ஹாபிழ்களின் கவனத்திற்கு..........!

முஸ்லிம் சமூகத்தை  விமர்சிக்கின்ற பலர் தங்களுடைய விமர்சனங்களில்  உள்ளடக்கிய விடயங்களில் ஒன்றுதான் அல் குர்ஆனை ஓதத்தெரிந்த பலருக்கு அதன் கருத்து வியாக்கியானம் தெரிவதில்லை என்பது.

குறிப்பாக, எமது ஊர்களில் சிறிய வயதிலேயே ஹாபிழ்களாக பயிற்றுவிக்கப்பட்டு பல நூறு பேர் வெளியேறுகிறார்கள். இவர்களில் எத்தனை பேர் அல் குர்ஆனை அதன் மொழிபெயர்ப்புடன் கற்று பிறருக்கு கற்பிக்கிறார்கள்என்ற ஒரு கேள்வி மிக முக்கியமானதாகும்.

இரண்டு வருட ஒப்பந்தத்தின் பெயரில் 10 வயது சிறார்களை நமது பெற்றோர்கள் ஹாபிழ்களாக ஆக்கப்படும் மத்ரஸாக்களில் சேர்க்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ். நல்ல முயற்சியின் பின் சில வருடங்கள் கடக்கும் போது ஹாபிழ் பட்டம் பெற்றவர்களாக வெளியேறுகிறார்கள்.

சில ஹாபிழ்கள் தொடர்ந்தும் மெளலவி வகுப்பில் சேர்ந்து ஏழு வருடங்கள் கற்றுத் தேறும் போது தான் மனனம் செய்த குர்ஆனை ஓதும் போது அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வதுடன் அதனை வைத்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு பிரசாரம் செய்வதிலும் மும்முரமாக இருக்கிறார்கள்.

பலர் தனது அடுத்தகட்ட கல்வி எப்படி அமைகிறதோ அதன் வழியில் செல்லுகின்ற போது அல் குர்ஆனை விட்டு தூரமாகிப் போகின்ற செய்தி எமது சமூகத்தில் ஏற்பட்டிருக்கிற கவலைக்குரிய ஒன்றாகும்..

10 வயதில் அல் குர்ஆனை முழுமையாக மன்னம் செய்து பட்டம் பெற்று வெளியாகிய பலர் திருமண வயதில் அதனை மறந்து அதனை விட்டு தூரமாகி இருப்பதைக் காண முடிகிறது.

எந்த அர்த்தமும் தெரியாமல் அல் குர்ஆனை முழுமையாக பாடம் செய்து பள்ளிகளில் பணிபுரிவது மூலம் அது அவனுக்கும் அவனைச் சார்ந்த சமூகத்திற்கும் எந்த பயனும் இல்லாது போகிறது.

ஹாபிழ்களை உருவாக்கும் அனைத்து அமைப்பினருக்கும் 'மாற்றங்கள் தேவைசில செய்திகளை பணிவுடன் முன்வைக்கிறது:

ல் குர்ஆனை எந்தளவு திறமையாக, வேகமாக மன்னம் செய்துகொள்ள வேண்டும் என்று உங்கள் மாணவர்களிடத்தில் எதிர்பார்க்கிறீர்களோ அந்த அளவு தூரம் அதற்கான வியாக்கியான்ங்களை புரிந்து கொள்ளும் முறையை கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஹாபிழ்களாக வெளியேற 2 வருடங்களுக்கான பாடத்திட்ட்த்தை வைத்திருக்கும் அனைத்து மத்ரஸாக்களும் இன்னும் ஒரு வருடத்தை அல்லது 6 மாத கால பகுதியை அதிகரித்துக் கொண்டு, அல் குர்ஆனை விளங்கி ஓதும் முறையை அதன் அடிப்படையை கற்றுக்கொடுக்கும் புதிய ஒழுங்கு முறையை கடைபிடிக்க முன் வாருங்கள்.

ரு வைத்தியசாலைக்கு தினம் தினம் புதிய நோயாளிகள் வந்தவண்ணமே இருப்பார்கள். அங்குள்ள வைத்தியர்கள் புதிதாக வருகின்ற நோயாளிகளின் பக்கம் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தால் பழைய நோயாளிகளின் நிலை என்ன ஆகும்என்பதை இந்த இடத்தில் ஞாபக மூட்டிப் பார்க்க ஆசைப்படுகிறேன்.

ஹாபிழ்களை உருவாக்கும் முயற்சி மட்டுமே எங்களுடையது என்று செயற்படும் மத்ரஸாக்களுக்கு இந்த உதாரணம் பொருந்தி வந்தால் எடுத்துக்கொண்டு அதன் படி செயற்பட முன்வாருங்கள்.

அல் குர்ஆனை இலகுவில் விளங்கிக்கொள்ளும் வகையான பாடத்திட்டங்கள் உலக மட்டத்தில் அறிமுகமாக்கப்பட்டு வருகின்றன, இதனை முன் உதாரணமாக வைத்துக்கொண்டு இது போன்ற தூய முயற்சியை முன்னெடுக்கலாம்.

மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் அறிஞர்கள் ஹாபிழ்களாக இருந்து அல் குர்ஆனை அதன் அர்த்த்த்தை சொந்த மொழியில் வியாக்கியானிக்கத் தெரியுமாக இருந்தால் அதன் பெறுமதி மதிக்கமுடியாதது.

அதே நேரம் ஹாபிழ்களாக வெளியேறும் அனைத்து அல்லது அதிகமான மாணவர்கள் மார்க்கத்தை பரப்பும் தூய பணிக்கு வந்தால் அதன் பெறுமதி அதை விடவும் பெறுமதியானது.

அல் குர்ஆனை அதன் மொத்தத்தையும் மனனம் செய்துகொள்கின்ற மாணவர்களில் யார் அதன் அர்த்தத்தை படித்து, விளங்கி கொள்ளும் சக்தி பெறுகிறார்களோ அவர்கள் மட்டும்தான் இஸ்லாமியப் பணியை சரிவர செய்து வருகிறார்கள்.

அல் குர்ஆனை அதன் மொத்தத்தையும் மனனம் செய்துகொள்கின்ற மாணவர்களில் யார் அதன் அர்த்தத்தை படித்து, விளங்கி கொள்ளும் சக்தி பெறுகிறார்களோ அவர்கள் மட்டும்தான் தங்களுடைய வாழ்க்கையில் அதன் போதனைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

அல் குர்ஆனை அதன் மொத்தத்தையும் மனனம் செய்துகொள்கின்ற மாணவர்களில் யார் அதன் அர்த்தத்தை படித்து, விளங்கிக் கொள்ளும் சக்தி பெறுகிறார்களோ அவர்கள் மட்டும்தான் பிறரும் இந்த மாதிரி அல்லது இதை விட தரமானவர்களாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக முயற்சிக்கிறார்கள்?

அன்பின் இஸ்லாமிய அறிஞர்களே! 
எமது சமூகத்தில் காணப்படுகின்ற இது போன்ற குறைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை முன்வைத்து ஒழுங்குபடுத்த முன்வருமாறு தயவாய் வேண்டிக் கொள்கிறேன்.



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

//அல் குர்ஆனை எந்தளவு திறமையாக, வேகமாக மன்னம் செய்துகொள்ள வேண்டும் என்று உங்கள் மாணவர்களிடத்தில் எதிர்பார்க்கிறீர்களோ அந்த அளவு தூரம் அதற்கான வியாக்கியான்ங்களை புரிந்து கொள்ளும் முறையை கற்றுக்கொடுக்க வேண்டும்// சிந்திக்க வேண்டிய, நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டிய நல்ல கருத்து....... நன்றி, மதுரை ராஜா