நான் ஒரு மத ஒப்பீட்டாய்வாளன் என்பதனாலும் என்னுடன் இருக்கும் இந்து சகோதரர்களின் கேள்விகளுக்கு விடை தேடும் மாணவன் என்பதனாலும் இந்து வேதங்களை படிக்கத் தூண்டப்பட்டிருக்கின்றேன்.
படித்து வரும் வேத வாக்கியங்களும், கடந்துவரும் கடவுள் வழிபாடுகளும் ஒன்றுக்கு ஒன்று ஏன் வேறுபடுகின்றன?” போன்ற (சிக்கலான) கேள்விகள் என்னைத் தீண்டிக் கொண்டிருக்கின்றன.
அந்த கேள்விகளில் சிலதையும், அதற்கான விடைத் தேடும் முயற்சிகளில் கிடைத்த ஆதரங்கள் சிலதையும் இந்த சந்தியில் பகிர்ந்துகொள்கின்றேன்.
“இந்தத் தேடல் எவரது மனதையும் பாதிக்கக்கூடாது” என்று அந்தக் கடவுள் இடத்தில் வேண்டிக்கொண்டு விடயத்திற்குள் சங்கமமாகின்றேன்.....
கட்டுரையின் சமரசம்:
கடவுள்: அவன் ஒருவன், அவன் தனித்தவன், நிகரற்றவன், எந்தவொரு தேவையுமற்றவன்
கடவுள் ஒருவன்:
’ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’ (ரிக்வேதம்)
மெய்ப்பொருள் ஒன்றுதான் அதை ஞானிகள் பலபெயரிட்டு அழைக்கின்றனர்’
மெய்ப்பொருள் ஒன்றுதான் அதை ஞானிகள் பலபெயரிட்டு அழைக்கின்றனர்’
வேதங்களின் பிரம்ம சாத்திரம் கூறுகிறது:
‘ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்தே நாஸ்தே கின்ஜன்’
இறைவன் ஒருவனே; வேறு எவரும் இல்லை; இல்லைவே இல்லை.
இறைவன் ஒருவனே; வேறு எவரும் இல்லை; இல்லைவே இல்லை.
’ஏகம் ஏவம் அத்விதியம்’
அவன் ஒருவனே, அவனுக்கு யாதொரு இணையுமில்லை.
‘யா இக் இத் முஸ்திஇ’ (ரிக் 6 : 45 :16) வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே
கடவுளை மனிதர்கள் பார்க்க முடியாது:
’பார்க்க அவன் மஹாத்மா, காணுதற்கரியவன்’ (ப. கீதை 7 : 19)
பகவான் கூறுகிறான்,
அர்ஜுனா ! சென்று விட்டனவும் நிகழ்வனவும் இனிவருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன். ஆனால் என்னை எவனும் அறியான். (பகவத் கீதை 7: 24 – 26)
’இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை’ (அதர்வ வேதம் 32 : 3)
அவன் பிறக்கவில்லை:
‘அவன் ஆதி தேவன், பிறவாதவன்’ (பகவத்கீதை 10 : 12)
அவனுடைய படைப்புக்களை வணங்கமுடியுமா?
யார் அசம்பூதி (இயற்கை)யை வணங்குகின்றார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள். (அதர்வ வேதம் 40 : 9)
இங்குள்ள படங்கள் காட்சிப்படுத்துவது போல் இந்த சிலைகளை அல்லது உருவங்களை வணங்கமுடியுமா?
இந்து அறிஞர்களிடத்தில் இந்த கேள்வியை மாற்றங்கள் தேவை முன்வைக்கின்றது.
அப்படியானால் யார் அந்த கடவுள், ’வாருங்கள் அந்த கடவுளை தேடுவோம்’
வாருங்கள் கடவுளை தேடுவோம்!!
நமது இந்து சகோதரர்கள் இப்போது வணங்கி வரும் சிலைகளை , உருவங்களை விட்டுவிட்டு ‘கடவுள் ஒருவன், அவன் நிகரற்றவன், பிறக்காதவன்’ என்று ஏற்று வணங்க ஆரம்பித்தால் போதுமா? என்ற ஒரு சந்தேகம் இங்கு ஏற்படுகிறது.
இல்லை, முடியாது என்பதே அதன் விடை.
அப்படியென்றால் யார் கடவுள்? யார் வணங்கத் தகுதியானவன்? என்ற கேள்விக்கு விடை தேட வேண்டும்.
அதற்கான விடைகளை இந்து வேத நூல்களிலே பெற்றுக்கொள்ளலாம்.
முஸ்லிம்களால் அல்லாஹ்வின் தூதுவர்களில் ஒருவராக நம்பப்படும் நூஹ் (அலை) (ஏ அக்னீ ! நியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக்கொள்கிறேன் – ரிக் வேதம் 1 :13 – 4) அவர்களின் இறை செய்தியினூடாக தான் இந்து மதம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் அதே கடவுளால் பல தூதுவர்கள் உலகிற்கு வந்து அவனது செய்திகளை உபதேசித்து இருக்கின்றார்கள்.
அவர்களில் இறுதியாக ஒருவர் வருவார், அவர் சொல்லுவதைத்தான் இந்த உலகம் முடியும் வரை பின்பற்ற வேண்டும் என்பது தான் இங்குள்ள கடைசிச் செய்தியாகும்.
இந்த செய்தியை உங்கள் கரங்களில் உள்ள “ரிக்” வேதத்தில் பாருங்கள்:
”அந்த அராபியர் (சமுத்ரதுத்த அர்பன்) தூதர்களுக்கெல்லாம் முத்திரையாக (இறுதியாக) இருப்பார்” (ரிக்வேதம் 1: 163 :1)
இந்த அராபிய (முஹம்மது) தூதுத்துவத்தைத்தான் கல்கி அவதாரமாக இந்து வேதங்கள் போதிக்கின்றன.
அவர் தனது தூதை ஹரி (ஹிரா) குகையில் பரசுராமர் (ஜிப்ரீல்) மூலம் பெற்றுக்கொள்வார்.
அவர் விக்ஷ்னு பகத் (அப்துல்லாஹ்) மற்றும் சுமதி (ஆமினா) குடும்பத்தாரின் மகனாக இருப்பார்.
கல்கியாகியர் கைதேர்ந்த வாள் வீரராகவும் குதிரையேற்றம் செய்பவராகவும் இருப்பார் என்பதும் இந்து புராணங்களின் வாக்கு.
இந்த கடைசி தூதுத்துவத்தை முன்னறிவிக்கும் இந்து புராணங்களில் உள்ள இன்னுமொரு செய்தி:
அதர்வன வேதத்தின் இறுதியில் ’அல்லாஹ் உபநிக்ஷர்’ என்னும் தலைப்பில் அமைந்த ஒரு உபநிக்ஷத்தில் ஒரு சுலோகம்:
‘இல்லாம் தபர இல்லாம் இல்லல்லே,
இல்லல்லாம் ஓமல்லாம் இல்லல்லாம் தியான நிஸ்வரூபயா’
அல்லாஹ் – அந்த ஏக தெய்வத்திற்கு யாதொரு இணையுமில்லை. சத்திய தெயத்தின் ஓம்கார சத்தத்தை வாழ்த்துக்கள் என்பதாகும்.
அதனால் கடவுள் என்பவன் இன்று அகில உலக முஸ்லிம்களால் வணங்கப்படுகின்ற அல்லாஹ் ஒருவனே. அவனையே உலகில் வாழ்கின்ற இந்து கிறிஸ்துவ, யூத, பெளத்த ஏனைய அனைவரும் வணங்க வேண்டும் என்பது நிஜமாகின்றது.
இந்து சகோதரர்களே!!
நாம் எதை நம்பிக்கை அடைப்படையில் பரம்பரை பரம்பரையாக பின்பற்றுகிறோம் என்பதை ஒரு சொற்ப நேரத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு, நான் மேலே அடையாளப்படுத்திய இந்து வேத வசங்களை மனம்விட்டு படியுங்கள், உண்மையை அறிந்துகொள்வீர்கள்.
(இந்த ஆக்கத்தை உங்கள் இந்து சகோதரர்களுக்கு பிரதி செய்து கொடுக்கலாம்) – மாற்றங்கள் தேவை -
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
8 comments:
அன்பு ரிழ்வான் அவர்களுக்கு, இறைவன் என்ற கருப்பொருளை நம்புகிறவர்களாக இருந்தால் அவனை ஒருவன், தனித்தவன், நிகரற்றவன் எந்த ஒரு தேவையுமற்றவனாக ஏற்றுக் கொள்வதில் வேற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒரு சில கற்பிதங்களில் மனிதன் கடவுளுக்கு கட்டம் கட்டுவதும், நாமம் சூட்டுவதும், அந்த வட்டத்துக்குள் தான் 700 கோடி மக்களும் நிற்கவேண்டும் என்பதும் சாத்தியமில்லாத பகற்கனவே ஆகும். ஒரு போதும் உலகம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என நினைப்பது தவறு.. உலகம் முழுதும் பாலைவனமாகவும் இருப்பதிலை, பனிப்பகுதியாகவும் இருப்பதில்லை. அதே போல மனிதர்கள் அனைவரும் ஒரே மதத்தினைப் பின்ப்பற்றுபவர்களாகவும் இருக்கத் தேவை இல்லை. ஏன் மதங்களே கூட தேவைப்படாமலும் இருக்கலாம். இங்கு நமக்கு தேவை என்பது கடவுளைத் தாண்டிய ஒரு சிந்தனையும், சக மனிதனை மனிதனாகப் பார்க்கும் மனோபாவமுமே ஆகும் !!!
//“இந்தத் தேடல் எவரது மனதையும் பாதிக்கக்கூடாது” என்று அந்தக் கடவுள் இடத்தில் வேண்டிக்கொண்டு விடயத்திற்குள் சங்கமமாகின்றேன்..... //
மென்மையான அனுகுமுறை..
அறிவார்ந்த கருத்துக்கள்..
போதுமான விளக்கம் மாஷா அல்லாஹ்.. இன்னும் வளர வாழ்த்துக்கள்
வாழையடி வாழையாய் நாம் பின்பற்றும் சில விடயங்களை ஒதுக்கி வைத்து விட்டு, முழு மனதாய் உண்மைகளை உள்வாங்கும் போது தான் நாம் பூரணமடைகின்றோம்.
சகோதரர் இக்பால் செல்வம் மற்றும் சகோதரி ஹிம்மா ஆகியோருக்கு எனது நன்றிகள்.
அன்பு இக்பால் செல்வம் "உலகை உருவாக்கியது கடவுள் அல்ல" அறிவியல் அறிஞரின் அதிரடி – அதற்கு ஒரு பதிலடி' என்ற நமது முன்னைய ஆக்கத்தை படித்திருப்பார் என்று நினைக்கின்றேன்.
//உலகம் முழுதும் பாலைவனமாகவும் இருப்பதிலை, பனிப்பகுதியாகவும் இருப்பதில்லை//
.நேற்று பாலைவனமாக இருந்த பிரதேசம் இன்று வாழும் பூமியாக மாறவில்லையா??
//அந்த வட்டத்துக்குள் தான் 700 கோடி மக்களும் நிற்கவேண்டும் என்பதும் சாத்தியமில்லாத பகற்கனவே ஆகும்// தற்போதைக்கு 700 கோடிப் பேரும் மாற வேண்டாம், சிந்திப்பவர்கள், உண்மையை தேடி படிப்பவர்கள் ஏற்றுக்கொண்டால் போதும்.
உண்மை என்கிருந்து வந்தாலும் யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வது அறிவாளிகளின் ஒரு சிறந்த பண்பாகும்.
அறிவார்ந்த, பகுத்தறிவு நிறைந்த வாதங்கள், ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை.
நன்றி
முழுச் சுரக்காயை சோத்துக்குள் மறைக்கும் அறிவாளிகள்
அன்பின் நண்பரே மொட்டையா சொன்னா பல வாசகர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள், தெளிவாச் சொல்லுங்க.
நன்றி
ராசி
ஹிந்து மத இறைவன் ஓம் தான்.
எங்கள் இறைவன் ஓம் என்று அழைக்கப்படுகிறார்.
உங்களுக்கு எதற்கு வேண்டாத வேலை
எங்கள் வேதங்களோ உபநிஷத்களோ உங்களுக்கு புரியாது.
எங்களுக்கு குர்ஆன் தேவையில்லை.
எங்கள் வேதங்களுக்கும்
உங்கள் மதத்திற்கும் துளி கூட சம்பந்தமே இல்லை.
எங்களுக்கு ஒரே இறைவன் தான்
ஓம் என்று அவரை வேதங்கள் கூறுகின்றன.
பல தேவர்களை வழிபடும் போது எங்கள் இறைவன் பெயரை உச்சரித்து பிறகு வழிபடுகிறோம்
எங்கள் இறைவன் வழிபாடுகளை ஏற்பதில்லை வணங்குவதை ஏற்பதில்லை.
ஏனெனில் எங்கள் இறைவன் உங்கள் அல்லாஹ்வை போல் இல்லை
ஓம் தத் ஸத்
நண்பரே இறைவன் ஒருவன் தான் அவனுக்கு உருவம் இல்லை,இது இந்து மத கோட்பாட்டிலும் உண்டு ஆனால் முதலில் இயற்கையை கடவுளாக வழிபட்ட முன்னோர்கள் கடவுளின் உருவமாக சிவ லிங்கத்தை தான் வணங்கினார்கள், பிறகு கடவுளின் தூதுவர்கள் அதாவது சித்தர்கள் மற்றும் வாழ்ந்த முன்னோர்கள் அவர்களையும் கடவுளாக நினைத்து வணங்க தொடங்கினர் ( நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சிதான்) இறைவன் எங்கும் இருப்பான் எதிலும் இருப்பான் அதுபோல தான். நம் அனைவரின் கடவுளும் ஒன்று தான் அழைக்கப்படும் பெயர்களும் வழிபாட்டு முறையும்தான் வித்தியாசம் 🙏🙏🙏 நன்றி நண்பரே
ஜி உங்க நெம்பர் கிடைக்குமா சகோ
Post a Comment