வாசகர்களின் வாழ்த்துக்களும்……….கேள்விகளும்………..

மெகா தொடராக நீண்டு வளர்ந்த ‘என் மகன் ஒரு லீடர்’ (My son is a leader) முற்றுப் பெற்றுள்ளது.


குழந்தை வளர்ப்பு தொடர்பாக எழுதப்பட்ட பல தொடர் கட்டுரைகளில் ஒரு புதிய அனுகுமுறையாகத் தான் இந்த நீண்ட தொடர் இருக்க வேண்டும் என்று நம்புகின்றேன்.

குழந்தைகளின் உளவியலை புரிந்துகொண்டு அவர்களின் எதிர்கால வெற்றியை தீர்மானிக்கின்ற பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதை கவனத்தில் கொண்டு ஒரு வித்தியாசமான முறையில் இந்த கட்டுரையை தொட்டுவிட்டிருக்கின்றேன்.

குழந்தைச் செல்வம் ஒரு தனிச் செல்வம், அவர்கள் மூலம் ஒரு குடும்பத்தில் கிடைக்கும் இன்பம் அது நிலையானதும் ஈடற்றதும் என்பதை இந்த கட்டிரையை வாசித்த பலர் உணர்ந்திருப்பீர்கள்.

பல வாசகர்களின் பார்வையை, சிந்தனையை ஈர்த்த, நீண்ட தூரம் வெற்றி நடைபோட்ட என் மகன் ஒரு லீடர் தொடர் கட்டுரைக்கு பல வழிகளிலும் வாசகர் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

Facebook, gmail, yahoo, twitter, blogக்கு வந்து கிடைத்த செய்திகளில் சிலதை சுருக்கமாக இங்கு பதிந்துள்ளேன்.

  1. இணையத்தளங்களில் வாசித்துவரும் நீண்ட தொடர்களில் நான் ருசித்த ஒரு தொடர் இது.
  2. பிரியாக கிடைக்கும் பிளேக்குகளை வைத்து சாட்டரடிக்கும் நேரத்தில் நீங்கள் பல பிரயோசனமான ஆலோசனைகளை என் மகன் ஒரு லீடர் ஊடாக தந்தீர்கள், நன்றி.
  3. உங்க அடுத்த தொடர் என்ன?
  4. இதை புத்தகமாக வெளியிடுங்கள்…….!
  5. இன்னும் இது போல் ஒரு தொடரை ஆரம்பியுங்கள்.
  6. உங்கள் ஆலோசனைகளை எங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழங்குங்கள்.
  7. அடுத்த தொடரை இப்போதே ஆரம்பிக்கலாமே?
  8.  சிறப்பான சிறுவர் உளவியல்.
இன்னும் சில பொதுவான செய்திகள்.
உங்கள் ஆலோசனைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

இதை ஒரு புத்தகமாக வெளியிட விரும்புபவர்கள் முன்வரலாம். 

தொடர்புகொள்ளுங்கள் மேலதிக விடயங்கள் பற்றி பேசிக்கொள்வதற்கு.
இது ஒரு புத்தகமாக வெளிவருவதற்கு முன்னர் முற்றுப்பெற்றுள்ள 21 தொடர் தொடர்பாகவும் உங்கள் ஆலோசனைகளையும், விமர்சங்களையும் தவராது இங்கு எழுதுங்கள்.


தொடர இருக்கும் இன்னும் ஒரு மெகா தொடரை எதிர்பாருங்கள், அது சிறப்புற தவராது பிரார்த்தியுங்கள்.
  

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: