என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 15



தொடர்   - பதினைந்து:

அந்த அறபிகள் வாழும் போது அவர்களுடைய கண்முன் காணக்கிடைத்த கடவுள் படைப்புக்களை பார்த்து கடவுள் இவ்வாறு சிந்திக்கத் தூண்டுகிறான்.

Ø  ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?
Ø  வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
Ø  மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?
Ø  பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)
Ø  பூமியை அதன் ஓரப்பகுதிகளில் குறைத்து வருகிறோம்என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? 
Ø பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.
Ø  இரவும் அவர்களுக்கு ஓரு சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.
Ø  சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.
Ø  சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது.
Ø   சூரியனால் சந்திரனை அடைய முடியாது.
Ø  இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.
Ø  இன்னும் இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் கடுமையான சக்தியும் மனிதர்களுக்குப் பயன்களும் இருக்கின்றன.” 

இவைகள் கடவுளின் இறுதி வேத வெளிப்பாட்டிலிருந்து பெறப்பட்ட செய்திகளாகும் என்று ஒரு பெரிய பட்டியலையே எனக்கு முன் தொடுத்துக்கொண்டு போனார்.

இந்த செய்திகளை ஒவ்வொன்றாக ஆய்வுக்குள் உட்படுத்தி, அதன் ஆரம்பம், அதன் செயற்பாடு, அதன் யதார்த்தம் ஒவ்வொன்றையும் கவனமாக, படிப்படியாக ஆய்வு செய்தவர்கள் தான் விஞ்ஞானிகள், அறிவாளிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்கள்.

இது போன்ற ஆய்வுகளை அல்லது கடவுள் வார்த்தைகளை தங்களது சிந்தனையில் எடுத்துக்கொள்ளாதவர்கள் தான் நம்மைப் போன்ற சாதாரண மக்கள் என சொல்லும் போது என் தந்தையின் முகத்தில் சமூகக் கவலையை பார்க்க முடிந்தது.
.
பசித்தால் உண்ணுகிறோம், இரவானதும் உறங்குகிறோம், பரிட்சை வந்தால் பாடப்புத்தகத்தை புரட்டிப்படிக்கிறோம், சுகயீனமுற்றால் வைத்தியரை நாடுகிறோம், மரணித்தால் அவன் குடும்பத்தால் இறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு....... இது நமது வாழ்க்கைப் போக்கு..........

இந்த சாதாரண நிலையை மாற்றங்களுடன் முன்னெடுக்கின்ற மனிதர்களின் எண்ணிக்கை உலகில் எண்ணில் கொள்ளக்கூடியது மட்டுமே. எதிர்வரும் பட்டியலில் உனது பெயரும் இருக்கலாம் என்று என் தந்தை தலையசைத்தார்.

’நானும் ஒரு சிறந்த சிந்தனையாளராக, அறிஞராக வர எனக்கு வழிகாட்டுங்கள்’ என்று வார்த்தைக்கு வார்த்தை இடை விட்டு எனது குரலை வெளியிட்டேன்.

எனது இந்த வார்த்தைகளை செவியுற்ற தந்தையின் கண்கள் என் இரு கண்களையும் விழுங்கும் அலவு என்னை ஏரெட்டுப் பார்த்து விட்டு சந்தோக்ஷ புன்னகையை வெளியிட்டார்.

‘மனதில் உறுதியும் வாழ்க்கையின் இலட்சியமும் உன் சாதனைக்கு உதவும்’ என்று மீண்டும் தனது வார்த்தைகளை தொடுக்க ஆரம்பித்தார்.

பாடசாலையில் இருக்கும் போது படிக்கின்றோம், அந்த காலம் முடிந்ததும் படித்துவிட்டோம் என்று முட்டாள்தனமாய் நினைத்துக்கொள்கிறோம்.

பாடசாலைக் காலம் கல்வி கற்கும் முறையை கற்கும் காலம், ஏனைய காலம் கற்க கற்ற முறையை நடைமுறைப்படுத்தும் காலம்.

இந்த யதார்த்தத்தை தெரிந்து கொண்டவர்கள் எதிர்காலத்தில் அறிவாளிகளாக சிந்தனையாளராக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள், அதனால் தான் சிறிய வயதில் பாடசாலைக் கல்வியை இழந்த பலர் எதிர்காலத்தில் அறிஞர்களாக காட்சியளிக்கின்றார்கள்.

அறிவையும் சிந்தனையையும் எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்று சில வழிமுறைகளை எனக்குச் சொல்லிக்கொண்டு போனார்.

நான் குறிப்பெடுத்துக் கொண்டதில் முக்கிய சில:

1.      பாடசாலை பாட மீட்டல், வீட்டுப் பயிற்சிகளைச் செய்தல் அத்துடன் அன்றாட கடமைகளை தவறு செய்துகொண்ட பின் கிடைக்கும் நேரங்களை கணக்கிட்டுக்கொள்ளுதல்.

கணக்கெடுத்த நேரங்களில் செய்ய வேண்டிய விடயங்கள்:
2.    அல் குர்ஆனை அதன் மொழியாக்கத்துடன் தொடராக வாசித்தல்,

3.    எதிர்காலத்திற்குத் தேவையான சில முக்கிய பிற மொழிகளை கற்றுக்கொள்ளுதல்.

4.    வாசிப்புப் பலக்கத்தை கடைபித்தல்,

5.    நாளுக்கு நாள் புதிய புத்தகங்கள் வாசித்துக்கொள்ளுதல்,

6.    அறிஞர்கள், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை தேடிக்க்கற்றல் என்று அவரது பட்டியல் நீண்டது.

நாளுக்குக் நாள் அல் குர்ஆனையும் ஏனைய பிரயோசனமான புத்தகங்களையும் வாசித்துக்கொள்வது போதுமான சிந்தனையை அதிகரிக்கச் செய்கிறது என்பதை மிக முக்கியமாக கவனத்தில் கொண்டு செயற்பட ஆரம்பித்தேன்.


படரும்.............

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

4 comments:

Anonymous said...

Assalamu alaikkum warahmathullah,

I like this article,
I advise everyone to get print and give to your parents and children.

thanks
Mubeen

FARHAN said...

பெற்றோர் கட்டாயம் படுயக்கவேண்டிய பதிவு

Shifa said...

‘மனதில் உறுதியும் வாழ்க்கையின் இலட்சியமும் உன் சாதனைக்கு உதவும்’ i like this point
Firstly, every parent should encourage their children to learn. Also, they want to take responsibility in growing their children in religious way. They want them to think critically everything that they see in the world

ربنا ماخلقت هذا باطلاً سبحانك فقنا عذاب النار

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,
முபீன், பர்ஹான், சிபா ஆகிய சகோதர்களுக்கு உங்கள் வருகையும் வார்த்தைகளும் தொடரட்டும்.

கட்டுரையில் சொன்னதைவிட உங்கள் சொற்கள் பிரயோசமானவைகள்.