என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 01

மீன் பிடிக்க போனவர் மீனோடு போனார்,
சோற்றுக்கு உப்பு போட்டவர் உப்பு போத்தலுடன் சேர்த்து போட்டார் என்றேல்லாம் சிரிப்பாக சில கதைகளைச் சொல்வார்கள். ஆனால் நாம் இப்போது அதை பற்றி அல்ல பேசப்போகிறோம்.

கல்யாண வயதாகி பெண் பார்க்கப் புறப்பட்டவர் அதையே நினைப்பில் வைத்துக்கொண்டு தேடி அழைவார். பெண் கிடைத்து திருமணமானதும் கணவர் பிள்ளை வேண்டும் என தவிப்பார் ஆசையாய், மனைவி பிள்ளைவேண்டுமென தவிப்பாள் தன் பெண்மையை உலகிற்கு நிரூபிக்க.
பிள்ளை பிறந்ததும் பொறுப்பும் பிறக்கிறது பெற்றோருக்கு...
ஆயுதமேந்திய போராட்டங்களுக்கு மேலால் வீடுகளுக்குள் அரங்கேறும் போராட்டங்கள் மிகப்பெரியது பெற்ற பிள்ளைகளை வளர்ப்பதில்.
இன்றைய கலியுகம் அத்தனை அசிங்கங்களை சுமந்திருப்பது தான் அதற்கு காரணம்.

பிடவை அணிந்த பெண் ஒற்றையடிப்பாதையில் முல் படாமல் நடப்பது போல் எம் பிள்ளைகளை அநாகரியங்களும் அசிங்கங்களும் படாமல், தீண்டாமல் பார்த்துக்கொள்வது பெற்றார் கடமை.
நான் நேற்று படிக்காத்து இன்றை வாழ்க்கையில் கஸ்டப்படுகிறேன், நாளை என் பிள்ளை கஸ்டப்படாமல் இருக்க அவனது எதிர்காலத்திற்காக இன்றே அடித்தளத்தை ஆணித்தரமாக்க வேண்டும் என்பது அனைவரதும் கடமையாகும்.

நபி முஹம்மது ஸல் அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளாராவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாhpப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.
’’இவையனைத்தையும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்என்று கூறிவிட்டு இப்னு
உமர்(ரலி) மேலும் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள்,மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்கும் பொறுப்பாளன் ஆவான். அது குறித்தும் அவன் விசாரிக்கப்படுவான். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் (ஏதேனும் ஒரு விஷயத்திற்குப்) பொறுப்பானவர்களே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்என்றும் கூறினார்கள் என நான் நினைக்கிறேன்." (புகாரி 2409)

நாம் வாழும் இந்த சூழலில் எம்முடன் நல்ல மனிதர்கள் பலர் இருக்கிறார்கள், அவர்களுடன் குடிகார்ர்கள், விபச்சாரிகள், திருடர்கள், அநிய்யக்கார்ர்கள் என்ற வேரு பலரும் வாழ்கிறார்கள்.
இவ்வாறு இன்றைய பெற்றோர்கள் பல வித்தியாசமான பாத்திரங்களில் இயங்குவதற்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன. இந்தப் பெற்றோர்கள் நேற்றைய சிரிய வயதில் அவர்களது பெற்றோர்களால் சரியாக வழிகாட்டப்படாதது அதில் ஒரு காரணம் என்றால் அதை மறுப்பதற்கு யாருமில்லை.

பிள்ளைகளை நன்றாக வளர்ர்கும் எமக்கு இந்த அனுபவம் எப்போதும் எமது மனத்திரையில் உதித்தவண்ணம் இருக்க வேண்டும்.
தொட்டிலில் தூங்கும் கைக் குழந்தை திடீரென சத்தமிடுகிறது, அனுங்குகிறது என்றால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் தாய்மார்கள் தங்களை வருத்திக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு பாடசலை மாணவன் வகுப்பில் குறைந்த புள்ளிகளை எடுப்பது எமக்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் அதற்கான காரணத்தைத் தேடுவதில் ஆராய்வதில் நாம் வீரியமற்றிவிடுகிறோம்.

எமது பிள்ளை இரவில் நேர தாமதமாகி வீட்டுக்கு வருவது குறித்து காரணம் தேடுவதில் நான் கவனமில்லை.

வழமைக்கு மாற்றமாக இந்த சில நாற்களில் செலவுக்கு அதிக பணம் கேற்பது தொடர்பாக எதுவும் கண்டுகொள்வதில்லை.
புத்தகப் பைக்குள் புத்தகங்களை விட வேறு என்ன இருக்கிறது என்பது எமக்கு தெரியாது.

பாடசாலைப் பைக்குள் ஏன் கலர் உடை என்பதை நான் பார்ப்பதில்லை.
ஏன் கலவன் பாடசாலையை எனது மகன் விரும்புகிறான் என்பதற்கு அவனிடமே காரணம் கேற்க வக்கில்லை.
தாயை வா போ என்று பேசுவது சரியில்லை என கண்டிக்க முன்வருவதில்லை.

தொழுகைக்கான அதான் ஓசையின் போதுகூட டீவி சத்தம் குறைக்கத் தெரியாத மகன் எனது பிள்ளையா? என்று சிந்திப்பதில்லை.
பள்ளியில் எந்த வரியிலும் என் மகன் இல்லையே என்று தேடிப் பார்ப்பதில்லை.

டிவுசன் வகுப்புக்கு கட்டடித்திருக்கிறான் ஏன் என்பது எனக்குத் தெரியாது.

படிக்கும் வயதில் மொபைல் எதற்கு என விணவுவதில்லை.

இப்படியே நிறைய சொல்ல்லுவதிலும் அர்த்தமில்லை.

பெற்றோர்கள் நாங்கள், எங்கள் மீது அவர்கள் பொறுப்புச் சாட்டப்பட்டவர்கள். நாங்கள் அவர்கள் தொடர்பாக கேள்வி கேற்கப் பட இருக்கிறோம்.

நாளைய கடைசிப் பரிட்சையில் இதுவும் ஒரு வினாத் தான் என்பதை புரிந்து, புதுமுகமெடுத்து எம் பிள்ளைகளை வெற்றிபெறச் செய்வோம்.

அவர்கள் அனைவரும் நாளைய லீடர்கள் என்பதை மறந்துவிடாமல்.


தொடரும்......

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

ஆரம்பம் நல்லா இருக்கிறது,தொடருங்கள்