நிம்மதி எங்கே?? அதற்கு என்ன வழி???

Matrangal thevai - Suvai 11


நிம்மதி எங்கே??  அதற்கு என்ன வழி???

இந்த கேள்வி எல்லா மனிதர்களுடைய வாய் வழிவரும் ஒரு முக்கியமான ஒன்றாகும்.

அதற்கான வழிகளை தேடிய பயணத்தில் கிடைத்த சில முக்கியமான விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் சந்தோஷமடைகின்றேன்.

இஸ்லாம் ஒரு மனிதனுக்கு சந்தோஷமான 2 வாழ்க்கையை தந்துள்ளது.

1. இவ்வுலக வாழ்க்கை:

"இன்னும் வானங்களில் உள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன்னிடமிருந்து உங்களுக்கு அவனே வசப்படுத்திக்கொடுத்தான், நிச்சயமாக இதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன." (45 : 13)

நாம் சந்தோழமாக வாழவே எமக்கு இவ்வுலகில் அனைத்தையும் வழமாக்கியிருக்கின்றான்.

சிந்தனை, செயல் நடத்தை, நம்பிக்கை என்றவற்றை திறம்பட அறிந்துகொண்டோர் எஜமான்கள், இதற்கு மாற்றமானவர்கள் ஏழைகள்,


சந்தர்ப்பங்களை பயன்படுத்துவோர் அறிவாளிகள், மாற்றமானவர்கள் அறிவிழிகள்.


2. மறு உலக வாழ்க்கை:

உலக வாழ்க்கையில் அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியதை நடைமுறைப்படுத்துபவர்களாகவும் தடுத்தவற்றைக்கொண்டு தடுத்து நடந்தவர்களாகவும் வாழ்ந்தமைக்காக வேண்டி சுவர்க்கத்தை பரிசாக கொடுத்து இரண்டாவது உலகிலும் சந்தோசமாக வாழ சந்தர்ப்பம் அழித்திருக்கின்றான்.

"அமைதிபெற்ற ஆத்மாவே! நீ உன் இரட்சகன் பக்கம் {அவனை} திருப்தியடைந்த நிலையிலும், (அவனிடம்) பொருந்திக்கொள்ளப்பட்ட நிலையிலும் மீள்வாயாக! நீ எனது அடியார்(களான நல்லோர்களின் கூட்டங்)களில் பிரவேசிப்பாயாக, மேலும், என்னுடைய சுவனத்தில் நீ நுழைந்துவிடுவாயாக! (என்றும் அல்லாஹ கூறுவான்} (89 : 27 – 30)

நிம்மதி / சந்தோஷம் என்பது:

எப்போது எல்லோரும் மனநிம்மதியாக, நினைத்ததை, நினைத்த நேரத்தில் பெற்று, செயற்பட்டுக்கொள்ள விரும்புவது தான் சந்தோஷம் என்று சொல்லலாம். சந்தோஷம் ஒருவருக்கு கிடைக்கின்றது என்பதை தொட்டுப்பார்த்துச்சொல்ல முடியாது,

அதை ஒவ்வொருவரும் உணர்ந்து மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ளமுடியுமானது.

இது எல்லா தரத்திலுள்ளவர்களும் எல்லா வயதிலுள்ளவர்களூம் எதிர்பார்க்கின்ற, நாடுகின்ற ஒன்றாகும்.

எல்லாரும் தேடி நிற்கும் ஒரு விடயம் தான் சந்தோஷம்.

அறிஞர்கள், அனுபவசாலிகள் சந்தோஷத்திற்கு விளக்கம் சொல்லும் போது:

1. Spiritualistic School – ஆன்மீக அல்லது ஞான வழிபாடுதான் சந்தோஷத்தைத் தரும் என்று நம்புகின்றார்கள்.

2. Materialistic School: போதுமான சொத்துக்கள் பொருட்கள் கொண்ட ஆடம்பர வாழ்க்கைதான் சந்தோஷத்தை தஎரும் என்று நம்புகின்றார்கள்.

3. Rationalistic School: (reason and Logic) காரண காரியங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் சந்தோஷத்தை தருகின்றது என்று நம்புகின்றார்கள்.

4. Islamic Trend – இஸ்லாமிய நம்பிக்கைதான் சந்தோஷத்தைத் தரும் என்று நினைக்கின்றார்கள்.

உண்மையில் மேலே உள்ள கருத்துக்களை ஒவ்வொன்றாக ஆராயும் போது எது உண்மை என்பதை கண்டு கொள்ளலாம்.

விளக்கங்கள் கீழே தெளிவாக, சுருக்கமாக கிடைக்கும்.

உண்மையில் இஸ்லாமிய (Islamic Trend) நம்பிக்கையும், அதனை சரியான முறையில் பின்பற்றுதலும்தான் நாம் எதிர்பார்க்கின்ற சந்தோஷத்தை தரும் என்கின்ற விடயத்தை தெரிந்துகொள்லலாம்.

மேலே வைக்கப்பட்ட 4 கருத்துக்களில் முதல் மூன்று விடயங்களும் கடைசியான தலைப்பில் கீழ் உள்வாங்கப்படுகின்றது,

அதாவது Islamic Trend என்பது இந்த மூன்று விடயங்களையும் உள்ளடக்கின்றது:

1. Spiritualistic

2. Materialistic

3. Rationalistic

இதனை உள்ளடக்கியதாக ஒருமனிதனுக்கு தேவையான மூன்று விடயங்கள் கவனத்தில் கோள்ளப்பட வேண்டும்.

Body – Food and Drink / அதாவது எமது உடல் – அத் எமட்=ஹு வாழ்க்கைக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்ல உதவுகின்றது,

Mind – Knowledge and experiments எமது மூளை – அது எமக்குத்தேவையான அறிவைப்பெற்றுக்கொள்வதற்கும் தேவையானவிடயங்களை விளங்கிக்கொள்வதற்கும் இன்றியமைய்யாதது.

Sprit – Faith and goodness / எமது உயிர் – எமது நம்பிக்கையும், நாம் செய்யும் நல்ல விடயங்களும் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும். நம்பிக்கை இஸ்லாமியமயமானதாகவும் குர் ஆன் ஹதீஸ் கூறுவதாகவும் இருக்கும் வகையில் வரையறுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த நம்பிக்கை ஓரிறைக்கொள்கையாக இருக்க வேண்டும்.

அந்த நம்பிக்கை சரிவர இல்லாததுதான் கொலை கொள்ளை, கற்பழிப்பு என்று அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணாமாக இருக்கின்றது,

இந்த அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வுதான் இஸ்லாம்.

நிம்மதி / சந்தோஷத்திற்கான காரணிகளை பலர் இவ்வாரு சொல்லுகின்றார்கள்:

1. பணம் மற்றும் சொத்துக்கள் (Wealth)

2. பதவி, தரம் (Rank and Position)

3. பட்டப்படிப்புக்கள் (Educational achievements)

4. துறைசார் வெற்றி (Fame - Political / arts / sports)

என்று பல காரணாங்களை சொல்லுகின்றார்கள், இவைகள் உண்மையில் நாம் எதிர்பார்க்கின்ற சந்தோஷத்தை தருமா?

1. பணம் மற்றும் சொத்துக்கள் :

போதுமானளவு வங்கி மீதி, உயர் தர வாகனம், வாழுவதற்கான மாடமாளீகைகள் என்று ஆடம்பரமான வாழ்க்கையில் இருக்கும் பலரைப்பார்த்து இவர்கள் தான் சந்தோஷத்திற்கு சொந்தக்காரர்கள் என்று நாம நினைக்கின்றோம்.

