இதுவா ஃபெஷன்……….? (Is it the fashion what you mean…………?)
“சங்கடங்கள், ஆனால் ஃபெஷனாச்சே!
பரவாயில்லை,
இதில்லாவிட்டால் கண்டுக்க மாட்டார்கள் எங்களை……”
இந்த மனநிலை இப்போது நமது இளைஞர் யுவதிகளின் உள்ளத்தில் குடிகொண்டு அவர்களை
நிர்வகித்துவருகின்றது.
இதை எதிர்த்து விமர்சிக்கின்ற சிலருக்கு மத்தியில் அறிந்தோ அறியாமலோ பலர் இந்த
நவீன கலாச்சாரங்களுக்குள் சிக்குண்டு சரி பிழை எதுவென்று அடையாளப்படுத்திப்
பார்க்கத்தெரியாத அல்லது தெரிந்தும் கண்டுக்கொள்ளாமல் காலம் ஓட்டிவருகின்றனர்.
‘மாற்றங்களின் ஆரம்பம்’, ‘மாற வேண்டியவர்கள், ஆனால் மாறிவிட்டோம்’ போன்ற
தலைப்புக்கள் மூலம் இதன் அடிப்படைகளை விளக்கி ”மாற்றங்கள் தேவை” வலைப்பகுதி வீரு
நடைபோட்டுவருவது நாம் அறிந்ததே.
‘யூதர்களும், கிறித்தவர்களும்
அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். "அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்'' எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின்
அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து
காப்பாற்றுபவனோ, உதவுபவனோ
உமக்கு இல்லை”. (அல்குர்
ஆன் 2: 120)
மேலே உள்ள கடவுள் வார்த்தை நமது நடத்தைகளை அம்பலப்படுத்தி
நிரூபித்துக் காண்பிக்கின்றது.
நாம் ஒவ்வொரு நாளிலும் சந்தித்து பிரியாவிடை வழங்குகின்ற 24 மணித்தியாளங்களில்
எமது ஒவ்வொரு செயற்பாடுகளிலும் நவீன ஷைத்தானிய ஃபெஷன்கள் பரிணமித்துக் கொண்டே இருக்கின்றது.
சினிமா நடிகர்கள், நமது காதாநாயர்களாக..........
பாடகர்கள், எங்களுக்கு அபிமானியர்களாக..........
கவிஞர்கள், எங்களையும் கவிராயர்களாக............
தெருக்கூத்தாடிகள், எங்களையும் தெருவோர நாய்களாக்கி..............
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள்
நமது முன்ணுதாரனப் புருக்ஷர்களாகி..........
அரசியல் தலைவர்கள் நமது மாமனிதர்களாகி..........
ஆன்மீகத் தலைவர்களின் நடைமுறைகள் நமது வாழ்க்கையில் அதிக
பங்குவகிக்கின்ற........
’குருடர் வழிநடத்தினால் பின்பற்றுபவர்கள் குழியில் விழுவார்கள்’ என்பது போல,
நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட அனைவரும் எம்மை குழியில் தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள்.
எழுவதும், பின் மீண்டும் மீண்டும் அதே குழியில் அல்லது அதை விட பெரிய குழியில் விழுவதுமாய், நமது வாழ்க்ககைச்
சக்கரம் சுழன்று கொண்டிருக்கின்றது.
மிகவும் பெரிய குழியில்
சரமாரியாக விழும்போது சிலர் சிந்திக்கின்றனர், அதில்
ஆகக்குறைந்த சிலர் மாறி, மீளுகின்றனர்.
நாம் அனைவரும் மாற வேண்டும் என்பதே மாற்றங்கள் தேவையின்
முழுமையான நோக்கம்.
இதனை சொல்ல முனைந்த முதல் நாள் தொட்டு இன்றுவரை இஸ்லாம்
விமர்சிக்கப்பட்டுவருகின்றது.
இஸ்லாம் ஏன் விமர்சிக்கப்படுகின்றது என்று ஆய்வுசெய்து
அதற்கு விடைதேடுகின்ற போது நடைமுறையில் இதனை சரிவர கண்டுகொள்ள முடியும்.
இத்தனை நுட்பமான உலக இயக்கத்தை படைத்து கண்கானிக்கின்றவனை
நேரம் ஒதுக்கி வணங்குங்கள் என்று சொன்ன போது இஸ்லாம் விமர்சிக்கப்படுகிறது.
அன்றாட வாழ்க்கையில் உலக அலங்காரங்களும் நவீன கண்டுபிடிப்புக்களும்
வணக்கத்திற்கு நேரம்கொடுக்காத வகையில் எம்மை மறைத்து, மறக்கடித்து
வாழசெய்துகொண்டிருக்கின்றது.
முழு ஓய்வு நேரங்களும் தொலைக்காட்சிப்பெட்டி, இணையத்தள பக்கங்கள்
முன் உட்கார்ந்து வீணடிக்காமல் கடவுளுடைய திருவேதமாகிய அல்குர் ஆனையும்
தேடிப்படியுங்கள், அதனுடன் அதிக தொடர்புகளை ஏட்படுத்துங்கள் என்று
உபதேசிப்பதனால் இஸ்லாம் விமர்சிக்கப்படுகின்றது.
அன்றாடம் வெளியாகும் சினிமாக்கள், பொப் இசைகள்
பார்ப்பது,
அதன் சாயலில் வாழ்வது என்பது ஃபெஷனாகிவிட்டது நமது புதிய
தலைமுறையினருக்கு……
பெண்களை முன்நிறுத்தி அவர்களை ஆபாசமாகக் காண்பித்து இன்று அனைத்து பொருட்களும்
விற்கப்படுகின்றன, அதனை இஸ்லாம்
தடுத்து பெண்களுக்கு சுயமரியாதை பெற்றுக்கொடுத்த போது இஸ்லாம்
விமர்சிக்கப்படுகின்றது.
ஆனால் இதன் மர்மங்களை அறியாமல், புரியாமல்
விட்டில் பூச்சிகள் வெளிச்த்தை நோக்கி கறுகி சாம்பலாகுவதைப் போன்று, நமது சமூகம்,
அந்த விளம்பரங்கள் வரும் திசையை நோக்கி வீரு நடை போடுகின்றவர்களில் முதல் நபராக
கால்பதித்துவருகின்றார்கள்………
திரும்புகின்ற திசைகள் முழுதும் பெண்களை தூவிவிட்டு
விபச்சார சூழலை திட்டமிட்டு கட்டியெழுப்பும் இந்த நவீன ஃபெக்ஷனுக்கு நம் தலைமுறையினர் சந்திக்கின்ற
சாவல்களில் மிகவும் பாரதூரமானவைகளில் இதுவும் ஒன்றே....
வியாபாரங்களில் வட்டி முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும்
என்று வலியுறுத்தியதனால் இஸ்லாம் விமர்சிக்கப்படுகின்றது,
ஆனால் வட்டிக்கு வேறு பெயர் சூட்டி நம் தேசங்களில் வங்கி, வியாபரங்கள் எழுச்சிபெற்றுவருகின்றன, ஆனால் அடுத்த தசாப்பத்தில் அது வீழ்ச்சியும் காண்கின்றன.
***
வீழ்ச்சிக்கான காரணங்களை கண்டுபிடிக்க
எத்தனிக்காத பேதே தவறுகள் தொடர்ந்தும் தவருகளாக இருந்து வருகின்றன.
***
வீழ்ச்சிக்கான காரணங்களை கண்டுபிடிக்க எத்தனிக்காத போதே தவறுகள் தொடர்ந்தும் தவருகளாக இருந்து வருகின்றன.
பாலியல், ஓரினச்சேர்க்கை
(Gay, Lesbian and Porn), விபச்சாரம்
போன்ற இழிசெயலில் ஈடுபடும் சமூக துரோகிகளுக்கு அடிப்படையிலேயே சீல் வைத்துவிட்டு
எச்.ஐ.வீ, எய்ட்ஸ் நோய்களுக்கு மருந்து காட்டித்தந்து, கட்டுப்பாடுள்ள, நாகரிகமாக
குடும்ப முறைமையை அறிமுகம் செய்ததனால் இஸ்லாம் விமர்சிக்கப்படுகின்றது,
ஆனால் இன்றைய இளைஞர் யுவதிகளின் வாலிப வயதில், கல்லூரிக்காலங்களில் ஓரினச்சேர்க்கை, தகாத உறவுமுறைமை ஃபெஸனாக பரிணமித்திருக்கின்றது.
ஆனால் இதை மனம்திறந்து ஏற்று நடக்காத நம் சான்றோர், அடைத்த
சுவர்களுக்கிடையில் ஆடம்பரம், நாகரீகம்
என்ற லேபலின் பெயரில் அரங்கேற்றிவாருகின்றனர்.
புகைக்காத, மதுபானம்
அருந்தாத இளைஞர்களை தங்கள் பக்கமே எடுக்காத நிலைக்கு இளைஞர்களின் ஃபெக்ஷன் உச்சகட்டம்
தலைக்கடித்திருக்கின்றது.
நேற்று புகைப்பழக்கமில்லாத மணமகனை தேடிய சமூகம், இன்று புகைப்பழக்கத்திற்கு அடிமையான மணமகளை தேடுகின்ற நிர்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்
வெளியே தெரியாமல் உள்ளே அணியும் ஆடைக்குப்
பெயர் உள்ளாடை, அப்படியானால் இப்போது
நமது இளைஞர், யுவதிகள் அணியும்
ஆடைகளுக்கு என்ன பெயர் சூட்டுவது?
பெண்கள், தங்களுக்கு
அல்லாஹ்வால் வழங்கப்பட்டிருக்கின்ற அழங்காரங்களை உரியவிதத்தில் மறைத்துப்
பாதுகாக்க மறுத்துவிட்டார்கள்.
கட்டளையிட்ட விதத்தில் கட்டுப்பட, கடைப்பிடிக்கச் சொல்லும் போது இஸ்லாம்
விமர்சிக்கப் படுகிறது.
இஸ்லாத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்கிவிட்டு, விரும்பிய
விதத்தில் தலைமுடி கூந்தல்களை திறந்துகொண்டு, மார்பங்களை
வெளியே காண்பித்துக்கொண்டு, தொடைகளின்
முழு உருவத்தையும் வெளியுலகத்திற்கு காட்சிப்படுத்தியவண்ணம் பாதைகள், வீதியோரங்கள்
சந்தைகள் சகிதம் காட்சி மயமாக்கப்படுகிறது.
பெண்களின் இந்த மித மிஞ்சிய போக்கின் விளைவு, மறுநாள் கற்பழிப்பு
என்று நாளேடுகளில் நாறித் தள்ளுகிறது.
சிலரின் ஆடையைக் கண்டால் தைத்து அணிந்தார்களா? அணிந்து தைத்தார்களா? என்று,
பார்ப்போரை சங்கடத்துக்குள்ளாக்கிறது.
தலைமுடி அழங்காரங்களில் ஏற்பட்டுள்ள புதிய அழ(ழு)கிய ஃபெஸன்
தான் அரைகுறையாக கத்தரித்து நிறந்தீட்டிக்கொள்வது. இந்த ஃபெஸன் ஆண் பெண்
இருபாலாரையும் முழுமையாக அடிமைப்படுத்தி இருக்கின்றது.
இந்த ஃபெஸனை பின்பற்றி முடியை அழங்கரிக்காதவர்களை ஃபெஸன்
தெரியாதவர்கள் என்று இவர்கள் தூற்றிக்கொள்வார்கள்.
பைத்தியக்காரன், புத்திசாலியைப் பார்த்து பைத்தியகாரன்
என்று சொல்லுவது போல்தான் இந்த தரம்கெட்ட பெஷன் கற்றுக் கொடுத்திருக்கிறது.
நாகரீகம், கலாச்சார பண்பாடுகளை இவ்வளவு தூரம்
மாசுபடுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கால்வாசி பங்கு இருக்கின்றது.
இந்த ஊடகங்களுடன் சேர்த்து, வணிக நிருவனங்களுக்கும் பாரிய
பங்கு இருக்கின்றது.
(”கலாச்சாரத்தை சீரழிக்கும் வணிக முறைமை” என்ற கட்டுரையில் அது தொடர்பான விரிந்த கட்டுரையை
எதிர்பார்க்கவும்).
நடைமுறையிலுள்ள அனுமதிக்கப்பட்ட கலாச்சாரத்திற்கு எதிராக
ஒரு பொருளை பாவணைக்குக் கொண்டுவருவதற்கு வியாபாரிகள் ஊடங்களை பணம்கொடுத்து, தங்கள்
நிபந்தனைக்குக் கட்டுப்பட வைக்கின்றார்கள், சமூக
ஒழுக்க விழுமியங்களை கவனத்தில் கொள்ளாது, பணத்தை மட்டும் கருத்தில்கொள்ளும்
ஊடகங்களும் அதனை நிர்வகிக்கும் சமூக துரோகிகளும் அவர்களுடைய சுயநலங்களை மட்டும் மூலதனமாக்கி,
மக்கள் எக்கேடு கெட்டாளும் பராவாயில்லை எங்களுக்கு இலாபம் கிடைத்டதால் போதும்
என்று, வியாபாரிகளின் ஏவலை மக்கள் மன்றத்தில் சமர்பிக்கின்றார்கள்.
குறித்த ஊடகங்கள் எடுக்கும் விளம்பர வாந்தி, சிறு குழந்தை முதல் சமூகத்தில் அங்கம் வகிக்கும்
அனைவரையும் தாக்கம் செலுத்துகிறது.
ஊடகங்கள் வரிசையில்
ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளாய் சில சமூக தளங்களும் அவைகளுக்கு பக்கபலமாய் நின்று துணை
புரியும் மென்பொருள் நிருவனங்களும் செயற்பட்டுவருகின்றன.
ஒரு சில நாடுகள்
தங்கள் நாட்டின் இறையாண்மை எல்லைக்குள் சில இணையத்தள பக்கங்களை நுழையவிடாமல் தடுத்து வைத்திருக்கின்றன. ஆனால் அந்த தடையையும் மீறி தடுக்கப்பட்ட இணையத்தளப் பக்கங்களை உள்ளே ஊடருத்துச்
செல்வதற்க்கு ஏற்ற பென்பொருள்களை கண்டுபிடித்து வெளியிட்டு வருகின்ற.
தங்கள் நாட்டு
மக்களுக்ளை வழிகெடுக்கும் என்று கருதுகின்ற குற்றவியல் பாலியல் தளங்களை அந்த நாடுகள்
தடுத்து வைத்திருக்கின்றன, தடையையும் தாண்டி அந்த குறித்த தளங்களை
பாவிப்பதற்குரிய பென்பொருளை வெளியிடுவது ஒரு சமூகத் துரோக போக்காகும்.
இவைகள் தடுக்கப்பட்டது
என்று தெரிந்த பின்னறும் நம்முடைய இளைஞர், யுவதிகள் அதன் வழியில் செல்வது தங்களுடைய எதிர்காலத்தையும் மறுமை வாழ்வையும் பாதிக்கும்
என்பதை கவனத்தில் கொண்டு அவைகளிலிருந்து தூரமாக வேண்டும்.
இணையத்தள
வசதிகள் அதிகரித்த பின்னர் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இவைகள்
முழுமையாக உதவும் என்ற நம்பிக்கையில் அந்த வசதிகளை வீடுகளில்
செய்துகொடுக்கின்றார்கள்.
வீட்டு
சமையலறையில் இருக்கின்ற கத்தியை சமையலுக்காக மட்டும் பாவிக்கத்தெரிந்த பெற்றார்
அதே வீடுகளுக்குள் இணைக்கப்பட்டிருக்கின்ற இணைத்தளங்களை பற்றி அதன் நல்லது கெட்டது
என்கின்ற இருபக்கங்களையும் அறியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
அதே போல்
தங்களது கல்விக்காக மட்டும் இந்த இணையத்தள வசதியைப் பயன்படுத்த வேண்டும்.
அதைமறந்து எல்லையைத்தாண்டி குப்பைகளை தோண்டி தங்களது கரங்களால் தங்களுக்கு அழிவைத்
தேடிக்கொள்ளும் மாணவர்களில் நிலை கவலைக்கிடமானதாகும்.
இணையத்தங்களும்
அதன் மூலம் வெளித்தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கின்ற சமூக தளங்களும் முழுமையாக, இலவசமாக கிடைக்கும் அதேவேளை பெற்றோரின் வழிகாட்டல்களும் இல்லாது போகும் போது மாணவர்களின்
வேளிபாய்ச்சல் அதிகரிக்கின்றது.
ஃபெஷன் என்ற பெயரில் மாணவர்கள் பாதைக்கு வருகின்றார்கள், சந்துகள், பொந்துகள் என்று பயணங்கள் தொடர்கின்றன. இந்த பயணங்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்ற சமூகத்தளங்களும் அதன்வழியாக சந்திக்கின்ற
நண்பர்களும் ஒத்துழைக்கின்றார்கள்.
பெற்றாரின் கட்டுப்பாட்டை
தாண்டி செளிசெல்கின்ற போது, வெளியே காண்கின்ற அனைத்துப் பண்பாடுகளையும்
தன்னைச் சார்ந்த சமூகத்தால் அது அங்கிகரிக்கப்பட்டதாக காண்கின்றார்கள், அது அவர்களுக்குள் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபெஸ்ன்களால் மாறிப்போகின்றன.
ஃபெஷன்கள் சுந்தந்திரம், விடுதலை என்ற போலியையும் குடும்பங்களுக்குள் ஏற்படுத்துகின்றன. அது பல குடும்பக்களுக்குள் பாரிய குடும்பச் சிதைவை ஏற்படுத்திவருகின்றது.
பெண்கள் தனியாக
வெளிப்பயணங்களை மேற்கொள்ளுவதும் கடைத்தெருக்களில் தனியாக உழாவருவதும் நண்பிகளுடன் ஜாலி
ஊர்வலங்களுக்குத் திட்டமிடுவதும் விழாக்கள் என்ற பெயரில் வெளிச்செல்வதும் அவர்களை கணவன்மார்களின்
சந்தேக கண்களுக்குள் சிக்கிவைக்கின்றது.
இந்த ஃபெஷன்கள் தான் பெண்கள் தனியாக வாகனத்தை ஓட்டிச்செல்வதற்கு
சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற தூண்டுகின்ற ஆசானாகும்.
ஃபெஷன் என்ற இந்த கலியுக பண்பாடு பெண்கள் வீடுகளில் சும்மா
இருப்பதை விட வேளைக்குச் செல்லலாம் என்ற உணர்வுகளைத் தூண்டிவிட்டிருக்கின்றது.
வேளைத்தளங்கள்
படும்பாடு பெரும்பாடு என்பதை இவர்கள் மனதார புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் எந்த ஃபெஷனையும் பின்பற்றும் முன் இஸ்லாமிய சட்டம் என்ற உறைகல்லில்
வைத்து உறைத்துப்பார்க்க வேண்டும்.
இஸ்லாமிய சட்டம் போதிக்கின்ற
வாழ்க்கை முறை மட்டுமே ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்ட, பின்பற்றத்தக்க ஃபெஸனாகும்.
அதிகமானவர்கள்
பின்பற்றுகின்றார்கள் என்று நாமும் பின்பற்றுவது என்பது அதிகமானவர்கள் நகரம் போவார்கள்
என்ற கூற்றுக்கு ஆதர்வு தேடுகின்றது என்பதை மறக்காது செயற்படுவோம், அது தான் மாற்றங்களின் ஆரம்பமாகும்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment