அல்குர் ஆன் பேசுகிறது.........




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































மாற்றங்கள் தேவை’  என்ற தொனியில் தொடர்ந்த எமது பக்கம் பல் மதத்தவர்களாலும் வாசிக்கப்படும் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ். அதனால் முடியுமானவரை இங்கு பதியப்படும் ஆக்கங்களை அனைத்து மதத்தவர்களுக்கும் கொள்கைசார்ந்தவர்களுக்கும் தேவையான விதத்தில் எழுத வேண்டும், விளக்கவேண்டும் என்று முயற்சித்துவருகிறோம். இந்த நிலையில்தான் அல் குர்ஆன் தொடர்பான இந்த ஆக்கத்தையும் அடிப்படை அறிமுகத்துடன் கொண்டுசெல்லவேண்டுமென்ற பேராசையுடன் தொடர்கிறோம்.

       -------------------------------------------------
மக்களை இவ்வேத நூலைவிட்டும் தூரமாக்க வேண்டும் என்ற முழு நோக்குடன் எழுதப்பட்டஅறிஞர் யூஸுப் அலி அவர்களின் அல் குர்ஆன் மொழிபெயர்ப்பிற்கு ஒரு குருக்கு விசாரணை’ (An Investigation of the Holy Quran Translation and commentary by A. Yusuf Ali)  என்ற தலைப்பில் C. Le Heux – New Zealand  என்ற இந்த பச்ச கிறிஸ்துவ அறிஞர் சொல்லுவதை கேளுங்கள்:

அல்குர் ஆன் இஸ்லாத்தின் அடிப்படையாகும், அது உலகில் பல்கோடி மக்களால் ஓதப்படும் ஒரே ஒரு நூலாகவும் பல நாடுகளில் வேதவழிகாட்டியாகவும் பல பாடசாலைகளில் பாடநூலாகவும்  இருந்து வருகிறது

நடைமுறையில் உள்ள இந்த பகிரங்க உண்மையை தம்மால் மறைக்கமுடியாது ஏற்றுக்கொள்ளும் அந்த அறிஞருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் நன்றையைத்தெரிவித்துக்கொண்டு எனது எழுத்தைத் தொடர்கிறேன்.

முஸ்லிம்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட வேதநூலான அல் குர்ஆன் அது முழுமையாக அல்லாஹ்வின் வார்த்தைகளால் நிறப்பப்பட்டதாகும்.
இப்பூமியில் பாமரன் தொட்டு படித்தவன் வரை, அடிமை தொட்டு எஜமான் வரை ஓதப்படும், படிக்கப்படும் ஒரே ஒரு வேத நூல் அல் குர்ஆனேயாகும்.

பல்கோடி மக்களால் பேசப்படும், தாய்மொழியாகக்கொள்ளாத ஏனைய மக்களாலும் படிக்கப்படும் ஒரு வாழும் மொழியாக அல் குர்ஆனின் மொழி அரபு திகழ்வது திண்ணமே.

அல் குர்ஆன் என்ற பெயர் கூட அவனால் சூட்டப்பட்டதேயாகும். அல்லாஹ் தனது வேதநூலில் அல் குர்ஆன் என்ற வார்த்தையை நேரடியாக 43 இடங்களில் பாவிக்கின்றான். அத்துடன் வழிகாட்டி, வேதம் என்று பல வேறு சொற்பிரயோகங்களைக் கொண்டு பல நூறு இடங்களில் பாவிக்கின்றான்.

அப்படிப் பாவிப்பது இருக்கட்டும், அதன் அர்த்தம் என்ன என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.
அல் குர்ஆன் என்பது ‘கரஅ’ என்ற அறபு வினைச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். கரஅஎன்பதை தமிழில் ‘ஓதினான்’ ‘ஒன்றுசேர்த்தான்’ என்று மொழிபெயர்க்கலாம்.

அதிலிருந்து
1.       ஓதப்படக்கூடியது, வாசிக்கப்படக்கூடியது என்று இலக்கணப்படியான ஒரு விளக்கத்தை கொடுக்கலாம்.
2.       பல எழுத்துக்களை ஒன்று சேர்த்தால்தான் வாசிக்கமுடியும் என்ற அடிப்படைக்கிணங்க பல எழுத்துக்களையும் சொற்களையும் ஒன்று சேர்த்து ஓதப்படும். வாசிக்கப்படும் ஒன்று என்ற இலக்கண, நடைமுறை கருத்தையும் தவறாமல் கொடுக்கலாம்.

இது மொழிரீதியாகவும், இஸ்லாமிய சட்ட (க்ஷரீஆ) அடிப்படையிலும் நாம் கொடுக்கும் ஒரு சிறிய வியாக்கியானமாகும்..
அத்துடன் இதனை வரைவிலக்கணப்படுத்துவதாக இருந்தால் பின்வருமாறு கூறலாம்;

‘அல்லாஹ்விடமிருந்து தூதுச்செய்தியை சுமந்துசெல்லும் ஜிப்ரீல் (அலை) அவர்களால் அவனது கடைசித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட உலக மக்கள் பின்பற்றுவதற்கும் ஓதுவதன் மூலம் நன்மையைச் சம்பாதிப்பதற்குமான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டமைந்த தொகுப்பே அல் குர்ஆனாகும்.

இன்று எழுதப்படமுடியுமான உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் அல் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த எல்லா மொழிபெய்ர்ப்புக்களிலும் அல்லாஹ்வால் தனது வேதத்திற்கு சூட்டப்பட்ட அல் குர்ஆன்’ என்ற சொல்லைக்கொண்டே அழைப்படுவது அதன் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


ஆனால் இந்த நிலையை ஏனைய மதத்தவர்களால் பின்பற்றப்படும் வேத நூல்களில், வேத நூல்களுக்கு காணமுடியாது.

உதாரணமாக புனித பைபிளை அரபியில் மொழிபெயர்க்கும் அரபு கிறிஸ்துவ அறிஞர்கள் ‘கிதாபுள் முகத்தஸ்’ என்றும் ஏனைய மொழிகளில் மொழிபெயர்க்கும் போது அந்தந்த மொழிப்பாவணைக்கேற்ப மொழிமாற்றங்களை செய்வதையும் இன்று நடைமுறையில் காணலாம்.

இந்த புனித வேதநூலாகிய அல் குர்ஆனை நாமே இறக்கினோம், நாமே பெயர் சூட்டினோம் என்பதை அல்லாஹ் பகிரங்கப்படுத்துகிறான்;

அளவற்ற அருளாளன், அல் குர்ஆனை அவனே கற்றுக் கொடுத்தான்."                                                                  (அல் குர்ஆன் 55 : 1  , 2)

"ஹாமீம்(இதுமிகைத்தவனும் ஞானமிக்ْகேனுமாகிய அல்லாஹ்விடமிருந்துஅருளப்பட்டது."                          (அல் குர்ஆன் 45 : 1-2)

தயவுசெய்து இந்த தன்மையைக்கொண்டுபோய் )பெயர் மற்றும் யாரால் இறக்கப்பட்டது போன்ற தகவல்கள்) வேற எந்த வேத நூலிலும் பார்க்காதீர்கள்காரணம்கண்டுகொள்ளமாட்டீர்கள்.

உதாரணமாகபுனித பைபிளின் முழு எழுத்துக்களையும் பக்கங்களையும்தேடித் தேடி பல வருடங்களைக் கடத்தினாலும் ’பைபிள்’ என்ற சொல்லைபார்க்கமுடியாது.

இதே நிலைதான் இந்து வேத நூலுக்கும்,                                                                      இதே நிலைதான் பெளத்த வேதத்திற்கும்,                                         இதே நிலைதான் உலகில் மூலைமுடுக்குகளில் ஒரு சில குழுக்களால் பின்பற்றப்படும் ஏனைய கொள்கை, மத நூல்கள்களுக்கும்.

அல் குர்ஆன் 114 அத்தியாயங்க (ஸூராக்க)ளை கொண்டுள்ளது. அது ஸூறத்துல் ஃபாதிஹா (தோற்றுவாய்) என்ற அத்தியாயத்தை தோற்றுவாயாக்கொண்டு ‘அந்நாஸ்’ (மனிதர்கள்) என்ற கடைசி அத்தியாயத்துடன் முடிவடைகிறது.

இங்கு உள்ளடக்கப்படும் மொத்த அத்தியாயங்களும் மக்கி மதனி என்று இரண்டாக பிரித்துப்பார்க்கப்படுகிறது.

மக்கி என்பது: நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் வாழும்போது, இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் போது கிடைக்கப்பெற்றவைகளாகும் மக்கி அத்தியாயங்கள் அதிகமாக சிரிய சிரிய அத்தியாயங்களாகவே அமைந்திருக்கும்.
அதேபோல் 

மதனி அத்தியாயங்கள் அனைத்தும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழும்போது, தூதுத்துவத்தை போதித்த போது இறக்கப்பட்டவைகளாகும்.

இந்த 114 அத்தியாயங்களில் 113 அத்தியாயங்கள் அதன் துவக்கத்தில் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கின்றேன்) என்ற வசனத்தைக்கொண்டே ஆரம்பிக்கிப்படுவது அதன் இன்னுமொரு சிறப்பம்சமாகும்.

100க்கு 100 வீதம் கடவுள் வார்த்தைகளை கொண்ட அல் குர்ஆன் மனித சமூகத்திற்கு முழுமையான வழிகாட்டலாகவே அமைந்திருக்கிறது என்பதில் ஜய்யமில்லை.

“அனைத்தையும் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், நேர்வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் நாம் இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தோம்”                                                ( அல் குர்ஆன் 16 : 89)

“அகிலத்தாருக்கு எச்சரிக்கையாக இருப்பதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக்கூடிய (இவ்வேதத்)தை தன் அடியார் மீது இறக்கிவைத்தவன் பாக்கியமுடையவனாவான்”  அல் குர்ஆன் 25 : 1)

இந்த புனித வேத நூலுக்கு கடந்த 14 நூற்றாண்டுகளாக பல தலைசிறந்த அறிஞர்களாலும் விளக்கங்கள், தெளிவுரைகள் எழுத்தபட்டுவருகின்றன, ஆனால் அவைகள் முடிவுற்றதுமில்லை, முடிவுறுவதுமில்லை.             அதற்கான காராணத்தை அல்லாஹ்வே சொல்லுகிறான் கேளுங்கள்:

"பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாக இருந்து கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதி முடியாது.அல்லாஹ் மிகைத்தவன்ஞானமிக்கவன்.
அல் குர்ஆன் 31 : 27)

எனது இறைவனின் கட்டளைகளுக்காக கடல்மையாக ஆனாலும் எனது இறைவனின்கட்டளைகள் (எழுதி) முடிவதற்கு முன் கடல் முடிந்து விடும். உதவிக்கு அது போன்றதை நாம் கொண்டு வந்தாலும் சரியே என்று கூறுவீராக!"                                                                            ( அல் குர்ஆன் 18 : 109)

பலர் ஆச்சரியப்படும் ஒரு செய்தி இருக்கிறது; அதாவது எல்லாக் காலங்களிலும் முஸ்லிம், முஸ்லிமல்லாத பல அறிஞர்களால் உட்கார்ந்திருந்து, நேரமொதிக்க இந்த குர்ஆன் ஆய்வுசெய்யப்படுவதற்கான காரணம் என்ன என்பது தான் அந்த ஆச்சரிமான விடைதேடும் கேள்வியாகும்.

இதற்கான விடையை நடைமுறையுடன் ஒப்பிட்டு சுருக்கமாக சொன்னால் தெரியவருவது: அல் குர்ஆன் நடைமுறையுடன் பேசும் ஒரே ஒரு வேதநூல்,  அறிவியல், விஞ்ஞானம், கணிதவியல், குடும்பவியல், வணிகவியல், சுகாதாரவியல், வாரிசுரிமைச் சட்ட நெறிகள், என்று எல்லாவற்றையும் பேசும் ஒரே ஒரு நூலாக இருப்பதுவேயாகும்.

நாம் வாழும் பிரபஞசம் மற்றும் நம்மைச் சூழவுள்ள அனைத்தினதும் உருவாக்கம் தொடர்பாக ஆய்வுக்குற்படுத்தும் எல்லா விஞ்ஞானிகளும் தங்களது ஆய்வுகளை உறுதிப்படுத்தும் ஆதார நூலாக அல் குர்ஆனில் தாங்கி நிற்பது இதன் இன்னுமொரு சிறப்பம்சமாகும்.


தொடரும்..........

 இது ஒரு changesdo.blogspot.comயின் படைப்பாகும்





எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

3 comments:

ராஜவம்சம் said...

பதிவு ஏன் ரொம்பகீழே உள்ளது pageயை சரி செய்யவும்.

இலக்கைநோக்கி பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Anonymous said...

Dear Brother,

please check your posting.
and edit it again as Bro. Rajawamsam said.

thanks

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், எமது பகுதியில் இணைந்து ஆலோசனைகளை வழங்கிய இரு சகோதர்ர்களுக்கு எமது ந்ன்றிகள் பல் கொதிகள். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளையும் வருகையையும் எதிர்பார்த்த நிலையில்........ பக்க வடிவமைப்பில் ஒரு தவறு ஏற்பட்டிருக்கிறது. அதை சரிசெய்வோம். இன்ஷா அல்லாஹ்.