"மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!!"

 தொடர் 2                                                                                                         மாற்றங்கள் தேவை - சுவை 16 ல் கடந்த 21 April, 2010 அன்று "மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!!"
என்ற கட்டுரையை அறிமுகப்படுத்தியிருந்தேன்.
இந்த ஆக்கத்தை சமர்ப்பித்த தொப்பியுடன் காட்சிதரும் இந்த சகோதரிடன் சில சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.


1. ”உமரின் நாவில் அல்லாஹ் பேசுகின்றான்” என்கின்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியுமா?

2. “முஹம்மதை யாராவது வணங்கினால் தெரிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக முஹம்மது மரணித்துவிட்டார், யார் அல்லாஹ்வை வணங்குகின்றார்லோ அவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்,
அல்லாஹ் உயிருடன் இருக்கின்றான், அவன் மரணிக்கமாட்டான்” இது உண்மையான வார்த்தைகளா?

3. சீயாக்கள் அலி ரலி அவர்கலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நியாயமானதா?

4. ”முஹையதீன் ஆண்டவர்” என்று சொல்லுவதற்கு பதிலாக முஹையதீன் என்று சொல்லுவது அல்லாஹ்விடத்தில் குற்றமாக கருதப்படுமா?

5. முஹையதீன் ஆண்டவருக்கு”முஹையதீன்” என்று பெயர் வைத்தது அல்லாஹ் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர், இதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

6. முஹையதீன் ஆண்டவருக்கு பின்னால் அவரை விட ஒரு சிறந்த மனிதர் வருவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றனவா?

அன்பின் சகோதரர் அஸீஸ் அஹ்மத் அவர்களுக்கு,

முஹையதீன் ஆண்டவர் குறித்து பலரது பல விமர்சன கருத்துக்களை பார்க்க முடிகின்றது, இந்த வகையான விமர்வனங்களிலும் கருத்துக்களிலும் எது சரி எது பிழை என்பதை தீர்மானிக்கமுடியாத நிலையில் நான் இருக்கின்றேன்.

அதனால் எனது மேலுள்ள சந்தேகங்களுக்கு வெகுவிரைவில் விடையளிப்பீர்கள் என அவாவடைகின்றேன்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: