பல நாடுகளில் பரந்து வாழும் நண்பர்களை, ஒரே நேரத்தில் தங்களுடைய முகங்களைக் காண்பித்து, கண் குளிர்ச்சிக்கு வழிவகுக்கும் களமாக இன்று facebook பார்க்கப்படுகிறது. அல்லது எமது சகோதர்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஆனால், அண்மைகாலமாக எமது சகோதர, சகோதரிகள் இந்த வசதியை பயன்படுத்தி மிக மோசமான செய்திகளையும் தொடர்புகளையும் உருவாக்கிக்கொள்வதை பார்க்கின்றோம்.
கொள்கைகளை திறந்து, இழந்து சில மோசமான நடத்தைகளில், லேபல்கள் மூலம் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வதை கவனிக்ககூடியதாக இருக்கிறது.
உதாரணமாக,
பெண்கள் உரிமைகள், ஒழுக்கங்கள் தொடர்பாக பேச வேண்டிய நாங்கள் அவர்களை பகிரங்கமாக “இது எனது இன்றைய நண்பி” என்று ஒரு வயதுப் பெண்ணை, அல்லது பாடசாலையில் கற்கும் மாணவியை பகிரங்கமாக அறிமுகப்படுத்துவதை பார்க்க முடிகின்றது,
காதலர் தினத்தை காமுகர் தினமாக பகிரங்கப்படுத்த வேண்டிய எமது தோழர்கள், இந்த பக்கத்தின் மூலம் கள்ளக்காதலை ஊக்குவிப்பதை நோட்டமிடமுடிகின்றது.
ஓய்வு நேரங்களை பகிர்ந்து கொள்கின்றோம் என்ற பெயரில், விபச்சாரம் வரை சிலரை விட்டுச்செல்வதற்கு பாவிக்கப்படுகின்றது.
நண்பர்கள் அறிமுகம் என்ற பெயரில் மோசடிகள் ஊக்குவிக்கப்படுகின்றன,
கொள்கைகள் சீர்கெட வழிவகுக்கின்றது,
எமது குறைகள் அம்பலப்படுத்தப்படுகின்றன,
அன்பின் எனது நண்பர்களூக்கு,மார்க்கத்தை படித்து பரப்புவதில் கவனம் செலுத்த வேண்டிய எமது நண்பர்கள் சிலர் facebook போதையில் கொள்கை இழந்து நிற்கின்றார்கள்.
நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு, அது உண்மை, உறவுகளை புதிப்பிக்கும் சந்தர்ப்பம் அது தாராளம்,
ஆனால்
எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் நிற்று கொண்டதாக இருக்க எம்மை வளர்த்துக்கொள்ளுவோம்.
facebookல் முகங்காட்டிக்கொள்ளும் அன்பின் சகோதரிகளுக்கு,
கவனமாக இருந்துகொள்ளூங்கள.
இஸ்லாம்
உங்கள் சரியான மார்க்கமாக இருந்தால் வேண்டாம் facebook தோழமை,
hi என்பார்கள், இரண்டாவது நாள் – உனது photo photpho சூப்பர் (oh nice photo)என்பார்கள்,
மூன்றாவது நாள் டைம் பாஸ் (how is your time passing? எப்படி என்று கேட்பர்கள்,
நான்காவது நாள் மொபைல் நண்பர்(can I have your mobile no),
அடுத்த நாள் எங்கே சந்திக்கலாம் என்று ஒரு கேள்வி
கடைசியாக நேற்று தவறுதலாக ஏதோ நடந்து விட்டது, என்னை மன்னிக்கவும், நன்றி
(I am so sorry, bay) என்று காணாமல் போய்விடுவார்கள்.
வேண்டாம் இந்த தட்டு,
இது வெறும் நட்புக்கல்ல,
உங்கள் கற்புக்கு ஒரு வேட்டு,
உங்கள் எதிர்காலத்தில் ஒரு கேள்விக்குறிக்குத்தான்.
facebookல் காலம் கடத்தும் பெண்களை நான் ஒரு விதமாக பார்க்கின்றேன்,
அதாவது, தாய் தந்தை கட்டுப்பாடற்று தூய்மை, வெட்கம் நீங்கித்தான் இங்கு முகங்காட்டி வாக்குகளை சம்பாதிக்கின்றார்களோ என்று தான் அந்த எமது சிந்தனை.
தொடரும் .................
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment