என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 19

தொடர் 19
''நீ ஒரு சிறந்த சிந்தனையாளனாக அவர்கள் முன் காட்சி தரும் போது'’ என்ற தந்தையின் வார்த்தை என் மூளையில் ஆழமாக பதிந்ததுடன் இதயத்திலிருந்து இறத்தம் பாயும் அனைத்து நரம்புகளுக்கும் அது மிக வேகமாக பரவ ஆரம்பித்தது.
சிறந்த எதிர்காலத்தை நாம் தீர்மானிக்கின்ற பணியில் இரங்கும் நேரமாகிவிட்டதை உணர்ந்தேன்.
தந்தையின் ஆலோசனைகளுடன் பாடசாலை நாற்களை எனது நண்பர்களுடன் கழித்து வந்தேன்.
சில போது தேவையற்ற தலைப்புக்கள் சபைக்கு வரும் போது முன்பைவிட இப்போதுகளில் அமைதி காக்க ஆரம்பித்தேன், இதை கண்ணுற்ற சில நண்பர்கள் அதை அன்றையதின நகைச்சுவையாக.எண்ணினர்.
பாடசாலையின் மூன்றாம் பாட ஆசிரியருக்காக காத்திருந்தோம், அது கடும் மழை,
திடீரென சிறிய துளிகளுகளுடன் துவங்கிய மழை கனத்த மழையாய் மாறி ஓய்வில்லாது தன் பணியை செய்துகொண்டிருந்து ஒரு அரை மணி நேரத்திற்கு…
இசையுடன் குளிர்ந்த காற்றுடன் அந்த மழையோடு  நாங்களும் மாறி மாறி கதைத்துக்கொண்டிருந்தோம்.
எங்களுக்கிடையில் அமர்ந்திருந்த ஒரு நண்பர் வாய் திறந்த வாரே என்னையே தலைப்பாக்கிக்கொண்டு…………,
‘அதுதான் அவன் அவனுடைய தந்தை மாதிரி பெரிய ஆலாக வர வேண்டும் போல் பகல் கனவு காண்கிறான்……………….
அவன் தந்தை சொல்லி இருப்பார் நீ பெரிய டொக்டராக, அல்லது இஞ்ஞினியராக வர வேண்டும் அதற்காக நன்றாக படி, நண்பர்களின் கதைகளுக்கு செவி சாய்க்காதே……………… என்று எனது தந்தை இப்படி சொல்லி இருப்பார் என்று கதையை வளர்த்துக்கொண்டு போனான்.
இருட்டைக் கண்டு குழந்தை பயந்ததை மன்னிக்கலாம், ஆனால் இவர்கள் வெளிச்சத்தைக் கண்டு பயப்டுகிறார்களே என்று எனக்குள் ஆச்சரியமும் அதேநேரம் கோபமும் கொண்டு…………… இல்லை, இல்லை இலட்சியங்கள் எல்லாம் அவரவர் தீர்மானிக்கும் விடயம் மட்டுமே என்று என் நண்பனுக்கு சட்டென பதில் கொடுத்தேன்.
ஆகா, உசாராத்தான் இருக்கா பையன் என்று வலது பக்கம் இருந்த நண்பனின் குரல் என்னை இன்னும் உச்சாகப் படுத்தியது.
’தேவையில்லாத போது வாயை மூடிக்கொண்டிருங்கள், சரியான சந்தர்ப்பம் வந்தால் சொல்லுங்கள், சொல்வதை தீப்பொறி எழச் சொல்லுங்கள்’ என்று பெஞ்சமின் பிராங்க்ளின் சொன்னதை எங்கையோ வாசித்த ஞாபகம் எனக்கு………..
அது என்னை இன்னும் பேச தூண்டியது.
என்னால் 100 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் மட்டும் தான் பங்குபெற்று பரிசு எடுக்க முடியும் என்றால் என்னை 1000 மீட்டர் ஓடு என்று எனது தந்தை சொல்லக் கூடாது.
அது போல் தான் டொக்டராவதும் இஞ்ஞினியராவதும் அல்லது விஞ்ஞானியாவதும் எம்முடைய இயலுமையையும் இயலாமையையும் சரியாக அறிந்து வைத்துள்ள என்னால் மட்டும் தான் தீர்மானிக்க முடியும்.
இதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொண்டு நாம் நமக்காக, நமக்கான நமது எதிர்கால இலட்சியத்தைத் தீர்மானிக்க வேண்டும், தேவைப்படும் போது தந்தைகள் ஆசிரியர்களிடத்தில் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தைரியமாக சொல்லி முடித்தேன்.
வேகமாக வார்த்தைகளை முடித்துக்கொண்ட நான் மூன்று பக்கமும் திரும்பிப் பார்தேன், சிலருடைய முகங்களில் நிஜமாக ஏதோ ஒரு மாற்றத்தை என்னால் அவதானிக்க முடிந்தது.
என்னிடத்திலிருந்து அவர்கள் இன்னும் நிறைய செவிசாய்ப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்ட நான் இது தொடர்பாக மேலும் சில செய்திகளை கொட்டித் தீர்த்தேன்.
என் தந்தை எனக்கு நிறைய ஆலோசனை வழங்கி இருக்குகிறார், வழங்கி வருகிறார், நாம் எதிர்கால இலட்சியத்தை குறிக்கோலாக கொண்டு வாழ வேண்டும் என்பதையும் அது எது என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நம்முடைய வகுப்பிலிருந்து பல துறைகளிலிருந்தும் பல புத்திசாலிகளும் சாதனையாளர்களும் உருவெடுக்க வேண்டும் என்று சொன்னேன்.
ஆலோசனைகளை புத்திமதிகளை ஆசிரியர்களே சொன்னால் கேற்கமாட்டார்கள் நான் சொல்லி எப்படி என்ற சந்தேகமும் எனக்குள்……….
அதிர்ச்சியாய் என்னை பார்த்தார்கள், என் உள் மனதிற்குள் சந்தோசமும் குளிர்ச்சியும்.
என் தந்தையை கண்டதும் நான் பகிர்ந்துகொள்ள இருக்கின்ற நற்செய்தி இது என்று எண்ணிக்கொண்டே வீடடைந்தேன்.
காலையில் ஓய்வெடுத்துக்கொண்ட மழை மாலையில் மீண்டும் தனது பணியைத் தொடர்ந்தது.
தவளைகள் விழித்துக்கொண்டன.
அவைகள் திட்டமிட்டு ஒன்றாய் கோசமிட ஆரம்பித்தன.
எங்கோ போக இருந்த தந்தை பயணத்தை இடைநிருத்திவிட்டு வீட்டில் இருந்தார், இதுதான் சந்தர்ப்பம் என்று தந்தையை அமைதியாய் அணுகி என் கதையை ஆரம்பித்தேன்.
ஓ வென்று என்னையே பார்க்க ஆரம்பித்தார்.
வகுப்பு நண்பர்களிடையே நடந்த, நான் சுவாரஸ்யமாய் பார்த்த அந்த கலந்துரையாடலை சொல்ல வாய் திறந்தேன்.
என் வகுப்பு நண்பர்களிடத்தில் ’நாம் ஒவ்வொருவரும் இலட்சியவாதிகளாக வாழ வேண்டும், அதற்காக இப்போதிலிருந்தே தயாராக வேண்டும்’ என்று தைரியமாக சொன்னேன் என்று சொல்லிக்கொண்டு போனேன்.
மூச்சுவிட்டு முடிந்ததும் என் தந்தையின் முகத்தில் நான் கண்ட சந்தோம் அளப்பரியது.
தொடரும்


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: