(தசாப்தங்கள் கடந்தும் வெளிநாட்டு உழைப்பு)
இன்ஷா அல்லாஹ், நாளை 01/02/2011 ஒரு புதிய தலைப்பு எடுத்துக்கொள்ள தயாராகி வருகிறோம், அதற்கு முன் தசாப்தங்கள் கடந்தும் வெளிநாட்டு உழைப்பு பற்றி உங்கள் கருத்தைச் சொல்லுங்க....
“நேரம் for கருத்துப் பரிமாற்றம்” மாற்றங்கள் தேவை யின், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.
முஸ்லிம் உலகம் சிக்கத்தவிக்கும் நவீன பிரச்சினைகள் தொடர்பாக அனைவரதும் கருத்துக்களை சேகரிப்பதற்காகவும் அதன் மூலம் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் சாத்தியமான மாற்றங்களையும் உண்டுபண்ணுவதற்கான ஒரு விஷேட திட்டமே இது.
இந்த கருத்துப் பரிமாற்ற பகுதியில் வெளியிடப்படும் தலைப்பைக் கவனத்தில் கொண்டு,அது தொடர்பான சாதக பாதகங்கள், தவிர்க்க வேண்டியவை, பின்பற்ற வேண்டியவை குறித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டலில் பதியவும்.
கொடுக்கப்பட்ட உங்கள் கருத்தைக் கொண்டு முழுமையான கட்டுரையாக வடிவமைக்கப்பட்டு மாத முடிவில் உங்கள் பார்வைக்கு வழங்கப்படும்.
இன்ஷா அல்லாஹ், மாதா மாதம் புதிய புதிய தலைப்புக்களில் கருத்துச் சேகரிப்பு நடைபெரும்.
சமூகத்தின் தேவை கருதி தயவு செய்து உங்கள் ஆலோசனைகளை இங்கு பதியும் படி தயவாய் வேண்டிக் கொள்கிறோம்.
தலைப்பு:
தசாப்தங்கள் கடந்தும் வெளிநாட்டு உழைப்பு:
வலைகுடா நாடுகளில் 50 வயதுக்கு மேற்பட்ட அதிகமான வெளிநாட்டு உழைப்பாளிகளை பார்க்க முடியும்.
அவர்களின் வலைகுடா அனுபவத்திக் கேட்டால் 20 அல்லது 30 அல்லது அதைவிடவும் கூடுதலான ஆண்டுகளைச் சொல்லுவார்கள்.
வாழ்ந்த 30 வருடத்திலும் பத்துத் தடவை விடுமுறையில் சென்றிருப்பார்.
என்ன அண்ணா எப்போ ஊறுக்கு போறீக? என்று கேட்டால், இப்போ தான் மகன் படிப்ப முடிச்சிட்டு வந்திருக்காக, அவருக்கு வேலை கிடைத்ததும் …….
இப்படியே, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பது, வீட்டார் செலவுக்கு பணம் கொடுப்பது என்று இந்த இரண்டு முக்கிய கடமை மட்டும் பல தசாப்தங்கள் உழைத்து நிறைவேற்றப்படுகிறது.
அது தவிற வீட்டாருடனான காதல் பகிர்வும் காமம் பகிர்வும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
அதாவது குறிப்பாக 5 வருடங்கள் கடந்து, குடும்பத்தைப் பிரிந்து, தனியாக வெளிநாடுகளில் வாழும் உழைப்பாளிகள் குறித்து ‘தசாப்தங்கள் கடந்தும் வெளிநாட்டு உழைப்பு’ என்ற தலைப்பு இம்மாத கருத்துப் பரிமாற்றமாக வெளியிடப்படுகிறது.
இந்த தலைப்புக் குறித்து மாற்றங்கள் தேவை, நேரம் for கருத்துப் பரிமாற்றம் என்ற நிகழ்ச்சியுடன் இணைந்து உங்கள் கருத்துக்களகளையும் பகிர்ந்துகொள்ளலாம் வாங்க…..
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
4 comments:
//என்ன அண்ணா எப்போ ஊறுக்கு போறீக? என்று கேட்டால், இப்போ தான் மகன் படிப்ப முடிச்சிட்டு வந்திருக்காக, அவருக்கு வேலை கிடைத்ததும் …….//
very true
எங்க அப்பாவக் கண்டா அனுப்பி வைங்க......
@Anonymous
<எங்க அப்பாவக் கண்டா அனுப்பி வைங்க.....? சகோதரின் கருத்து புரியவில்லை, புரியும் படிச் சொல்லுங்க. நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் இருபது வாருடம்ம்கா சவுதில் பணிபுரிகின்றேன்
என்னை பொருத்தவரைக்கும் என் வாழ்க்கை வேஸ்ட்டு செய்து விட்டேன்
ஒரு நிம்மதி இல்லாத வாழக்கை என்று தான் சொல்லவேண்டும்
ஒன்று மட்டு இருக்கிறது பணம் மற்றப்படி நிம்மதி சந்தோசம் இல்லை என்று \தான் சொல்லவேண்டும்
Salim Mohammed
Post a Comment