"உலகை உருவாக்கியது கடவுள் அல்ல" அறிவியல் அறிஞரின் அதிரடி – அதற்கு ஒரு பதிலடி

கோவைச் செய்தியில் வெளியாகிய "உலகை உருவாக்கியது கடவுள் அல்ல" அறிவியல் அறிஞரின் அதிரடி என்ற கட்டுரைக்கான ஒரு பதிலடியே இந்த ஆக்கம்.


“கடவுள் இருக்கின்றான் அவனே அனைத்தையும் திட்டமிட்டு இயக்கிக் கொண்டிருக்கின்றான்” என்ற மாற்றங்கள் தேவையின் கட்டுரைக்கு நீங்கள் பதிலடி கொடுக்கலாம் அறிவுபூர்வமாக………

 

//டவுள் கருத்து உருவாக்கப்பட்ட காலம் தொட்டே, கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது என தர்க்க ரீதியாக மறுப்புரைத்தோர் இருந்து வந்துள்ளனர். கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தியோரைக் கண்டிக்கும் மனிதநேயர்களும் அப்போதே இருந்தனர்.மனிதர்களைப் பிளவுபடுத்தி ஆதாயம் தேடிய சுயநலக் கும்பலை அம்பலப் படுத்தினர். அந்த மனிதர்கள் தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்தி இயற்கைக்கு எதிராக உருவாக்கப்பட்ட கடவுள் கோட்பாட்டை தகர்த்தெரிந்தனர்.இன்றுவரை பகுத்தறிவாளர்களின் தர்க்கத்திற்கு மதவாதிகளால் நேருக்கு நேர் பதில் அளிக்க முடியவில்லை. சப்பைக் கட்டுகளாலும்,அது ஒரு நம்பிக்கை என்று கூறியும் தப்பித்து ஓடுகிறார்கள்.//இது கோவை செய்தியின் சுருக்க‌ம்.


விஞ்ஞான கருத்துக்கள் வியாபாரமாக மாறி வரும் காலத்தில் தான் நாங்க‌ள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எவரோ ஒருவர் சொன்னதற்காக தன்னை படைத்த கடவுளையே இல்லை என்று சொல்லுகின்ற சில குத்தறிவற்ற மனிதர்களுக்கு சில உண்மைகளை சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் இந்த தொகுப்பு.
கடவுளை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டத்தார் உலகில் இருப்பது உண்மைதான், நான் தான் கடவுள் அல்லது என்னுள் கடவுள் சக்தி இருக்கிறது அல்லது கடவுளாகிய நான் மனித வடிவில் வந்திருக்கின்றேன் என்று சொல்லுகின்ற பல போலியானவர்கள் உலகில் இருந்ததும், இருப்பதும் உண்மைதான்.
இந்த அறிவற்ற வாதங்களை வைத்துக்கொண்டு சர்வ வல்லமை பொருந்திய‌ கடவுளை தூக்கி எரிந்துவிடுவது குத்தறிவுக்கு அப்பாற்பட்டது.
கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசும் பல பகுத்தறிவற்றவர்களுடன் எல்லா காலங்களிலும் நேருக்கு நேர் விவாதங்கள் நடந்தேரிக்கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் அந்த விவாதங்களில் நாத்திகர் தரப்பில் பங்குபற்றும் எந்த அறிஞர்களும் சரியான ஆதாரங்களை முன்வைத்து தங்களது கருத்துக்களை நிரூபித்ததாக சரித்திரம் இல்லை.
தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஆங்காங்கே நடந்தேறிய பல விவாதங்களை பார்த்த, படிப்பினை பெற்ற ஒரு அனுபவமும் எனக்கு  இருக்கின்றது.
அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக இங்கு இணைத்துள்ளேன்.
கடவுள் காலத்திற்கு காலம் பல தூதுவர்களையும் வேத நூல்களையும் அனுப்பி மனிதர்கள் வாழ்வதற்கான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்கி வந்திருக்கின்றான்.
அவனது வல்லமையையும் அவன் தான் இந்த உலகை படைத்து ஆழ்கின்றான் என்பதற்கும், அவனது இறுதி வேத நூல் இன்றுவரைக்கும் சாட்சியாக இருந்துகொண்டிருக்கின்றது.
உலகில் தோன்றிய பல விஞ்ஞானிகள் காலத்திற்கு காலம் பல கண்டுபிடிப்புக்களை வழங்கிவந்ததும் வருவதும் உண்மையே. ஆனால் அவரகளது கண்டுபிடிப்புக்களை உறுதிப்படுத்துவதற்கு கடவுளுடைய வேத நூலின் உதவி இன்று வரைக்கும் தேவைப்பட்டுகொண்டே இருக்கின்றது என்பதை எல்லா அறிவாளிகளும் நடுநிலையாக சிந்திக்கின்றவர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள்.
ஒரு விஞ்ஞானி நேற்று அறிவித்த ஒரு கருத்தை அவரே மறு நாள் மாற்றிச் சொல்லுவதும் அல்லது அடுத்த நாள் வேறு ஒரு விஞ்ஞானி புதிய ஒரு கருத்தை, மாற்றுக் கண்டுபிடிப்பை  சொல்வதையும் நடைமுறையில் பார்க்க முடிகிறது.
உதாரணமாக ஒரு குழந்தையின் வளர்ச்சி பற்றிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்களையும் இறுதி வேத நூலாகிய அல் குர்ஆனிய வசனங்களையும் ஒப்பிட்டுப்பார்ப்போம்.
அல்லது பூலோக விரிவாக்கம் (Expending Universe) பற்றி நவீன கால கோட்பாடுகளை பரிசீலனைக்குள் உற்படுத்துவோம்.
நவீன விஞ்ஞானம் பூலோக விரிவாக்கம் பற்றி அது விரிவடைந்துகொண்டே இருக்கின்றது என்பதை உறுதிபடுத்தி இருக்கின்றது,
அதனை அல் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன் பிரகடனப்படுத்திவிட்டது, இவைகளை வாசிக்கின்ற போது கடவுள் ஒருவன் இருக்கின்றான், அவன் ஒருவனே அனைத்தையும் இயக்கிக்கொண்டிருக்கின்றான் என்பதை சரியாக புரிந்துகொள்ளலாம்.
உலகில் மனிதர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களையும் கடவுளால் அல் குர்ஆன் மூலம் பகிரங்கப்படுத்தியுள்ள சட்டங்களையும் இன்றைய நடைமுறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கூட கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை மிக அழகாக புரிந்துகொள்ளலாம்.
ஒரு விஞ்ஞானி கடவுள் இல்லை என்று சொல்கின்றார் என்பதற்காக நாமும் அதனை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமல் நமக்கு கடவுள் கொடுத்திருக்கின்ற பகுத்தறிவைப் பயன்படுத்தி உண்மையை தேடிக் கற்க மாற்றங்கள் தேவை உங்களை அழைக்கின்றது.
தமிழ் உலகில் பிரபல்யமான அறிஞர் பி.ஜே மற்றும் பெரியார் ஆதாரவாளர்களுக்குமிடையில் நடந்த விவாதம்மலையாள உலகின் பிரசித்திவாய்ந்த அறிஞர் எம் எம் அக்பர் அவர்களுக்கும் பகுத்தறிவு சார் அறிஞருக்குமிடையில் நடந்த விவாதம்கடவுளின் இறுதி வேத நூலின் நம்பகத்தன்மை குறித்து மாற்றுமத அறிஞர்கள்


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

5 comments:

கோவை செய்திகள் said...

அடேங்கப்பா... என்ன ஒரு சிறப்பான மறுப்பு.... வாழ்த்துக்கள் திரு.ரிழ்வான்.....என்ன ஒரு போராட்ட குணம்....... உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்....

ஜெகதீஸ்வரன்.இரா said...

இருக்கும் ஒன்றை எதிர்ப்பது மட்டுமே பகுத்தறிவாக இருக்க முடியும். இல்லாத ஒன்றை எதிர்ப்பது மூடத்தனமே என்பதை அனைவரும் ஒத்துகொள்ள வேண்டிய ஒன்று.
சமுதாயத்தில் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன அதை எதிர்ப்பார்கள்,
இருக்கின்ற தனிமனித ஆதாயத்தை எதிர்ப்பார்கள்..
அதே போலத்தான் இருக்கும் கடவுளை எதிர்த்து அதன் இருப்பை உறுதிபடுத்துகிறார்கள்.
கடவுள் இல்லை என்றால் அதை எதிர்ப்பது எந்த வகையில் பகுத்தறிவாகும்.

தங்கள் கட்டுரை மிகவும் அருமை.

Himma said...

ச‌கேத‌ர‌ர் றில்வான் அவ‌ர்க‌ளின் ப‌திலை நாங்க‌ள் வ‌ர‌வேற்கின்றோம், மாஷா அல்லா சுருக்க‌மான‌தாக‌ இந்த‌க் க‌ட்டுரை அமைந்துள்ள‌ போதும் கட‌வுள் இல்லை என்று வித‌ன்டா வாத‌ம் செய்யும் ப‌குத்த‌றிவாள‌ர்க‌ளுக்கு??? போதுமான விள‌க்க‌மாக இருக்கும் என்று ந‌ம்புகிறேன்.

எங்கெல்லாம் ப‌ல‌மான ம‌றுப்புக்க‌ளும் எதிர்ப்புக்க‌ளும் வ‌ருகின்ற‌ன‌வோ அங்கெல்லாம் உண்மைக‌ள் உறைந்துள்ள‌ன என்ப‌த‌னைக் காண‌லாம்...

Issadeen Rilwan said...

கோவை செய்திகள், ஜெகதீஸ்வரன்.இரா மற்றும் சகோதரி Himma ஆகியோருக்கு எனது நன்றிகள்.

பல சகோதரர்கள் எந்த கருத்துக்களையும் சொல்லாமல் வந்து போகின்றார்கள்.

உங்கள் கருத்துக்கள் எங்கள் முயற்சிக்கு மேலும் துணைபுரியும்.

கோவை செய்திகள் said...

வணக்கம் திரு.ரிழ்வான். தங்களது மறுப்பு கட்டுரையினை எமது கோவை செய்திகள் இணையத்தில் வெளியிட்டுள்ளோம். நன்றி. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!