14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்ட வெள்ளம்

பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்      

உலக படத்தில் அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.                                                                                                                                                                          

அது கடந்த சில நாட்களாக வெள்ளத்தில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.                                                                                                                                                                        

                                                                                 BBC யின் இன்றைய செய்திக்கமைய கிட்டத்தட்ட 14 மில்லியன் பாகிஸ்தானிய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
                                                                                                                                                                      இப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக உதவிகளை செய்துகொடுப்பதற்கு பாரிய பண மற்றும் ஆற்பல உதவிகள் தேவைப்படுவதாக அங்கிருந்து வெளியாகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையை கருத்தில் கொண்டு எம்மால் முடியுமான உதவிகளை நாம் அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.                                                                                                                                                                  

எமது சகோதர பாகிஸ்தானிய மக்களில் நிலையை மறுசீரமைக்க முன்வாருங்கள்.          
        
மேலும் படிக்க...  
வெள்ளம் தொடர்பான இன்றைய செய்திகள்.......
                                                                                                                                                                                                           
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

3 comments:

Anonymous said...

பாகிஸ்தான் வெள்ளம்: 60 லட்சம் பேர் பாதிப்பு

First Published : 10 Aug 2010 12:09:00 AM IST

நியூயார்க், ஆக.9: பாகிஸ்தானில் கடந்த பல நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் வெள்ளக் காடாய் காட்சியளிக்கிறது. இதுவரை வெள்ளத்துக்கு 60 லட்சத்துக்கு மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாட்டு சபை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் வெள்ளத்தால் சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ள நிலையில், வெள்ளத்தால் சுமார் 60 லட்சம் பேர் பாதித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்துள்ளனர். மோசமான காலநிலை நிலவுவதால் ஹெலிகாப்டர் பறக்க முடியவில்லை. இதனால் நிவாரணப் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களுக்கு நிவாரணப் பொருளே கிடைக்கவில்லை. அவர்களது நிலை குறித்து சரிவரத் தெரியவில்லை என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
கைபர், புஹ்துங்வா, பஞ்சாப், தெற்கு சிந்து ஆகிய மாகாணங்கள் தான் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இங்கு தரை வழியாககூட நிவாரணப் பணியை மேற்கொள்ளுதல் சிரமமாக உள்ளதாக பாகிஸ்தானுக்கான ஐ.நா. நிவாரணப் பணி ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் மோங்வன்ஜா தெரிவித்துள்ளார்.
கைபர் மற்றும் புஹ்துங்வா மாகாண பகுதியில் மட்டும் சுமார் 6 லட்சம் பேருக்கு நிவாரணப் பொருள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் உணவு உள்பட அத்தியாவசியப் பொருள் கிடைக்காமல் சிரமப்படுவதாக ஐ.நா.வின் பேரிடர் மேலாண்மை நிபுணர் டென்னிஸ் புரூன் தெரிவித்தார்.
பாகிஸ்தான் வரலாற்றில் இதுபோன்ற வெள்ளப் பெருக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பும் கடுமையாக உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க அந்நாட்டுக்கு கோடிக்கணக்கான நிதி தேவைப்படுகிறது என்று ஐ.நா. கூறியுள்ளது.
உலக சமுதாயத்திடம் உதவி: இதனிடையே, வெள்ள நிவாரணப் பணிக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி கோரியுள்ளார்.
வெள்ள நிவாரணப் பணியை பாகிஸ்தான் அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என்று பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளதை மறுத்துள்ள கிலானி, பாகிஸ்தான் அரசு இயன்றவரை நிவாரணப் பணியை துரிதமாக மேற்கொண்டுள்ளது என்றார். எனினும், வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=World

Anonymous said...

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=World

பாகிஸ்தான் வெள்ளம்: 60 லட்சம் பேர் பாதிப்பு

First Published : 10 Aug 2010 12:09:00 AM IST

நியூயார்க், ஆக.9: பாகிஸ்தானில் கடந்த பல நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் வெள்ளக் காடாய் காட்சியளிக்கிறது. இதுவரை வெள்ளத்துக்கு 60 லட்சத்துக்கு மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாட்டு சபை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் வெள்ளத்தால் சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ள நிலையில், வெள்ளத்தால் சுமார் 60 லட்சம் பேர் பாதித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்துள்ளனர். மோசமான காலநிலை நிலவுவதால் ஹெலிகாப்டர் பறக்க முடியவில்லை. இதனால் நிவாரணப் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களுக்கு நிவாரணப் பொருளே கிடைக்கவில்லை. அவர்களது நிலை குறித்து சரிவரத் தெரியவில்லை என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
கைபர், புஹ்துங்வா, பஞ்சாப், தெற்கு சிந்து ஆகிய மாகாணங்கள் தான் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இங்கு தரை வழியாககூட நிவாரணப் பணியை மேற்கொள்ளுதல் சிரமமாக உள்ளதாக பாகிஸ்தானுக்கான ஐ.நா. நிவாரணப் பணி ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் மோங்வன்ஜா தெரிவித்துள்ளார்

Anonymous said...

வெள்ளக்காடாக வடமேற்கு பாகிஸ்தான்

போக்கிடமின்றி மக்கள் தவிக்கின்றனர்

பாகிஸ்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைப் பலிகொண்டும் 15 லட்சம் பேரைப் பாதித்தும் உள்ள கடுமையான வெள்ளப் பெருக்கு தொடர்பில் அந்நாட்டுக்கு உதவ சர்வதேச சமூகம் உறுதியளித்துள்ளது.
பாகிஸ்தானில் தற்சமயம் மழை நின்றுள்ளது என்றாலும் அந்நாட்டின் வடமேற்குப் பிராந்தியத்தில் பெரும் பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கத்தான் செய்கின்றன.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/08/100802_pakistanfloods.shtml