சினிமாக்காரர்களுக்கு ஒரு சவால்

95 வீதமான தீமையை சினிமாத்துறை தாங்கிப் பிடிக்கிறது என்றால் புத்தி ஜீவிகள் வாழும் உலகில் ஏன் இது இன்னும் உயிர் வாழ்கிறது?

சினிமாத்துறையில் காலம் கடத்தும், சினிமாவை வைத்து வயிறு வளர்க்கும் வல்லவர்கள் ஏன் இந்த உண்மைக் கண்டுகொள்கிறார்கள் இல்லை?

சினிமாவை வைத்து பணம் சம்பாதிக்கும், வங்கிக் கணக்கை பெருக்கிக் கொள்ளும் ஆல்கள் ஏன் சமூக நலனை பற்றி சிந்திப்பதில்லை?
கல்லூரிகளில், பல்கல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஏன் சினிமாவுக்காக அதிக நேரங்களை வீண் விரயம் செய்கிறார்கள்?

இப்படிப் பல கேள்விகள், கேள்விக்கு மேல் கேள்வி சிலரின் தலையை பிய்த்து போட்டிருக்கிறது.

சாரயம் குடிப்பவன் இருக்கும் வரை சாரயக் கடைகள் மூடப் படுவதில்லை.

சாரயக் கடைகளுக்கு லைசன்ஸ் வழங்கும் அதிகாரிகள், அரசியல் வாதிகள் இருக்கும் வரை சாரயக் கடைகள் மூடப் படுவதில்லை.
சிகரெட் கம்பனி, தான் விற்கும் சிகரெட்களை விற்பனை செய்யும் பேதே இது புற்று நோயை ஏற்படுத்தும்சுகாதராத்திற்கு கேடு விலைவிற்கும்என்று பகிரங்கமாக பொட்டை எழுத்தில் எழுதிக் கொண்டே ஏன் வியாபாரத்தை அதிகரிக்கிறார்கள்? இந்த வியாபாரத்தில் இலாபம் சம்பாதிக்கும் அதிகார வர்க்கங்களும் ஆணவ வர்க்கங்களும், பணக்கார வர்க்கங்களும் ஒத்துழைப்பது தான் ஒரே ஒரு சரியான காரணமாகும்.
சாரயம், மது, சிகரெட் பாவணையில் ஆயிரக் கணக்கில் செத்து மடியும் மனித உயிர்களை விட இவர்களுக்கு பணமும், புகழும் தான் முக்கியம் என்பதுவேயாகும்.

இதே செய்திதான் சினிமாக் காரர்களுக்கும், ஆனால் சினிமாத்துறையில் கொஞ்சம் முன்னேரி பல்துறை சார் வித்தவான்கள் பங்குகொண்டு பகிர்ந்துகொள்கிறார்கள்.

இலக்கியத்திலும் கவி நயத்திலும் ஆர்வம் கொண்டவர்கள்,
கற்பனையிலும் கதையிலும் தேர்வு பெற்றவர்கள்,
விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள்,
உடல் அழகன், அழகி  என தன்னை எண்ணிக் கொள்பவர்கள்,
குரல் வலம் பிரமாண்டம், அதை வைத்து சம்பாதிக்கலாம் என சிந்திப்பவர்கள்,
எப்படியாவது துட்டுக் கிடைத்தால் போதும் என நினைக்கும் லஞ்சத்திற்கு அடிமையாகிக் கிடக்கும் அதிகாரிகள்,
தொலைக் காட்சி, வானொலி அலைவரிசைகளுக்குச் சொந்தக்காரர்கள்,
நேரங்களை திட்டமிட்டு கடத்தத் தெரியா அறிவிளிகள்,
இலக்கற்று வாழ்க்கையை செலுத்துபவர்கள் என்று பல வேறுபட்ட குழுக்கள் சேர்ந்து சங்கமிக்கும் சேறு நிறம்பிய, ஒரு கலங்கிய குட்டைதான் இந்த சினிமா.

இது தான் நடைமுறை உண்மை.

கவிதை எழுதத் தெரியும், பாடல் எழுதத் தெரியும் ஆனால் அது சமூகத்திற்கு பிரயோசனம் தரும் வகையில் எழுதத் தெரியாது, அதனால் தான் காதலையும் காமத்தையும் கண்ணீரையும் கலந்து எழுதுகிறேன் இந்த சினிமாவில்.

எதையும் கற்பனை பண்ணத் தெரியும், கதை எழுதத் தெரியும், ஆனால் அது சமூகத்திற்கு பயன் தரும் விதத்தில் எழுதத்  தெரியாது அதனால் தான் இந்த சினிமாவில் நான்.

விளம்பரம் எனக்கு கைவந்த கலை, ஆனால் அதிக பணம் சம்பாதிக்க ஏற்றது இந்த சினிமா தான் என்பதால் நான் இந்த கலங்கிய குட்டியில்.
நான் உயர் பொருப்பில் பதவி வகிக்கின்றவன், ஆனால் ஆடம்பர வாழ்க்கையில் கொண்ட பேராசை, அதிக பணம் சம்பாதிக்கச் செய்து எப்படியாவது துட்டுக் கிடைத்தால் போதும் என நினைக்கும் லஞ்சத்திற்கு அடிமையாகி சினிமாவுக்கு வந்தேன்.

தொலைக் காட்சி, வானொலி அலைவரிசைகளுக்குச் சொந்தக்காரன், ஆனால் நேரத்தைக் கடத்த, மக்களை மகிழ்விக்க என்னிடத்தில் போதிய நிகழ்ச்சி நிரல்கள் இல்லை, புகழ்ச்சியும் தேவை. அதனால் இந்த பயனற்ற சேற்றில் புதைந்தேன்

நேரங்களை திட்டமிட்டு கடத்தத் தெரியாது அறிவிளியாகி நிற்கிறேன். அது என்னை சீரழியச் செய்திருக்கிறது,

இலக்கற்று வாழ்க்கையை சொந்தமாக்கிக் கொண்டேன், இப்போது இங்கு தள்ளி விட்டிறுக்கிறது.

சினிமாத்துறையில் ஏதாவது ஒரு விதத்தில் சேவை செய்யும் அல்லது பணம் சம்பாதிக்கும் ஒருவரிடத்தில் இருந்து வரக்கூடிய, அல்லது வர வேண்டிய ஒரு காரணம் தான் நான் மேலே சொன்னவைகள்.

சினிமாவில் புதைந்து கிடக்கும் கவிஞர்களே! சமூகத்தைப் பற்றியும் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்,

பாடல் வரிகள் இளைஞர்களை காமுகனாக்குகிறது, பாடல்வரிகள் அவர்களை உணர்ச்சிவசப்படுத்துகிறது. தாயும் சேயும் ஒன்றாக இருந்து இந்த பாடல் வரிகளை செவிசாய்க்க முடியவில்லை.

பதக்கங்கள், பட்டங்கள் பல வேண்டிய பாடகர்களையும், கவிஞர்களையும் இசையமைப்பாளர்களையும் சவால் விட்டுக் கூவியழைக்கிறேன்,
இந்த சீர்கெட்ட சினிமாவை விட்டால் உங்களால் கை நிறைய சம்பாதிக்கத் தெரியாது, முடியாது, வேறு வழியில் புகழ் சம்பாதிக்கத் தெரியாது. முடியாது. முடிந்தால் இப்போதே சினிமாவை இடை நிருத்திவிட்டு வேறு முயற்சியில் இறங்குங்கள் பார்க்கலாம்.

கற்பனைக் கதைகளை அல்லது நடந்த உண்மைச் சம்பவங்கள் என்ற பெயரில் சினிமாவிற்கு கதை எழுதும், கதை நடை சொல்லும், வரிகள் வரையும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள் வெட்கம் என்கிற உணர்வு நாளங்களை வெட்டி எரிந்து விட்டு சினிமாவைச் சொல்ல.வீதிக்கு வந்தீர்களா?
நாட்டு நடப்புக்களை, அறிவுச் சாதனைகளை, கல்வித் தகவல்களை தேடி ஒரு பத்திரிகையையோ, தொலைக்காட்சி, வானொலி பக்கத்திற்கோ போக முடியவில்லை. ஆபாசமும் காமமும் கற்பளிப்புமாக நிறைந்து வழிகிறது அந்த சமூக சேவைப் பகுதிகள். எந்த நாட்டு அலைவரிசையைப் பார்த்தாலும் இதே கெதி.

ஒரு இடத்தில் குண்டு வெடுப்பு என்ற செய்தியைக் கேள்விப் பட்டதும், ஒரு குடும்பத் தலைவர் திடுக்கிட்டு தனது வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியை திறந்து செய்திக்காக காத்திருக்கிறார். வயதுக்கு வந்த மகள், மகன், மனைவி அனைவரும் காத்திருக்கிறார்கள். செய்திக்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே இருக்கும் வேளையில் கிட்டத்தட்ட 10க்கும் மேலான விளம்பரங்கள், சில பாடல்கள்.

இந்த மூன்று நிமிடங்களில் ஒளிபரப்பப்பட்ட சில பாடல்களும் விளம்பரங்களும் அந்த தந்தையை தூக்கிப் போட்டது, கடைசியில் செய்தியும் இல்லை, வீட்டில் டீவியும் இல்லை, தூக்கி ஓரங்கட்டி விட்டார். அவ்வளவு ஆபாசமான வாசகங்களும் அதற்கேறறாட் போல் காட்சிகளும் அவரை வெட்கித் தலைகுனியச் செய்தது.

இந்த தொலைக் காட்சி, வானொலி, பத்திரிகை நிறுவனங்களுக்கு நாம் விடும் சவால், சமூகத்தை அநாகரிகத்தின், நரகத்தின் விளிம்பில் தள்ளிக்கொடுக்கும் சினிமாப் பாடல்களையும் காட்சிகளையும் ஒரு வாரத்திற்கு இடை நிருத்திவிட்டு ஏனைய சமூக பயன் தரும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிப் பாருங்கள்.

தெளரியமாக சவால் விடலாம், உங்களால் முடியாது,
ஏன்?
தகுதியான நிகழ்ச்சிகள் உங்களிடத்தில் இல்லை,
தகுதியான விளம்பரங்கள் உங்களிடத்தில் இல்லை,
நேயர்களை ஈர்க்கும் வகையில் பயனுள்ள ஏனைய நிகழ்ச்சிகளை உங்களால் சொந்தமாக தயாரிக்க முடியவில்லை.

இரண்டு நாளைக்கு முன் புத்தகம் சுமந்து கல்லூரிக்குச் சென்றவள்
நேற்று வகுப்பு நண்பனுடன் சினிமாக் கொட்டகைக்குச் சென்றால், இன்று அவள் விபச்சார விடுதியில் கலவிக் காரியாய் கண்ணீரும் காமமுமாய் காலம் கடத்துகிறால். இந்த வாழ்க்கைக்கு வித்திட்டது சினிமா என்ற ஷாத்தானாகும்.

நேற்று சிறந்த மாணவன் என்ற புகழ் வாங்கிய வாலிபன் இன்று பெரிய ரவுடியாக பார்க்கப் படுகிறான். இந்த ரவுடி என்கிற புகழையும் கொடுத்தது சினிமாதான்.

அதனால் தான் சினிமாத் துறையில் இருக்கும் அனைவருக்கும் சவால் விடுக்கிறோம் அல்லது அன்பு வேண்டுகோள் வைக்கிறோம், கொஞ்ச நேரம் சமூகத்தைப் பற்றியும் சிந்தியுங்கள்.

இந்த சமூகத்தில் நீங்களும் இருக்கிறீர்கள், நாங்களும் இருக்கிறோம்.







எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

3 comments:

Anonymous said...

பாடல் வரிகள் இளைஞர்களை காமுகனாக்குகிறது, பாடல்வரிகள் அவர்களை உணர்ச்சிவசப்படுத்துகிறது. தாயும் சேயும் ஒன்றாக இருந்து இந்த பாடல் வரிகளை செவிசாய்க்க முடியவில்லை

super words.

Anonymous said...

“பல் வேறுபட்ட குழுக்கள் சேர்ந்து சங்கமிக்கும் சேறு நிறம்பிய, ஒரு கலங்கிய குட்டைதான் இந்த சினிமா“

பல விசாலமான கருத்துக்களைக் கொண்ட தரமான தகுதியான அழகான பெயர். சேறு நிரம்பிய குட்டையில் விழுந்த பன்றிகளைப் போன்ற இச்சினிமா மடையர்கள், சமூக நலனில் எந்தளவு அக்கரையுடன்? யெல்படுகிறர்கள் என்பதை கட்டுரை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. “இந்த ஊடகத்தினால் சமூகத்தில் இதுகால வரைக்கும் நடந்தேரிய அனைத்து விதமான அவலங்களுக்கும் அட்டூழியங்களுக்கும்,அனாச்சாரங்களுக்கும், அசிங்கங்களுக்கும் அஸ்திவாரமாக இருந்தது, இந்த நாசகார சுயநலவாதிதான் என்பதை கட்டுரையாளர் அழகாக விளக்கியுள்ளார்.
மேலும் சாதிக்க வேண்டிய அம்சங்களை வைத்து சினிமா சாதிக்குமானால் சமூகத்தில் எம்மா பெரும் மாற்றங்களைக் காணலாம், ஆனால் அதனை சினிமா ஏன் இதுகால வரைக்கும் நடை முறைப் படுத்த முன் வருவதில்லை,அதற்கான காரணிகள் என்ன? போன்றவைகளை கட்டுரையாளர் விளக்கியிருக்கும் போங்கு, வாசிக்கும் போது உணர்வுகளை கிளப்பி விடுகிறது.
மேலும் மேலும் இது போன்ற மாற்றங்களை சமூகத்துக்கு “மாற்றங்கள் தேவை“ தளம் முன்னெடுக்க வேண்டும் அதர்க்கு இறைவன் துணை புரிய வேண்டும்.
நன்றி
அன்ஸார்-கத்தர்

Anonymous said...

Ovvoru nalum veru veru aangaludan koodi nadikkum nadigaigalukkum ovvoru nalum ovvaru adavanudan padukkaiyai pagirnthu kollum vibacharigalukkum enna vithyasam avargaldan kooda nadikkum nadigarlukku, vibacharam seyyum aanukkum enna vithyasam