Holy tour to Macca

Matrangal thevai - Suvai 10

This is a small guide to whom make travel to perform holy Umrah


பயண துஆவை ஓதி எமது



இந்த புனித பயணத்தை ஆரம்பித்தவர்களாக,


எமது இந்த பயணம் புனித மக்காவை நோக்கி உம்ரா மற்றும் அல்லாஹ்வின் படைப்புக்களை சுற்றிப்பார்க்கும் ஒரு வணக்கத்துடன் கூடிய சந்தோஷப் பயணமாகும்.

இன்று ஆள் கடல் அடிமட்டத்தில் உலாவும் மீன்கள் கூட இடைக்கிடை மேல் மட்டத்திற்கு வந்து சுத்தமான காற்றினை சுவாசித்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உள்செல்லுகின்றன. இந்த நேரத்தில் மனிதன் மட்டும் இன்று இயற்கையிடமிருந்து தன்னை தூரப்படுத்திக்கொண்டு நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருப்பதாக காண்கின்றோம்.

ஒரு சிலருக்கு தனது மனைவியுடனோ அல்லது கணவனுடனோ அல்லது குழந்தைகளுடனோ சிறிது நேரத்தை ஒதுக்கி பேசுவதற்கே நேரமில்லாமல் போய்விட்டது. காரணம் பணம் தேடல்.

பணம் என்பதும், அவர் அவர் வகிக்கும் பதவிகள், அவர்களுக்கான வேலைகள் என்பவை மிக முக்கிமானதே. இருந்தாலும் கூட இந்த உழைப்புக்கள் எல்லாம் எதற்கு? எமக்கு பணம்தான் மகிழ்ச்சியைத்தரும் என்ற தவறான எண்ணத்தினாலேயே. இயந்திர வேக உலகத்தில் அல்லாஹ்வின் ஏவல்களை நிறைவேற்றிக்கொள்வது மிக முக்கியமானதாகும். அந்த ஒரு சந்தர்ப்பத்தை மிக பிரதானமாககொண்டு ஒரு முயற்சியில் பல பயன்கள் பெரும் நோக்கில் இந்த பயணம் ஏற்பாடாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள்:

1. நபி ஸல் அவர்கள் சொல்லுவது போல எமது எண்ணம் தூய்மயானதாக இருக்க வேண்டும்,


2. அல்லாஹ் தனது வேத வசனங்களில் பல இடங்களில் ஞாபமூட்டுவதைப் போல நமது இந்த பயணங்களில் காணும் அவனது பல படைப்புக்களும் எமக்கு அவனது ஆற்றலை நிச்சயப்படுத்துவதாகவும் அவனது கட்டளைகளை திரம்பட செய்ய தூண்டுவதாகவும் அமைய வேண்டும்.


3. நாம் ஒரு விடுமுறை அல்லது ஓய்வுக்கான பயணமாக இதனை எங்களுடைய உள்ளங்களிலும் சிந்தனைகளிலும் நுழையாது பார்த்துக்கொள்ள வேண்டும்,


4. நாம் தர்சிக்க இருக்கும் புனித இடங்கள் எம்மைப்போல் பலருக்கு இந்த உலகில் சந்தர்ப்பம் கிடைக்காத ஒரு முக்கிய பாக்கியமாக கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்,
உண்மையில் பயணம் என்பது

பயணம் என்பது வேதனை தரக்கூடிய ஒன்றாகும் என்று சொல்லக்காட்டிய நபி ஸல் அவர்கள் பயணத்தில் கேற்கப்படும் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் கூறினார்கள்.


உம்ரா / Umrah

“உம்ரா” என்ற சொல் தர்சித்தல் என்ற கருத்துப்பட பாவிக்கப்படுகின்றது, உண்மையில் இஸ்லாமிய பாவனையில் இஹ்ராம் அணிந்தவர்களாக புனித கஃபாவை தர்சித்தல், தவாப் செய்தல் மற்றும் ஸஃபா மர்வாக்கிடையில் 7 தடவை நடத்தல் என்கின்ற ஒரு கருத்தை கொண்டது. அது ஹஜ்ஜுடன் சேர்த்து அல்லது ஏனைய காலப்பகுதியில் செய்து கொள்ள முடியுமான ஒரு வணக்கமாகும்.

The word 'Umrah is derived from I'timaar which means a visit. However, 'Umrah in Islamic terminology, means paying a visit to Ka' bah, performing Tawaaf (circumambulation) around it, walking between Safaa and Marwah seven times. A performer of 'Umrah puts off his Ihraam by having his hair shaved or cut. 'it can be performed along with Hajj and in other days as well.

" அனைவர் மீதும் ஹஜ்ஜும் உம்ராவும் கடமையாகும் என இப்னு உமர் )ரலrrrrrrஅல்லாஹ் கு கூறினார்கள் (ஆனில் அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுங்கள்" (திருக்குர் ஆன் 02:196) என்று ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்தே கூறுகிறான் என இப்னு அப்பாஸ் ரlili liகூறினார். ஆதாரம்: புகாரி

நபி ஸல் அவர்கள் கூரினார்கள்:

“ஒர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.” என அபூ ஹுரைரா ரலி அவர்கள் கூறினார்கள். ஆதாரம் புஹாரி



இதில் ,முக்கிய கடமைகள் இருக்கின்றன 4

1. இஹ்ராம் அணிதல்,

2. கஃபாவை வலம்வருதல்,

3. ஸஃபா மர்வாவுக்கிடையில் நடத்தல்,

4. இஹ்ராம் நிலையிலிருந்து விடுபடுவது.

The Pillars of `Umrah are four:

a) Ihraam: which is assumed at the Meeqaat.

b) Tawaaf: around the House.

c) Sa'y: walking between As-Safaa and Al-Marwah, which consists of seven circuits.

d) Tahal-lul: which means coming out of the state of Ihraam; becoming lawful what was previously prohibited during Ihraam.

இது கஃபாவை தவாஃப் செய்வதற்கான ஒரு வழிகாட்டி:










ஸஃபா மர்வா தொடர்பான ஒரு படம்


பயணத்திலிருந்து அலாஹவின் உதவியுடன் நாம் திட்டமிட்ட்டபடி திரும்பிவருவதற்கு நாம் கையேந்தி பிரத்திக்கின்ற அல்லாஹே மிகப்போதுமானவனாகும்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: