என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 13


தொடர்   -பதின் மூன்று:

எனது தோளை தட்டி விட்டு, இப்போது உனக்குத் தேவை நல்ல புன்னகை, அமைதியான சிரிப்பு, அது உன் இதயத்தை எப்போதும் உயிர் வாழச் செய்யும் என்று என்னை ஆறுதல் படுத்தினார்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள், மலர்ந்த முகத்தோடு உன் சகோதரனைச் சந்திப்பது நன்மைக்குரியது’ (ஆதாரம் முஸ்லிம், திர்மிதி)
                                பூக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? என்று என்னைப் பார்த்து, என் கவலை நிறைந்த சிந்தனையை திசைதிறுப்புவது போல் கேட்டார்.

நான் பூவை பற்றி சிந்திக்க முற்பட்டேன்..............

பூக்கள் காலையில் மட்டும் சிரிக்கும், ஆனால் மனிதர்கள் காலையிலும் மாலையிலும் சிரிப்பார்கள் என்று கோடி கோடியாக தொடர் புன்னகையை பூத்துக்கொண்டு உன் வேளையை தொடர், மீண்டும் சந்திப்போம், இன்னும் நிறைய பேசுவோம் என்று சொல்லிவிட்டு இடம் நகர்ந்தார்.

வீட்டை விட்டு வெளியே கால் வைக்கும் நிமிடம் தொட்டு நான் காணும், சந்திக்கும் ஒவ்வொரு நண்பர்களையும் இடைபோட ஆரம்பித்தேன், தனித்தனியாக வடிகட்டி பார்க்க கடமைப்பட்டேன்.

தந்தையின் வார்த்தைகளும் உபதேசங்களும் என் உள் உணர்வுகளில் ஆளமாய் பதிந்து விட்டது.

நண்பர்களில் நல்லவர்களை தனியாகவும் கெட்டவர்களை தனியாக பிரித்துக் கொள்ளும் அந்த தூய பணியில் என் சிந்தனை ஓடியது.
என் தந்தையின் உபதேசத்தை உள்வாங்கிக்கொண்டு யதார்த்த பூர்வமாக நடைமுறைப் படுத்த பல நாற்கள் எடுத்தன, ஒவ்வொரு நண்பரோடும் பேசும் போது வார்த்தைகளை வடிகட்டிக்கொண்டேன், பலகும் போது பக்குமாய் என் நடத்தைகளை கவனித்துக் கொண்டேன்.

தேவையற்ற வார்த்தைகளையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் என் பட்டியலில் குறைந்து போனார்கள், என் நேரங்களை திருடும் நண்பர்களையும் விட்டு விலக ஆரம்பித்தேன்.

சில வாரங்கள் கடக்கும் போதே என் சிந்தனை தேவையற்ற செய்திகளிலிருந்து கொஞ்சம் விடுதலை பெற்று, அமைதி பெறுவதை உணர ஆரம்பித்தேன்.

சிறு துளி பெரு வெல்லம் போல் சிறு சிறு நடத்தைகள், என்னை பெறிய மாற்றங்களுக்குள்ளாக்கியது. இப்போது இயேசு கிறிஸ்து (ஈஸா அலை) அவர்கள் சொன்ன ஒரு செய்தி எனக்கு ஞாபகம் வருகிறது. 

"உண்மையைத் தேடுங்கள் அது உங்களை அமைதிப்படுத்தும்”  (Jesus said, “Seek the truth, and the truth will set you free.”)

சிறுசுகள் விஞ்ஞானிகள் போல் சிந்திக்கிறார்கள் என்பதை எமது மனதில் விதைக்க என் தந்தை போல் மண்ணில் விதைக்க பல தந்தைகள் உருவாக வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

ஆனால் ஆசிய நாடுகளில் எமது சூழலில் வாழும் தந்தைமார்களை இப்படிச் சொல்ல நினைக்கிறேன்,

தன் மகன் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் பார்த்து வாசிக்கக் கற்றுக் கொள்ளும் வரை காத்திருக்கிறார்கள் தந்தைமார்கள்.
அடுத்த நாளே விமான நிலையத்தில் பாய் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள் அறபு நாடுகளுக்கு பணம் பிளைக்க.....

ஆசிய நாடுகளில் குறிப்பாக உலக வரைபடத்தில் மூன்றாம் மண்டல நாடுகளாக இருக்கின்ற இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் என்று இந்த வெளிநாட்டு நோய் நீண்டுகொண்டே போகிறது.

பாடசாலையில் இருக்கும் போதே நமக்கு படிப்பு கை கொடுக்காவிட்டாலும் வெளிநாட்டு உழைப்பு கைகொடுக்கும் என்ற இரட்டைச் சிந்தனை தலைவிரித்து ஆடுகிறது தலைவர்களாக தலைநிமிர வேண்டிய சிறுவர்களிடத்தில்.

சின்ன வயதுடையவர்களின் சிந்தனை சிதறல்கள் வந்துவிடாமல் அவர்களை பொத்தி பொத்தி வளர்க்க வேண்டும் என்று என் தந்தை எனது தாய்க்கு அடிக்கடி உபதேசம் செய்வதை பார்த்திருக்கிறேன்.

அதனால் அவரது பேச்சு, சிரிப்பு, நடத்தை, என்று எல்லாமே எனக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என முயற்சிப்பது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

நான் தூங்குவதற்காக கட்டிலில் சாய்ந்துகொண்டிருக்கும் போது எனது தந்தை தாயிடம் என்னைப் பற்றி சில விடயங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அதில் குறிப்பாக எனது மனம் சிந்தனை பாதிக்காத விதத்தில் நடந்து கொள்ள வேண்டிய சில ஒழுங்குகளை மனப் பாடம் செய்து வைத்தது போல் பட்டியலிட்டுக் கொண்டே போனார்.

என்னை அழைத்து பக்கத்தில் வைத்துக் கொண்டு எனக்குச் சொல்லுவது போன்று தெளிவாக அவரது குரல் எனது செவியைத் தொட்டது.
நடு நிசியானது, நான் அவைகளை செவி தாழ்த்தியவாரே என்னை அறியாமல் உறங்கி விட்டேன்; அவர் சொன்னதில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இருப்பதை கொண்டு இன்பிப்பது, இருப்பதில் அதன் இருப்பை கண்டுபிடிப்பது என்று ஆரம்பித்தது அவரது வார்த்தைகள்.

வீட்டுத்தோட்டங்கள் செய்யும் போது அதற்கான விதைகளை கடைகளில் வாங்குபவர்களும் உண்டு வாங்காதவர்களும் உண்டு.

உணவுக்காக வாங்கும் மரக்கறிகளில் மிஞ்சும் அல்லது அழுகிப்கிப்போகும் அல்லது உணவு தயாரிக்க தயாராகுவதில் வெளியாகும் விதைகளை பாதுகாத்து தாணியமாக்கி வீட்டுக்குத்தேவையான பயிராக மாற்றிக்கொள்ளும் பெண்களும் உண்டு.

வீட்டுத்தோட்டம் செய்வதற்காக கடையில் பணம் கொடுத்து விதை வாங்கி பயிரிட்டு வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்பவர்களும் உண்டு என்று உதாரணப்படுத்தினார் இருப்பதை கொண்டு இன்பிப்பதற்கு.
உணவு உண்ணும் போது உண்ணுகிற உணவில் சீனி நோய் வருமா? அல்லது இருக்கும் சீனி நோயை கட்டுப்படுத்துமா? என்பதை மாத்திரம் தேடிப்பார்க்கும் ஊரார் நாம். 

ஆனால் நாம் உண்ணுகிற உணவு எப்படி உண்டானது? எப்படி உண்டாக்குவது? அல்லது இது இல்லாத போது அதற்கு பதிலாக வேறு ஒன்றை தயாரிக்கலாமா? என்று சிந்திக்கும் சாரார் அல்ல நாம் என்று கவலையான குரலில் காரமான வார்த்தையில் வேறு விடயத்திற்கு கடந்து சென்றார்.

சன்லைட் சவக்காரத்தை பயன்படுத்தும் போது இதற்கு பதிலாக வேறு ஒன்றை அல்லது இது போன்ற வேறு ஒன்றை உருவாக்கலாம் என்று சிந்தித்த ஒரு வாடிக்கையாளர் உற்பத்தியாக்குவது தான் மூன்லைட் சவர்க்காரம்.

கொகா கோலா (Coca cola)வை குடித்த ஒரு சாரார் தான் சம் சம் கோலா (Zam Zam cola)வை தயாரிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றனர் என்று விளக்கிச் சொன்னார் இருப்பதில் அதன் இருப்பை கண்டுபிடிப்பது என்ற வார்த்தைக்கு.

எம் மகன் அந்த சிந்தனை உடையவனாக வளர்க்கப் பட வேண்டும் என்பதை நான் கனவு காண்கிறேன் என்று தாயிடன் தாராள வார்த்தைகளால்.........

அதற்கு முன் ஏற்பாடாக அவனது சிந்தனைத் திறனையும் செயற்பாட்டுத் திறனையும் ஊக்குவிக்கும் விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லலானார்.
1.  
          1.   மன அழுத்தத்தில் இருந்து எம் பிள்ளைகளை விடுவிப்பதற்காக நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); “    (அல் குர்ஆன் 8-60

2. பிள்ளைகள் அவர்களிடத்தில் இருக்கும் சில குறைகளை கண்டுகொண்டு அடிக்கடி அவைகளைப் பற்றி குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய தேவை இல்லை, அது தவறானது என்பதை உணர்த்த வேண்டும்.

3. தேவைப்படும் போது சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். உதாரணமாக கெட்ட நடத்தையுடைய நண்பர்களை மாற்றுதல்,

புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வீட்டுத் தோட்டங்கள் மீது ஆர்வப் படுத்துவது போன்றவை.

4. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்தால் பிள்ளைகள் மனஅழுத்தத்தில் இருந்து தானாக விடுபடுவார்கள்.

5. பிள்ளைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் வேண்டும்.

6. பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு விடயத்தில் மன அழுத்தம் ஏற்பட்டுவிட்டால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் காண்பிக்க வேண்டும். குறைந்தது தானாக, தனியாக இருந்து அழுது தீர்த்துக்கொள்ள ஆலோசனை வழங்க வேண்டும்.

7. தோல்விகளும், துயரங்களும் எல்லோருடைய வாழ்க்கையிலும் மாறி மாறி வரும், எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை அவர்களுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுவோம். நிச்சயமாக கஸ்டத்துடன் தான் இலகு உள்ளது’        (அல் குர்ஆன் 94 : 6)

8. பிள்ளைகளுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளிப்போம். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

9. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா? என்பதை கவனிக்க வேண்டும், சரியான முறையில் செய்யும் போது உரியவிதத்தில் அவர்களை பாராட்ட வேண்டும்.

10. பிள்ளைகள் வயிறார உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்வதுடன், வைத்தியர் ஆலோசனையுடன் அவர்களுக்குப் பிடித்த, நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும்.

படரும்.....


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

7 comments:

Anonymous said...

அருமையான ஆக்கம் சகோ. ரில்வான்! வாழ்த்துகள் மேலும் மேலும் உங்கள் ஆக்கங்கள் குழுமத்தில் தொடரவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.....!

Ibnu Jamaal

Anonymous said...

தன் மகன் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் பார்த்து வாசிக்கக் கற்றுக் கொள்ளும் வரை காத்திருக்கிறார்கள் தந்தைமார்கள்.
அடுத்த நாளே விமான நிலையத்தில் பாய் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள் அறபு நாடுகளுக்கு பணம் பிளைக்க.....

super

Anonymous said...

பூக்கள் காலையில் மட்டும் சிரிக்கும், ஆனால் மனிதர்கள் காலையிலும் மாலையிலும் சிரிப்பார்கள் என்று கோடி கோடியாக தொடர் புன்னகையை பூத்துக்கொண்டு உன் வேளையை தொடர்,

i got some very good words from your article.
thanks

Shifa said...

Interesting
“தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்தால் பிள்ளைகள் மனஅழுத்தத்தில் இருந்து தானாக விடுபடுவார்கள்.”
Why don’t parents behave as friends.
By this, they can feel more secure & they became more open .At the same time it helps parents to know their challenges ,wants and needs.

Issadeen Rilwan said...

சகோதரர் இப்னு ஜமீல், பெயர் குறிப்பிட்டாச் சென்ற ஒரு வாசகர் மற்றும் ஷிபா ஆகியோரின் ரசனை மிகு வாசிப்பும் பெறுமதி மிகு கருத்துக்களும் எம்மை உற்சாகப் படுத்துகின்றது,
எமது வலைபகுதிக்கு வரும் நீங்களும் உங்கள் மனதில் உள்ளதை திறந்து சொல்லுங்கள்,
அது எங்கள் வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமையும்.
நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

தங்கள் தளத்திற்கு இன்று தான் வந்தேன். அனைத்தயும் ஆர்வமுடன் படித்தேன்.மிகவும் ஆக்கப்பூர்வமான குர் ஆன் வசனங்களும்,கருத்துக்களும்,படங்களும் கருத்தைக் கவர்ந்தன.
வாழ்த்துக்களும்,பாராட்டுகளும்.

Issadeen Rilwan said...

தொடரட்டும் உங்கள் வருகை, நன்றிகள், உங்கள் ஆலோசனைகளும் வரவேற்கத்தக்கது.