என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 14

தொடர்   -பதினான்கு:
இது போன்ற இன்னுமொரு செய்தியை வேறு ஒரு சந்தப்பம் வரும் போது தாய்க்கு ஞாபக மூட்டிக்கொடுத்தார்.
......எனது தாயுடன் நான் கணிதப் பாடப் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஒரு முக்கியமான வாய்ப்பாட்டை மறந்ததற்காக எனது தாய் என்னை கடிந்து பேசினாள்.
பக்கத்து அறையில் இருந்த தந்தை அதை செவியுற்றிருப்பார் என நினைக்கிறேன், காரணம் எனது தந்தை, தாய்க்குச் செய்த உபதேசம் என்னை அப்படிதான் சந்தேகிக்கச் செய்தது.
அவர் முக்கியமாக சில விடயங்கள் குறித்து எனது தாய்க்குச் சொல்லிக்கொடுத்தார்:
பிள்ளைகளுடன் இருக்கும் போது அவர்களின் நடத்தைகளை கவனித்துப் பார்க்க வேண்டும், சில பிள்ளைகளில் சில குறைகளை காணலாம், அது பிறப்பு ரீதியாக அல்லது சாதாரண வேலைப்பழு அல்லது வேறு ஏதாவது ஒரு நிகழ்வால் பாதிக்கப்பட்டதாக இருக்கும்.
1.    களைப்பு, சோர்வு (fatigue);
2.    எளிதில் கோபம் கொள்கிற சுபாவம் (irritability, angry outbursts, impulsiveness);
3.    சுறுசுறுப்பற்ற சுபாவம் (passive behavior);
4.    மந்த நிலையுடைய (depression) தோற்றம், நடத்தை;
5.    அதிக மறதி தன்மை (forgetfulness);
6.    திட்டமிடலில் குறைந்தளவான திறன்கள் (poor organizational skills);
7.    ஒழுங்குமுறையை பேணுவதில் சிக்களுடைய போக்கு (difficulty following directions);
8.     தெளிவற்ற உச்சரிப்பு முறை (immature behavior);
9.    பொறுத்தமற்ற காம உணர்ச்சிவசப்படக்கூடிய போக்கு (inappropriate sexual behavior).
என்று சில விடயங்களை விளக்கத்துடன் பகிர்ந்துகொண்டார்.
மனித மூளையை தீய சக்திகளிலிருந்து பக்குவமாய் பாதுகாத்து பன்படுத்தும் போதுதான் அது தெளிவடைகிறது என்பதை சொல்லுவதில் என் தந்தை முதன்மையானவராக எனக்கு தென்பட்டார். எந்த நடத்தையும் அதன் வெளிப்பாடு சிந்தனையை பாதிக்கக்கூடாது, அது மனிதனை கெட்ட வழிக்கு வழிகாட்டும் என்பது அவரிடமிருந்து அடிக்கடி கற்க கூடிய பாடமாக இருந்தது.
அதற்கான காரணத்தை அல் குர்ஆனிய வரலாறு கற்றுத் தருகிறது,
அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளானனாகவும் இருக்கின்றான்" (என்றும் கூறினார். அல் குர்ஆன் 12 : 53)
யூசுப் (அலை) அவர்களுடன் மோஷமான நடத்தையில் ஈடுபட முயற்சித்த எகிப்திய மன்னரின் மனைவி தீமையை உணர்ந்து அல்லாஹ்விடத்தில் மீண்டு, அனுபவ ரீதியாக தன் மனதின் நிலையை வர்ணித்துக் கூறும் போது சொன்ன வார்த்தைகள் தான் நான் மேலே சொன்னவை.
அதேயே எனது தந்தை நான் மனரீதியாக எந்த சந்தர்ப்பங்களிலும் பாதிப்புக்குள்ளாக கூடாது என்பதை எனது தாய்க்குச் சொல்லிவைத்தார்.
இரும்பு துருப்பிடிக்காமல் இருக்கும் வரை அதன் பெருமதி கருத்தில் கொள்ளப்படும், பெருமதி கணக்கெடுக்கப்பட, துருப்பிடிக்காத இடத்தில் இரும்பு வைக்கப் பட வேண்டும்  இது இரும்புக் கடைக்காரன் தன் வேலை ஆலுக்குச் சொல்லும் உபதேசம்.
சிந்தனையை தூய்மையாக பார்த்து, காத்து, அதன் பாவணையை பல் மடங்காக்கிக் கொண்டால் சாதனைக்கு எல்லை வானம் தான் என்பது நாம் எமது பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டிய உபதேசம்.
பிள்ளைகளின் சிந்தனையை புதிய, மாற்று வழியில் முடக்கிவிடுவது சிந்தனை விருத்தியையையும் புதிய கண்டுபிடிப்புக்களுக்குமான சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தும்.
சிறுவர்கள் விஞ்ஞானிகள் போல் சிந்திக்கின்றார்கள், சிந்திக்கும் திறன் கொண்டவர்கள் என்பதற்கு மேல் சொன்ன சில விடயங்கள் துரிதமாக கவனத்தில் கொள்ளப் பட வேண்டியவைகளாகும்.
நீண்ட நாள் எனது உள்ளக் கிடக்கையில் புதையுண்டிருந்த ஒரு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் தேடி நின்றேன்.
அப்போதுதான் அவர் தானாகவே முன்வந்து நமது கலந்துரையாடலில் என்ன சந்தேகங்கள் இருக்கின்றது? என்று கேள்வி எழுப்பினார்.

புதிய சிந்தனைகள் எப்படி தோற்றம் பெறுகின்றன? என்று தந்தையிடன் கேட்டேன்.
சிரித்துக்கொண்ட தந்தை, நிதானமாக, இது அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று, இருந்தாலும் அதன் ஆரம்பத்தை சொல்லித்தருகிறேன், முடிந்தால் உனக்கு சாதகமாக பாவித்துக்கொள் என்று தொடர்ந்தார் தந்தை.......
விஞ்ஞானம் , அறிவியல், மருத்துவம், உளவியல், தத்துவவியல், கணிதவியல் என்று ஒவ்வொரு துறையும் வானைத்தொடும் உயரத்திற்கும் சூரிய சுழற்சியின் வேகத்திலும் வீறு நடைபோட ஒரு சில காரணங்கள் அடிப்படையாக அமைகின்றன.
குறிப்பாக, விஞ்ஞானிகளின் சிந்தனைவியல், அறிவியல் கண்டுபிடிப்புக்களின் வெற்றிக்கு அவர்கள் ஒரு சில அடிப்படைகளை தொனிப்பொருளாக எடுத்துக்கொண்டு அதன் முடிவு வரை தொடர் முயற்சியுடன் செயற்படுவது தான் காரணமாகும். அதன் முடிவு, ஒரு பொருளின் ஒரு தத்துவத்தின் கண்டுபிடிப்பாகிறது.
நூற்றாண்டுகளில், கண்டுபிடிப்புக்கும் அறிவியளுக்கும் சிறந்ததாக சொல்லப்படுவது 11 முதல் 16வரையிலுள்ள நூற்றாண்டுகளாகும். இந்த காலப் பகுதிகளில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட ஒரு தனி எழுச்சி இருக்கிறது....
அப்படி என்றால் இன்றைய அறபு நாடுகளா? என்று தந்தையின் வார்த்தைகளுக்குள் குறிக்கிட்டு ஒரு கேள்வியை விவேகமாய் சொறுகினேன்.
ஆமாம், இன்றைய அறபு நாடுகளின் வாழ்ந்த நேற்றைய அறிஞர்கள், விஞ்ஞானிகள் தான் அவர்கள் என்று சொல்லிக்கொண்டு போனார்.
ஆஹா, கேட்க விசித்திரமாக இருக்கே என்று பதைபதைப்புடன் செவி தாழ்த்திக் கொண்டேன்.
கண்டுபிடிப்புக்களின் அடிப்படைகளுக்கு அவைகளை படைத்த கடவுளின் வேத வாக்கியங்கள் தான் அடிநாதம் என்று சொன்னார்.
அது எப்படி என்று வியப்புற்றுக் கேட்டேன்.
நிறையச் சொல்ல இருக்கிறது என்று கூறி பெறுமூச்சு விட்டார்.....

படரும்..............


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: