ஒரு இஸ்லாமிய சஞ்சிகையில் வெளியிட மருத்த ஒரு கட்டுரையிலிருந்து.....

மாற்றங்கள் தேவை - சுவை 05


ஒரு இஸ்லாமிய சஞ்சிகையில் வெளியிட மருத்த "ஏன் இன்னும் இலங்கை வாழ் அந்நியர்களின் உள்ளங்களில் இஸ்லாமிய தாக்கம் ஏற்படவில்லை" என்ற ஆக்கத்தின் சுருக்கம்.

இன்று அமெரிக்க, ஜரோப்பிய நாடுகளில் இஸ்லாம் முதல் மார்க்கமாக பரவிவருகின்றது, அல்ஹம்துலில்லாஹ், அந்த நிலையில் உலக மட்டத்தில் எல்லா நாடுகளிலும் மார்க்க அழைப்புப்பணியில் ஈடுபடுபவர்கள் தங்களால் முடியுமானளவில் தங்களது போதனைகளை நிறைவேற்றிவருகின்றனர், அதில் வெற்றியும் கண்டுகொள்கின்றார்கள்.

இலங்களையிலுள்ள முஸ்லிம்கள் பேசும் மொழியை பேசக்கூடிய கிருஸ்தவ,இந்துக்களுக்கு ஏன் எமது பிரச்சார பணி போய் சேருவதில்லை?

ஏன் இலங்கையில் இஸ்லாம் அந்நிய மதத்தவர்களூக்கு சென்றடைகின்ற வீதம் மிக குறைவாக அல்லது பூஜியமாக இருக்கின்றது?

அதற்கு சில முக்கிய காரணங்கள் இனங்காணப்பட்டுள்ளன,
குறிப்பாக:
1. இஸ்லாமிய அறிஞர்களில் நடத்தைகளில் இஸ்லாம் உயிரற்று கிடக்கின்றமை,
2. பிரச்சார பணியில் ஈடுபட்டிருக்கின்றவர்கள் அந்நிய மத்தவர்களூக்குரிய பிரச்சாரங்கள் தொடர்பாக சிந்திக்க தவரியுள்ளமை,
3. இஸ்லாமிய அமைப்புக்களூக்குல் நிலைகொண்டிருக்கும் கருத்துவேருபாடுகள், பனிப்போர்கள்
4. பிரச்சாரத்திற்கென ஒதுக்கப்படும் பொது நிதி சரிவர பாவிக்கப்படுவதில்லுள்ள குறைபாடுகள்,
5. இஸ்லாமிய செய்திகளை சுமந்து வருகின்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் அந்நியர்கள் கைகளில் சென்றடைய தவருகின்றமை,
6. உலமாக்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கெளரவ சிக்கல்கள்,
7. பிர மதத்தவர்களுடன் சேர்ந்து வாழ்வதிளுள்ள சிக்கல்கள்,
8. முஸ்லிம் பாடசாலைகளில் அந்நிய மதத்தவ மாணவர்களூக்கு அவர்களுடைய சொந்த மத போதனைகள் கற்பிக்கப்படுவது போல அந்நிய பாடசாலைகளுக்கு செல்லும் எமது மாணவர்களுக்கு இஸ்லாம் பாடம் கற்பிக்க தவருகின்றமை.
9. இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில் கற்பிக்கப்படும் "தமிழ் மொழி" பாடத்தில் இடம்பெற்றிருக்கும் பாடங்களில் உள்ள குறைபாடுகள்.

நிறைய இருக்கின்றது, இன்ஷா அல்லாஹ் தொடரும்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: