அல்குர் ஆன் பேசுகிறது.........02

வாருங்கள அல் குர்ஆனை படிப்போம் -                                                                                                                                   
                                                                                                                       இது அல் குர்ஆனுடையமாதம் - தொடர் இரண்டு 

                                                                                                                                                                                                                 
அல் குர் ஆனை ஓதுவதில் முஸ்லிம்கள் அதிக நாட்டம் காட்டுவதன் நோக்கம் என்ன? என்று பலர் கேற்கலாம்.


இதற்காக விடையை எமது கடைசித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின்                                
கூற்றிலிருந்து எடுத்துச்சொல்லலாம்.
1.       அல் குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். ‘அலீஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்துஎன்று நான் சொல்லமாட்டேன். அலீஃப் என்பது ஒரு எழுத்தாகும், லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பதும் ஒரு எழுத்தாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி.

2.       நீங்கள் குர்ஆனை ஓதுங்கள், அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்.

3.       அல் குர்ஆனை ஓதியவருக்காக (நாளை மறுமையில்) சொல்லப்படும், ‘நீர் குர் ஆனை ஓதிக்கொண்டு சுவர்க்கத்தின் (படித்தரத்தில்) ஏறிக்கொண்டு செல்வீராக, உலகத்தில் நிறுத்தி நிறுத்தி ஓதியது போன்று (இங்கேயும்) நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக. நீர் ஓதிமுடிக்கும் கடைசி ஆயத்தே சுவர்க்கத்தின் உமது அந்தஸ்தாகும்என அவருக்குக் கூறப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.           ஆதாரம் : அபூதாவூத், திர்மிதி.                               

4.       அல் குர்ஆனையும் அதைக்கொண்டு உலகத்தில் அமல் செய்தவர்களையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். சூரத்துல் பகராவும் (இரண்டாம் அத்தியாயம்) சூரத்துல் ஆல இம்ரானும் (மூன்றாம் அத்தியாயம்) முன்வந்து குர்ஆனை ஓதியவருக்கு (சுவர்க்கத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக) வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்.  
                                                                                மேலும் சொன்னால்;
5.       அல் குர்ஆன் அது மனித குலத்தின் வழிகாட்டி
6.       எந்த வகையான பிரச்சினையாக இருந்தாலும் அதற்காக தீர்ப்பைப் பெறுவதற்கு முதல் மூல் ஆதாரமாக அல்குர் ஆன் அமைகிறது.
7.       உலக மற்றும் மறு உலக பயனையும் அடைவதகுரிய ஒரே ஒரு வேத நூல் அல் குர்ஆனாக இருப்பதேயாகும்.
                                                                       சரி, அறிஞர்கள் காட்டும் ஆதாரங்களை எப்படி அல் குர் ஆனிலிருந்து தேடிப்பெற்றுக்கொள்வது?


நாளுக்கு நாள் இலேசான வழிகள் பல கண்டுபிடிக்கப்படுகின்றன,
சாதாரணமாக, எமது கையிலிருக்கும் அல்குர் ஆன் பிரதியில் குறித்த வசனத்தைத் தேடுவது மிகவும் சுலபமானதாகும்.
                                                                                 ஒருவர் ஒரு குர்ஆன் வசனத்தை ஓதிவிட்டு, அந்த குறித்த வசனம் பத்தாம் அத்தியாயம் மூன்றாம் வசனம் என்றால், உடனே எமது பிரதியைப்புரட்டித் தேடினால், எல்லாப் பிரதிகளிலும் ஒவ்வொரு பக்கத்தின் மேல் பகுதியில் அத்தியாயத்தில் பெயர் இடப்பட்டுள்ளது. முதலில் பத்தாம் அத்தியாயம் எது என்ன பார்க்க வேண்டும், அதற்கு     குர் ஆனின் ஆரம்ப பகுதிக்குள் சென்றால் அங்கு அத்தியாயங்களின் அட்டவணை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது, அதில் பத்தாம் அத்தியாயத்தைத் தேடினால் அங்கு யூனுஸ்என பெயர் கிடைக்கும், உடனே அதன் பக்கத்தை பார்த்த வண்ணம் உள்ளே சென்றால் எமக்குத் தேவையான பத்தாம் அத்தியாயம் மூன்றாம் வசனம் ஒரு சில வினாடிகளில் கிடைத்துவிடும்.
                                                                          இணையத்தள வசதியுள்ளவர்கள் உடனே இணையத்தளத்த்ற்குள் சென்று அங்கு அத்தியாயத்தின் பெயர் மற்றும் வசனம் என்ன என்ற விபரத்தைக்கொடுத்தால் வினாடிப்பொழுதில் அது எமது கண்முன்னே கொண்டுத்தரும். ஏதாவது ஒரு தேடல் இஞினில் சென்று புனித அல் குர்ஆன், அல் குர்ஆன், குர்ஆன்,  என்று எமக்குத் தெரிந்த மொழியில் அடித்தால் அல்ஹம்துலில்லாஹ், பல்லாயிரக்கணக்கான இணையத்தள பகுதிகள் கிடைக்கப்பெரும்.
                                                                               சினிமா நடிகர்கள், கிரிகட் வீர்ர்கள், கால்பந்து வீர்ர்கள், வீராகனைகள், நாட்டின் தலைவர்கள் என்று பலரது பெயர்களை வரிசைப்படி மனமிட்டுவைத்துக்கொள்ளும் நாம் அல் குர்ஆனின் 114 அத்தியங்களின் பெர்யர்களையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அதனை பாவணையில் கொண்டுவருவதில் தயக்கம் காட்டுகிறோன்.
                                                                           அல்குர் ஆனை தொடராக ஓதுவதில் அதன் மொழிபெயர்ப்பு, வியாக்கியானங்களை கற்றுக்கொள்வதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
                                                                                 அல்குர் ஆனிய வசனங்களை மனனமிடாத போது எமது தொழுகைகளை உயிரோட்டமுள்ளதாக அமைக்கமுடியாது. நாம் தொழுகையில் நிற்கும் போது எமது எண்ணங்களை ஓர்மைப்படுத்திக்கொள்வதற்கும் குர் ஆனிய வசனகளும் அதன் மொழிபெயர்ப்புக்களும் பாரியளவில் உதவுகின்றன.
தொழுகையில் நிலையில் நிற்கும் போது எம்மை வழிநடாத்தும் இமாம் அவர் முஹம்மத் ஸல் அவர்களின் வழிகாட்டலுக்கிணங்க சிலஅத்தியாயங்கள் ஒதுவார், அதனை நாம் தொடராக செவிசாய்ப்போம். அவரது சந்தர்ப்பம் முடிவடையும் நேரத்தில் நாம் எமது ஓதலை ஆரம்பிப்போம். இந்த நேரத்தில் எமது சிந்தனைகளை முடியுமானளவு ஓர்மைப்படுத்துவதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.


ஏனைய நாற்களைப் போன்று அல்லது அதற்கு மேலாக நோன்பு காலங்களில் எமது நேரங்களை பிரயோசனமாக கட்த்துவதற்கும் நன்மைகளை அதிகம் சம்பதிப்பதற்கும் அல் குர்ஆனை ஓதுதல் அதனை ஆய்வு செய்தல் என்று அதிக கவனம் செலுத்த வேண்டும்.
                                                                                   அல்குர் ஆனை அதன் இலக்கியம், விளக்கம் மற்றும் சட்ட்திட்டங்களை சரிவரக் கற்றுக்கொள்வதற்கென இஸ்லாமிய அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கலைதான் தப்ஸீருல் குர்ஆன் மற்றும் உலூமுல் குர்ஆன் என்கிற இரு வேறு முக்கிய பாட்த்திட்டங்களாகும்.

தொடரும்............                                                                                                                                                                                                                                                           
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: