இஸ்லாமிய பார்வைக்குள் படைப்பிலக்கியம் - 1

மாற்றங்கள் தேவை - சுவை 15
அபூ அனூத்,இலங்கை.

பீடிகை;
மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சிப் படியில் மொழியின் பயன்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. மனிதன் விலங்குகளை விட உயர்ந்த, உன்னத நிலையை அடைந்திருப்பதற்கும், வளர்ச்சியின் உச்சியைத் தொட்டு நிற்பதற்கும், மொழியே முக்கிய பங்காற்றி வருகிறது. கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவதற்கு இன்றியமையாத அடிப்படைச் சாதனம் மொழியாகும்.
மனித இனத்தை மிக அழகாக சிருஷ்டித்த அல்லாஹ், அவனது உணர்வுகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தவும் வழியமைத்துக் கொடுத்தான். அவன் மனிதனுக்கு வழங்கிய எண்ணிலடங்காத அருள்களில் சிறப்பானதும் முதன்மையானதும் மொழியாகும். இது தொடர்பாக அல்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது.

“மனிதனைப் படைத்தான் விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்” (55:3,4)
மிக அழகாகவும் அற்புதமாகவும் மனிதனைப் படைத்த அவன், மனிதனுடைய உணர்வுகளையும் கருத்துக்களையும் அவன் தடைகளின்றி மிக இலகுவில் அவன் வெளிப்படுத்த வேண்டும் என்ற கருணையில் ஒரு நாவையும் இரண்டு உதடுகளையும் வழங்கியுள்ளான். தன்னை அளவற்ற அருளாளனாக அடையாளப்படுத்தி, அருள்களையும் பட்டியலிட்டுக் காண்பிக்கின்றான், அல்லாஹ்.

“அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் ஆக்கவில்லையா?” (90:8,9)

“பார்ப்பதற்கு கண் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமுடையதாக நாவும், இரண்டு உதடுகளும் பேசுவதற்குத் துணை புரிகின்றன. நாவும் இரண்டு உதடுகளும் மனிதனது மொழியும் ஆற்றலுக்கு எவ்வளவு துணைபுரிகின்றன என்பதை நாம் எமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் உணர்கின்றோம். மொழியும் ஆற்றல் மட்டும் இல்லாது இருந்தால் இன்றைய, ஒரு மேம்பட்ட வாழ்க்கையினை மனிதன் அடைந்திருக்க இயலாது.”

மொழியின் முக்கியத்துவத்தில் பிரதானமான பின்வரும் இரண்டைக் குறிப்பிடலாம்.
1. மொழி, சமூக உள்நிகழ்ச்சிகளுக்கும் தொடர்புகளுக்கும் அடிப்படைக் கருவியாக அமைகிறது. மொழியின்றி மனித இனத்திற்குச் சமூக வாழ்க்கை என்ற ஒன்று தோன்றியிருக்க முடியாது.

2. சமூக நடத்தைக்கு உயிர்கொடுக்கும் காரணங்களான மதம், கலாசாரம், ஒழுக்க நீதி, விழுமிய பண்பாட்டுப் போதனைக் கருத்துக்கள் போன்றவை ஒரு சந்ததியிடமிருந்து மற்றொரு சந்ததிக்கு மொழி மூலமாகத்தான் கடத்தப்படுகின்றன.
எனவே, மொழி மட்டும் இத்தகைய ஓர் இடைப்பட்ட பொருளாக நின்று செயற்பட்டிருக்காவிட்டால், எமது வாழ்வியல் மேம்பாடும் கேள்வின் குறியாகியிருக்கும். எனவேதான் அல்லாஹ், மனிதனைப் படைத்து, அவனுக்குப் பேச்சுக் கலையையும் கற்றுக் கொடுத்தான் என அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்றது.
இந்த வகையில் பேச்சுக்கலை எப்படி முக்கிய அருளோ அதற்கு அடுத்த மிக முக்கிய அருளாக எழுத்தும் அமைகிறது.

“ எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக” (68:01)
இங்கு, எழுதுகோல் மீது அல்லாஹ் சத்தியம் செய்வது, எழுதுகோலுக்குள்ள சக்தியையும் அதன் தாக்கத்தினையும் மதிப்பிடப் போதுமாகின்றது.

“அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தான்” (96:04,05)

எழுத்தும் - பேச்சும் அல்லாஹ்வின் மகத்தான இரு அருள்கள். எழுதுகோலை வைத்தே அவன், மனிதனுக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு மொழி வளத்தினை வழங்கி, அதனூடாக எழுத்துக் கலையைக் கற்றுக் கொடுத்தான்.
மனிதனது மொழியினடியாக வளர்ந்த எழுத்துக் கலையினூடாக இலக்கியம் தோன்றி, வளர்ந்தது என மனித இன வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இலக்கியம் சமுதாயத்தின் இணைபிரியதா அங்கமாக இருப்பதால், அது பற்றிய ஆய்வும் விமர்சமும் சமுதாயத்தோடு இணைந்ததாக இருந்தால் வேண்டும் என்ற கருத்தும் வலுவாகப் பதியப்படுகிறது. எனவே, சமுதாயக் களத்தில் விளைந்த இலக்கியத்தை அதன் விளைநிலத்தில் இருந்து அப்புறப்படுத்தி, தனியாக ஆய்வதற்கு முயலும் எந்த விமர்சன ஆய்வு முயற்சியும் முழுமைத்துவமான பண்புக் கூறு உடையதாக இருக்க முடியாது.
எனினும், சமூகவியல் நோக்கும், வரலாற்று உணர்வும், தத்துவங்கள் பற்றிய ஆய்வும், கண்ணோட்டமும், ஒப்பியல் பார்வையும், அழுத்தமான முருகியல் உணர்வும் நடுநிலையோடு நோக்கும் திறனாய்வுப் பார்வையும், இவை அனைத்துக்கும் மேலாய், ஆழமான இஸ்லாமிய அறிவும் இருந்து, அந்த அறிவுப் பின்னணி இலக்கியப் பார்வையில் அழுத்தமானகப் பதியும் போது மட்டுமே, சிறந்த திறனாய்வு மலர முடியும். இத்தகைய தளத்தில் நின்று மேற்கொள்ளப்படும் திறனாய்வு மலரும் போது மட்டுமே சிறந்த படைப்புக்களும் தோன்ற முடியும். இல்லாவிட்டால்,கீழே காணப்படுவது போன்ற இஸ்லாமிய அகீதாவை சிதைத்த, சடத்துவக் கவிதை (?) களையே நாம் தரிசிக்கும் பரிதாபாத்திற்கு உள்ளாகுவோம்.

இலங்கையில் உண்மை உதயம் என்ற மாத இதழை வெளியிடும் து.யு.ளு.ஆ. என்ற வெளிநாட்டு நிதி நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர், புள்ளிகளில் சில புள்ளிகள் என்ற கவிதை நூலை வெளியிட்டுக் கொடுத்தது. அதில் 89ம் பக்கம் பஞ்சம் என்ற தலைப்பில் இறைமறுப்புக் கவிதை ஒன்று இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
"இங்கே வறுமைகள் தாண்டவமாடும்
தெருவிலே மனிதர்கள்
கார்ல் மாக்ஸே! நீ எழுந்து வா!



கார்ல் மார்க்ஸ் இறைவனை மறுத்தவன். பஞ்சம் நீக்க அவனைக் கதறி அழைப்பது எவ்வளவு பெரிய ஷிர்க். வறுமையை நீக்கி, உணவளிப்பது அல்லாஹ்வினால் மாத்திரமே முடியுமானது என்பதுதான் உண்மையான கொள்கைவாதியின் உறுதியான நம்பிக்கை. பிரார்த்தனை ஒரு வணக்கம்! அதை அல்லாஹ்விடம் மட்டும்தான் உண்மையான கொள்கைவாதி வேண்டுவான். இக்கவிதையில் வறுமையை நீக்கும்படி கார்ல் மார்க்ஸை கடவுளாக அழைத்து பிரார்த்திக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுடன் அவன் இணையாக்கப்பட்டுள்ளான்.

எழுத்தின் மகிமை பற்றிப் பேசிய திருமறை, இலட்சியமற்ற, சந்தர்ப்பவாத, சினிமாச் சிங்கார கவர்ச்சி, ஆண்-பெண் அந்தரங்கச் சதைவிவகார வெறியாட்டங்கள் என்பன பற்றி, வெட்கத்தை விற்றுவிட்டு எழுதும், அல்லது அவற்றுக்கு வெண்சாமரம் வீசும், சகதியில் எழுந்த, சடவாத சிந்தனைக்கு ஆட்பட்ட, நரகல் நடை - மஞ்சள் எழுத்தாளர்களைக் கடுமையாகக் கண்டித்து, ஓர் அத்தியாயத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது

இஸ்லாமிய பெயர; தாங்கிய நிறுவனங்களுக்குள்ளே ஊழிய ஊதியம் புரிவோரிடமிருந்து நிர்வாகி (சுயநலமி)களின் ஆசிர்வாதத்துடன், பொது நிதி உதவியில் வெளிவருபவையே இந்த இலட்சணத்தில் இருக்குமானால், இந்து மதச் சித்தாந்தத்தின் பிரதியான குணங்குடி மஸ்தானின் பாடல்கள், சீறாப்புராணம், ஜெதிபு யேகம், புலவறாற்றுப்படை, நாகையாந்தாதி, நபியவதார அம்மானை, மக்காக் கலம்பகம், நபிகள் நாயம் பிள்ளைத் தமிழ், இடத்திற்கேற்றவாறு பதவி பட்டத்திற்காக கொள்கையை மாற்றும் கவிக்கோ அப்துல் ரஹ்மானின் கவிதை நுhல்கள் போன்றவற்றின் நிலை என்ன என்பதை யு+கிக்க முடிகின்றதல்லவா?

முஸ்லிம் பெயர்தாங்கிகளால் படைக்கப்பட்ட இலக்கியங்கள், இஸ்லாமிய நெறிமுறைகள் விசுவாசக் கோட்பாடுகள், அகீதா வரம்புகளை மீறியதாகக் காணப்படுகின்றன. இன்னொரு பக்கத்தில் கவிதை, சினிமா, நாடகம் போன்றவற்றால் இஸ்லாத்தைப் பிரசாரம் செய்து விடலாம். முஸ்லிம் பெண்கள் நடிக்கலாம் என்ற யு+சுப் அல்கர;ளாவியின் சாக்கடை “பத்வாக்கள்” கூட பரப்பப்பட்டுகின்றன. ஈரானியத் திரைப்படங்களுக்கு ஆதரவுக் கட்டுரைகள் கூட பல பத்திரிகைகளில் பிரசுரமாகின்றன. இன்று பயானின் தாக்கத்தை விட, இவற்றின் தாக்கம் வலுவானது என்ற கருத்துக்கள் கூட முன்வைக்கப்பட்டு வரப்படுகிறது.

இவற்றால் உணர்ச்சியு+ட்டலாம்; அறிவு+ட்ட முடியுமா? என்பதை, நபியின் பிரச்சாரத்தில் கவிதையின் நிலையை ஆராயும் ஒருவர் உண்மையை உணர்ந்து கொள்வார்.
எனவே, முஸ்லிம் பெயரைச் சுமந்தவர்களால் உருவாக்கப்பட்ட, சமகாலத்தில் உருவாக்கப்படுகின்ற தமிழ் மொழியில் உள்ள ஆக்கங்களை, இஸ்லாமிய நோக்கில் அணுகி ஆராய்ந்து, விமர்சிக்கப்படல் வேண்டும் என்ற காலத்தின் தேவை எம்மை நிர்பந்தித்தது. இஸ்லாமியப் பின்னணி இல்லாத இவர்களின் ஆக்கங்களில் காணப்படும், இஸ்லாத்திற்கு முரணான-எதிரான கருத்துக்களை இனங்காட்ட வேண்டும். ஏனெனில், இவர்களைக் காப்பதிலேயே பலரும் கவனம் செலுத்துகின்றனர். இவர்களை விட இஸ்லாமிய அகீதாவையே நாம் பாதுகாக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், ரசனையோடு படிக்கும் அனைவரும் கருத்துக் குழப்பத்திற்கு உட்படுவர். இஸ்லாத்தை தவறாகப் புரியும் நிலையைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த ஆய்வுத் தொடர் எழுதப்படுகிறதே தவிர, யாரையும் சாடும் நோக்கம் எமக்கில்லை.

இலக்கியம், சமுதாயத்தின் இணைபிரியாத அங்கமாக இன்று இருந்து கொண்டிருப்பதால், அது சமுதாய சிந்தனை மாற்றத்திற்கு ஒரளவு பங்காற்றுவதால், எமது சமூகத்திற்கு அதுபற்றிய தெளிவினை வழங்க வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டுள்ளது. இலக்கியம் மனிதனது அழகுணர்வைச் செம்மைப்படுத்தி, அல்லாஹ்வின் வல்லமையையும அகிலத்தில் பரந்துபட்டுக் கிடக்கும் முருகியலையும் (யுநளவாநவiஉள) தரிசிக்கின்ற நுண்ணிய உணர்வுகளையும் அவனில் ஏற்படுத்தி, வளர்த்து விரித்தியடையச் செய்வதற்குப் பதிலாக, அவனது கீழான விரச உணர்வுகளைத் தூண்டி, மிருகமாக்கி, வெறியாட்டமாட வைக்கிறது. நம்பிக்கையையும் முற்போக்கு சிந்தனையையும் அவனில் அதிகமாக்குவதற்குப் பதிலாக, நம்பிக்கையீனத்தையும், விரக்தியையும் வளர்த்து, அவனை நடைப்பிணமாக்குகிறது. இந்த இழிநிலை மாற்றியமைக்கப்பட்டு, இளைஞர்களின் குணமொழுக்கங்கள் நெறிப்படுத்தப்பட வேண்டுமாயின், சிறந்த இஸ்லாமிய இலக்கியங்கள் தோன்ற வேண்டும்.
மொழியின் வரலாற்றுக்கு இன்றியமையாத சான்று இலக்கியமாகும். மொழியினடியாய் இலக்கியம் தோன்றி மனிதனின் கொள்கை, கலாசார, சிந்தனை, உணர்வு போன்றவற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை ஆழ்ந்து நோக்கும் எவரிடமிருந்தும் மாறுபட்ட கருத்தியல் எதிரொலிக்க முடியாது.