ஆனால் உண்மை என்னவென்றால் அதிகமான பணக்காரர்கள் சந்தோஷத்தை பணம் கொடுத்து வாங்கமுடியாதா? என திகைக்கின்றார்கள்.

அதிகமான பத்திரிகைச்செய்திகள் தரும் திடிக்கிடத்தக்க செய்திகள்தான்:

“மிகப்பெரிய கோடிஷ்வரர் மாரடைப்பால் மரணம்”

“தற்கொலை”

“ஒரு கன்னிப்பெண்ணுடன் தகாத உறவில் சிக்கிக்கொண்டார்”

பணத்தைக்கொண்டு பெருமையடிப்பவர்கள் வரலாறு முழுவதும் தோல்வியைத்தழுவிய சம்பவங்கள் நிறைய கிடைக்கின்றன.

உதாரணமாக குர் ஆன் சொல்லுகின்றது:

“நிச்சயமாக காரூன் (என்பவன்) மூஸாவுடைய சமூகத்தாரில் உள்ளவனாக இருந்தான்; அவர்கள் மீது அவன் அட்டூளியம் செய்தான்; ஏராளமான பொக்கிஷங்களிலிருந்து அவைகளின் சாவிகள் (மாத்திரம்) பலசாலிகளான ஒரு கூட்டத்தாருக்கு (அதைச்சுமப்பது) கனமாகிவிடுமே அந்த அளவு நாம் அவனுக்குக்கொடுத்திருந்தோம்; (அப்போது) அவனுடைய கூட்டத்தார் அவனிடம், “நீ அகம்பாவம் கொள்ளாதே! அகம்பாவம் கொள்வோரை நிச்சயமாக அல்லாஹ் விரும்பமாட்டான்” என்று கூறிய நேரத்தை (நினைவு கூறுவீராக!) (அல் கஸஸ் : 76)

மேலும்

“எனவே அவனையும் அவனுடைய மாளிகையையும் பூமிக்குள் நாம் அழுந்தச்செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவிசெய்யக்கூடிய எந்தக்கூட்டமும் இருக்கவில்லை; (தன்னிலிருந்தோ, மற்றவரிடமிருந்தோ) அவன் உதவிபெருபவர்களிலும் இருக்கவில்லை". (அல் கஸஸ் : 81)

இந்த நிகழ்வுகள் பணக்காரர்களுக்கு நடக்காமல் இருப்பதற்கு தம்மிடம் இருக்கும் பணத்தை அல்லாஹ் சொல்லுவது போன்று செலவு செய்தால் அதன் மூலம் சந்தோஷமடையலாம்.

பணம் சந்தோஷத்தை தருகின்றது என்று நாம் விலங்கிவைத்துள்ளதற்கு மாற்றமாக சில உண்மைச்செய்திகள் இங்கே:

• கிறிஸ்டினா ஒனாஸிஸ் (Cristina Onasis):

ஜரோப்பிய உலகில் மிகப்பெரும் சொல்வந்தர்களில் ஒருவரான அரிஸ்டோடில் ஒனாஸிஸ் (Aristotile Onasis) என்பவரில் ஒரே ஒரு மகள் இந்த கிறிஸ்டினா.
தனது தந்தை உயிரோடிருக்கும் போதே அமேரிக்காவில் ஒருவரை திருமணம் செய்திருந்தால். சில மாதங்கள் பின்பு தந்தை மரணித்துவிட்டார், விவாகர்த்தும் பெற்றுக்கொண்டார்.

இப்போது தனது தந்தையின் முழுச்சொத்துக்கும் அதிபதி, ஒரு கோடிஸ்பதியானால்.

ஒரு சில மாதங்கள் பின் கிரேக் சென்று அங்குள்ள ஒருவரை திருமணம் செய்தால், அதுவும் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை, விவாகரத்து.

சற்று கழிந்து ரஷ்ஷியாவுக்கு வந்து அங்குள்ள ஒரு தொழிலதிபதியை தனது வாழ்க்கைத்துனைவராக தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் சந்தோஷம் தேட முனைந்தால் அதுவும் தொலைந்து போகின சில மாதங்களில்.

பத்திரிகையாளர்களில் செய்தி நிருவனங்களின் வேடிக்கை பணக்காரியாக திகழ்ந்த இந்த இளம்வயது பெண் பத்திரிகையாளார்களின் கேள்விக்கு பதிலலிக்கும் போது “நான் சந்தோஷத்தை தேடுகின்றேன்” (I am searching for happiness) என்று ஒரு சில வார்த்தைகளில் முற்றுபுள்ளிவைத்தால்.

மூன்றாவது கணவரும் கைவிட்டுப்போன நிலையில் சந்தோஷத்தைத் தேடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்று அங்குள்ள ஒருவரை தேர்ந்தெடுத்தால்,

அப்போதும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது:

“நான் ஒரு பணக்காரபெண்தான், ஆனால் சந்தோஷமில்லாத ஒருவளாக……….”

“Yes! I am the richest women but the unhappiest…….”

என்று அவளது சோகக்கதையை தொடர்கிறாள் கிறிஸ்டினா.

சில மாதங்கள் பூரணமாகும்முன் தனது 4வது வாழ்க்கை துணையரையும் பிரிந்தவளாக ஆர்ஜடீனாவிலுள்ள ஒரு சுற்றுலாவிடுதியில் ஒரு அறையில் தற்கொலை செய்துகொண்டால்.


2. பதவி, தரம் (Rank and Position)

உயர்பதவிகளும் உயர்தரங்களும் தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை தரும் என்று ஒரு சிலர் நம்புகின்றார்கள்.

I. இலங்கையைச்சேர்ந்த பொன்சேக்க (Fonseka) என்பவர் இரானுவ தளபதி என்கிற ஒரு கெளரவ பதவில் இருந்தார். தனது பதவியை காரணம்காட்டி உயரலாம் என்று பதவி துறந்து அரசியலில் நுழைந்தார், இப்போது அவருடைய வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் சிறைவாழ்க்கையை அனுபவிக்கின்றார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு சில மாதங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளாகும்.

II. இந்திய அரசியலில் மிகமுக்கிய பிரதிநிதிகள் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் ஒருவர்தான் ரஜீவ் காந்தி (Rajiv Gandhi). அவருடைய மரணம் அவருடைய உயர்பதவியை வைத்து கெளரவமாக அமைந்ததா என்றால் இல்லை.

III. ரோமேனியாவின் (Romania) வரலாற்றில் மிகமுக்கியமான ஒருவர்தான் நிகோலெ சீஸேஸ்கியு (Nicolae Ceasescue), தனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் ரோமானியாவை தனது சொந்த சொத்தாக பார்த்தார் (Owner of Romania). தன்க்குத்தேவைய ஒரு மிகப்பெரிய தங்க மாளிகையையே கட்டி வாழ ஆரம்பித்தார். அந்த நாட்டைச்சேர்ந்த 64000க்கும் மேலான மக்கள் இவர் கொள்ளப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள், கடைசில் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முனைந்த போது பரிதாப மரணத்திற்குள்ளானார்.

3. பட்டப்படிப்புக்கள் (Educational achievements)

இஸ்லாம் கல்வியை கட்டாயப்படுத்தியுள்ளது. உலகில் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டும் என்று தூண்டுகின்றது.

கல்வியற்ற சிலர் நினைக்கின்றனர், கல்விகற்றவர்களுக்குத்தான் சந்தோஷம் சொந்தமானது என்று. சில சம்பவங்கள் எடுத்துக்காட்டாக-

I. ஏழை குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பெண் வைத்தியர் சொல்லுகின்றார்: எனது பல்கலைக்கழக சான்றிதலை எடுத்துக்கொண்டு என்னை அம்மா என்று அழைக்க வாய்ப்பளியுங்கள்” (Take away my certificate, my coats and money and let me hear the word Mum)

“எனது நற்சான்றிதலை எடுத்துக்கொண்டு எனக்கு ஒரு வாழ்க்கைத்துணைவரைத் தாருங்கள்” (Take away my certificate and give me a husband)

2. வாஷிங்டனைச்சேர்ந்த ஒரு சட்டத்தரனி தனது நண்பரான ஒரு வியாபாரியுடன் ஒரினச்சேர்க்கை செய்வதை வழக்கமாக்கிகொண்டதுடன் அவரை திருமணம் செய்துகொள்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தமை.

4. துறைசார் வெற்றி (Fame - Political / arts / sports)

துறைசார் வெற்றிகள், அல்லது ஒரு குறித்த துறையில் கிடைக்கின்ற நன்மதிப்புக்கள் சந்தோஷமான வாழ்க்கையை ஈட்டித்தரும் என நினைக்கின்றோம்.

அப்படியானால்:

விளையாட்டித்துறையிலுள்ளவர்களின் கதை கேலுங்கள்:

1. டெனிஸ் ஆடுகளத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா Tenis Star – Sania Mirza) ஏன் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கூண்டில் நிருத்தப்பார்.

2. டைகோ மெரடோனா (Diego Maradona) – விளையாட்டுலகிற்கு அறிமுகமாகி 4 வருடங்களில் சாம்பியன் பதக்கம் வென்ற பெருமையை ஈட்டிக்கொண்டார்,

விளையாட்டுத்துறை நிருவனங்கள் போதுமான தேவையான ஆடம்பர வாஅழ்க்கையைச் செய்து கொடுத்தனர், ஒரு சில மாதங்கள் பின் பத்திரிகை செய்திகள் சொல்லுகின்றன:

“Maradona was voted italy’s most hated man”

“Italians hate Maradona”

போதைப்பொருள்பாவணையில் மாட்டிக்கொண்டு நிம்மதி இழந்தார்.

அவரின் சொந்த நாட்டுமக்களே நாம் மரடோனாவை வெருப்பதாக பகிரங்கப்படுத்தினார்கள்.

அது போன்றுதான் சினிமா ரசிகர்களுக்கும் சொல்லுவதற்கு சில செய்திகள் உண்டு.

அதிகமான சினிமா ரசிகர்களால் கவரப்பட்ட மைக்கல் ஜெக்ஸன் (Michal Jackson – Pop Singer, Billy preston)

தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார், காரணம் கேட்ட போது 16 வயது சிறுவன் “நான் மரடோனாவினால் செக்ஸுக்கு உற்படுத்தப்பட்டேன்” என சாட்சி சொல்லப்பட்டது.

சில காலங்கள் பல குற்றச்சாட்டுக்களின் பின் கொலை செய்யப்பாட்டார் என்றும் தற்கொலை செய்துகொண்டார் என்றும் பல தகவல்கள் அவரைப் பற்றி கிடைக்கின்றன.

5. ஆத்மீகவாதிகளிடத்தில் தான் சந்தோஷம் என்றால்:

சிலர் மதகுருமார்களாக பாரிய வரவேற்புகளுக்கு மத்தியில் சந்தோஷமாக வாழ்கின்றார்கள் என்று நினைக்கின்றோம்.

நித்யாநந்த சாமியார் (Nithyanandan Swami): ஒரு சில வாரங்களுக்கு முன் இந்திய தழிநாட்டு இந்து மகாபீட குரு நித்யாநந்த சாமி ரன்ஜிதா என்கின்ற ஒரு நடிகையுடன் இருந்து மாட்டிக்கொண்ட சம்வம் தொடர்பான வீடியோ காட்சி அவரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

உண்மையில் மேலே சொன்னது போல் பணமோ பதவி அந்தஸ்தோ சந்தோஷத்தை தருவதில்லை அல்லது சந்தோஷத்திற்கான காரணிகள் இல்லை என்றால்,

நிம்மதி எங்கே?? அதற்கு என்ன வழி???


எது சந்தோஷத்திற்கான வழி??????

நிம்மதி / சந்தோஷத்திற்கான வழி எது??????

1. உறுதியான நம்பிக்கை:

இன்றைய விஞ்ஞானம் சொல்லுவது போல மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சினைகளைக்கும் பல கஸ்டங்களுக்கும் உள்ளாகின்றான்.

அந்த சந்தர்ப்பங்கள் மன கவலைகளையும் சோகங்களையும் உண்டுபன்னுகின்றன.

அதனால் நேரத்திற்கு நேரம் உணர்ச்சிவசப்படுதல், கவலைகொள்ளுதல், அதிஷடங்களை சந்தித்தல், என்று பல ஏற்ற இறக்கங்களுக்கும் கஸ்ட நஷ்டங்களுக்கும் உள்ளாகின்றான்.

இவைகளை தனது சக்திகேற்ப நிருவகித்துக்கொள்வதற்கு சரியான ஒரு வாழ்க்கை நேரியையும் கொள்கை ரீதியான நம்பிக்கையையும் கொள்ள வேண்டும்.

அந்த நம்பிக்கை வாழ்க்கை பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வி தரக்கூடிய இஸ்லாமாக இருக்க வேண்டும்.

2. அல்லாஹ்வை தொழுது பிராத்திற்க வேண்டும்: இஸ்லாத்தை தனது கொள்கையாக கொண்டு உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வதல் மூலம் அந்த நித்திய கடவுளான அல்லாஹ்வை தொழுது பிராத்திற்க வேண்டும்,

நாம் சந்தோஷமிழந்த நிலையில் இருக்கின்றோம் என்று கண்டால் அவனிடத்தில் பிராத்திற்க வேண்டும். எமது கஸ்டங்களை அவனிடம் பாரம்சாட்ட வேண்டும்.

அந்த உருதியான பிராத்தனைக்கு அல்லாஹ் சந்தோஷமான வாழ்க்கையை தறுவதாக வாக்களிக்கின்றான்.

“ஆண் அல்லது பெண் அவர் விசுவாசங்கொண்டவராக இருக்க, யார் நற்செயலைச் செய்தாரோ நிச்சயமாக நாம் அவரை நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம்; இன்னும் நிச்சயமாக, அவர்களுக்கு அவர்களது கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்ரில், மிக அழகானதைக் கொண்டு நாம் கொடுப்போம். (அல்குர் ஆன் 16 : 97)

“விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள்; மேலும் அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை (வணக்கவழைபாடுகளின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; மேலும் அவனுடைய பாதையில் யுத்தம் செய்யுங்கள்; 9அதனால்) நீங்கள் வெற்றியடையலாம். (அல் குர் ஆன் 5 : 35)

3. பிறருடன் அன்பாகவும் தாழ்மையாகவும் நடந்துகொள்வதும் சந்தோஷத்திற்காக வழிகளில் ஒன்றாகும்.

பூமியில் தாழ்மையாகவும் தயவாகவும் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

லுக்மான் அலை அவர்கள் தனது மகனுக்கு இந்த விடயத்தை உபதேசிக்கும் செய்தியை நாம் அல் -குர்ஆனிலிருந்து கற்றிருக்கின்றோம்.

பிறருடன் அன்பாக நடப்பது என்பது மிகப்பெரிய ஒரு விடயமாகும். இது எமக்கு சந்தோஷத்திற்கான சூழலை உண்டாக்கித்தரும்.

