வில்பத்து விடயத்தை எதிர்ப்ப‌வர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்


வில்பத்து விடயத்தை எதிர்ப்பவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்
--------------------------------------------------------
வடக்கு முஸ்ளிம்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியான போதுதான் சில மீடியாககளும் இனவாதிகளும் வில்பத்து விடயத்தை தூசுதட்டி பேசுபொருளாக்கினர். இப்போது சர்வதேச சமூகம் மரிச்சிக்கட்டிக்கும் வடக்கு மக்களுக்கும் குரல்கொடுக்கும் அளவு விடயம் வீரியமடைந்திருக்கிறது.

இலங்கை அரசு வடக்கு மீள்குடியேற்றத்தை ஆமை வேகத்தில் நகர்த்தி, கவனித்துவந்தபோது இந்த வில்பத்தை பாதுகப்போம் என்ற தொனி உயர்ந்திருப்பது எமக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். காரணம் வடக்கு மீள்குடியேற்றத்தை உத்தியோகபூர்வமாகவும் துரிதமாகவும் முன்னெடுக்க மைத்திரி அரசு ஒரு அமைச்சர் குழுவை நியமித்திருக்கிறது. இதற்காக எம்மை எதிர்த்தவர்களுக்கு முதலில் நன்றியைச் சொல்லிக்கொள்ள வேண்டும்.

இடம் பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராயும் வகையில் அமைச்சரவை உப குழுவொன்றினை நியமிக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் முன் வைத்த கோறிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டு நிதி அமைச்சர் ரவி கருநாயக தலைமையில் இக்குழுவினரை நியமித்துள்ளார்.

நிதி அமைச்சர் ரவி கருநாயக்க தலைமையில்அமைச்சர்களான டீ.எம்.சுவாமி நாதன்ரவூப் ஹக்கீம்பாட்டளி சம்பிக்க ரணவக்ககே.டி.எஸ்.குணவர்தனமற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் இந்த குழுவில் அங்கத்துவம் பெருகின்றனர்.

அதே வேளை இந்த குழு தமது அறிக்கையினை இரு வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வில்பத்தை பாதுகாப்போம் ( ) என்ற கோக்ஷம் வலுவாக உயர்ந்ததனால் தான் இந்த முடிவை அரசு எடுக்க நேரிட்டது என்று சொல்கின்ற அளவுக்கு விடயம் முக்கியத்துவமாகி இருக்கிறது.

நலவே நடக்கட்டும் என அல்லாஹ்வை தொடர்ந்தும் பிரார்த்திப்போம் நம்பிக்கையிழக்காது.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: