மாம்பழத்தை விரும்பிச் சாப்பிடக்கூடியவர்கள் அனைவருமே அதிலுள்ளவைகளை அல்லது அதன் மூலம் கிடைப்பவைகளை அதிகம் அறிந்துகொள்வதில்லை. இதில் விட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் உள்ளன. மற்றும், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் காணப்படுகின்றன.
மாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்ததும் அதன் தோல் மற்றும் கொட்டைகளை தூர எறிந்துவிட்டே நாம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் மாம்பழத்தின் தோல் பகுதியில்தான் அதிக அளவில் விட்டமின் சி சத்துக்கள் கிடைக்கப்பெருகின்றன, அத்துடன் அதன் கொட்டையில் கால்சியம் மற்றும் கொழுப்புச் சத்துக்களும் அதிகம் காணப்படுகின்றன.
இது மாம்பழக்காலமாக இருப்பதனால் அது தொடர்பான ஒரு சின்ன அறிமுகமேயாகும்.
பொதுவாகப் பழங்கள் பற்றி பல இடங்களில் அல் குர் ஆன் எனம்மக்கு ஞாபகமூட்டுகின்றது,
* "படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்." (அல் குர்ஆன் 6 -141)
.bmp)
*அதன் மூலம் பயிர்களையும், ஒ-வ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது. (அல் குர்ஆன் 16 -11)
*”அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத்தினடியிலும், குலைகள் தொங்கும் வாழை மரத்தினடியிலும், நீண்ட நிழல்களின் அடியிலும், ஓட்டி விடப்படும் தண்ணீருக்கு அருகிலும், தடுக்கப்படாத, சுவை அற்றுப் போகாத, ஏராளமான கனிகளுக்கு அருகிலும் உயரமான விரிப்புகளின் மீதும் இருப்பார்கள்.” (அல் குர்ஆன் 56 : 28-34)
* ”அத்தியின் மீதும் ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக!” (அல் குர்ஆன் 95 -1)
*"பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்) (அல் குர்ஆன் 19 -25)
------------------------------------------------------------------------ அடுத்து வருபவைகள் -Upcoming Articles
1. உயிர் காப்பாற்றும் சொட்டு இரத்தம் .
2. யார் அவர், கடவுளா அல்லது மனிதரா?
ஒரு மெகா தொடர்…….
3. துடிக்கும் இளமைகள் தொடர் 02
4. புனித ரமழானில் எனது செயற்பாடுகள்.
5. கர்த்தர் அழைக்கிறார்.
------------------------------------------------------------------------
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
1 comment:
Dear brother,
Now I want to eat Mango, where I can get it?
thanks
Post a Comment