என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 12

தொடர்   -பன்னிரெண்டு

மரத்திற்கு கீழ் படுத்திருந்த ஒருவன் தான், பூமியின் ஈர்ப்பு விசையை உலகிற்கு அறிமுகப்படுத்தினான் என்று படித்த ஞாபகம் எனது சிந்தனையில் உதித்தது.

பாடசாலையில் எப்போதும் வடிவமைக்கப்படுள்ள பாடத்திட்டங்களை மையமாக வைத்துத்தான் கற்பித்தல் நடைபெறும்.
ஜனவரியில் கையில் எடுத்த புத்தகம் டிசம்பர் இறுதிப் பரிட்சை நெருங்கும் போதுதான் அது இறக்கி வைக்கப்படும்.

இடையில் ஏனைய பாடங்கள், விடயங்களின் தேவை குறித்து மாணவர்களோ ஆசிரியர்களோ சிந்திப்பதாக தெரியவில்லை.
திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் பாட நூல்களை மட்டுமே, கிடைக்கின்ற நேரங்களில் கற்பிக்க அனுமதி இருக்கிறது, அதுதான் முடியும். அதற்கு எந்த எதிர்ப்பும் விமர்சனமும் நாம் சொல்வதற்கில்லை.
ஆனால் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் சில நேரங்களை ஒதுக்கி நாளைக்கு எதை கற்பிக்க வேண்டும் எந்த செய்தியை புதிதாக மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு தயாராக வேண்டும்.

முதல் நாள் இரண்டாம் நாள் முன்றாம் நாள் மந்தைகள் இடையனுக்குப் பின்னால் போகும், இடையன் மந்தைகளுக்கு முன்னால் போவார், நாலாம் நாள் மந்தைகள் இடையனுக்கு முன்னால் சென்று உரிய இடத்தை அடைந்து விடும். இது தான் அதிக பாடசாலைகளில் நடக்கும் நாடகம்.

கற்பித்தலில் 15 க்கும் மேற் பட்ட முறைகள் இன்று நடைமுறையில் இருக்கின்றன, அவைகளை ஆசிரியர்கள் தெரிந்து கொண்டு மாணவர்களின் விருப்பு வெறுப்புக்களை அடையாளம் கண்டுகொண்டு தன்னுடைய பணியை பொறுப்புவாய்ந்தாற் போல் செயல்படுத்த வேண்டும்.

தேடல் கல்விமுறையை மாணவர் பலக்கத்திற்கு அறிமுகப்படுத்தி அவர்களை ஆய்வு முயற்சியிலும் தேடல் முயற்சியிலும் ஈடுபடுத்த வேண்டும்.

500 கிராம் தேனை சேமிப்பதற்கு 4கோடி பூக்களை, தேனிக்கள் சந்திக்க வேண்டும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு சொல்லுகிறது.

ஆனால் ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்பிற்கு சித்தியடைவதற்கு 9 பாடப்புத்தகங்களில் தேர்வு செய்யப்பட்ட பாடங்களை படித்தாலே போதும் என்பது நமது சிறுசுகளின் நிலை, அப்படியென்றால், நம் சிறுசுகளால் எப்படி விஞ்ஞானிகள் போல் சிந்திக்க முடியும்?!

காலையில் வகுப்பிற்கு நுழையும் ஆசிரியர், தனக்குச் சொந்தமான தாரகை மந்திரமான ‘ கற்க கற்க கசக்கும், கற்ற பின்பு இனிக்கும் என்று வகுப்பைத் துவங்குகிறார்.

கற்க கற்க கசக்கும்........ என்பதை கேற்கும் பேதே பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன் மாணவர்களுக்கு படிப்பு கசக்க ஆரம்பித்துவிடும்.
இது மூளை வளர்ச்சியை பாதிப்படையச் செய்கிறது, தூய்மையான திறந்த சிந்தனையை தோற்றுவிப்பதற்கு எதிரான சொற்பிரயோகங்கள் இவைகள்.
எப்போதும் கல்வி என்பது கற்க கற்க இனிக்கும் கற்ற பின்பும் இனிக்கும்அதுதான் கல்விக்குரிய தனித்தன்மை என்பதை ஆரம்பத்திலிருந்தே மாணவ சிறுசுகளுக்கு போதிக்க வேண்டும்.
சிறுவர்களாகிய நாங்கள் விஞ்ஞானிகள் போல் சிந்திப்பதற்கு தடையாக இருக்கும் காரணங்களாக மூன்றாவது எனது தந்தை எனக்குச் சொன்னது, ‘கிடைத்திருக்கும் நண்பர்கள்

நண்பர்கள் எப்படி எமது சிந்தனை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்? என்று எனது தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சில நாற்கள் எதிர்பார்த்திருந்தேன்.......

அன்று பாடசாலையில் படித்த ஒரு கணித வாய்ப்பாட்டை செய்து பார்க்கலாம் என்று எனது அறையில் தயாராகிக் கொண்டிருக்கும் போதே என்னைத் தேடி வந்தார் என் தந்தை.

அப்போது தான் நான் எதிர்பார்த்திருந்த அந்த விடயத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமானார்.

மகனே! கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடங்களும் மாற்றங்களுக்கான ஒவ்வொரு சந்தர்ப்பங்கள் என்பதை சொல்லி ஆரம்பித்தார்.

நாற்காலியை சற்று பின் நகர்த்தி அமைதியாய் இருந்து அவர் வார்த்தைகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

”.......ஒவ்வொரு மாணவனும் அவனது வாழ்க்கையை தினமும் மூன்று விதமாக வகைப் படுத்திற் கொள்கிறான்.

ஒன்று, அவனது பெற்றோருடன் செலவிடும் நேரங்கள், பெற்றோரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஆத்திரத்திற்கும் இடையில் துள்ளிப் பாய்ந்து சிறித்து பேசி கடத்தும் காலம்.

இரண்டு, பாடசாலை நேரம், தன் ஆசிரியர் மீது கெளரவமும் மரியாதையும் கொண்ட ஒரு பயம் மற்றும் தன் பாடத்திட்டங்கள் ஏற்படுத்தும் கஷ்டம். இவைகளுக்கிடையில் களிந்து செல்லும் பொழுதுகள்.

மூன்றாவது, கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சந்திக்கும் நண்பர்கள்.
நண்பர்களுடன் களிக்கும் நேரங்களை அது புதுமையான உலகமாக சிலர் பார்க்கின்றனர். காரணம், நண்பர்கள் இருக்கும் போது நினைத்ததை பேசலாம், நினைத்ததை செய்யலாம் என்கிற தைரியம் அவகளின் நினைவை நிலைகுலையச் செய்கிறது.

சிறியவர்கள் அதிகம் தேவையற்ற, தடுக்கப்பட்ட விடயங்களை கற்றுக்கொள்வது தனது நண்பர்களிடமிருந்து என்பதை எவரும் மறுப்பதற்கில்லை என்று மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே ......
தந்தை தனது பேச்சை தொடரும் போதே யார் எனது கெட்ட நண்பர்கள் என்பதை மனத்திரையில் பட்டியலிட ஆரம்பித்தேன்.

எங்கோ எப்போதோ ஒவ்வொரு நண்பரிடத்திலிருந்தும் ஏதோ ஒரு கெட்டதை படித்துக் கொள்கிறேன் என்பது மட்டும் என் மனத்திரையில் வெண்மையாகத் தென்பட ஆரம்பித்தது.

தந்தை சொன்னார், ஒரு ஆசிரியர் சொன்னால் அதை கேற்பதில் அசட்டையாக இருப்போம், ஒரு தந்தை சொன்னால் அதை செவி சாய்ப்பதை விட்டும் அன்பு தடுக்கிறது, ஆனால் நண்பன் சொன்னால் அதை அப்படியே ஏற்று அடுத்த நிமிடம் செயல் வடிவம் கொடுக்கிறான். எந்த தடையுமில்லாமல்.

இது தான் நண்பர்களால் கெட்டுப்போகிறார்கள், நண்பர்கள் எமது சிந்தனைக்கு தடையாக இருக்கிறார்கள் என்று சொல்லுவதற்கு காரணம்.
நேற்று இரவு தன் வீட்டில் பார்த்த படத்தை வகுப்பில் வைத்து ஒரு நண்பன் சொல்லுகிறான்.

தன் வீட்டு கோழிக்கூட்டில் முட்டை கலவெடுத்ததை இன்னொருவன் தனது சாதனையாக பகிர்ந்து கொள்கிறான்,

பக்கத்து நண்பன் கொப்பியை பார்த்து அடித்து சரி வாங்கியதை 

மூன்றாவது நண்பன் சொல்லுகிறான்,
கணிதப் பாடத்தின் மீது கொண்ட வெறுப்பால் கணித வாத்தியாருக்கு அவன் சூட்டிய பட்டப் பெயரை நான்காம் நண்பன் பகிர்ந்து கொண்டு புன்னகிக்கச் செய்கிறான்.

இப்படியே நண்பர்கள் கூடும் அவைகள், பல பக்கங்கள் எழுதும் அளவுக்கு தொடர்கின்றன.

சிறிய வயதிலேயே புகைப்பிடிப்பதற்கும் இந்த அவைகளும் ஒரு காரணம்.
பெறுமதியான நேரங்களை வீணடிப்பதற்கும் இந்த நண்பர்களும் காரணம்.
சில போது, பெற்றோரை-ஆசிரியரை எதிர்ப்பதற்கு பயிற்சி எடுப்பதும் இந்த நண்பர்களிடத்தில் தான்.

இப்படி பட்டியலிட்டுக்கொண்டு என்னை நிமிர்ந்து பார்த்தவர் என் கண்களில் கண்ணீர்த் துளிகள் வழிந்ததை அவதானித்தார்
என்னை அறியாமல் வழிந்த கண்ணீர்த் துளிகள், எனது கடந்த காலத்தை எனக்கு நினைவுட்டியது.

சில நேரங்களில் நான் செய்த சின்னச் சின்ன, பெரிய பெரிய குரும்புகளுக்கு எனது சில நண்பர்கள் காரணமாக இருந்தது ஞாபகத்திற்கு வந்தது.

படரும்.....எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்..

அன்புச்சகோதரரே உங்களின் ஆக்கம் அருமையாக உள்ளது, கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடங்களும் மாற்றங்களுக்கான ஒவ்வொரு சந்தர்ப்பங்கள்’ போன்ற வாசகங்கள் சிந்தனையை தட்டிஎழுப்புகின்றன, அருமையான சைகலாஜிகல் அப்ரோச்.

டீன்ஏஜ் பிள்ளைகள் இருப்பவர்கள் இந்த விசயங்களை தங்களின் குழந்தைகளுக்கு சொல்லுங்கள். இதுபோன்ற விஷயங்கள், வெளிப்படையான கலந்துரையாடல்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையே மாற்றிவிடும். இன்ஷால்லாஹ்

ahamed minhaj