புனித ரமழானில் எனது செயற்பாடுகள் (My target in the month of Ramadhan)







 மாற்றங்கள் தேவை - சுவை 35


வெற்றி என்பது எமது திட்டமிடலையும் நாம் எதிர்பார்த்து செயற்படும் எமது எட்டுக்களையும் கவனத்தில் கொண்டு அமையும்.  
வெற்றியின் படிக்கற்களில் திட்டமிடல் ஒரு முக்கிய பகுதியாக அமைகிறது.

வெற்றியின் படிக்கற்களில் வீர் நடைபோட திட்டமிடலும் தீர்க்கமான விட்டமீன்களாகவே அமைகிறது.

விடுமுறையை கழிக்கச் செல்லும் ஒருவர் பல தடவைகள் யோசிப்பார். சில முன் ஏற்பாடுகளை மேற்கொள்வார், எல்லா வகையான பிரச்சினைகள் சவால்களையும் தைரியமாக முகங்கொடுக்கும் தேர்ச்சியுடன் பயணத்தை ஆரம்பிப்பார்.

உதாரணமாக இலங்கையிலிருந்து அல்லது இந்தியாவிலிருந்து உம்ரா அல்லது ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் ஒருவர் தனது பயணம் சிறப்பாக அமையும் வகையில் பல முன்னேற்பாடுகளை பலமாக பண்ணுவார்.

Ø  எத்தனை நாற்கள் கொண்ட பயணம்
Ø  எங்கு தங்குவது, எந்த விடுதியில் குறைந்த கட்டணத்தில் தங்குமிடத்தை பெறமுடியும்
Ø  எங்கு தரமான உணவை பெற முடியும்
Ø  எந்த விமானத்தில் டிகட் புக்பண்ணுவது
Ø  எங்கு நேரத்தில் சென்றால் ஜன நெரிசல் குறைவாக இருக்கும்,
Ø  வீட்டில் விட்டுச் செல்லும் மனைவி, பிள்ளைகள் யார் பாதுகாப்பில் இருப்பார்கள்
என பல விடயங்களைக் கவனத்தில் கொள்வது தவிர்க்க முடியாததாகும்.

அதற்காக நண்பர்களைத் தொடர்புகொள்வது, வழிகாட்டி கையேடுகளை தேடிப்படிப்பது, வழிகாட்டிகளில் உதவியை பெறுவது, என்று தொடரும்.

இது அந்த குறித்த பயணத்தை சிறந்த முறையில் நிறைவேற்றி முடிக்க நாம் மேற்கொள்ளும் முக்கிய முன்னேற்பாடுகளாகும்.

அது போல் ஏனைய சில முக்கிய நடவடிக்கைகளுக்கும் சில முன்னேற்பாடுகளும் திட்டமிடல்களும் இருக்கின்றன.
அது கால நேரத்திற்கமைய முக்கியத்துவம் பெற்று விளங்கும்.
இப்போது நாம் ரமலானுடை காலத்தை அடைந்திருக்கிறோம், அதனால் அந்த முழு மாதத்தையும் சிறப்பாக நிறைவேற்ற சில முக்கிய திட்டங்களை வகுக்க ஒவ்வொரு முஸ்லிம்களும் கடமைப்பட்டுள்ளனர்.


நாம் சந்திக்க இருக்கும் ரமழான் எதை சொல்ல வருகிறது:
நாம் திட்டமிட்டு பயணிக்கும் சுற்றுலா, அல்லது நண்பர்களின் அழைப்பை ஏற்று திட்டமிடலுடன் செல்லும்  விருந்து போன்ற திட்டமிடவேண்டிய ஒரு மாதமா?
அல்லது அதைவிடவும் உடல், உள ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும் சிறப்பு மாதமாக பார்க்கப்பட வேண்டிய மாதமா? ஏனைய காரியங்களைவிடவும் ஏனைய மாதங்களை விடவும் சிறந்த பெறுபேருகளை ஈட்டித்தரக்கூடியதா? என்ற மாதிரியான கேள்விகள் எமக்குள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

எவருடைய வீட்டுக்கு இப்தார் நிகழ்ச்சிக்கு போவது அல்லது கிடைக்கும் இப்தார் பாடியில் எப்படியான உணவு வகைகள் இருக்கும் என்பதில் மாத்திரம் சிலறது ரமலான் மாத திட்டங்களும் மன பாவணைகளும் இருக்கும்.

ஆனால் ரமலானுடைய முக்கிய நோக்கங்களையும் தூரநோக்கு எதிர்பார்ப்புக்களையும் சிந்திக்கின்ற போது;
1.      எமது இறையச்சத்தை அதிகரித்தல்
2.      
அதிக நன்கொடை கொடுக்கும் மக்களாக எம்மை மாற்றிக்கொள்ளுதல்
3.      இந்த ஒரு மாதத்தை வருடத்தில் உள்ள ஏனைய 11 மாதங்களுக்கான பயிற்சி நேரமாக அமைத்தல்
4.      
அல் குர்ஆனுடனான தொடர்பை அதிகரித்தல்
5.      ஏழைகளின் வயிற்றுப் பசியை அறிந்து கொள்ளுதல்
6.      எமது அன்றாட நடத்தைகளை இஸ்லாமிய நடைமுறைக்குள் கட்டுப்படுத்தல்

என்று பல லெளஹீக, ஆத்மீக காரணங்களை பட்டியலிடலாம்.

ரமலானுடைய மாதம் எம்மை விட்டு பிரியாவிடை பெரும் போது நான் மேலே உள்ள நோக்கங்களை திறம்பட நிறைவேற்றிக்கொண்டேன் என்று திருப்திப்பட்டுக்கொள்ள எந்த வகையான முன்னேற்பாடுகள், திட்டமிடல்களை கையிலெடுக்க வேண்டும்?

உணமையில் ரமலானுடைய மாதம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கிடைக்கும் இணையற்ற சந்தர்ப்பமாகும்.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துவதற்கும் எமது நிலையை நல்லமுறையில் வளர்த்துக்கொள்வதகும்  முறையாக சில திட்டமிடல்களை வரையவேண்டும்.

அதற்காக ஒரு மாத பகுதிக்குள் செய்துமுடிக்கமுடியுமான குறித்த சில விடயங்களை கவனத்தில் கொண்டு அதனை உள்ளடக்கியதாக ஒரு பட்டியலை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
தயார்படுத்திக்கொள்ளும் இந்த பட்டியலில் உள்ளவைகளை முழுமையாக, கவனமாக செய்துமுடிப்பேன் என்ற தைரியத்துடன் நாம் எமது நேரங்களை கடத்த வேண்டும்.


வாருங்கள்! ரமலான் அது எமது வாழ்க்கைக்கான திட்டமிடலின் மாதமாகும் என்பதை செய்ற்படுத்திக்காட்டுவோம்

இந்த தன்நம்பிக்கையுடனான திட்டமிடல் முழுமைபெற அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்புரிவான்.இன்க்ஷா அல்லாஹ்.

எனது பட்டியலிருந்து:
1.      
கடந்து பல ரமலான்களில் எல்லோரையும் போல் அல் குர்ஆனை ஓதி பல தடவைகள் பூர்த்தி செய்வது என்ற வலமைக்கு மாற்றமாக அல் குர்ஆனை ஓதுவதுடன் அதன் கருத்தையும் படித்து விளங்குதல்.


அல் குர் ஆனின் மூல மொழி அரபாக இருக்கின்ற காரணத்தால் அது எமது இரண்டாம் மொழியாகத்தான் பார்க்கப்படுகின்றது. அதனால் அல் குர் ஆன் பேசும் செய்திகளை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் அதன் மொழிபெயர்ப்பையும் முடியுமானளவு படித்து தெரிந்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்.

2.      அதிகமாக திக்ருகளை செய்தல், அல்லாஹ்விடத்தில் பாவமன்னிபுத் தேடுதல். நன்மைகளை அதிகம் சம்பாதித்துக்கொள்ளுதல்.

3.      எனது காதுகளை, வாயை, கண்களை தீமைகளை, தேவையற்றவைகளை விட்டும் முழுமையாக தவிர்த்து நடக்க பலக்குதல், 

அங்கீகரிக்கப்பட்டவைகளை மட்டும்  முழுமையாக நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்களை உண்டுபண்ணுதல், பிறருக்கும் அதனை ஏவுதல்
4.      புகை பிடித்தல், சினிமா, இசை என்று கெட்டவற்றுக்கு அடிமையாகி இருக்கும் எனது சூழல் நண்பர்களுக்கு இந்த மாதத்தை ஒரு பயிற்சியின் மாதமாக பயன்படுத்த உபதேசித்தல்
5.      
மது சூழலில் வாழும் ஏழைகளின் துயர் தொடைக்க முய்றசித்தல், ஸகாத், ஸதகா, பித்ரா போன்ற ஏழைவரியை வசூலிக்க உதவுதல், அது தொடர்பான விழிப்புணர்வுகளை குர்ஆன் ஹதீஸ் நிழலில் மக்களுக்கு விளக்கப்படுத்தல்.

இந்த பட்டியல் எனது நேரத்தையும், தேவையையும் கவனத்தில் கொண்டு தயார்செய்யப்பட்டதாகும்,

இது இந்த கட்டுரையை வாசித்து பயன்பட நினைக்கும், விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும், இருக்க வேண்டும் என்ற முழு நோக்கத்துடன் பிரசுரிக்கப்படுகின்றது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



இது எனது, எமது தனிப்பட்ட, சமூக மாற்றத்தின் தேவைக்காகவேயாகும்.




இது ஒரு changesdo.blogspot.comயின் படைப்பாகும்.






எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

Anonymous said...

Very good Idea, alhamdulillah,
I like to advise all of my brothers to follow this.

thanks
Munner Ahmed

Anonymous said...

sure