என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 07

தொடர் ஏழு:

ஒரு நாள், மாலை நேரம் அது. தந்தை அலுவலக அரையில் வேளை நிமித்தமாக ஏதோ கையிலே, புத்தகமும் பத்திரிகையும் போனாவுமாக புரட்டிக் கொண்டிருந்தார்....

அவரது அரையை நோக்கி வேகமாக நுழைந்த மகன், “அன்று சிறுவர்கள் விஞ்ஞானிகள் போல் சிந்திக்கக்கூடியவர்கள் என்று சொல்லி என் சிந்தனையை அலையவிட்டு விட்டீர்கள், அது எப்படி?, அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று எதுவுமே சொல்லாமல் பாதியில் என்னை விட்டுவிட்டீர்கள்“ என்று சிறிய சத்தத்துடன் தந்தையை நெருங்கினான்.......

ஆஹா, அதுவா சொல்லித்தருகிறேன் என்று எழுந்த தந்தை, மகனை ஓய்வரைக்கு அழைத்துச் சென்று பேச ஆரம்பித்தார்.

சிறந்த சிந்தனைக்கு மூளையைப் பயன்படுத்துவதற்கு முன்னர், தேவையற்ற விடயங்களுக்காக மூளை பாவிக்கப்படுவதை முதலில் தவிர்க்க வேண்டும்”.



ஏனெனில்; மறுமையில், அல்லாஹ் நம்மிடத்தில் அது பற்றியும் கேள்வி கேட்பான். நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்“     (அல் குர்ஆன் ஸூரா அல் இஸ்ரா-36) என்று உபதேசித்தார்.. 

அதிகம் அதிர்ச்சி தரக்கூடிய விடயங்கள், நிகழ்வுகளிலிருந்து நாம் தூரமாகுதல் மற்றும், தேவையற்ற விதத்தில் உணர்வுகளை தூண்டிவிடும் செயல்களிலிருந்து ஒதிங்கி இருத்தல் மிக முக்கியமானதாகும்.

அருமை மகனே! உங்களின் அல்லது உங்கள் வகுப்பு நண்பர்களுடைய சிந்தனை ஓட்ட அபிவிருத்தி ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் வரையறுக்கப்பட்டு சுழலுவதற்கு முக்கிய காரணம் நான் மேலே சொன்னதில் அடங்கி இருக்க வேண்டும்.

அதை இப்படியும் சொல்லலாம்,



1. அன்றாட செயற்பாடுகள்,
2. பாடசாலை கற்பித்தல் முறை
3. கிடைத்திருக்கும் நண்பர்கள்

இந்த மூன்றும் மிக முக்கியளவில் மனித சிந்தனையில் குறிப்பாக உங்களைப் போன்ற சிறியவர்கள் சிந்தனையில் பாரிய தாக்கம் செலுத்திகிறது.

எப்படி சொல்லுவது? என்று தந்தையைப் பார்த்து திடீரென கேள்வியை தொடுத்தான்.

இப்படியான ஒரு கேள்வியை எதிர்பார்த்த தந்தை இதற்கான விடையை சொல்லுவதற்கு முன்னர் ஒரு பேனையையும் நோட்டு புத்தகத்தையும் கையில் எடுத்தார்.

அன்றாட செயற்பாடுகளை அல்லது நாளந்த நடத்தைகளை நாம் எழுதிப்பார்த்தால் இலேசாக புரிந்துகொள்ளலாம் என்று எழுத ஆரம்பித்த தந்தை;
ஒரு நாளைக்கு 24 மணித்தியாளங்கள் எல்லோருக்கும் கிடைக்கின்றன.
எல்லா வகையான தொழிலில் ஈடுபடுகிறவர்களும் இந்த நேர அவகாசத்தைத் தான் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களாகிய நீங்களும் விதிவிலக்கல்ல.

கிடைக்கும் 24 மணித்தியாலங்களில் அன்றாடம் செய்யும் சில முக்கிய விடயங்களை தவிர்த்துப் பார்த்தால், நேரங்கள் முழுதும் பயனற்று கடத்தப்படுவதைப் பார்க்கலாம்

அன்றாட பாடசாலை நேரம், பிரத்தியோக வகுப்புக்கள், பாடசாலைப் பயிற்சி செய்யும் நேரங்கள், தூக்கம் சாப்பாடு போன்ற தேவைகளுக்கான நேரத்தை கழித்தால் மீதி நேரங்கள் எந்த பயனுமற்றதாக கடத்தப்படுகிறதை கணக்கிடலாம்.

உதாரணமாக,
பாடசாலை முடிந்து டீவிக்கு முன்னால் உட்கார்ந்தால், ஒரு நாளைக்கு கிரிக்கட் போட்டி நிழ்ச்சி இருக்கும், அல்லது, கால்பந்துப் போட்டி இருக்கும் அல்லது குத்துச் சண்டை நிகழ்ச்சி இருக்கும் அல்லது சினிமாப் படங்கள் தாராளமாக இருக்கும்.

குறிப்பாக இன்றைய டீவி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்படுகின்ற அதிகமான சினிமாக் காட்சிகள், சிறுவர்களை சிறிய வயதிலேயே கலவு கற்பழிப்பு, பொய், புகைபிடித்தல் காதல் காமம் என்று அனைத்து கெட்ட செயலுக்கும் பயிற்சிவிக்கக் கூடியதாகத் தான் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிகளிலேயே அதிக நேரம் போய் விடும், இவைகளால் மூளைக்கு எந்த பயனும் கிடைப்பதில்லை.

நமது தலைவர் நபி முஹம்மத் (ஸல்) அவாகள் கூறியிருக்கிறார்கள்.  “இரண்டு விதமான அருட்கொடைகளை அதிகமான மக்கள் மறந்து விடுகிறார்கள். அதுதான் ஆரோக்கியமும் ஓய்வான நேரமுமாகும்“         (புஹாரி)                                                                      இப்போது அதிகமான விடுகளில் இணைக்கப்பட்டுள்ள இணையத்தள வசதி, சிறுவர்களை தேவையற்ற திசைக்குக் கொண்டுசென்று வழிகெடுத்துக் கொண்டிருக்கிறது.

இன்று அதிகமான பாடசாலைகளில் மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவுக்கு கணனிக் கல்வியை பரிந்துரைத்ததன் விளைவு, அதிக வீடுகளில் கணனி வசதி இருக்கிறது. ஆனால் அதை எப்படி இயக்குவது, அதில் உள்ள பாடத்திட்டங்களை தெரிந்து வைத்திருக்கிறார்களோ இல்லையோ, எப்படி கேம்ஸ் விளையாடுவது? எந்த வகையான கேம்ஸ்கள் இருக்கிறது? அவைகளை எப்படி விளையாடுவது என்பதையெல்லாம் தவராமல் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதற்காக தினம் தினம் பல மணி நேரங்களை செலவிடுகிறார்கள்.

அல்லது நண்பர்களுடன் சேர்ந்து வெளியே எங்காவது போனால், தூண்டில் வைத்து மீன் பிடிக்க, நீர் ஓடைகளில் கொக்கு வேட்டையாட, சும்மா பிரயோசனமற்ற வாதங்கள், வாக்கு வாதங்கள் என்று நேரம் கடத்தல் என்று தொடர்கிறது.

இந்த செய்திகள் உண்மையாவை என்பதை ஏற்றுக் கொள்கிறாயா? என்று கேள்வியை மகனிடம் கேட்டு அடுத்த செய்தியைத் தொடர்ந்தார் தந்தை.
சரி சரி சூடாக தேநீரைக் குடித்துக் குடித்தே பேசுங்கள் என்று தாய், இடைமறித்து தேனீர் கோப்பையை நீட்டினால்.


தொடரும்..........



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

shifa said...

It is true, they spend their time without doing anything just sit on the computer and play games. some students are sitting on study room and searching film and distribute to the colleagues .However, poor parent proud of their children because they think their children know everything about computer and they study well. Reality is not like that they are cheating and they choose wrong way. The parents must take care of their children when they are using internet

Anonymous said...

<<<>> இதை நம் பிள்ளைகளுக்கு உனர்த்த வேந்தும்.