இலக்கியம் மிகச் சக்திவாய்ந்த ஆயுதம். அது மனித வாழ்க்கையின் கண்ணாடி மட்டுமல்ல, சமூக வாழ்வை புரட்சி ரீதியாக மாற்றியமைப்பதில் அதற்குப் பாரியதொரு பங்குண்டு என்பதை, வரலாற்றைப் படிப்போரால் அறிந்து கொள்ள முடியும். ஒரு சமூகத்தின் உணர்வுகளினதும் கலாசார, சிந்தனை மரபுகளினதும் படிமங்களாக இலக்கியம் அமைவதால், கலாசார, சிந்தனைத் தாக்கங்களை ஏற்படுத்த இலக்கியத்தைச் சாதனமாகப் பயன்படுத்தும் நவீன உத்திகள் சமகாலத்தில் மிகத்தந்திரமாகவும், நுட்பமாகவும் கையாளப்பட்டு வருகின்றன. இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதற்கு, இஸ்லாத்தின் எதிரிகள் இலக்கியத்தை ஒரு சக்திமிக்க ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. இத்தகைய சவாலையும் நாம் இதில் இனங்காட்ட எத்தனிக்கின்றோம்.
ஒரு சமூகத்திற்குச் சொந்தமான கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களிலிருந்தும் கொள்கை உறுதியிலிருந்தும் ஒழுக்கப் பெறுமங்களிலிருந்தும் அச்சமூகத்தை அந்நியப்படுத்தும் முயற்சியில் அதற்கு உன்னத இடமுண்டு என்பதை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வகையில் நோக்கும்போது இலக்கியத்திற்கும் மனித சமுதாயத்திற்குமிடையிலான தொடர்பு இறுக்கமானதும், நெருக்கமானதும் ஆகும். அது சமுதாயத்தினடியாகத் தோன்றி, மனிதனின் மகிழ்ச்சியையும், உள்ளக் கிடக்கையையும், சோகத்தையும் கவலையையும், களிப்பையும், நம்பிக்கையும், ஆசைகளையும், ஆவல்களையும், அவலத்தையும், கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பிரதிபலித்துச் செல்கிறது.
இதற்கு அண்மைய உதாரணமாக கார்ல் மார்க்ஸும் அவருடைய நண்பர் எங்கல்சும் இணைந்து நடத்திய சமுதாய, பொருளாதார ஆய்வுகளில் இலக்கியம் 20ம் நூற்றாண்டுடைய வாழ்வியலையும் சிந்தனைப் போக்குகளையும் பெருமளவில் மாற்றியமைத்ததோடு, தற்கால இலக்கிய படைப்புக்கள் மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

“உலக இயக்கத்திற்கும், வரலாறு, கலை போன்றவற்றின் செயற்பாட்டிற்கும் தூண்டுகோலாக, அடித்தளமாக இருப்பது பொருளாதாரப் பிரச்சினைகளே! என்பதைக் கார்ல் மார்க்ஸும் அவரது சிந்தனைகளை அடித்தளமாகக் கொண்டு சமூகவியல் ஆய்வைத் தொடர்ந்த மாக்ஸிய அறிஞர்களும் சமூகவியல் ஆய்வைத் தொடர்ந்த மாக்ஸிய அறிஞர்களும் விளக்கிடப் பகிரதப் பிரயத்தனப்பட்டுள்ளனர்.
“இலக்கியவாதிகள், மனித சமுதாயத்தை நிர்மாணிக்கும் கட்டடக் கலைஞர்கள்” எனப் பொதுவுடைமைவாதியான ஸ்டாலின் கூறி, மனித சமூக நிர்மாணத்தை நெறிப்படுத்தும் இலக்கியத்தின் வல்லமையை விளக்கினார். அதேபோன்று, சிறந்த கட்டக் கலைஞன் நன்றாக கட்டடத்திற்கு ஓர் அமைப்புத் தோற்றம், ஒழுங்கு என்பவற்றைக் கொடுப்பது போன்று, அதற்கு மாற்றமான கட்டடக் கலைஞன் இருப்பான் என்பதை மறுதலிக்க முடியாது. எனினும், ஸ்டாலினின் கருத்து இலக்கியத்தின் சக்தியையும் பலத்தையும் நமக்கு உணர்த்தி நிற்கிறது.

இனி இலக்கியம் என்றால் என்ன?
அது பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் யாது?
அது எந்த வகையில் மற்றைய கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?
இலக்கிய வாதிகளது ஆக்கங்களை இஸ்லாமிய அடைமொழிகளோடு நோக்க முடியுமா? என்பன போன்ற தெளிவைப் பெற்று, இஸ்லாமிய இலக்கியத்தின் செயல்நெறியைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

பல்வேறு கொள்கைகள் மிகச் சாதாரணமாகவே மனிதச் சிந்தனையில் ஊடுருவி, ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தையும், அதன் இலக்கியக் கோட்பாட்டையும் புரிவதில் தவறிழைத்துக் கொண்ட சில முஸ்லிம் பெயர் தாங்கிகள், மேற்கின் இஸ்லாமிய விரோதப் போக்கை இனாமாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, இஸ்லாத்திற்குப் புறம்பான சிந்தனைத் தளத்தில் நின்று கொண்டு, “இலக்கியம் என்பது, அழகுணர்வுத் தேவை வெளிப்பாடு, கலை கலைக்காகவே என்ற நோக்கில் அணுகப்படல் வேண்டும். அதனை இரசனை உணர்வுடன் அனுபவித்துச் சுவைத்து, இன்புறல் வேண்டும். அதை மதம் என்ற குறுகிய வேலிக்குள் சிறையிட முயற்சித்தல் எவ்வகையிலும் அறிவுடைமையாகாது. இஸ்லாமிய நோக்கில் முஸ்லிம் கவிஞர்கள்-புலவர்களின் ஆக்கங்களையும் அணுகி ஆராய்தல் என்பதும் அர்த்தமற்ற ஒரு வீண் முயற்சியாகும் என சில விமர்சனக் குரல்கள் எழுந்துள்ளன. அதற்கோர; உதாரணத்தைக் கீழே தருகின்றோம்.
“எஸ்.ஜே.வி.யை என் இறக்கைகளில் காணுங்கள்” எனும் கவிதை பிரசுரமான போது, சிலர் மத நிலை நின்று அதனை விமர்சித்தனர். அவர்கள் கவிஞனின் பாஷையைப் புரிந்து கொள்ளாதவர்கள். அல்லாமா இக்பாலின் ஜாவீது நாமாவை படித்துப் பார்க்க வேண்டும்.”
என்று கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்கள், எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் “நான் எனும் நீ” எனும் நூலுக்கான தனது அணிந்துரையில் கூறும் இக்கருத்து, நாம் மேலே குறிப்பிட்டதற்கோர் அண்மைய உதாரணமாக உள்ளது. எஸ்.ஜே.வி. என்பவர் மாற்று மதத்தவர். (காபிர்) அவர் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது என்பது இஸ்லாத்தின் நிலை. ஆனால், அமைச்சர் அஷ்ரஃப் அவர்கள் “எஸ்.ஜே.வியை என் இறக்கைகளில் காணுங்கள்” என்ற கவிதையில் அவரை, தான் சுவனத்துக் கன்னிகளிடமிருந்து பறித்துக்கொண்டு, பு+மிக்கு வருவதாக வர்ணிக்கிறார். இவரின் கருத்து பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது. மரணித்தவர் மீள உலகிற்கு வரமாட்டார் என்பது நாமறிந்த ஒன்று. அப்படியிருந்தும் இதற்கு வக்காலத்து வாங்குவது என்பது எம்மை அதிர்ச்சிக்குள் வீழ்த்துகிறது. இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்ப்பதாகவும் பகுத்தறிவுக்கு முரணாகவும், புகழ்ச்சி வரம்பைக் கடந்து சென்றதாலுமே, பலர் அதனை மதநிலை நின்று விமர்சித்தனர் என்பதை நடுநிலையோடு நோக்கியிருந்தால், அவ்விமர்சனம் பிறந்திருக்காது என்பதே எமது பணிவான கருத்து.
எனவே, முஸ்லிம்களால் ஆக்கப்படும் இலக்கியங்கள் அனைத்தும் அவை, இஸ்லாமிய நெறிமுறைகள் விசுவாசக் கோட்பாடுகள், அதன் வரம்புகள், கண்ணோட்டங்கள் அனைத்தையும் மீறி, இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான, எதிரான எந்தக் கருத்துக்களை உள்ளடக்கியிருந்தாலும் சரியே! அவை, இஸ்லாமிய இலக்கியமெனக் கொள்ளப்படல் வேண்டும். அவற்றை விமர்சினத்திற்கு உட்படுத்துதல் பொருத்தமற்றது என்ற “கருத்து மயக்கம்” நிலவும் இன்றைய காலகட்டத்தில், அது பற்றிய சிந்தனைத் தெளிவை வழங்குவது இஸ்லாமியக் கற்கைத் துறை சார்ந்தோரின் கடமையாகும்.
இஸ்லாத்தின் சர்வ வியாபகத்தன்மை, அதன் ஆழமான பல்வேறு பரிமாணங்கள், பிரபஞ்சம், அதில் மனிதனது வாழ்வு தொடர்பான விரிந்த, ஆன்மீக, உலகியல் நோக்கு, இஸ்லாத்தின் தெய்வீகத் தன்மை என்பன பற்றிய அறிவையும் சிந்தனைத் தெளிவையும் பெற்றோர் இதன் அவசியத்தை உணர்ந்து, நமது விமர்சன அணுகுதலை ஜீரணித்துக்கொள்வர்.

எமது சமகால இலட்சிய வாதங்களான முதலாளித்துவமும், கம்யு+னிச-பொதுவுடமை வாதமும் இலக்கியத்தினூடாகவே அதிகமதிகம் பிரசாரப்படுத்தப்படுகிறது. இச்சித்தாந்தத்திற்குள் சிறைப்பட்டவர்கள், அக்கொள்கையின் பிரசார சாதனமாக, இலக்கியத்தையே எடுத்துக் கொள்கிறார்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களது சிந்தனை கருத்துக்களில் இலக்கியத்தினூடாக ஊடுருவி, ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதேபோல், இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள், இஸ்லாத்தின் தூய்மையான ஏகத்துவக் கருத்துக்களை மாசுபடுத்தியும், அதன் பகுத்தறிவு பு+ர்வமான போதனைகளைத் திரித்தும், சிதைத்தும் பிரசாரம் செய்வதிலும், முஸ்லிம் உலகிற்கு எதிராக ஏனைய மக்களை அணிதிரளச் செய்வதற்கும், நாம் உயிரிலும் மேலாக மதிக்கும் திருத்தூதர் முஹம்மத் நபி  அவர்களின் புனிதமான, அப்பழுக்கற்ற அளுமைக்கு மாசு கற்பிக்கும் பிரயத்தனங்களிலும், இலக்கியத்தினூடாக சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பிரதிபலிப்பு இன்று பிரத்தியட்சமாகத் தெண்படுகிறது. மேற்கத்தேய சடவாத சிந்தனையால் ஆகர்ஷிக்கப்பட்ட, இஸ்லாம் தெரியாத, இஸ்லாமிய, உம்மத்தில் தோன்றிய, இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குள்ள, நவீனத்துவ வாதிகளான, மேற்கின் சாக்கடைகளுக்கு கூஜா தூக்கி வயிற்றைக் கழுவும் ஸல்மான் ருஷ்தி, தஸ்லீமா நஸ்ரீன்,தாஹா ஹூஸைன், நஜீப் மஹ்பு+ழ், தோப்பில் முஹம்மது மீரான், சாரா அபு+பக்கர் போன்ற இன்னும பலர், தமது கீழான இஸ்லாமிய விரோதப் போக்குச் சிந்தனையை மக்கள் மன்றத்தில் ஜனரஞ்சகப்படுத்துவதற்கு இலக்கியத்தையே ஊடகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இலக்கியப் பரிமாணங்களான பாட்டும், கவிதையும், நாடகமும், சிறுகதையும், நாவலும், சினிமாவும் சத்தியதை அசத்தியமாகவும், அசத்தியத்தை சத்தியமாகவும், மெய்யை, பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும், உண்மையை உளரலாகவும், உளரலை உண்மையாகவும், திரிவுபடுத்தி, அழகூட்டி, கவர்ச்சியாக்கி, கை, கால், மூக்கு வைத்து, உயிர்கொடுத்து உணர்ச்சியூட்டிச் சொல்ல வல்லன.
இலக்கியம்
இலக்கியம் குறித்து, இலக்கிய வாதிகளால் பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை, அனைத்தையும் ஒருங்கிணைத்து இரத்தினச் சுருக்கமாக நோக்கின், “சொல்லில் அழகைப் புலப்படுத்தி வாழ்க்கைக்குரிய உண்மை இலக்கினை இயம்புவது இலக்கியமாகும் என வரைவிலக்கணப்படுத்தலாம். எப்படி கல்லில் அழகை வெளிப்படுத்தி, ஒரு பொருளை வடித்தெடுப்பதை சிற்பக்கலை என்கிறோமோ, அதுபோல, சொல்லின் அழகை வெளிப்படுத்தி, வாழ்க்கை இலட்சியத்தைச் சுட்டுவது இலக்கிக் கலையாகும்.
உண்மைகளை அழகுபடப் பாடிய இலக்கியங்கள் தமிழில் ஏராளமாகவும் தாராளமாகவும் உள்ளன. அதேவேளை, அழகுபடக்கூற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, உண்மைகளைப் பலிபீடத்திற்கு அனுப்பிவிட்டு, அழகையே ஆராதித்துக் கொண்டிருக்கிற இலக்கியங்கள் பல இன்று நம்மிடையே உலா வருகின்றன.
எதார்த்தத்திற்கும், உண்மைக்கும், மனசாட்சிக்கும் எதிரான பொய்யும், புனை சுருட்டும், கற்பனையும், செவிவழிச் செய்திகளும், கண், காது, மூக்கு என்பன வைத்துப் புனையப்பட்ட கதைகளும், அழகியல் பெயர் தாங்கி இலக்கியத்தின் பாடுபொருளாகப் பவனி வரலாயிற்று.
உண்மைகளை உலவவிட வேண்டும் என்ற நிலை பின்னுக்குத் தள்ளப்பட்டு, போலிகளை உலாவவிடும் போலிகள் அதிகரித்து, பொய்யாயினும், புழுகு மூட்டைகளாயினும் கவர்ச்சியோடு கூறினால் அது இலக்கியமாகிவிடும் எனும் எண்ணம் படைப்பவனிடமும் (இலக்கியலாதிகளிடமும்) படிப்பவனிடமும் (இலக்கியப் பிரியர்களிடமும்) பரவி, சமுதாயம் அறியாமைக்குள் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கின்றது.
அல்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும், இந்த இழிநிலை தான் உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலோங்கி இருந்தது. எனவே, அத்தகைய போலிகளை தோலுரித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. அதனால், அல்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் இலக்கியம் பற்றிய இஸ்லாத்தின் அணுகுமுறையைத் தெளிவாக எடுத்துரைத்து, இலக்கிய வாதிகளை நெறிப்படுத்துகிறது.

“ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள், கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள், ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவiதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர்.” (26:221-226)

உண்மையை யதார்த்தத்தை அழகுறப்பாடி வாழ்க்கையின் இலட்சியத்தை, இஸ்லாத்தின் நெறிக்குட்பட்டு, சத்தியத்தை எடுத்தியம்பும் இலக்கியங்களை அது எதிர்க்கவில்லை. மாறாக, அதை ஆதரவுக் கரம் நீட்டி வரவேற்கிறது. ஆனால், உண்மையை மொட்டையடித்துவிட்டு, அதன் தலையில் பொய்யை அல்லது அசத்தியமான, உண்மைக்குப் புறம்பான, அளவுக்குமீறிய கற்பனைகளை உலாவவிடும் நச்சிலக்கியங்களையே அது கடுமையாகக் கண்டிக்கிறது. அத்தகைய நச்சிலக்கியம் படைக்கும் பொய்யர்களை அல்குர்ஆன் ஷைத்தான்கள் என்றே அடையாளப்படுத்திகிறது.

அல்லாஹ்வின் சட்டங்களை விமர்சிக்கும் இன்னொருவரை இங்கு விமர்சிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், புகாரி மொழிபெயர்ப்புக் குழுவில் கூட அங்கம் வகிக்கும் கவிகோ அப்துர் ரஹ்மான் ஒரு மாக்ஸிய சிந்தனை அடிவருடி. ஏனெனில், தனது “பசி எந்தச் சாதி? என்ற நூலில் குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்களை கடுமையாக விமர்சித்து, குப்ரியத்திற்கு கும்மாளமிட்டுள்ளார். சமநிலைச் சமுதாய சிந்தனையை வரித்துக்கொண்ட அவரின் வரிகள் சற்று அவதானித்துப் பாடுங்கள்.

மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்லர்
அவர்களில் தீயவர்களும் இருக்கிறார்கள்.
தீயவர்கள் நமக்குத் தீங்கு செய்யும்போது அதற்குப்
பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு எழுவது
இயற்கை.
ஆனால், ஒவ்வொருவரும் கண்ணுக்குக்
கண், பல்லுக்குப் பல் என்று பழிவாங்கத்
தொடங்கிவிட்டால் உலகத்தில் ஊனமுடையவர்கள்
மட்டுமே இருப்பார்கள்.
பொறுமை இல்லாதவர்களால்தான் உலகத்தில்
பிரச்சினைகள் உண்டாகின்றன.
பொறுமை உடையவர்களோ சாந்தியின் தூதுவர்களாக
இருக்கிறார்கள்.
உலகம் அத்தகையவர்களால்தான் வாழ்ந்து
கொண்டிருக்கிறது.
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்ப வாழ்க்கை
பொறுமைக்குப் பயிற்சிக் களமாக அமைந்திருக்கிறது.
குடும்பம் சமூகத்தின் அடிப்படை அலகு.
குடும்பத்தில் பொறுமையைக் கற்றுக் கொண்டவன்
சமூக வாழ்க்கைக்குத் தகுதியுடையவனாகிறான்.
பொறுமை என்ற உயர்ந்த ஒழுக்கத்தைக் காலந்
தோறும் சான்றோர்கள் போதித்து வருகிறார்கள்.
ஒருவன் உன்னை வலது கன்னத்தில்
அறைந்தால் அவனுக்கு
மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு (மத்தேயு 5.39)
என்கிறார் இயேசு பெருமான்.
தன்னை அறைந்தவனைத் திருப்பி அறைய வேண்டும்
என்று நினைப்பதுதான் உலக இயற்கை.
அறைந்ததைப் பொறுத்துக் கொள்தே பெரிய விஷயம்.
இயேசு பெருமானோ ‘நீ திருப்பி அறையாதே.
அறைந்தவன் திருப்பி உன்னையே அறைய உன்
மறு கன்னத்தையும் காட்டு’ என்கிறார்.
இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று தோன்றலாம்.
ஆனால், இதில் சாந்தியின் வித்து இருக்கிறது.
அறைந்தவனைத் திருப்பி அறைந்தால் அவனும்
திருப்பி அடிப்பான். சண்டை முற்றும். பிறகு
இதில் சாதி, மதம், இனம் எல்லாம் சேர்ந்து
கொள்ளும்.
தனிப்பட்ட இருவருடைய சண்டை பெரிய
கலவரமாகிவிடும்.
அறைந்ததைப் பொறுத்துக் கொள்கிறவன் ஒரு
பெரிய கலவரம் நிகழாமல் தடுத்துவிடுகின்றான்.
அதுமட்டுமல்ல அறைந்தவனுக்கு மறு கன்னம்
காட்டினால், அறைந்தவன் திடுக்கிடுவான்.
“இத்தகைய நல்லவனையா அறைந்தோம்?” என்று
வருந்துவான். அதனால் திருந்துவான்.
எனவே பொறுத்துக்கொண்டவன் ஒரு தீயவனை
நல்லவனாக்கி விடுகிறான். பகைமைக்கு முற்றுப்
புள்ளி வைத்துவிடுகிறான்.
இயேசு பெருமானின் இந்தப் பொன்மொழியைப்
பொறுமையின் உச்சம் என்று உலகம்
போற்றிக் கொண்டாடுகிறது.
ஆனால், திருவள்ளுவரோ இதற்கும் மேலே
போகிறார்.
‘ஒருவன் உனக்குத் தீமை செய்தால்
அதற்கு மாறாக நீ
அவனுக்கு நன்மையைச் செய்’
என்கிறார்.
இன்னா செய்தாரை ஒறுத்தல்
அவர் நாண
நன்னயம் செய்து விடல் (குறள் 314)
இயேசு பெருமானின் வார்த்தைகளை வைத்தே
இதை விளக்குவதாக இருந்தால், ஒருவன்
உன்னை அறைந்தால் நீ அறைந்த கைக்கு
மோதிரம் போட்டு விடு என்று அர்த்தம்
தண்டிக்க நினைப்பதுதான் மனித இயற்கை எனவே
இந்த இயற்கைப்படியே ‘உனக்குத் தீங்கு செய்தவனைத்
தண்டிக்கத்தானே விரும்புகிறாய்? இதோ இதுதான்
தண்டனை. அவனுக்கு நீ நன்மையைச் செய்’
என்கிறார் வள்ளுவர்.
இது எப்படி தண்டனை ஆகும் என்று கேட்கலாம்.
உண்மையில் இதுதான் கொடிய தண்டனை.
அடித்தவனைத் திருப்பி அடித்தால் அவனுக்குக்
கொஞ்ச நேரம் வலிக்கலாம். பிறகு வலி
போய்விடும்.
காயம் ஏற்பட்டால் கூட ஆறிவிடும்.
ஆனால், தீமை செய்தவனுக்கு நன்மை செய்வது
என்பது அவனுடைய இதயத்தில் அடிப்பதாகும்
இந்த அடியின் வலி தீராது. அவன் நினைக்கும்
போதெல்லாம் வலிக்கும்.
இத்தகையவனுக்கா தீங்கு செய்தோம் என்று
நினைத்து வருந்துவான்.
இந்தக் காயம் ஆறாது
பரிமேலழகர் உரைப்படி இந்தக் குறளில்
இன்னொரு கருத்தும் இருக்கிறது.
தீமை செய்தவனுக்கு நன்மை செய்வதோடு,
அவன் செய்த தீமையையும், நீ செய்த நன்மை
யையும் மறந்து விடு என்பது பரிமேலழகர்
கருத்து.

இக்கவிதையைப் படிக்கும் போதே கவிக்கோ யார் என்று தெரிந்து விடும்.


தொடரும் .................

No comments: