நாடளாவிய ரீதியிலான ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு





வெள்ளிக் கிழமை நாடளாவிய ரீதியிலான ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு

முடியுமென்றால் நாளை மறுநாள் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் படி பணிவாய் வேண்டுகிறோம்.

அளுத்கம கலவரத்தின் போது கட்சி, இயக்க பேதம் மறந்து, சிவில் அமைப்புக்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து குரல்கொடுத்தது போல் இந்த வில்பத்து ‍ மரிச்சிக்கட்டி பிரச்சினையிலும் ஒன்றிணைய அனைவரையும் மரிச்சிக்கட்டியான் என்ற வகையில் அழைக்கின்றேன்.
  
வில்பத்துவுடன் விலங்கிடப்பட்டுள்ள மரிச்சிக்கட்டி
நாடளாவிய ரீதியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

மரிச்சிகட்டி என்பது பல்லாண்டு காலம் பழமைவாய்ந்த எம்பூமி, விஜயன் மற்றும் குவேனியின் வலராற்றுடன் சேர்த்துப் பேசப்படும் பூமி இது.

தொன்றுதொட்டு எம் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்து சரித்திரம் படைத்துவிட்டு அதன் புதல்வராக எம்மை மூடிசூடச்செய்துவிட்டு சென்ற பூமி இது.
மன்னாரின் முற்சந்தி இது,
வடக்கின் திறவுகோல் இது.

முப்பது வருட யுத்தம் மட்டும் எம்மை அகதியாக்கவில்லை என்றிருந்தால் உலகம் திரும்பிப் பார்க்கும் முக்கிய நகரங்களில்  ஒன்றாக இது மாறியிருக்கும் என்று வர்ணிக்கும் வகையில் புவியியல் அமைவிடமும் இயற்கை வளங்களும் தன்னகத்தே கொண்ட பூமி இது.

நீண்ட யுத்தம் ஓய்ந்த விநாடியே பெருமூச்சுவிட்டது எம் சமூகம், எமக்கு சுந்தந்திரம் கிடைத்துவிட்டதாய். ஆனால் இப்போதுதான் தெறிகிறது புலிகளை விட கோரமுகம் படைத்தவர்கள் இந்த நாட்டை ஆல்கிறார்கள் என்பது.

யுத்த முடிவுக்கு பின்னர்  நாம் தொடர்ந்தும் மெளனமாக இருந்தால் இன்னும் பல‌ காணிகள் அரசுடமையாக்கப்படும் அல்லது புனித பூமியாக மாறும், அதற்கான திட்டமிடல் திரைமறைவில் நடந்தேரிவருகிறது.

இந்த நிலையை தடுத்து நிருத்த இப்போதே அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அளுத்கம கலவரத்தின் போது கட்சி, இயக்க பேதம் மறந்து, சிவில் அமைப்புக்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து குரல்கொடுத்தது போல் இந்த வில்பத்து ‍ மரிச்சிக்கட்டி பிரச்சினையிலும் ஒன்றிணைய அனைவரையும் மரிச்சிக்கட்டியான் என்ற வகையில் அழைக்கின்றேன்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்
ஆசிரியர்: முசலிப் பிரதேச முக்கிராமங்கள்

 

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: