எதிர்காலத்தின் எழுச்சியை குறி வைக்க வேண்டிய சந்தர்ப்பம் இது,
வருகின்ற மார்ச் மாதத்திற்காக காத்திருக்கிறது நமது வன்னிச் சமூகம்,
மார்ச் 2011 களில் உள்ளூராட்சி நிருவாக சபைகளுக்கான தேர்தலை நடாத்த இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது.
அந்த உள்ளூராட்சித் தேர்தலில் மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளுக்கான உருப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.
வானா வரத்தை எதிர்பார்த்து இருக்கும் விவசாய்கள் போல் ஒரு கூட்டம் தேர்தல் காலத்தை எதிர்பார்த்திருக்கிறது. ’சமூகத்திற்கு நாம்’ என்ற தூர நோக்குச் சிந்தனையற்று பதவி வேண்டும், பலம் வேண்டும் என்று சுயநலமாக வீட்டுக்கு ஒரு கட்சி என்ற நிலையில் எமது சமூகம் சில்லறையாகிக்கிடக்கின்றது.
சமூகத்தின் எழுச்சியும் பிரதேசங்களின் அபிவிருத்தியும் தனிமனிதர்களின் மகிழ்ச்சியும் இன்றைய தேவையாக இருக்கிறது.
வீடுகள் எழ வேண்டிய காணிகளில் காட்டு மரங்களும் விவசாய வயல்களில் கன்னி வெடிகளுமாய் காட்சிப்படும் எமது தாயகம் இந்த தேர்தலில் கிடைக்கும் வெற்றியுடன் உதயமாக வேண்டும்.
’வடக்கை வல்லரசாக்குவோம்’ என்பது தமிழீழக விடுதலைப்புலிகளின் நேற்றைய கனவு,
’வடக்கை வசந்தமாக்குவோம்’ என்பது இன்றைய மகிந்த சிந்தனையின் நினைவு,
வடக்கு எங்கள் தேசம், வாழ விடுங்கள் நிம்மதியாக என்பது நேற்றும் இன்றும் வடக்கு முஸ்லிம்கள் சொல்லும் பணிவு வார்த்தைகள்.
மூன்று தசாப்தங்களுக்கு பின்னால் ஓய்ந்திருக்கும் குண்டு வெடில் சப்தங்கள், காடுகளாய் காட்சியளித்த வீட்டுக்காணிகளும் வாழும் பூமிகளும் பொட்டல் காணிகளாய் காட்சிப்படுத்த மீண்டும் ஒரு சந்தர்ப்பம்.
மகிந்த சிந்தனையில் செதுக்கிய செயல்திட்டங்களில் சொல்லுறுதிப்படுத்தும் சிறப்புத் திட்டங்களில் ஒன்று இப்போது நிறைவேறும் ஆரம்ப கட்டமாய் இந்த தேர்தல் இருக்கட்டும்.
1990ம் ஆண்டு தாய் மண்ணை விட்டு வெளியேறிய வடக்கு மக்கள் மீண்டும் தங்கள் தாய் நிலங்களைத் தேடி புறப்பட்டிருக்கின்றோம். கடந்த 20 வருட காலப்பகுதியில் தங்குவதற்கு ஆங்காங்கே வீடு கட்டுவதிலேயே காலத்தைக் கடத்தி நிற்கிறோம், அது இந்த பரம்பரையுடன் போகட்டும்.
இனி பிறக்கின்ற எமது வாரிசுகள் நிறந்தரமாய், நிம்மதியாய் வழ நம்மை தயார் செய்வோம், நமது நிலங்களை தயார்படுத்துவோம். அதற்குரிய திறவுகோலாய் இந்த தேர்தலை பயன்படுத்துவோம்.
இலங்கையின் கடந்த கால உள்ளூராட்சித் தேர்தல்களில் எமது சமூகம் சந்தித்த தோல்விகள் எமக்குக் கிடைத்த பெரும் பாடமாகவும் தோழ்வியாகவும் அமைய வேண்டும்.
குழுக்களாக கட்சிகளாக பிரிந்து வாக்குகளை பங்கிட்டுக்கொண்டு செல்வது தோல்வியின் சின்னமாக மாறி தலைமுறையை பாதால குழியில் தள்ளிவிடச் செய்யும்.
சந்தர்ப்பத்தை சரிவர உணர்ந்துகொண்டு நாம் ஒன்று படுவோம், நமக்குத் தேவையான, நமது உரிமைகளை வென்றெடுக்க தகுதியான பிரதிநிதிகளை முற்படுத்துவோம்.
அவர்களின் வெற்றியை எமது சமூகத்தின் வெற்றியாக பகிர்ந்துகொள்வோம், அந்த பிரதிநிதித்துவத்தை பயன்படுத்தி பூஜ்சியத்தில் இருந்து எமது பூர்வீகத்தை கட்டியெழுப்புவோம்.
வாருங்கள் கைகோர்ப்போம் ஒன்றாய்……!
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
2 comments:
சத்தியமான வார்த்தைகள். அமைதியாக வாழ்வதே தமிழர்களின் கடமையும், காலத்தின் கட்டாயமும், ஆனால் ஒன்று சேருவோம் எனக் கூறியது தமிழர்களாகவா? இல்லை முஸ்லிம்களாகவா? ஏனென்றால் வடக்கில் முஸ்லிம்கள் உட்பட அனைவரும் தமிழ் மொழி பேசும் தமிழர்களாகவே வாழ்வது தான், அனைவருக்கும் அமைதியைக் கொடுக்கும். தமிழ் - முஸ்லிம் எனப் பிரிந்தார். இன்று புத்தளத்தின் நிலைமை நாளை வடக்குகும் வரலாம். புத்தளம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பேசும் பரதவ இஸ்லாமியர் -கிருத்துவர் வாழ்ந்த நிலம். இன்று அங்கே 10 சதவீதம் மட்டுமே இஸ்லாமியர் 15 சதவீதம் தான் தமிழ் பேசுவோர். அதுவும் பலர் வடக்கில் இருந்து வந்த அகதிகள்.... இந்த நிலை நாளை வடக்குகும் வரக் கூடாது என்றால் தமிழ் பேசுவோர் அனைவரும் ஒன்றுபட்டு இருத்தல் வேண்டும்.
எங்களை தேடிவந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள்,
தொடர்ந்து உங்கள் வரவு அவசியம்.
வடக்கு என்று வரும் போது கட்டாயம் தமிழ் பேசும் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்.
Post a Comment