முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி புனித பைபிள்:

 

புனித பைபிள் பேசுகின்றது:
3, நவம்பர் மாதம் 1986 அன்று அமெரிக்க லுசியானா பல்கலைக்கழகத்தில் (University of Louisiana) அறங்கேறிய பைபிள் கடவுள் வார்த்தையா? (Is the Bible God’s Word?) என்ற தலைப்பிலான சூடான, கிறிஸ்துவ அறிஞரின் இயலாமையை வெளிக்காட்டிய அந்த விவாத்தில் ஒரு பார்வையாளரால் கிறிஸ்துவ அறிஞர் ஜிம்மி சுவாகத் (Rev. Jimmy Swaggart) அவர்களிடம் கேற்கப்பட்ட கேள்வி தான் புனித பைபிளில் முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி கூறப்பட்டிருக்கின்றதா?.


புனித பைபிளில் முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி கூறப்பட்டிருக்கின்றதா? என்ற கேள்விக்கான விடையை புனித பைபிளின் ஆதாரத்துடன் சர்வதேச இஸ்லாமிய அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் கடந்த 4 நவம்பர் மாதம் 1986ம் திகதி அமெரிக்க  படென் ரொகில் அமைந்துள்ள (LSU Union Theatre, Baton Rouge, USA) ல் விளக்குகிறார்.

அந்த விளக்கத்தின் சுறுக்கமாக இந்த கட்டுரை அமைகிறது.



قُلْ أَرَأَيْتُمْ إِن كَانَ مِنْ عِندِ اللَّهِ وَكَفَرْتُم بِهِ وَشَهِدَ شَاهِدٌ مِّن بَنِي إِسْرَائِيلَ عَلَى مِثْلِهِ فَآمَنَ وَاسْتَكْبَرْتُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ [الأحقاف : 10]


 "இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து,  இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து அகந்தை கொண்டால் (என்னவாகும் என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்!என (முஹம்மதே!) கேட்பீராக! அநீதி இழைக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்."  (அல்குர் ஆன் – 46 : 10)

என்ற இந்த வசனத்தை ஓதியவராக தனது சொற்பொழிவை ஆரம்பித்தார்.

பைபிளில் எங்கும் முஹ்ம்மத் (ஸல்) அவர்கள் குறிப்பிடப்படவில்லை என்று கிறிஸ்துவ பேரறிஞர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட, பாலியல் குற்றத்தில் பல தடவை மாட்டுண்ட ஜிம்மி சுவகெத் (Rev. Jimmy Swaggart)  குறிப்பிருகின்றார். புனித பைபிளை வ்ரையறையற்ற தடவைகள் வாசித்திருக்கின்றதாகவும் அதில் எங்கும் இவ்ரது பெயர் இடம்பெறவில்லை என விவாத மண்டபத்தில் அமர்ந்திருக்கும் மக்களுக்கு உறுதிப்படுத்தினார்.

இந்த கருத்துக்கு பதில் சொல்லுவதற்காகவும் மக்களுக்கு இதனை தெளிவுபடுத்துவதற்காகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டதாகும்.


பைபிளின் மூலப் பிரதியான ஹீப்ரு மொழியிலுள்ள பழைய ஏற்பாட்டிலும் கிரேக் மொழியில் புதிய ஏற்பாட்டிலும் முஹம்மத என்ற தீர்க்கதரசி வருவார் என்பது முன்மொழியப்பட்டுள்ளது.

ஹீப்ரு மொழியிலுள்ள ப்ழைய ஏற்பாட்டை பிறட்டுகின்ற போது சங்கீதம் என்ற புத்தகத்தில் அத்தியாயம் 5, வசனம் 16 சொல்லுகின்றது:


 ஆம் எருசலேமின் பெண்களே! என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர்,அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது, இப்படிப்பட்டவரே என் நேசர் இத்தகையவரே என் நேசர்

"His mouth is most sweet; yes, he is all beautiful. This is my loved one, and this is my friend, O daughters of Jerusalem.”      )song of solomon 5/16(

இங்கு முஹம்மதிம் என்ற சொல்லில் முஹம்மத் என்ற பெயருக்கு பின்னால் திம் பாவிக்கப்பட்டிருப்பது; ஹீப்ரு மொழியில் பன்மைக்கு பயன்படுத்தும் இலக்கிய நடையாகும்.
பொதுவாக அரபு, ஹீப்ரு போன்ற மொழிகளில் இரண்டு பன்மை இருக்கின்றது.        


1. மரியாதைக்காக பயன்படுத்துவது.                                                                                                               2. பல என்ற ஒன்றுக்கு மேற்பட்டவற்றை குறிக்க, பன்மைக்கு பயன்படுத்துவது. 

இந்த நடைமுறையை பைபிளில் பல இடங்களில் பார்க்க முடியும். உதாரணமாக:
 ”துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்". (ஆதியாகம்ம் 1-1) இங்கு தேவன்என்பதற்கு ஹீப்ரு மொழியில் இலோஹிம் என்று சொல்லப்படுகின்றது. இலா என்ற சொல்லுடன் ஹிம் என்ற மரியாதைக்குரிய பன்மை பாவணையை பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
                                                                                                                                                               இந்த பாவணைமுறையை அல்குர் ஆனிலும் பார்க்கமுடியும்.                           إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ  لَحَافِظُونَ [الحجر : 9]
நிச்சயமாக நாமே இவ்வேத்ததை இறக்கியுள்ளோம், இன்னும் நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்பவர்களாவோம்”  (அல் குர் ஆன் – 15 : 9)

இங்கும் பன்மையாகத் தான் பாவிக்கப்படுகின்றது, இங்கு வரக்கூடிய நாம் என்பதற்கு கிறிஸ்தவர்கள் ‘பிதா பரிசுத்த ஆவிஎன்று வியாக்கினப்படுத்துவது போன்று எந்த ஒரு முஸ்லிமும் ‘அல்லாஹ், முஹம்மது மற்றும் ஜிப்ரீல்என்று சொல்லவோ விளங்கிக் கொள்ளவோ மாட்டார்கள்.
                                                                                                                                                          அல்லாஹ் தன்னைப்பற்றி அறிமுப்படுத்தும் போது  நபியே கூறுவீராக! அல்லாஹ் ஒருவந்தான்”      (அல் குர்ஆன் 112 : 1) என்று பிரகடனப்படுத்துகின்றான்
அதனால்தான் எந்த அரபு கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களிடத்தில் மேலே உள்ள பன்மைக்கான வசன நடைக்கு விளக்கம் கேற்பதில்லை.
ஆனால் கிறிஸ்துவ நண்பர்களைப் பொருத்த வரையில் அவர்களது நம்பிக்கையை, கடவுள் கொள்கையை  உறுதிப்படுத்துவதற்கு இதனை பன்மையாகவே காட்சிப்படுத்துகின்றனர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று முற்கடவுள் நிலையை வியாபிக்கச் செய்கிறார்கள்.
                                                                                                                                                              ஆனால் இதுவரைக்கும் எந்த பைபிளிலும் தேவர் என்பதற்கு பதிலாக தேவர்கள் God –Gods என்று எழுதப்பட்டதாக பார்ர்க்கமுடியவில்லை.
பிதா, குமரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் இணைந்து என்பது பாவிக்கப்படவேண்டுமானால் கடவுள்கள், தேவர்கள் கர்த்தர்கள் என்று பைபிள்களும் எழுதப்பட வேண்டும்.
அதனால் ஹீப்ரு மொழியில் முஹம்மதிம் என்று பாவிக்கப்பட்டிருப்பதும் அந்த மரியாதக்கும் கெளரவத்திற்கேயாகும்.

பைபிளில் ஒரு பகுதி யூதர்களுடையது என்பதால் எந்த யூதர்களிடத்தில் இது பற்றிக் கேட்டாலும் இந்த பன்மை கெளரவத்திற்காகத் தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வார்கள்
இன்று வரை கிறிஸ்தவர்களால் மூலப்பிரதியாக பார்க்கப்படும் ஹீப்ரு மொழி பைபிளில் முஹம்மதிம் என்ற சொல் இடம்பெறுகிறது, இருந்துவருகிறது. ஆனால் மொழிபெயர்க்கும் போது தமிழாக இருந்தால் விரும்பத்தக்கவர்ஆங்கிலமாக இருந்தால் “Lovely” "Praised”  என்று மொழிமாற்றம் செய்கின்றார்கள். 
                                                                                                                                                                   ஆயிரம் தடவை விரும்பத்தக்கவர் பொருந்திக் கொள்ளத்தக்கவர் என்று வாசித்தாலும் அது எந்த வகையிலும் நியாயமற்றதும் பொருத்தமற்றதுமாகும். ஒரு பெயரை அவ்வாரு மொழிபெயர்ப்பதற்கு எந்த அதிகாரமும் இவர்களுக்கு இல்லை.

எவரது பெயரையும் இவ்வாரு மொழிபெயர்ப்பு செய்து பாவிப்பதற்கு எவருக்கும் எந்த தகுதியுமில்லை.

தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிகளில் ஒருவர்தான் முன்னியர் சுவாட்இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் முன்னியர் என்பது திரு (Mr.)  சுவாட் என்பது கருப்பு (Black)  என்றும் பொருள். இதனை இவ்வாறு மொழிபெயர்த்து சொன்னால் திரு கருப்பு,  (Mr. Black)  என்று சொல்ல வேண்டும். இவரது பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அவரை ஆங்கிலயராக அல்லது தமிழில் மொழிபெயர்த்தால் அவரை ஒரு த்மிழனாகத் தான் பார்க்கமுடியும்.

ஆனால் இவ்வாறு மொழிபெயர்த்ததால் தான் முஹம்மதிம் என்பதற்கு  altogether lovely’ , ’loved one  என்று பாவிக்கப்படுகின்றது.

ஆனால் இன்றுவரை மூலப்பிரதி முஹம்மதிம் என்றே இருந்துவருகிறது.

பெயர்க்ளை இவ்வாறு விருப்பம் போல் மாற்றுகின்ற இந்த நோய் கிறிஸ்தவர்களிடத்தில் பரவலாக காணப்படுகிறது. ஈசா நபிக்கு, இயேசு கிறிஸ்துவுக்கு மஸாயா, மஸீஹ் என்று பாவிப்பதற்கு கிறிஸ்து என்று பாவிக்கிறார்கள்.

ஹீப்ரு சொல்லாகிய மஸாயா, அல்லது மஸீஹ் என்பது தடவுவதற்கு, பதப்படுத்துவதற்கு பாவிக்கப்படுவதாகும். அரபியில் மஸீஹ் என்று பாவிக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் தொழுகைக்காக வுழுச் செய்யும் போது அதன் ஒரு பகுதி செயன்முறைக்கும் இந்த சொல் பாவிக்கப்படுகின்றது.

யார் இதனை செய்கிறாரோ அவருக்கு மஸாயா (masaha – means: to rub, to wipe, or to annoint) என்று அழைப்போம்.


கிரீக் மொழியில் Christos (கிறிஸ்தொஸ்) என்று பாவிக்கப்படும். டொஸ் என்பதை எடுத்துவிட்டு Christ என்று பாவித்து வருகின்றார்கள்.

இங்கு Christ என்பதற்கு anointed  என்று சொல்லலாம்.

இதுதான் ஈசா (அலை) அவர்களுக்கு கிறிஸ்தவர்கள் பெயர்வைத்த விதமாகும்.

ஆனால் ஜிஸஸ் என்கின்ற ஈஸா எனதும் அவரது பெயரல்ல, அவரது பெயர் எஹுஸுவா என்பதாகும்.

                                                                                                                                                           அவர் பிறக்கும்போதும் அவரது தாய் ஜீஸஸ் என்று பெயர் வைக்கவில்லை.

ஹீப்ரு மொழியில் ஜே என்பது பொதுவாக பாவிக்கப்படாத ஒன்றாகும். ஆனால் கிறிஸ்தவர்கள் அதிகமான இடங்களில் இதனை சேர்த்து பாவித்துவருகின்றார்கள். உண்மையில் இது ஈஸஸ், ஈஸா என்று அடிப்படையிலேயே வர வேண்டும்.

                                                                                                                                                     கிறிஸ்தவர்கள் ஜே விடயத்தில் பல இடங்களை மாற்றங்களை செய்து அடிப்படையையே மாற்றியுள்ளனர்.

உதாரணமாக, யெஹுஸுவா – ஜெஹூஸா, யூசுப் –ஜூஸப், யோஹனா, ஜோன், யாகூப் – ஜாகூப், யகுவா –ஜகுவா என்று பல பெயர்களை குறிப்பிட்டுக் காட்டலாம்.

                                                                                                                                                           தொடரும்.........

                                                                                                                                                                     




எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.                                                            

2 comments:

Anonymous said...

Dear Brother Issadeen Rilwan,

thanks a lot for your enough determinations, please try to give Tamil voice to Bro. Ahmed deedat's speeches.

so, everyone can Liston purely.

Our Dua 'a for you always.

Thanks
Haroon ahmed

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுலாஹ், பைபிள் முஹம்மத் ஸல் அவர்களை கடைசித்தூதுவராக பிரகடனப்படுத்துவது, அனைத்து மக்களும் முஹம்மத் ஸல் அவர்கள் கொண்டுவந்த அல் குர்ஆனை தங்கள் வழிகாட்டி நூலாக எடுத்துச் செயற்படுவதற்காகவேயாகும். இந்த உண்மையை பைபிளை பைபிளைப் பின்பற்றூம் ஒவ்வொருவரும் ஏற்று நடக்க வேண்டும். திறந்தமனத்துடன் பேசும் உங்கள் நண்பன்.