நபி ஸல் அவர்கள் சொன்னார் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லீம் மீது 6 விடயங்கள் கடமையாகின்றன,

I. ஒரு முஸ்லிம் சகோதரனை கண்டால் ஸலாம் கூறல்

II. விருந்துக்கு அழைப்புக்கிட்டினால் உரிய முறையில் பதிலளித்தல்,

III. உபதேசம் வேண்டினால் உரியமுறையில் உபதேசம் வழங்குதல்.

IV. தும்மினால் பதில் சொல்லுதல்,

V. நோய்வாய்ப்பட்டால் நோய்விசாரித்தல்,

VI. மரணித்தால் மரண சடங்கில் கழந்துகொள்ளல்.

குறைந்தது இந்த முக்கிய 6 விடயங்களும் எமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்படுமானால் எமது சூழலில் நாம் எதிர்பார்க்கின்ற சந்தோஷம் எமக்குக்கிடைக்கும்.

4. மனதை கட்டுத்துதல்.

சந்தோஷத்திற்குரிய வழிகளில் உயர்வழியாக இது அமைகின்றது.

எப்போதும் எமது சிந்தனை, எண்ணம்தான் எம்மை ச்வெற்றியின் பக்கமும் தோல்வியின் பக்கமும் மாறிமாறி ஆடச்செய்கின்றன.

அதிகமாக எமது சூசலில் “சந்தோஷமில்லை என்று” சொல்லித்திரிகின்ற மனிதர்களை நோட்டமிட்டால் இதை தெளிவாக ஆதாரபூர்வமாக தெரிந்துகொள்ளலாம்.

எதையும் ஆரம்பிக்கும் முன்னர் அல்லது தொடர்வதற்கு முன்னர் இது நடக்காது, அல்லது முடியுமா ? என்று எதிர்மறை சிந்தனையுடன் அல்லது செந்தேககேள்வியுடன் ஆரம்பிப்பது தான் இதற்குக்காரணம்.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள்- எந்த விடயத்தையும் தவரான கண்கொண்டே பார்க்கின்றார்கள்.

பாதையோரமாக வீடு இருக்கும் போது இரவில் வகன சத்தத்திலும் நிம்மதியாக உறங்குவார்கள், ஆனால் பக்கத்து வீட்டு நாய் சத்தத்திற்கு தாக்குப்பிடிக்க மாட்டார்கள், இது தான் சந்தோஷத்தை கெட்க்கும் விடயம்.

எமது நிலையான சந்தோஷத்திற்கு எமது எண்ணம் சிந்தனை எப்போதும் நேரானதாக எதையும் திறந்த நோக்குடன் பார்க்கும் சிந்திக்கும் தன்மையுடையதாகவும் அமைய வேண்டும்.

5. நடந்தவற்றை அனுபவமாகவும் நடக்க இருப்பதை நல்லெண்ணத்டுடனும் ஏற்றுகொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் நடந்த ஒரு கவளையான, நஸ்டமான சம்பவத்தை அல்லது தோழ்வியை நினைத்து எதிர்கால வாழ்வை தொலைத்துக்கொள்ளும் பலர் எம்முடன் இருக்கின்றார்கள், இவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷம் கேள்விக்குறிதான்.

கடந்தகால அனுபவங்கள் சோல்லும் பாடங்களை முன்னுதாரணமாக கொண்டு வாழ்க்கையை அமைத்துற்கொள்வது மிகமுக்கியமானதாகும்.

6. சந்தோஷமான வாழ்க்கையை கடந்து சென்றவர்களில் வாழ்க்கைமுறைகளை படிப்பதுடன் நல்லவற்றை முன்னெடுப்பது அல்லது பின்பற்றுவது.

எமது வாழ்க்கையில் நாம் ஒரு மாமனிதனின் (முகம்மது ஸல்) நடத்தைகளை நடைமுறைப்படுத்துவது சந்தோஷத்தை திறந்துதரும் ஒரு கருவியாகும்.

அது போல சந்தோஷத்திற்கான வழிகளை கற்றுக்கொள்வதற்கு முன்மாதிரியான அந்த மாமனிதரின் தோழர்களின் வாழ்க்கைகளில் கிடைக்கும் பாடங்களாஇயும் பெற்ருக்கொள்ள வேண்டும்.

7. உலக ஆசாபாசங்களை எல்லைப்படுத்த வேண்டும்.

சந்தோஷத்திற்குரிய இன்னுமொரு வழைதான் உலக இன்பங்களை வரையறுத்துக்கொள்ளல்.

இந்த உலக வாழ்க்கைதான் இருதியானது என்று நினைத்து வாழந்த பலரில் செய்திகளாஇ நாம் மேலே கற்றிருக்கின்றோம். அதனால் தான் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: தீனாருக்கும் திருகற்க்கும் அடிமையாகியவன் நரகம்தான்” (புகாரி)

இன்னுமொரு தடவை நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்: இந்த உலகில் ஒரு பரதேசியைப்போல் ஒரு வழிப்பொக்கனைப்போல் வாழ்” (புகாரி) நபி ஸல் அவர்கள் இவ்வாரு உபதேசம் செய்யக் காரணம், சந்தோஷத்தை தேடுகின்றோம் என்ற பெயரில் நாம் உலக ஆசைகளில் எல்லைமீறி வாழ்க்கையில் உண்மையான நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழந்தி நிற்கின்றோம்.

எமக்காக மருமையில் சுவர்க்கம் தயார் செய்யப்பட்டுள்ளது என்ற எண்ணத்துடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.

8. சட்டங்களை உரியமுறையில் பின்பற்றுதல்.

இஸ்லாம் சொல்லித்தரும் சட்டங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கான வழிகாட்டியாகும்.

இந்த சட்டங்கள் பின்பற்றத்தவருவதனால்தான் மனிதர்கள் பலர் சந்தோஷமிழந்திருக்கின்றார்கள்.

காரணம், சட்டங்கள் பின்பற்றப்படாத போது நினைத்ததையெல்லாம் செய்யலாம் என்கின்ற நிலை தோன்றும், அதனால் கொலஒ, கொள்ளை, கற்பளிப்பி, சூது, சூறையாடல், ஏமாற்றுதல், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்று பலதும் நடந்தேருகின்றன. அவைகள் அமைதியையும் வந்தோஷத்தையும் முளையுடன் கலைய உதவுகின்றன.

9. நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தல், நேரங்களை சரியாக பயன்படுத்தும் ஒழுங்குகள், நல்ல கொடுக்கள் வாங்கள் முறை, சரியான குடுமப மற்றும் பொது நிருவாகமுறைமை, நல்ல நண்பர்கள், என்று அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நடத்தைகளில் நீதி செலுத்துதலும் சந்தோஷத்தை தரும் வழியாகும்.

10. சந்தோஷம் வேண்டி எப்போதும் அல்லாஹ்விடத்தில் பிராத்திற்கும் ஒரு அடியானாக மாறுதல்.

அன்பின் சகோதர்களே, நண்பர்களே!!!!

மேலே அடையாளப்படுத்திய சந்தோஷத்திற்கான வழிகளை, சந்தர்ப்பங்களை விட மேலதிகமாக இருந்தால் எழுதுங்கள். உங்கள் பக்கங்கள், எழுத்துக்கள் தாராளமாக பிரசுரிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Elango Gopal said...

நம் இருதயத்தில் பாவத்தின் ஆளுகை இருக்கும்வரையில் சமாதானமும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கவே கிடைக்காது.

பாவத்தின் வேர் அறுக்கப்படவேண்டும், சமாதானத்தைக்கொடுக்கும் இயேசுவை நம் இருதயத்தில் வரவேற்க்கவேண்டும்.


இயேசுவிடம் நம் பாவங்கள் அனைத்தையும், ஒப்புக்கொண்டு அவரோடு அனுதினமும் நடந்தால் மட்டுமே நமக்கு மனநிம்மதியும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கும்.

Regards,
gopalelango.blogspot.com