வேர்கள் வெட்டப்பட்டால்...???

மாற்றங்கள் தேவை - சுவை 06



புகைத்தல் எமது சமூகத்தில் பரவலாக விமர்சிக்கப்படக்கூடிய ஒன்றாக இருந்து வருகின்றது,

எனது அடுத்த வாசல் நண்பனின் சிந்தனைக்கு கொண்டுவந்த ஒரு முக்கிய விடயத்தை எல்லோர் முன்நிலையிலும் திறந்துவிடுவது அதிக பயன் ஈட்டும் என ஆவல்....


தினந்தோரும் ஒருவர் புகைத்தலுக்காக ஒரு தொகையை செலவுபண்ணுவது எல்லோராலும் ஏற்ற, ஏற்கின்ற ஒன்று.

நண்பனுக்கு...
just image
இரண்டு முக்கிய tips,

முதலாவது: உங்களை ஒரு மனிதர் சந்திக்கின்றார்கள், அவர் ஒரு ஊண்டியலையும் ஒரு ஆலோசனை கையேட்டையும் தருகின்றார்.
தினந்தோரும் அந்த ஊண்டியலில் உனக்காக உனது உழைப்பிலிருந்து 5 காசுகளை இட்டுக்கொள், 90 நாற்களின் பின்னர் அதை திறந்து பார்..
தினந்தோரும் 5 நிமிடங்கள் ஒதுக்கி அந்த ஆலோசனை கையேட்டை தொடராக வாசி... என வேண்டுகின்றார்,

இரண்டாவது:ஒரு சாதாரண மரம் ஒன்றை இன்றிலிருந்து தொடர்ந்து 90 நாற்களுக்கு அதன் வேர்களை கணக்கிட்டு ஒரு நாளைக்கு ஒன்று என்ற அடிப்படையில் வெட்டி வா...
அதன் 90 நாள் எப்படி என்பதை கவனத்தில் கொள்..

இந்த இரண்டு டிப்ஸ்களில் கிடைப்பது:
நாம் புகைத்தலுக்கு செலவிடும் பணம் எவ்வளவு என்பதை அந்த ஊண்டியல் சொல்லும்



நீங்கள் வாசித்தது அல் குர்ஆன், அது நீங்கள் பயணிக்க வேண்டிய பாதையின் வழிகாட்டி

வெட்டிய மரம் அதன் வாழ்வை துண்டித்துக்கொள்ளும். அது போல் தான் புகை உங்களின் வேர்களை துண்டித்து உங்களை முடிவுக்கு கொண்டுவரும்.

இந்த இரண்டு விடயங்களும் உங்களுக்கும் பாடம் படிப்பிக்கும் என்று பிராத்திக்கின்றேன்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்

No comments: