முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி புனித பைபிள் --02


எமது முதல் தொடரில் "ஜே" தொடர்பான எழுத்து மாறாட்டங்கள், பெயர்களை தங்கள் விருப்பம் போல் மாற்றுவது தொடர்பான செய்திகள் வெளீயிடப்பட்டிருந்தன,                                                                                                                                     அதன் அடுத்த தொடரை இங்கு வாசிக்கலாம்.                                                                                                                                                                                                                                                     
                                                   யேசு அந்நாளில் எழுப்பப்படும் போது இவ்வுலகில் அவரின் பெயரைக்கொண்டு தங்களது காரியங்களைச் செய்தவர்களைப்பார்த்து அவர் கூறுவார், என்னை விட்டு அகன்று போங்கள், என்னை விட்டு ஒதுங்கிக்கொள்ளுங்கள்....
இந்த நடத்தையை, காட்சியை பைபிள் படம்பிடித்துக் காட்டுகின்றது
                                                                                இறுதி நாளன்று பலர் என்னிடம்நீரே எங்கள் கர்த்தர், உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம், அற்புதங்கள் பல செய்தோம் என்று கூறுவார்கள். அவர்களிடம் நான்என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாதுஎன்று வெளிப்படையாகவே சொல்வேன்.      (மத்தேயு 7 : 22-23)

இந்த வார்த்தைகள் எந்த ஒரு முஸ்லிமுக்குக்கோ, இந்துவுக்கோ அல்லது ஏனைய மதத்தவர்களுக்கு பொருந்தாது, ஆனால் கிறிஸ்தவர்களை மட்டுமே குறித்துச் சொல்லுவதாக அமையும்,
இன்று பகிரங்க மேடைகள் போட்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் என்று அவரது பெயரைக்கொண்டு அற்புதங்களை நிகழ்த்துவர்களை, மக்களை அதிகமாக,  ஏமாற்றுபவர்களை பரவலாக காணமுடிகிறது.

இப்படிப்பட்டவர்களுக்குத் தான் இந்த இயேசு கிறிஸ்துவின் முன்னெச்சரிக்கைகளாகும் என்பதை கிறிஸ்தவ நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த நாளில் ஈஸா (அலை) அவர்களைப் பார்த்ததும் ஜீசஸ், ஜீசஸ் என்று கிறிஸ்தவர்களெல்லாம் கூடி அழைத்தால் அவர் யார் ஜீஸ்ஸ் என்று திரும்பிப் பார்க்கும் நிலை வரும்.
அந்தளவுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
அதுபோல் தான் பீட்டர் என்பதும், அவரது வாழ்க்கையில் ஒருநாளும் அவரை அல்லது அவராகவே தன்னை பீட்டர் என்று அறிமுகப்படுத்தியிருக்கமாட்டார். அவரது உண்மையான பெயர் சைமன் கீபஸ்
இவ்வாறு பெயர்களை மாற்றியதனால் உண்மையான பெயர்கள் இல்லாது போய்விட்டன.
மசாயா ஜீசஸாக மாறிவிட்ட்து, அந்த பெயரை அல்குர் ஆன் ஈஸா அலை என்றே அறிமுகப்படுத்துகின்றது.
முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகையை முன்னைய வேதங்களில் முன்னறிவிப்பு செய்த்தாக அல்லாஹ் அல் குர்ஆனில் எமக்கு ஞாபகமூட்டுகின்றான்.

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُم مُّصَدِّقاً لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّراً بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُّبِينٌ [الصف : 6
"இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது "இது தெளிவான சூனியம் எனக் கூறினர்"                                               (அல்குர் ஆன் 61 – 6)
முஹம்மத்  மற்றும் அஹமத் ஆகிய இரண்டும் ஒரே பெயர்கலாகும்.
ஆனால் இன்றைய கிறிஸ்துவ பைபிள் மொழிபெயர்ப்புக்களில் முஹம்மதோ அஹம்மதோ காணக்கிடைப்பதில்லை.
ஆனால் அதனை பைபிள் வேரு ஒரு இடத்தில் உறுதிப்படுத்துகின்றது:
                                                                                                                 “நான் உண்மையைச் சொல்லிக்கொண்டிருகிறேன். நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார். அவர் வரும்போது இவற்றைப்பற்றி உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம் பற்றியும், நியாயத்தீர்ப்பு பற்றியும் விலக்குவார்.”   (யோவான் 16 : 7 - 8)

 இயேசு கிறிஸ்து என்கின்ற ஈசா (அலை) அவர்கள் இங்கு சொல்லுகிற அந்த தீர்க்கதரசி, அல்லது தேற்றரவாளன் முஹம்மது (ஸல்) அவர்கள் மாத்திரமே.
ஆனால் அந்த தீர்க்கதரசி பரிசுத்த ஆவி தான் என்று கிறிஸ்துவ அறிஞர்கள் சொல்லுகிறரகள், ஆனால் பைபிளின் மூலப் பிரதியைப் பார்த்தால்  பரிசுத்த ஆவி என்பதற்கு இந்த சொல் பாவிக்கப்படுவதாக எங்கும் காணக்கிடைப்பதில்லை.

ஆனால் கிறிஸ்தவர்களின் வாதப்படி அது பரிசுத்த ஆவிதான் என்றால், இங்கு பாருங்கள்; மேலே சொன்ன வசனத்தின் படி: "ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்."  நான் போனால்தான் அவர் வருவார், நான் போகாவிட்டால் அவர் வர மாட்டார். என்று சொல்லும் போது எப்படி பரிசுத்த ஆவி அந்த வாக்குக்கு சம்பந்தப்படுத்த முடியும்? பைபிளில் இடம்பெருகின்ற பரிசுத்த ஆவியுடைய வரலாற்றை ஆராய்கின்ற போது பரிசுத்த ஆவி இயேசுவுடைய பிறப்புக்கு  முன்னர் இருந்திருக்கிறது. இயேசுவுடனும் இருந்திருக்கிறது, அப்படி இருக்கும் போது எப்படி இந்த வசனத்திற்கு பரிசுத்த ஆவிதான் வரப்போதும் தேற்றரவாளன் என்று சொல்ல முடியும்?                                                                                    

****இது ஒரு changesdo.com யின் படைப்பு****                                                                          

தொடரும்.........

முதலாம் பகுதியை வாசிக்க..                                                                                       


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

Anonymous said...

ஸலாம் நண்பர் ரிழ்வான் அவர்களுக்கு, தரமான தொகுப்பு, தொடர வாழ்த்துக்கள், கிறிஸ்தவ நண்வர்கள் இது குறித்து விவாதிக்க அழைத்தால் உங்கள் பதில் என்ன?? இணையத்தளங்களில் அதிகமாக துள்ளுகின்றார்கள், அவர்களுல்க்கு நீங்கள் சரியான பதில் வழங்கவேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோல்.

Issadeen Rilwan said...

அன்பின் "மாற்றங்கள் தேவை" குடும்பத்தின் சகோதரருக்கு என்றும் எமது ந்ன்றிகள், தொடர்ந்தும் உங்கள் கருத்துக்கள் தேவைப்படுகின்றன. -----------------------------------------------எந்த கிறிஸ்தவர்களும் விவாதிக்க வரமாட்டார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. காரணம் இந்த செய்திகளை அவர்கள் மனதலவில் நம்புகிறார்கள், ஆனால் இல்லாதுபோல் நடிக்கின்றார்கள். அவ்வளவுதான். ------------------------------------------------நாம் உண்மையைச் சொல்லிக்கொண்டே இருப்போம். நன்றி