இருட்டறை இளமைச் சிந்தனை...........!!!
படிக்க போனேன், படிப்பு வரவில்லை, பெயிலாகிவிடுவேன் என்ற பயம், ஆனால் நேரம் கடத்த ஒரே வகுப்பு மாணவியுடன் கல்ல காதல் முயற்சி.
காதல் ருசிக்க ஆரம்பித்தது, கல்வி கசக்க ஆரம்பித்தது. கஸ்டமாகிப்போகும் படிப்பை இடை நிருத்துவதா அல்லது காலம் கடத்தும் காதலுக்காக பள்ளிக்கூட பென்ஞை நிரப்புவதா என்ற சிந்தனை எமது அதிக இளைஞர்களை தவிக்கவிட்டிருக்கிறது.
வேண்டாம் படிப்பு, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி,
பாடசாலை வாழ்வை இடைநிருத்தி சில மாதங்கள் கடந்த நிலையில்,
வீட்டுப் படியில் சாய்ந்தவண்ணம்; என்ன செய்வது? எப்படிச் செய்வது? என்ற கேள்விக்கு விடைதெரியாத விரக்தியின் உச்சகட்டத்தில்….
வெளியே சொல்ல வெட்கம், வீட்டில் இருக்க பயம், ஊரில் சுற்ற அவமானம், ஒரு வீட்டறையின் ஓரமாய் சில மாதங்கள்…?
இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாமே !!!?? முயற்சித்திருக்கலாமே??????? என்னை கொப்பியடித்த அந்த கிருக்கன் இன்னும் படிக்கிறானே என்ற உள் அவஸ்தை,
தந்தைக்கு முகங்காட்ட வெட்கம், ஊராரை பார்க்க பிடிக்கவில்லை,
வெளியூர் செல்ல பொகட் மனியில்லை, யாரைத் தெரியும்?? பயோ டெட்டாவில் எதை கொலிபிகேஷனாக சேர்ப்பது????
நான் கெட்டேன், என்னை கெடுத்தேன் என்ற இளைஞர்கள் எல்லா ஊர்களின் மூலைமுடுக்குகளிலும்..
சில மாதங்கள் பழைமையானதும் அவனே ஊரின் கதாநாயகன்………
எல்லாவற்றுக்கும் இவன் பெயர்,
பக்கத்து வீட்டில் கோழி முட்டையை காணவில்லை, உடனே இவன் பெயர்!?!?!?
அடுத்தவீட்டில் திருட்டு……
டியுஷன் போகும் வயசுப் பிள்ளைகளுக்கு பின்னால் நய்யாண்டி செய்தவனாய், குளத்துக்கட்டுகளில் கும்பிடுபோட்டவனாய்…….
தலைமுடி வெட்டாது காடயனாய், இதுதான் பெஷன் என்ற கொல்கையுடன்…..
தாடி வைத்து, காதல் தோல்வி என்று வாழ்க்கையை இழந்த நிலையில்……..
நாளை நாட்டின் தலைவர்கள், சமூகத்தின் வழிகாட்டிகள், தேசத்தின் முதுகெலும்புகள்.
ஆனால் அவளமும் அவஸ்தையும் தொடர்கிறது…
தொடரும்…….
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment