பால் குடி வயசில் உனக்கு தேவையா இது?



அது வெங்காயத்திற்கும் வத்தலைக்கும் பெயர் போன பூமி, எங்கு பார்த்தாலும் பச்ச பசேல் என்ற காட்சி, அங்குதான் என் தாத்தா வீடு கட்டி வாழ்கிறார்.
ஸ்கூல் விடுமுறையானால் நானும் அங்கே இருப்பேன், எனக்கு அவர்களை நன்றாக பிடிக்கும்.
அங்கு தான் வெங்காய தோட்ட வேளைவாய்ப்பும் முத்தாத வயதில் முத்திய அனுபவமும் கிடைத்தது எனக்கு.
…………………………….திர்ச்சியாக ஊரையே கூட்டும் சத்தைத்தை திரட்டிக்கொண்டு என்னை நோக்கி ஓடி வந்தார் அந்த வெங்காயத் தோட்டக்கார மேற்பார்வையாளர்.
‘பால் குடி வயசில் உனக்கு தேவையா இது?’ என்று எல்லோர் முன்னிலும் ஒரு கேள்வி வேறு.
என்ன தான் நடந்தது?
14 வயதை எத்தும் அந்த பிஞ்சு பருவம், மீசை இன்னும் உத்துப்பார்க்க கூட இல்ல, இஸ்கூல் லீவில் தோட்டத்திற்கு போய் ஏதாவது சம்பாதிக்கலாம் என்று தான்.
வெங்காய சீசன் அது, வீட்டு பெண்கள் காலையானதும் தோட்டத்தை நோக்கி படையெடுப்பார்கள், ஸ்கூலில் கிடைக்கும் 15 நாள் லீவை பயன்படுத்தினால் பஸ் காஸ் மற்றும் ஏனைய தேவைக்கு உதவும் தானே என்ற ஒரு ஆசைக்காகத்தான் அந்த சனத்தோட சனமாக நானும்.
முத்திய வெங்காயம் புடுங்கி குவிக்கப்பட்டிருக்கிறது, அந்த உச்ச வெயிளில் சூரியனுக்கு கீழ் அமர்ந்து கொண்டு வெட்டு வேளையை ஆரம்பிக்கிறார்கள் எல்லோறும்……..!

கொஞ்சம் கொஞ்சமாக முக்கி முனுகி ஒரு பத்து கிலோ வெட்டி அத சுமந்துக்கிட்டு கொட்டில நோக்கி நடக்கும் போது அது கீழே விழுந்துட்டு.
அத எப்படியோ கண்டிட்டார் அந்த மேற்பார்வையாலர் சுரா காக்கா.
நீ பால் குடிப்பிள்ளை, நாளைக்கு இங்கு மறுபடியும் வரகூடாது, இன்றைக்கு காச வாங்கிட்டு ஒரே போக்கா போ என்று ஒரு சத்தம்.
சக்கரையை தொட்டு ஒரு தேநீர் மிடக்கை குடித்து விட்டு அந்த இடத்திலேயே இருந்து ஒரு பத்து நிமிக்ஷம் யோசித்திட்டு நட நடையா தாத்தா வீட்டுக்கு போய்ட்டேன்.
ஒரு முப்பது ரூவா சம்பாதிக்கிறதுக்கிடையே இவ்வளவு பிரச்சினையா என்று முனுமுனுத்துக் கிட்டு தத்தாக்கிட்ட சொன்னேன் நடந்ததை.
தத்தா ஒரு மாதிரியா என்ன பார்த்து ஒரு சிரிப்பு, அவ கெடக்கிறா, அதெல்லா கண்டுக்காற நாளைக்கு அவண்ட சட்டையை பிடித்து நாளு கேள்வி கேற்கிறேன் என்று அதட்டித் தீர்த்தார்.

பக்கத்தில் படுத்திருந்திருந்த வீட்டுப் பூனையும் ‘மியா’ என்று ஆர்பாட்டம் செய்தது.
ஆகா விசயம் பெரிதாக போவுதோ என்று நினைத்துக்கிட்டே அங்கிருந்த பாயில் படுத்து அப்படியே தூங்கிட்டேன்.
சூரியனுடன் சேர்ந்து குருவிகளும் உதித்தமாதிரி அந்த குருவிகளின் கீச், கீச் சத்தம் என்னை எழுப்பி விட்டது.
பல்பிடியை போட்டு பல்லை தேச்சிக்கிட்டு, திருப்பியு தோட்டத்திற்கு போய் பார்க்கலாம் என்று நடையை கட்டினேன்.
என்னையே காத்துக்கிட்டு இருக்கிற மாதிரி தோட்டத்திற்குள் அந்த மேற்பார்வையாளர் நின்றிருந்தார், ஒன்றுமே சொல்லவில்லை, சரி மெதுவாக நம்ம வேலைய ஆரம்பிக்கலாம் என்று கவனமாக காரியத்தை கையாள ஆரம்பித்தேன்.
சூரியனும் அதன் வெப்பத்தை கடுமையாக்கிக் கொண்டிருந்தது, அந்த வெங்காய தோட்டத்தில வெட்டுக்கு தயாரான யாரும் இவ்வளவு பெரிய சூரியன கண்டுக்கக் கூட இல்ல.
எனக்கு ஆச்சரியம் தான், ஆனாலும் பரவாயில்ல என்று தொடர்ந்தேன்.
அவர் எதுவும் சொல்லல, நானும் அமைதியாக வெட்டி வெட்டி ஒரு மூடையை நிறப்பிவிட்டிருந்தேன்.
ஏதோ அப்படியே 11 நாற்களை கடத்தி 305 ரூபா காசு தேடிக்கிட்டு சந்தோக்ஷமாக வீட்டுக்கு வந்தால் அதில் ஒரு 100 ரூபா அம்மாவுக்கு தேவையா போச்சு.
சரி, விரும்பியும் விரும்பாமலும் கேட்டத கொடுத்துவிட்டு அந்த மேற்பார்வையாளர் சத்தம் போட்டதயும் அம்மாவிடம் சொன்னேன்.
அம்மா கண்கலங்கி ஏன் உனக்கு இந்த தொழில், சும்மா வீட்டில் இருக்க வேண்டியது தானே? என்று கேள்வி கேற்க ஆரம்பித்தாங்க, ஆனால் ஸ்கூலுக்கு போகும் போது காசு இருக்காதே என்பத மறந்து பேசுவதை நான் மறக்கவில்லை.
அது தாய் பாசம், அதற்கு பெருமதி மதிக்கமுடியாது என்பத புரிஞ்சுக்கிட்டேன்.
ஆனால் மீதி காச பக்குவமாக வைப்பதில் தான் நான் பால்குடி பிள்ளையாய் மாறிப் போனது எனக்கே அவமானமாக இருந்தது.
பக்குவமாய் பாதுகாத்து வைப்போன் என்று நினைத்துக்கிட்டு புத்தகத்தின் நடுப்பகுதியை புறட்டி, அதன் பக்கங்களுக்கு இடையில் புகுத்தி வைத்திருந்தேன்.
என்னை அறியாமலே அதை காணாமல் ஆக்கிவிட்டேன்.
நீ உண்மையிலேயே பால்குடி பிள்ளைதான் என்று என்னையே திட்டிக்கிட்டு அம்மாவை நாடினேன் காசு கேட்டு.



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: