விடியும் 2011ற்கான புதிய ஒழுங்குகள்.................!

New orders for raising 2011
வாழ்க நலமாய்!
வாழ்க இறை நினைவுடன்!!
என்று உங்கள் இதையங்களுடன் கைகுலுக்கிக் கொண்டு..........


இந்த பூலோக வாழ்வு, அங்கு மாடமாளிகைகளில் புன் சிரிப்புக்களும் கரண்டிகளால் உணவுப் பரிமாரல்களுல், இங்கு இடித்து வீழ்த்தப்பட்ட வீட்டு கற்களுக்கிடையில் வெடில்பட்ட காயத்திற்கு மருந்து தேடுவதா? வயிற்றை கிள்ளும் பசிக்கு உணவு தேடுவதா? அல்லது வெளியே சென்ற தந்தை சவமாய் பாதையில் கிடக்கும் அவலம் காண்பதா? என்று இரண்டு வகையான சமூகத்தின் இரண்டு விதமான வாழ்க்கை வரலாற்று வடுக்களை கடந்து இன்றைய நல்லிரவு 12 மணியுடன் 2010த்தை பிரிந்து 2011க்கு கால் வைத்திருக்கிறோம்.

> நீங்கள் சிரியுங்கள், நீங்கள் கரண்டியால் உண்ணுங்கள், நீங்கள் மாட மாளிகைகளில் வாழுங்கள் அது ஒன்றும் எமக்கு பிரச்சினையல்ல, உலகில் வாழும் அனைவருமே கடவுளின் ஏக போக பிரதிநிதிகள் என்பதை புரிந்துகொண்டு எங்களையும் வாழ விடுங்கள் என்று சில குரல்கள் ஒரு பக்கமாகவும்........

ங்கள் தொழுகை நிலங்கள் இடித்து, நியாயமற்ற வழக்குகளும் தீர்ப்புக்களுமாய் பூச்சாண்டி காட்டும் குழுக்களிலிருந்து நீதியை எதிர்பார்த்து ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளுமாய் மறு பக்கமாகவும்.....

>டைசியாக எப்போது உண்டோம் என்று தெரியாது, ஆனால் இப்போது ஏதாவது கிடைக்காதா என்று இறைஞ்சுகிறது ஒரு சமூகம் இன்னொரு பக்கமாகவும்...

>மைதி வேண்டும், சமாதானம் வேண்டும் என்று நெற்றிகளில் எழுதிக்கொண்டு பகலில் கோசம் போடும் நீங்கள் அமைதியாக வாழும் பிறரின் உரிமைகளை இரவில் சுருட்டிக்கொள்ளாதீர்கள் என்று ஒரு குரல்......

இப்படியாக பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

உலக படத்தில் ஒரு ஓரமாய் ஈராக் தன்னாட்சி புரிந்தது நேற்று, இன்று அங்கு இரத்த ஆறு பெறுக்கெடுத்திருக்கிறது.
ஆப்கான் வெளிநாட்டவரில் அதிகமானவருக்குத் தெரியாத ஒரு நாடாக அமைதியோடு இருந்தது நேற்று, ஆனால், அநாதையாக, பயங்கரவாத முத்திரை குத்திக்கொண்டு உயிர் பிளைக்க ஆசையாய் அலைகிறது இன்று.

பலஸ்தீன், வாழ வக்கற்றிருந்த யூதர்களுக்கு வந்தமறுங்கள் இங்கு என்று அன்பாய் அரவணைத்தது நேற்று. ஆனால், அவர்களோ அகதிகள்,! அகதியாய் வந்தவர்கள் நாட்டின் சொந்தக்காரர்கள் இன்று.

சும்மா உதாரணத்திற்காக இவைகளைச் சொன்னேன்.
இப்படி உலகின் வரலாறுகள் 2010 யும் தாண்டி நிற்கிறது.
இந்த நிலை 2011லும் கண்ணீரும் கம்பலையுமாய் இரத்த தொடர் கதையாகக் கூடாது என்பது, மாற்றங்கள் தேவை யின் பிரதான வேண்டுகோள்.

உலகம், அமைதியும் சமாதானமும் நிறைந்த பூமியாக மிளிர சில ஆலோசனைகளை அத்தியவசிய செயற்பாட்டுக்காக பரிந்துரைக்கிறேன்.

சொல்பவர் சிறியவராக இருந்தாலும் அது பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஒன்று: சர்வதேச நீதிபதிகள் குழு உறுவாக்கப்பட வேண்டும்:

உலகில் சமாதானமும் அமைதியும் மேலோங்க பயங்கரவாதிகளையும் பயங்கரவாத நாடுகளையும் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பதற்குத் தகுதியான ஒரு சர்வதேச நீதிபதிகள் குழுவை நியமிக்க வேண்டும்.

உலகில் உள்ள எல்லா நடுகளின் பிரதிநிதிகளும் இதில் உள்ளடங்குவர்.

அந்த சர்வதேச குழுவின் செயற்பாடுகள்:

1. ஒரு நாடு பயங்கரவாத செயலில் ஈடுபடுகிறது என்று இனங்கண்டால் அந்த நாட்டை இந்த குழுவின் விசாரணைக்கு உட்படுத்தல்.

2. குறித்த நாட்டுக்கு அது தனது நிலையை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்குதல்

3. இந்த பொதுவிசாரணையின் போது வழங்கிய அவகாசத்தின், காலக்கெடுவின் பின்னும் தனது நிலையை மாற்றிக்கொள்ளாத பட்சத்தில் பொருளாதாரத் தடை மற்றும் அதற்கெதிரான யுத்தப் பிரகடனம்.

4. ஒரு நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை பிரகடனப்படுத்தும் போது இந்த குழுவின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று சட்டத்தை அமுல்படுத்தல்,

5. பயங்கரவாத செயற்பாடுகளில் ஒரு நாடு ஈடுபடுகிறது என்று அந்த நாட்டுக்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்யும் போது இந்த குழுவின் பெறும்பான்மை வாக்குகளை பெறுதல், உதாரணமாக, ரஷ்யா அல்லது ஈரான் அணு ஆயுத உட்பத்தி தொடர்பில் அந்த நாடு சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்பட வில்லை என்ற குற்றச்சாட்டுக்காக அந்த குறித்த நாட்டுக்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்ய இந்த குழுவின் பெறும்பான்மை வாக்குகளை பெறுதல்

6. ஒரு நாட்டுக்குள் அந்த நாட்டுமக்களின் அடிப்படை உரிமை மீறல்கள் இடம்பெற்று அரசாங்கத்திற்கும் பாதிக்கப்பட்ட குழு அல்லது குழுக்களுக்குமிடையில் தீர்வு காணாது யுத்தம் தொடர்ந்தால் இந்த சர்வதேச குழு தனது பலத்தை பிரயோகித்தல்.

இரண்டு: இப்போது யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நாடுகளை சமாதானத்தின் பக்கம் திருப்புதல்:

இப்போது எங்கெல்லாம் யுத்தம் நடைபெறுகிறதோ அவைகளை தற்காலிக யுத்த நிறுத்தத்திற்குக் வேண்டி அந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நிரந்த தீர்வை முன்வைத்தல், அமுல்படுத்தல்.

வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்.

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மற்றும் ஏனைய நாடுகளின் படைகளை மீளப் பெறல்.

பலஸ்தீன் இஸ்ரவேல் பிரச்சினைக்கிடையில் குளிர்காயும் குழுக்களை இன்ங்கண்டு தண்டனை வழங்குதல்.
பலஸ்தீன இஸ்ரவேல் யுத்தத்தை அந்த சர்வதேச நீதிபதிகள் பொதுகுழுவின் கையில் ஒப்படைத்தல்.

மூன்று: குற்றவாளி நீதியான முறையில் தண்டிக்கப்படல்.

ஈராக்கில் நடந்தேரிய கொலைகளுக்கு அந் நாட்டு அதிபர் சதாம் தான் என்று எப்படி நிரூபிக்கப்பட்டு அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது போல் பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் இலங்கை நாடுகளில் நடந்தேரிய, நடந்துகொண்டிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான படுகொலைகளுக்குரியவர்களை இனம் கண்டு அவர்களுக்கும் தூக்குத் தண்டனை வழங்குதல்.

நான்கு: அபிவிருத்தியடையும் நாடுகளை அவைகளின் துரித அபிவிருத்திக்கு உதவுதல்.

மூன்றாம் மண்டல நாடுகளை இனம் கண்டு அந்த நாடுகளை திட்டமிட்டு தூக்கிவிடுவதற்கான முழுமையான ஏற்பாடுகளை வளர்ச்சியடைந்த நாடுகள் முன்னெடுத்தல்.

ஜந்து: வருமைக் கோட்டிலுள்ள நாடுகளுக்கு 
பிரத்தியோக கவனிப்புச் செலுத்துதல்:

ஆபிரிக்க ஆசிய கண்டங்களில் மிக மோசமான நாடுகளை தேர்ந்தெடுத்து அந்த நாடுகளின் பொருளாதார, கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்.

இந்த ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது, நாம் 2015 வருடத்தை அடையும் போது ஒரு அபிவிருத்தியடைந்த நாகரீகமுள்ள அமைதியான உலக மாற்றங்களைக் காணலாம்.
அந்த உலகத்தில் கொலை, கொள்ளை கற்பழிப்பு வருமை யுத்தம் என்று மனித வாழ்வுக்கு எதிரான கெடுபிடிகள் இல்லாது போகும்.

இங்கு பரிந்துரைக்கப்பட்டதில் சில அல்லது அதன் பகுதி நடைமுறையில் இருந்தாலும் அவைகளை மீள் பரிசீலணைக்கு உட்படுத்தி மாற்றங்களை ஏட்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவரலாம்.*    
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

3 comments:

Unknown said...

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக!
நல்ல சிந்தனை, உங்களது முயற்சி இறைவன் அருளால் எல்லோருக்கும் திருவினையாகட்டும்.

Issadeen Rilwan said...

@M. Farooq அல்லாஹ்வின் உதவியுடன் உலக அமைதிக்கான எமது ஆலோசனைகள் பிரதிபளிக்க உங்கள் வாழ்த்துக்களும் உதவட்டும்.

Issadeen Rilwan said...

அன்பின் ந்ண்பர்களே! இந்த ஆலோசனைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளீயிட முடியுமானால் அதனை உத்தியோக பூர்வமாக 'மாற்றங்கள் தேவை' வலைப் பூ அனுமதிக்கின்றது.