என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 08

தொடர் எட்டு:
தேநீருடன் ஓய்வெடுத்துக்கொண்ட நாங்கள்.....
பேசிக்கொண்டிருந்த மூளை வளர்ச்சி தொடர்பான செய்தியை வேறு ஒரு நாளைக்குச் சொல்லித்தருவதாக வாக்களித்த எனது தந்தை அவரது சொந்த வேளையை தொடர்ந்தார்.

தந்தை சொல்லிக்கொடுத்த விடயங்களை நான் எனது தாயுடன் பகிந்தவனாய்........

அன்று சனிக்கிழமை காலை, வெயில் கொஞ்சம் குறைவாக இருந்தது, காற்றும் உடலில் பட்டு அமைதியாய் அதற்குரிய மெல்லிய இசையுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

தம்பி, இன்று குளிப்பதற்கு நீரோடைக்குச் செல்லலாமா? என்று என்னை வினவினார் என் தந்தை. அதை எதிர்பார்த்திருந்த நான் ஆம் இதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே துணிகளை எடுத்தவனாய் தந்தையை பின்தொடர்ந்தேன்.

என் மகன் கவனம்! என்று எங்களுக்கு விடை கொடுத்தார் தாய்.
சின்ன மேடு, சின்ன காடு வழியே நீரோடையை நோக்கி சின்ன நடையாய் நடந்தோம்.

பறக்கும் பட்டாம் பூச்சிகளுக்கும் வாசம் வீசும் முந்திரி மரங்களுக்கிடையே நடக்கலானோம்,

குளிக்கும் இடத்தை அடைந்ததும் அங்கே எனது வகுப்பு நண்பன் தனியாக குளித்துக்கொண்டிருந்தான், என்னை கண்டு ஒரு புன்னகை, என் தந்தையைக் கண்டு ஒரு கெளரவம் நிறைய பயம்.
மூவரும் இணைந்து குளிக்கலானோம், அவனை என் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

குளித்து முடிந்து நான் முன்னே என் நண்பன் பின்னே, தந்தை நடுவே என்றவாறு நடந்து வந்தோம்.

திரும்பி வரும் வழியே ஏற்கனவே விட்டு வைத்த விடயத்தை தொடர தந்தைக்கு ஞாபகமூட்டினேன்.

உடனே தந்தை, நல்லது ஞாபகமூட்டினாய் என்று தொடர்ந்தார்.
உங்களில் எவருக்காவது நான் சொல்லப் போகிற முக்கியமாக ஒரு செய்தி அல் குர்ஆனில் இருக்கிறது தெரியுமா? என்று தொடர்ந்தவர்,
குற்றம் செய்கிறவர்களின் முன்நெற்றியை பிடிப்போம் என்று அல்லாஹ் சொல்லுகிறான்.

"அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி  (அல்குர் ஆன் 96 : 15 – 16)

"எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே சார்ந்துள்ளேன். எந்த உயிரினமானாலும் அதன் முன் நெற்றியை அவன் பிடித்துக் கொண்டிருக்கிறான். எனது இறைவன் நேரான வழியில் இருக்கிறான்.                                    (அல் குர்ஆன் 11 : 54)

14ம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறியாமை அறபுகளிடத்தில் நம்முடைய தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதுச் செய்திகளாக சொன்னதில் இவைகளும் அடங்கும்.

ஒரு மனிதனின் முன்நெற்றி மூளையின் ஒரு பகுதியாகும். அந்த முன்னெற்றி நீளமாக உள்ளவர்கள் அதிகம் பொய் சொல்லக்கூடியவர்கள் என்று இன்றைய விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது.
என்று தொடர்ந்தார்....

”.......ஒரு மனிதனின் மூளை சிறப்பாக தொழில் புரிவதற்கு ஏற்கனவே நான் சொன்னது போல் மூன்று முக்கிய விடயங்கள் கவனிக்கத்தக்கது
உங்களை மாதிரி சிறுவர்களின் மூளையை அதிகரிக்கச் செய்வதற்கும் சிந்தனை ஓட்ட வேகத்தை கூட்டுவதற்கும் மேற்கத்தைய நாடுகள் பல வித்தியாசமான வழிமுறைகளை கையாள்கிறார்கள்,

அவைகளை நம்மால் செய்யமுடியாதா? என்று நான் குறிக்கிட்டு கேள்வி கேட்டேன்,

அதைச் செய்வதற்கு முன்னர் எல்லோராலும் செய்யமுடியுமான, எல்லோராலும் செய்ய வேண்டிய சில முக்கிய விடயங்களை முதலில் செய்வோம் என்று பதிலளிக்கும் போது,

மேற்கத்தியர்கள் என்ன செய்கிறார்கள் என்று என் நண்பன் கேட்டான்.
அதற்கு என் தந்தை சில விடயங்களை சொன்னார்.



1. பிள்ளைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க விட்டமீன்கள், ஊட்டச் சத்துள்ள மாத்திரைகள் மற்றும் உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது,

2. யோக முறை, தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அமைதியான இடத்தில் தியானம் செய்து மனதை ஓர்மைப்படுத்தல்,

3. சில நீண்ட வேளைகளுக்குப் பின்னால் குறித்த நேரத்தில் அமைதியான ஓய்வு எடுத்தல்,

4. இசையை ரசித்து மனதை அமைதிப்படுத்தினால் மூளையின் விவேகத்தன்மை ஏற்படுமாம்



என்று பல வழிமுறைகளை சிறுவர் வழிகாட்டி நிலையங்களும் சிறுவர் உளவியலாளர்களும் பரிந்துரைக்கின்றார்கள்.
அவைகள் தேவையா? இல்லையா? இவைகளை விட வேறு எதுவும் தேவையா? என்பதை நான் உங்களுக்குச் சொல்லித்தருகிறேன் என்று எங்களை திசை திருப்பி சில விடயங்களை சொல்ல ஆரம்பித்தார்.

நடை நடையாக எங்கள் வீடு நெருங்களையில், என் நண்பன் தந்தையின் கதையை ரசித்தவனாய் எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டான். கொஞ்சத் தூரம் நடந்த களைப்பில் வீட்டில் அமர்ந்தோம்.

தாகத்தை போக்கிக் கொள்ள தண்ணீரைப் குடித்தவர்களாக, தொடர்ந்து சொல்லுங்கள், எனக்கு வீட்டுக்கிப் போக வேண்டும் என்றான் நண்பன்.
மேற்கத்தியர்கள் என்ன செய்கிறார்கள் என்அதற்கு முன்னர், நான் ஏற்கனவே அன்று மாலை சொன்ன மூன்று விடயங்களையும் கவனிக்க வேண்டும் என்று அவைகளை எனக்கு மீண்டுமொரு முறை கூறிக் கொண்டே.........



அன்றாட செயற்பாடுகள்,
பாடசாலை கற்பித்தல் முறை
கிடைத்திருக்கும் நண்பர்கள்

நீங்கள் இருவரும் சிறந்த சிந்தனையாளர்களாக மாற வேண்டுமென்றால் இந்த மூன்று விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும், இதுவரை இவைகள் எப்படி இருந்தது? என்பதுடன் இதற்கு பின் எப்படி இருக்க வேண்டும்? எப்படியான மாற்றங்களை செய்ய வேண்டும் என்பவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நடைநடையாக பேசிக்கொண்டே வந்தார்.

அந்த மூன்று விடயங்களிலிருந்தும் எனது மனதை தைக்கும் விதத்தில் சில செய்திகளை பதிய வைத்தார்.

அன்றாட செயற்பாடுகளில் உள்ள பலவீனங்கள், திட்டமிடலின்மை,  கட்டுப்பாடின்மை, உரிய கடமைகளை கவனிக்காதிருத்தல் போன்ற சில உயிரான பிரச்சினைகள்தான் மனித வாழ்வின் தோழ்விக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை முதன் முதலில் கற்றுக் கொண்டேன்.

அன்றாட செயற்பாடுகளில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டிய 
விடயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகள் அனைத்தும் முடியுமானளவு நேர முகாமைத்துவத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும்

காரணம், இஸ்லாம் நேரம் குறிப்பிட்ட வணக்கவழிபாடுகளை வழியுறுத்தி ஏனைய அன்றாட செயற்பாடுகளையும் நேர வரையறையுடன் செய்யும் படி வேண்டுகிறது.
உதாரணமாக,

"நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.  (அல் குர்ஆன் 3 : 103)
இது போன்று ஒவ்வொரு கடமையையும் நேரம் குறிப்பிட்டு இஸ்லாம் வறையருக்கிறது.


தொடரும்..........


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

4 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

//அன்றாட செயற்பாடுகள்,
பாடசாலை கற்பித்தல் முறை
கிடைத்திருக்கும் நண்பர்கள்//

நல்ல ஆலோசனை நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்

அப்புறம் எப்புடி இருக்கீக

shifa said...

அன்றாட செயற்பாடுகளில் உள்ள பலவீனங்கள், திட்டமிடலின்மை, கட்டுப்பாடின்மை, உரிய கடமைகளை கவனிக்காதிருத்தல் போன்ற சில உயிரான பிரச்சினைகள்தான் மனித வாழ்வின் தோழ்விக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

I'm agree with this point.We have to make plans,nothing hard in the world.

Anonymous said...

Alhamdulillah

Anonymous said...

ஒரு 30 தாண்டாத எதையாவது சாதிக்க துடிக்கும் .....

உங்கள் உளவியல் சமூகத்திற்கு தேவையானது.

thanks