உம்ரா பயணத்தில்,

உம்ரா பயணத்தில்,............


பயணம்!!

எங்களுடைய உம்ரா பயணம் திட்டமிட்டபடி கடந்த 24,25,26 – மார்ச் 2010 ல் சிறப்பாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ் நாடு தெள்ஹீத் ஜமாஅத் அனுசரணையுடன் புனித உம்ரா பயணமும் செங்கடலிலான ஒரு சங்கமும் இனிதாய் அமைந்தது அவன் துணையுடன்.

ரியாத் மாநகரிலிருந்து 24 – 03-2010 அன்று மாலை 4.00 மணியளவில் எமது 3 பஸ்களும் 150 பேர்களொட பயணத்தை ஆரம்பித்தது,

அடுத்த நாள் அதிகாலை மக்காவை அடைந்து உம்ரா கடமையை நிறைவேற்றிக்கொண்டோம்.

செங்கடலில் ஒரு சங்கமம் என்ற பேரானந்த உணர்வோடு அதே தினம் மாலை திட்டமிட்டபடி ஜித்தவை நோக்கி சென்று அங்கே எமக்காக காத்திருந்த ஜித்தா மண்டள தவ்ஹீத் சகோதர்களை சந்தித்து எமது கடல் பயணத்தைத் துவங்கினோம்.

அங்கே கப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

மாலை 4.00 மணியளவில் ஆழ் கடலை நோக்கிய பயணம் தொடர்ந்தது.

அந்த செங்கடலில் கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்களை சந்தோஷமாக குழந்தைகளுடன் குடும்பமாக நண்பர்களூடன் குதூகலமாகக் கழிக்கக் கிடைத்தது.

புனித உம்ராவை நிறைவேற்றி அல்லாஹ்விடத்தில் எமது சுமைகளை இறைக்கி வைத்தவர்களாகவும் கடல் பயண சந்தோஷங்களுடனும் அடுத்த நாள் (26/03/2010) மாலை ரியாதுக்கு திரும்பினோம்.

எனது பயணத்தில் வழைமைக்கு மாற்றமான பல சிறப்பம்சங்கள் எங்களை புன்னகிக்க வைத்து, பயனடையச் செய்தன என்றால் இன்றிமையாது.

பயண நிகழ்ச்சி நிரல்கள்:

ஏனைய பயண அனுபவங்களை விட இப்பயணம் மிக வித்தியாசமான ஒரு ஒழுங்கமைப்பில் இருந்தது.

எங்களுக்கு 11ம் இலக்க பஸ்ஸில் சீட் கிடைத்தது,

இதற்கு சகோதரர் அக்பர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்,

துணைப்பொருப்பாளராக முகம்மது மாஹின் மற்றும் சகோதரர் முபாரக் அவர்களும் செயல்பட்டனர்.

எங்கள் பஸ் ரியாதிலிருந்து மக்காவை நோக்கி நகர ஆரம்பிக்கும் போது எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்கள் பயண துஆவை அனைத்து பயணிகளுக்கும் சொல்லிக்கொடுத்தார்.

அதனை தொடர்ந்து ‘உம்ரா ஓர் விளக்கம்” என்கிற மகுடத்தில் மெளலவி இஸ்ஸதீன் றிழ்வான் ஸலபி அவர்கள் நிகழ்த்தினார்.

உம்ரா செயன்முறை தொடர்பாக மக்களிடத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு மிகத்தெளிவான பதில்களையும் விளக்கங்களையும் மெளலவி எம்.ஏ. ஹபீல் ஸலபி அவர்கள் வழங்கினார்.

கேள்வி பதில் நேரம் முடிவுற்ற பின்னர் “சொல்லுங்கள் வெல்லுங்கள்” என்ற நிகழ்ச்சி மெளலவி இஸ்ஸதீன் றிழ்வான் அவர்களால் அறங்கேற்றப்பட்டது.

11ம் இலக்க பஸ்ஸில் பயணித்த அனைத்துப் பயணிகளையும் இரண்டு குழுக்களாக பிரித்து அணி அ, அணி பி என்ற ஒழுங்கில் இந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.

இரண்டு அணியினருக்குமிடையில் இது மிகச் சுறுசுறுப்பாகவும் காரசாரமாகவும் நடந்தேறின.

வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

பயணத்தில் பங்குபெற்ற பெண்கள், தாய்மார்கள், பிள்ளைகளின் பங்குபற்றுதல் இந்த நிகழ்ச்சியில் மிக மெருகூட்டலாக அமைந்தது.

மற்ற நாள் ஜித்தாவை நோக்கிய எமது பயணத்தில் முகம்மது மாஹின் அவர்கள் TNTJ யின் செயற்பாடுகள் குறித்தும் அண்மையில் ஏற்பாடாகியிருக்கும் July 4 இட ஒதுக்கீடு உரிமைப் போரட்டம் குறித்தும் பல செய்திகளைச் சொன்னார்.

அதன் பின்னர் “கப்பல் பயணம் ஓர் இஸ்லாமிய பார்வை” என்ற தலைப்பில் ஒரு சிறந்த உரையை எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்கள் வழங்கினார்.

அல் குர்ஆன் வசனங்களையும் வரலாற்றாதாரங்களையும் குறிப்பிட்டு நூஹ் அலை அவர்களுடைய வரலாற்றுச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி விவரித்துக்காட்டினார்.

தொடர்ந்து “அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுதல்” என்ற தலைப்பில் நாம் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுவதன் அவசியம் அதன் முக்கியத்தும் குறித்த ஒரு சிற்றுரையை மெளலவி இஸ்ஸதீன் றிழ்வான் அவர் நிகழ்த்தினார்.

ஜித்தா கப்பல் பயணத்திற்கான எல்லையை அடைந்ததும் எமது அடுத்த கட்ட செங்கடலில் ஒரு சங்கமம் என்கின்ற தொடர் ஆரம்பமானது.

செங்கடலில் பயணித்தவர்களாக ஜித்தா மண்டல சார்பாக ஏற்பாடாகியிருந்த சில முக்கிய நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக அறங்கேரின.

கடலில் இயற்கையை கண்டுகளித்தவர்களாக “கடலும் கப்பல் பயணமும்” என்கின்ற தலைப்பிலான உரையை மெளலவி பிர்னாஸ் அவர்கள் விளக்கமாக நிகழ்த்தினார்.

அல் குர் ஆன் அல் ஹதீஸ் மற்றும் விஞ்ஞான ஒளியில் கடல் தொடர்பான வரலாற்றையும் கப்பல் கட்டுவதில் ஆரம்பம் யார், யார் அதன் அசான் என்பதையும் ஆதாரங்களுடன் விளக்கப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்கள் ”இஸ்லாம் ஓர் ஈர்ப்பு சக்தியுள்ள மார்க்கம்” என்ற மகுடத்தில், எதனால் இஸ்லாத்தில் நுழைகின்றனர் என்பதை விளக்கினார்.

முடிவில் அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சி நடாத்தப்பட்டு கேள்விகளுக்கு சரியாக விடையளித்த பலருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

சிறப்பான அந்த ஏற்பாட்டை சுவைத்தவர்களாக மக்காவை வந்தடைந்தோம்.

திரும்பி வரும் வழியில் இன்னும் சில சுவையான நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.

“எதிரும் புதிரும்” என்ற ஒரு நிகழ்ச்சி சபா - மர்வா என்ற இரு அணிகள் பங்குகொள்ளும் வகையில் நடாத்தப்பட்டது.

சபா அணியினர் மர்வா அணியை நோக்கி எழுப்புகின்ற ஒரு கேள்விக்கு மர்வா அணியினர் உரிய நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் மர்வா அணியின் கேள்விக்கு சபா அணீயினர் பதிலளித்தல் என்று பல சுற்றுக்கள் நடாத்தப்பட்டு பரிசில்களும் பஸ்ஸில் வழங்கப்பட்டன.

சகோதரர் இஸ்ஸதீன் றிழ்வான் அவர்களின் இந்த “எதிரும் புதிரும்” என்ற நிகழ்ச்சியைத்தொடர்ந்து சகோதரர் எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்களினால் கேள்வி பதில் நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. கேள்விகளுக்கு விடையளித்து பலர் பரிசில்களை தட்டிக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வரலாறு மற்றும் சமூகவியல் தொடர்பான பல பிரயோசனமான கேல்விகள் தொடுக்கப்பட்டன.

எமது பயணத்தின் கடைசி நிகழ்வாக “சுய அறிமுகம்” என்ற ஒரு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இந்த எமது இலக்கம் 11 பஸ்ஸில் பயணித்த அனைத்துச் சகோதர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட அனைவரும் தங்களைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டதுடன் எமது பயணம் தொடர்கான கருத்துக்களையும் விமர்சனங்களையும் எமது பார்வைக்கு கொண்டுவந்தனர்.

இந்நிகழ்வு எமது பரஸ்பர உறவை வளர்ப்பதற்கும் எதிர்காலத்தில் மேற்கொள்ள இருக்கும் இதுபோன்ற பல பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்வதற்கும் துணையாக அமையும்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: