என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 02

பிள்ளைகளுக்கு என தனி பாசையும் ஓசையும் இருப்பது அதிகமான பெற்றோருக்குத் தெரிந்ததே.

பிள்ளைகளை நிருவகிப்பதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அதிகமானவர்கள் தோற்றுப்போவது பிள்ளைகளின் தனித்தன்மையை சரியாக அறியத்தவரியதுடன் அது என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமில்லாமல் இருப்பதும் முக்கிய காரணமே.

பிள்ளைகளின் கைவிரலைப் பிடித்துக்கொண்டு பாதையில் நடந்து பாருங்கள், எதிரில் பறக்கும் பட்டாம் பூச்சியை பிடித்துக் கேற்பார்கள். இச் செயலைக் கண்டு எரிச்சல்படும் பெற்றோர்களும் இருக்கிறார்கள், அன்பாய் பிடித்துக்கொடுக்கும் தந்தைமார்களும் இருக்கிறார்கள் மிக குறைவாக.

கடைத்தெருவில் பிள்ளைகளுடன் நடந்துபாருங்கள், காண்பதையெல்லாம் சொந்தமாக்கிக்கொள்ள ஆசைப்படுவார்கள்.

பாதையோற கடைகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் இரும்புப் பொருட்களைக் கூட கேற்பார்கள், அது என்னவென்று, எதற்கென்று தெரியாமல் கூட......

தண்ணீர் குட்டையைக் கணடால் அதில் இறங்கி விளையாட ஆசை,

மழை பெய்வதை பார்த்தால் அதில் நனைய ஆசை,

நாயைக் கண்டால் அதனுடன் பேச ஆசை,

ஆமனக்க காயையும் கடித்துப் பார்க்க ஆசை,

படிக்கக் கொடுக்கும் புத்தகத்தையும் வாயில் வைத்து ருசிக்க ஆசை,

கரிக்குப் போட தயாராகும் தேங்காய் பூவைக்கூட திண்டு பார்க்க ஆசை,
ஆசை ஆசையாய், ஆசை ஆசையென ஆர்வமாய ஆர்ப்பரிப்பார்கள்.
இது இவர்களது பொழுதுபோக்கும், கலாச்சாரமுமாகும்.
பெரியவர்கள் அமைதியாக இருக்கும் இடத்தில் கதைத்துப் பார்ப்பது பிள்ளைகளின் ஆசை.

தொடாதே என்பதை தொடவது இவர்களின் ஆசை.

முடிந்துவிட்டது என்றால் அதை மீண்டும் கேற்பது இவர்களது ஆசை.
கொப்பியில் வரையும் நிறத்தை வாயில் வைத்துப் பார்ப்பதும் கையில் வரைந்துபார்ப்பதும் இவர்களுக்கு பேராசை.

பிள்ளைகளின் இந்த சின்னச் சின்ன ஆசைகளை அடையாளம் கண்டுகொள்ளும் பெற்றோர்களும், அதை உரியவாறு நிறைவேற்றும் பெற்றோர்களும் வெற்றிகொள்கிறார்கள்.
ஆனால், இந்த நடத்தைகளை சரிவர புரிந்து, மனத் திரையில் வைத்துச் செயற்படத்தெரியாதவர்கள் தோற்றுப்போகிறார்கள், இதில் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களும் அடங்குவர், இவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் அடங்குவர்.

காட்டில் பறக்கும் பட்டாம் பூச்சிகள் இவனுக்கு எதற்கு என்று சிந்திக்கின்ற பெற்றோர்களும் தோற்றுப்போவர்,

பறக்கும், கேற்கும் எல்லா பூச்சுகளையும் பிடித்துக் கொடுக்கிற பெற்றோர்களும் தோற்றுப் போவர்.

பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சையில் விஞ்ஞானப் பாடத் தேர்வில் சித்தியடைந்தால் மட்டும் தான் தன் மகன் மருத்துவராக வர வேண்டும் என ஆசைப்படும் பெற்றோர்களும் தோற்றுப் போவர்.

மகன் மருத்துவராக வர வேண்டும் என்று 3ம் வகுப்பிலிருந்தே விஞ்ஞானப் பாடத்தில் மட்டும் கவனம் செலுத்த நினைக்கும் பெற்றோர்களும் தோற்றுப் போவர்.

சின்னச் சின்னக் குறும்புகளைக் கண்டிப்பதாக பிள்ளைகள் முன் சத்த்மிடும் பெற்றோர்களும் தோற்றுப்போவர்.

பிள்ளைகளின் குறும்புகள் அனைத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பவரும் தோற்றுப்போவர்.

அப்படியென்றால், யார் தான் வெற்றிபெருவார்?
தொடர்ந்தும்படியுங்கள்...........

தொடரும்.




எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: