இந்து மதம் சினிமாவை ஆதரிக்கிறதா?

கோடி ரூபாய்க்கள் செலவுபண்ணி எடுக்கும் படங்களில் நடிகைக்கு துணி வாங்குவதற்கு மட்டும் எந்த ரூபாய்க்களையும் செலவுபண்ணுவதாகத் தெரியவில்லை.

அவ்வளவு ஆபாசமான துறைக்குள் தான் இச் சமூகம் சிக்குண்டு பாதை தவறி நிற்கிறது.

எமது சமூகம் வெளிவர வேண்டிய பாதை எங்கே என்பதை பல தொடர்களில் எழுதி வந்திருக்கிறேன். கடைசியாக இந்து மதம் சினிமாவை ஆதரிக்கிறதா என்பதையும் சொல்ல விடுங்கள், சொல்லிமுடித்ததும் நான் சொன்னதை பற்றி நீங்களும் சொல்லுங்கள்.

இந்து மதம் சினிமாவை ஆதரிக்கிறதா?

இந்து மதத்தை போதிக்க வருகிற அதிக அறிர்கள் இந்து மத வேதங்களில் உள்ள ஒரு சில வசனங்களை, த்த்துவங்களை மாத்திரம் வாசித்துக் காணித்து மக்களை கடவுள் பக்தியிலும் தியானத்திலும் உள்ளாக்கி கடவுள் பயத்தை உண்டாக்கி காலம் நகர்கின்றனர், அதனால் கோவிலுக்குள் வந்தால் மட்டும் பக்தி என்ற நிலையில் மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.
குறிப்பாக எல்லா இந்து போதகர்களாலும் போதிக்கப்படும் சில தத்துவங்கள்;
ஸம துக்க ஸுக, அத்வேஷ்டா, சர்வ பூதானம் மைத்ரா, நிர்மமோ, நிரஹங்கார, க்ஷமீ, ஸந்துஷ்ட : ஸததம், யோகி, யதாத்மா, த்ருட நிச்சய
ஸம துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)
அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)
சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)
நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )
க்ஷமீ (பொறுமை உடையவனாய்)
ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )
யோகி (யோக நெறியில் நிற்பவன்)
யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)
த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)
இந்த சில விடயங்கள் மட்டுமே.
ஆனால் இந்து சமூகம் சிக்குண்டு தீர்வு தேடி அலையும் அன்றாட அத்தியவசிய அல்லது இன்றைய நவீன பிரச்சினைகளுக்கு தீர்வை இந்த வேதங்களிலோ சாஸ்திரங்களிலோ பார்க்கமுடியவில்லை. அல்லது இந்து வேத போதகர்களிலோ கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாது.
நாம் பேசி வரும் சினிமா தொடர்பான பிரச்சினையும் இதனுல் உள்ளடங்கிக்கிடக்கும் முக்கிய ஒரு பிரச்சினையாகும்.
சமூகத்தை நரக படு குழிக்கு அழைத்துச் செல்லும் அநாகரியமான அனைத்து செயல்களையும் சினிமா நடைமுறைவழியாக மக்களுக்கு காண்பிக்கிறது.

இதற்கு எதிரான செய்திகளை இந்து வேத நூல்களிலிருந்து தீர்வாக வழங்கக்கிடைக்குமோ என்று ஆய்வு செய்யும் போதுதான் ஒரு இந்து சகோதரரும் எழுத்தாலருமான லக்கிலுக் @ http://www.yarl.com/forum3/index.php?showtopic=38704 சொன்ன செய்தி எனக்கு ஞாபகம் வந்தது, அதனால் நான் அதிகம் எழுதுவதை விட அவர் சொன்னதை சொல்லுகிறேன்.

ஈவ் டீஸிங், ஊழல், கொலை, கொள்ளை இதெல்லாம் யார் செய்தாலும் குற்றம் தானே? இதுபோன்ற குற்றங்கள் மட்டுமல்லாது மோசடி, பலதாரமணம் என்று பல குற்றங்களையும் நிறைய செய்திருக்கிறார்கள் நம் இந்துமத கடவுளர்கள். குற்றங்களை செய்துவிட்டு அவையெல்லாம் நம்முடைய திருவிளையாடல் என்று பெருமை வேறு அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பலதாரமணம் என்பது குற்றமெனில் அறுபது ஆயிரம் மனைவிகளை மணந்த தசரதனையும், ஐந்து கணவர்களை மணந்த பாஞ்சாலியையும் குற்றவாளி என்றுதானே சொல்லவேண்டும்? சிவனுக்கு ரெண்டு, முருகனுக்கு ரெண்டு என்று ஆரம்பித்து எல்லா கடவுளருக்கு ஆளுக்கேற்ற மாதிரி மனைவிகளின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கிறது.

வெண்ணை திருடிய குட்டி கிருஷ்ணனை சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்க வேண்டாமா? கோபியர்களின் சேலையை மறைத்து அவர்களை ஆடையில்லாமல் அலையவிட்ட கிருஷ்ணனை ஈவ்டீஸிங் கேஸில் பிடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டாமா? ஆற்றுக்குள் அதுபாட்டுக்கு போய்க்கொண்டிருந்த பாம்பை கொன்ற கிருஷ்ணன் மிருகவதை சட்டத்தின் படி குற்றவாளிதானே?

போர் செய்துகொண்டிருந்தபோது வாலியை மறைந்திருந்து பேடித்தனமாக கொலைசெய்த ராமனை தூக்கில் போட்டிருக்க வேண்டாமா? இராவணனிடமிருந்து மீண்டு வந்த சீதையை சிதையிறங்க சொன்ன ராமனை பெண்கள் சிறப்பு காவல்நிலையத்தில் புகார் செய்து முட்டிக்கு முட்டி தட்டியிருக்க வேண்டாமா?

உலகை சுற்றிவரும் போட்டியென்று அறிவித்துவிட்டு உலகை சுற்றிவந்த முருகனுக்கு பரிசு தராமல், சிவன் பார்வதியை சுற்றிவந்து குறுக்குவழியில் விநாயகன் பரிசினை தட்டிச் சென்றது ஊழலல்லவா? அந்த ஊழலுக்கு துணைபோன நீதிபதியல்லவா சிவன்?

அகலிகை மீது மோகம் கொண்டு அவரது கணவர் போல வேடம்புரிந்து அகலிகையை கற்பழித்த தேவேந்திரனை கற்பழிப்பு குற்றத்தில் உள்ளே தள்ளி காயடித்திருக்க வேண்டாம்? ரம்பை, மேனகை, ஊர்வசி என்று சூப்பர் பிகர்களை தன் அவையில் வைத்திருந்த இந்திரன் கன்னட பிரசாத்துக்கு ஒப்பானவனா இல்லையா?

திருவிளையாடல் என்று கூறி பலவேடங்கள் போட்டு பூமிக்கு வந்து மக்களை ஏமாற்றி மோசடி செய்த சிவனை மோசடி வழக்கில் கைது செய்திருக்க வேண்டாம்? பொருட்குற்றம் கண்டறிந்த நக்கீரனை கொலைசெய்த கொலைகாரனல்லவா சிவன்?

தவம் கிடந்த விசுவாமித்திரனை உறவுக்கு அழைத்த மேனகை மீது விபச்சார வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லவா?

சொல்லிக்கொண்டே போகலாம்...

இவ்வாறாக இந்து மத புராணங்களிலும், இதிகாசங்களிலும் குற்றங்களும், ஊழலும், விபச்சாரமும், கற்பழிப்பும், கொலையும், கொள்ளையும் நியாயப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இவற்றை வாசித்தும், கேட்டும் வளரும் சமூகத்தில் குற்றங்கள் மலிந்திருப்பதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்? கடவுளர்களே செய்திருக்கிறார்கள், நாங்கள் செய்வதற்கு என்ன? என்ற மனோபாவம் தானே மக்கள் மத்தியில் இருக்கும்? புராணங்களிலும், இதிகாசங்களிலும் இவ்வாறெல்லாம் இருப்பதால் அவை பெரிய குற்றமல்ல என்று அம்மதம் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இயல்பிலேயே ஊறிவிடுகிறது.

தர்மம், நெறி, நியாயம் இவற்றையெல்லாம் மனிதருக்கு ஒன்று, கடவுளருக்கு ஒன்று என்று சித்தரித்திருப்பதே இந்து மதத்தில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டை. இம்மதத்தை பொந்து மதம் என்றழைப்பதே சாலப்பொருத்தம்

அவர் இந்துவாக வாழும் போதும், அதை படிக்கும் போதும், நடைமுறையில் பார்க்கும் போதும் கண்ட ஒரு சித்திரம்.

“எது எதுவானாலும் எங்கே நல்லது கிடைக்கிறதோ அங்கே நாம் இருப்போம் என்ற நிலைக்கு நாம் வருவதே சிறந்த புத்திசாலியின் சிறப்புத் தன்மை என்பதை மட்டும் சொல்லிவைக்கிறேன்.

நாகரீகங்களை புதைத்து நாகரீகம் என்ற பெயரில் அநாகரீகங்களை புகுத்தும் நம்பர் வன் ஊடகமாகிய சினிமா என்ற பிசாசுவை எமது மொத்த சமூகத்திலிருந்தும் அகற்ற வேண்டும் என்ற எனது முயற்சியில் எல்லா முக்கிய மதங்களின் நிலைப்பாட்டையும் சொல்ல எடுத்த முயற்சி மட்டுமே எமது சமூகத்தைச் சிந்திக்கச் செய்திருக்கும்.

நான் ஒரு கிறிஸ்தியனாக இருந்து கொண்டு கெட்டுக் கிடக்கும் இந்துவை திசை திருப்ப கிறிஸ்தவ போதனைகளை சொல்லி உபதேசிப்பதற்கு முன்னர் அவனது மதமாகிய இந்து மதத்தில் உள்ளவற்றையே சொல்லியாகவேண்டும்.

அது போன்று தான் அனைத்து மத நம்பிக்கையாளர்களையும் அனுக வேண்டும், அதன் பின்னர் தான் எந்த மார்க்கம் அல்லது மதம் மனித வாழ்க்கையில் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி உபதேசம் மற்றும் வழிகாட்டல் வழங்குகிறது என்பதை பார்த்து அதற்கேற்றாற்போல் எம்மை மாற்றிகொள்வதே சிறந்த புத்திசாலியின் சிறப்புத் தன்மையாகும்.
 
அதனால் மதங்களில் உள்ளவைகளில் தேவையற்ற விடயங்களை மறைத்து தேவையான விடயங்களை மட்டும் சொல்லுவதை விட அந்த மதத்தையே கைவிட்டுவிட்டு மொத்தத்தில் எங்கு நல்லது கிடைக்கின்றதோ அந்த திசையின் பக்கம் எம்மை திசை திருப்பிக் கொள்வதே நல்லது.


சினிமாவை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது என்பதுடன், கிறிஸ்தவ மற்றும் இந்து மத போதனைகளில் உள்ளவைகள் அனைத்தும் சினிமாவிலும் கிடைக்கின்றன என்ற எனது இந்த சிறிய ஆய்விலுள்ள உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

அதிகமாக நான் சொன்ன செய்திகள் பிற பல பெரும் அறிஞர்களால் ஆங்காங்கே சொல்லி முடித்தவைகளே. நான் அவைகளை சினிமா என்ற தலைப்பின் கீழ் தொகுத்திருக்கிறேன்.

பல் மதத்தவர்களை ஒரு குடையில் ஒன்றிணைத்து வாழ வைத்திருக்கும் எமது சூழலில் சினிமா மற்றும் அது போன்ற அனைத்து கெட்டவிடயங்களும் ஓடி மறைய நாம் ஒன்றாய் செயற்படுவோம் என்று இந்த தொடருக்கான எனது கடைசி வார்த்தையாய் பதிகிறேன்.



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

//மதங்களில் உள்ளவைகளில் தேவையற்ற விடயங்களை மறைத்து தேவையான விடயங்களை மட்டும் சொல்லுவதை விட அந்த மதத்தையே கைவிட்டுவிட்டு மொத்தத்தில் எங்கு நல்லது கிடைக்கின்றதோ அந்த திசையின் பக்கம் எம்மை திசை திருப்பிக் கொள்வதே நல்லது// இந்த கருத்தை நான் வரவேற்கிறேன். சுரேஸ்