.

நல்ல வழிகாட்டல் என்பது?                              வாழ்க்கைக்கான பயிற்சி என்பது?                                   
அது சீரிய வாழ்க்கைத்திறமைக்கும் எதிர்கால வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் வெற்றிபெறுவதற்கான பயிற்சியாகும்.

இந்த வழிகாட்டல் பயிற்சி எமது பிள்ளைகளின் எல்லா வகையான வாழ்க்கை அமைப்பிலும் நல்ல முறையில் சாதிப்பதற்கு உதவும்.
ஆனால் எதிர்பாராத விதமாக, எமது பிள்ளைகளின் பாட புத்தகங்களில் மிக முக்கியமான, வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டல்களும் வெற்றிக்கான திறைமைகளும் குறைவாகவே உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எமது பாடசாலைப் பாடத்திட்டங்களின் கல்வியல் துறைக்கு மட்டுமே அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருப்பதாக பல விமர்சனங்களை ஆங்காங்கே எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் காணமுடியும்.

இந்த குறைபாடு பெற்றோர்களையும் பிள்ளைகளையும் வாழ்க்கைக்கு தேவையான துறைகளை வெளியே சென்று தேடிபடிக்க செய்கின்றது.
இவ்வாரு நாம் கற்பிக்க வேண்டிய சில முக்கிய 8 வழிமுறைகளை கீழே பட்டியலிட்டிருக்கின்றேன்.

1)   சுய நிருவாகத்திறமை
ஒருவர் தனது சிந்தனையை நிருவகிக்கின்ற திறமை, தகைமை, மன உறுதியையும் சுய அந்தஸ்தையும் கட்டியெழுப்புதல், தனது மதிப்பு, தகுதி அனைத்தையும் கூட்டிகொள்ளுதல்.

2)   சிந்தனையை கட்டுப்படுத்தும் திறமை
மூளையின் முழுமையான சக்தியையும் செயற்திறனையும் பெற்றுக்கொள்வது.

3)   சிறந்த கற்கைத் திறன்
படிப்பதில் விவேகத்தையும் வேகத்தையும் பயன்படுத்தல். அதை கொண்டு பரீட்சையில் வெற்றி பெறல்.

4)   மனதை கூர்மைப்படுத்திக் கொள்ளும் திறன்:      
இது மன ஒருமைப்பாடு, எதையும் நுணுக்கமாக கூர்ந்து கவனித்தல், எதற்கும் அடிப்படையை கண்டுபித்தல் திறமை எனப்படும்.

5)   பொருத்தமான தொழில்வாய்ப்பை தேர்ந்தெடுக்கின்ற திறமை
தனது தகுதிக்கு தேவையான, வாழ்க்கைக்கு போதுமான வகையில் ஊதியத்தை பெறக்கூடிய வகையில் தெரிவுசெய்தல்.

6)   ஆளுமையை அபிவிருத்தி செய்யும் திறமை
எவரையும் எதையும் கவருகின்ற ஆளுமையை கட்டியெழுப்புதல், எல்லோருடனும் பொதுவில் நல்ல உறவுமுறையை வளர்த்துக்கொள்கின்ற தன்மையை உருவாக்குதல்.

7)    உற்பத்தித் திறன்
புதிதாக எதையும் உருவாக்கும் நோக்கில் சிந்தித்தல், புதிய முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திட்டங்களை வகுத்தல், இதுதான் இன்றைய உலகின் போட்டித் தன்மையை வெல்வதற்கு தேவையான திறமையாகும்.

8)   அடுத்த தொடரில்………..

தொடர்வது அங்கம் 09


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: