A forgotten nation's 25years refugee life


A forgotten nation's 25years refugee life, I don't believe in Memorial conferences and press meetings.
Need changes / Issadeen Rilwan

வடக்கின் 25 வருட அகதி வாழ்வு, வெறும் நினைவு நிகழ்வுகளுடன் மட்டும் முடிவடையும் நமது முயற்சிகள் வேதனையானது.

நினைவு மாநாடுகள், பத்திரிகையாளர் சந்திப்புக்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

கடந்த 25 வருடங்களாக பிறந்த தினம் கொண்டாடுவது போன்று நினைவு மாநாடுகள் யாரோ ஒரு தலைவரால் தலைவர்களால் மாநாடுகள், ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வெறும் கண்துடைப்பாக அல்லது கூலிக்கு மாரடிப்பது போன்ற ஒரு கடமையாக இருந்துவருகிறது.

வடக்கை மீள்கட்டமைக்க தேவையான தீர்வுகளையும் நிதியையும் அரசிடமிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ள போதிய அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதித்தும் நம்மிடத்தில் இருத்தும் ஏன் வெறும் மாநாடுகளுடன் மட்டும் நமது முயற்சிகள் முற்றுப்பொறுகின்றன........?

1. வடக்கை அபிவிருத்தி செய்ய அவசர அவசியமாக ஒரு குழுவை நியமிக்க வேண்டும்.

2. இக்குழுவுக்கு அரசியல் தலைவர்களின் தலைத்துவம் இருக்கக் கூடாது.

3. முழு அபிவிருத்திக்குமான நிதி மற்றும் திட்டமிடல்களை அரசு உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.

4. குறித்த கால வரையறைக்குள் போதிய அபிவிருத்திகளை முன்னெடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

5. தேவைப்படின் உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்த, அரச சட்டத்தில் மாற்றங்கள் செய்ய ஆளும் அரசு போதிய அனுமதிகளை வழங்கவேண்டும்.

6. குடும்ப, கட்சி தராதரம் பார்க்காது அபிவிருத்திகள் சரியான முறையில் முன்னெடுக்கப் படவேண்டும்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: