இலங்கை திரு நாடு சந்திக்கும் இரண்டாவது ஒரு பெரிய யுத்தம்

இலங்கை திரு நாடு இரண்டாவது ஒரு பெரிய யுத்தத்தினை சந்தித்திருக்கின்றது. ( The 2nd war in Srilnaka )

கடந்த 30 வருடங்களாக சந்தித்து வந்த உள் நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அதன் வெற்றியை சரியான முறையில் பகிர்ந்துகொள்ளுவதற்கு முன் இன்னும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல் இன்னுமொரு உள் நாட்டு யுத்தம்.
எல்லா அரசியல்வாதிகளும் கடந்த 30 வருடங்களாக நடத்தப்பட்டுக்கொண்டிருந்த உள் நாட்டு யுத்தத்தினை எப்படி முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பது தொடர்பாக சிந்திப்பதிலேயே காலத்தை கடத்திக்கொண்டிருந்தார்கள்.
அது போக இப்போது எப்படி ஜனாதிபதி ஆசனத்தை தட்டிபரித்திக்கொள்வது என்பது தொடர்பாக சிந்தித்திக்கொண்டிருக்கின்றார்கள்.
எமது நாட்டை எப்படி அபிவிருத்தி செய்வது?
என்ன தேவை?
எங்கே பிரச்சினை இருக்குன்றது?
எந்த தொகுதி அடிப்படை தேவைகளை வேண்டி நிற்கின்றது?
என்பதை பற்றி சிந்திக்க, ஆராய, தேட நேரமில்லை.

சிந்தனைக்கு இடமில்லை.

இப்படி எல்லா அரசியல்வாதிகளது எல்லா அரசியல் கட்சிகளதும் நிலை இப்படி காலம் கடந்து சென்றால் எப்படி, எப்போது விடிவு கிடைக்கும்?

சிந்தனைக்கு சில வரிகள்.

காலம் சந்திக்கும் சோதனையா?
காலங்களை காலத்தில் வாழ்பவர்கள் சந்திக்க செய்யும் சாதனையா?

காலங்களை காரணம் காட்டும் கபடி வீரர்கள் சிந்திக்கும் நேரம் இது.

No comments: